பராமரிப்பு சேவை...

பராமரிப்பு சேவை...புதுசு கண்ணா புதுசு

வீட்டு இணைப்பிலிருந்து (வீ.இ)
மறு முனையிலிருந்து(ம.மு)

வீட்டில் தொலைபேசி சினுங்குகிறது... டிரிங்க்...டிரிங்க்...

வீ.இ: ஹலோ...
ம.மு: நீங்க யாரு?
வீ.இ: வீட்டு பராமரிப்பு.
ம.மு: எங்க வீட்டுல பராமரிப்பு-க்கு ஆள் கிடையாதே...
வீ.இ: இப்பதான் வீட்டுகார அம்மா என்ன வேளைக்கு சேர்த்தாங்க. ஆமாம் நீங்க யாரு?
ம.மு: நான் அவங்க கணவன். அம்மா எங்க?
வீ.இ: இப்பதான் அவங்க ஒரு ஐயாவோட மாடிக்கு போனாங்க...அவர்தான் அவங்க வீட்டுகாருன்னு நினைத்தேன்.
ம.மு:உனக்கு 50,000 வேண்டுமா? நான் சொல்லுறத செய்வியா?
வீ.இ:சொல்லுங்க என்ன செய்யனும்?
ம.மு:கீழ..டென்-ல ஒரு துப்பாக்கி இருக்கு, அத எடுத்து அவங்க ரெண்டு பேரையும் சுடு.

தொலைபேசியில் டுமீல்...டுமீல்...சத்தம் கேட்கிறது.

வீ.இ:முடிஞ்சிது...பாடிகல என்ன பண்ணட்டும்?
ம.மு: தூக்கி ஸ்விமிங்க்பூல்ல போடு, நான் வந்து பார்த்துகிறேன்.
வீ.இ: வீட்ல ஸ்விமிங்க்பூல் இல்லியே...
ம.மு: ஹலோ இது 321-9876 தானே?
வீ.இ: நான் புதுசு...ஆனாலும்...வாண்ட்டெட் விளம்பரத்துல 321-9875-னு நம்பர் இருந்துது, அத வச்சிதான் வீட்டு அட்-ரஸ் கேட்டு வந்தேன்.

ஹாய், நான் இலியானா

சாத்தனும் தேவதையும் சதுரங்கம் விளையாடும் கண்கள்,
மூச்சிரைக்க வைக்கிர மூங்கில் தேகம்,
கோவா-வில் இருந்து வந்துள்ள மல்கோவா?

இன்று ஒரு தகவல்: இலியானா-வின் அப்பா...கிறிஸ்டியன், அம்மா... முஸ்லிம். அப்போ வருங்கால கணவர்...எலிஜிபில் ஹிண்டு கைய்ஸ் மே கிவ் ய டிரை, ஆல் த பெஸ்ட். (சொக்கா...இல்ல எனக்கு இல்ல, எனக்கு இலி-யும் இல்ல, கிளி-யும் இல்ல, புலம்பாதே...அவ கிடைக்க மாட்டா)

கண்ணே இலி...

உன் கண்களில் சிரிய ஒளி
உடல் இடையில் பெரிய நெளி(உடுக்கை இடுப்பு?)

உன் படத்தை பார்த்த பிறகு...

என்மண்டையில ஓடுது எலி
நெஞ்செல்லாம் ஒரே வலி

ஆனா, என் இல்லாலை நினைச்சா
தொண்டைய பிடிக்குது...கிலி

மக்கள் விமர்சனம்

ஒன்று இல்ல இரெண்டு. எல்லாம் போன வாரம் பார்த்த ரெண்டு படத்தோட பாதிப்பு.

முதல்ல நாம பார்க்க போறது "சென்னை காதல்". இத விக்ரமன் இயக்க பரத், ஜெனிலியா நடிக்க, இது ஒரு ஃபார்முளா படம். அதாவது 123...பாட்டு, 123...பாட்டு-னு ஐய்யயோ அடுத்தது ஒரு பாட்டு வந்துடுமோ-னு ஒரு பயத்தோடவே படம் நகருது.
"சென்னை காதல் - வேதனை" (இது ஒரு விக்ரமன் படம் இல்லை)

இரண்டாவது படம் "வெயில்". இது இயக்குனர் சங்கர் தயாரிப்புல, வசந்தபாலன் இயக்கத்துல வெளிவந்து இருக்கு. நசிந்து போயிட்டு இருக்கிற சினிமா வியாபாரம் ஒரு பக்கம், வளர்ந்து வர விளம்பர வியாபாரம் மறுபக்கம்-னு ரெண்ட ஒட்டி கதை சொல்லி இருக்காரு. மதுரைய கதை களமா அமைச்சு, மக்கள கருவா வச்சு வந்து இருக்கு இந்த வெயில்.
"வெயில் - சுடும்" (படம் பார்த்தா நம்ம மனச சுடும் - சோகம்)

சாண்ட்டா...என் சாண்ட்டா...

சாப்பிட கொண்டா போண்டா
குடிக்க கொண்டா ஃபாண்டா
கிறிஸ்மஸ் இருக்கனுமா கிராண்டா?

அப்ப...
கூட்டமா போவோமா அட்லாண்டா?
கூத்தாட வருவாளா சமண்டா (ஃபாக்ஸ்)?

என்ன...
நான் கேட்கிறேன் கைண்டா
நீ இருக்காத ஸைலண்டா

அக்கடா...துக்கடா....

பல்லு போனா சொல்லு போச்சு - இந்தியாவுல.
பல்லு போனா பில்லு($) போச்சு - அமெரிக்காவுல

---

போடலாமா சரக்கு?

சரக்கு உள்ள போனா உடம்பு ஆயிடும் முறுக்கு
மண்ட ஆயிடும் கிறுக்கு
அப்புறம்...வர வார்த்தை எல்லாம் நறுக்கு
மத்தவங்கள கூப்பிட சொல்லும் நேருக்கு
அவன்/அவள் ஓட வேண்டியிருக்கும் காருக்கு

---

செய்தி:குளிர் பானங்களில் பூச்சிக்கொல்லி - விற்பனை செய்ய தடை உத்தரவு.

டாக்டர்: என்ன உங்க பையனுக்கு இன்னும் ஒடம்பு சரியாகலயா?
அம்மா:ஒடம்பு சரியாகிவிட்டது டாக்டர், வயிற்று பூச்சிக்கு மருந்து குடுத்தீங்க, கசப்பா இருக்குன்னு குடிக்க மாட்டேன்கிறான்
டாக்டர்: சரி, அப்ப ஒரு பாட்டில் கோக் வாங்கி குடுங்க சரியா போய்டும்.

தமிழ் பி-ளாக்கர்களுக்கு....கலைஞர் கருணாநிதி

உடன் பிறப்பே...நான் அப்போதே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொன்னேன் யாரும் காது கொடுத்து கேட்க வில்லை. மாறாக அண்ணா (அன்றே) சொன்னர்...தம்பி...மூன்று 'க'-வில் இருக்கு நம் வாழ்க்கை அதை கடைபிடி என்று.

கண்மணி...காலை மாலை பிளாக்-இல் கதைத்தாலும் 'கடமை' தவறாத தமிழர்கள் நீங்கள்...

கயவர்கள் காலி பேச்சு பேசினாலும், 'கண்ணியம்' தவறாத தமிழன் நீங்கள்.

கடல் தாண்டினாலும், 'கட்டுப்பாடு' நிறைந்தவர்கள் நீங்கள்.

ஆற்று பிரச்சனை, மொழி பிரச்சனை, நார்த்தீ, சௌத்தீ என்று பிற மாநில மக்களை போல் பிரிவினை பேசாமல், தமிழ் மக்கள், தமிழ் பிளாக் என்று தமிழும் புகழுமாய் வாழ்க.

கடிக்கலாம் வாங்க...

நண்-1: ஏண்டா உன் மனைவிக்கு உன் மீது ஆசை அதிகம் ஆயிடுச்சி போல இருக்கு?
நண்-2: எதை வச்சு மாப்ள நீ கண்டு பிடிச்ச?
நண்-1: நம்ம பழக ஆரம்பிக்கும் போது நீங்க/வாங்க-னு ஆரம்பிச்சு போக போக நீ/வா அப்புறம் வாட/போடா-னு கூப்பிடுறது போல உன் மனைவி உன்னை ச்சீ...வா..ச்சீ...வா-னு கூப்பிடுறாங்களே, அத வச்சுதான்.
நண்-2: டேய்..டேய்...வாய மூடுடா. அவ இனிமே வடமொழி எழுத்துக்கல உபயோகிக்காம பேசுரேன்னு சொல்லிட்டு..ஜீவா-ங்கிர என்ன சீவா-னு கூப்பிடுறா. நீ சீ-க்கும் வா-வுக்கும் இடைவெளி விட்டு குடும்பத்துல வலி-ய வுட்டுடாதாடா.

===

நண்-1: மாப்ள, ராத்திரி செல்லுக்கு கால் பண்ணுனேன்...பதிலே இல்ல?
நண்-2: செல்-லு தண்ணியில விழுந்துடுச்சிடா.
நண்-1: சரி காலைல பேச வேண்டியது தானே?
நண்-2: மடையா... நான் சொன்னது உள்ள ஊத்துன தண்ணியால இல்லடா...வெளிய இருந்த தண்ணியில.
நண்-1: அப்படி தெளிவா சொல்லு, நான் இன்னும் ராத்திரி அடிச்ச தண்ணி தெளியாம இருக்கேன்ல.

===

அம்மா: ஏண்டா...கம்பியூட்டர் செண்டர் உள்ள போக மாட்டேன்னு அழுது அடம் பண்ணினியமே?
மகன்: என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் உள்ள நிறைய 'மௌஸ்' இருக்குன்னு சொன்னாங்கம்மா, பயமா இருந்துச்சி அதான் போகல.
அம்மா: ?!!!

'பொது மறை' / 'புது மறை'

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இது வள்ளுவ பெருந்தகை உலகில் உள்ள அனைவருக்கும் கூறிய 'பொது மறை'. நான் காலத்தின் கட்டாயத்தினால், அந்த பொது மறை-யில் ஒரு சிறு திருத்தம் செய்து ஒரு 'புது மறை' சொல்ல வேண்டிய நிலை. என் அருமை தமிழ் ப்ளாக் போடும்/படிக்கும் மக்களே..பொருத்து, பொருமை காக்க வேண்டும்.

எப்போஸ்டிங்க் யார்யார் போஸ்டிங்காயிருப்பினும் அவர்கருத்தை அக்கணமே மறப்பது அறிவு.

கதை-க்கு பதிலா உதை

வணக்கம் மக்களே, இன்று நம்ம நிகழ்சியில் ஒரு மாற்றம்...
கதை-க்கு பதிலா உதை...பயப்படாதீங்க...வசனத்தில் அடி/உதை...
அதாங்க 'பஞ்ச்' டயலாக்... ரஜினி பஞ்ச் வசனம்...

நான் எப்ப வருவேன்...எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது...ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் -- வேலை இப்ப போவுமா இல்ல அப்ப போவுமானு சொல்ல முடியாது...ஆனா போவ கூடாத நேரத்துல கரெக்டா போயிடும்.

நான் ஒரு தடவ சொன்னா... நூறு தடவ சொன்ன மாதிரி -- நான் ஒரு தடவ கோட் ரிவீவ் பண்ணுனா... நூறு தடவ பாண்ணுன மாதிரி.

நான் சொல்றதையும் செய்வேன்...சொல்லாததையும் செய்வேன் -- கோரா சொல்றதையும் செய்யமாட்டான்...சொல்லாததையும் செய்யமாட்டான்.

என் வழி...தனி வழி---என் கோட்...யுனிகோட்(unicode)

நீ விரும்புரவள கட்டிக்கிரத விட...உன்ன விரும்புரவள கட்டிகிட்டா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் -- நீ விரும்புர டூ-ல படிக்கிரத விட...மார்கெட் விரும்புர டூ-ல படிச்சிகிட்டா டப்பு ரொம்ப கிடைக்கும்.

ஆண்டவன் சொல்லுறான்...அருணாசலம் செய்யுறான் -- ஆர்கிடெக்ட் சொல்லுறான்...அடுத்தவன் செய்யிறான்.

நேத்து நான் கூலி.. இன்னைக்கு நான் நடிகன்.. நாளைக்கு...ஹா...ஹா... -- நேத்து நான் புரோகிராமர்.. இன்னைக்கு நான் புராஜெக்ட் லீடர்.. நாளைக்கு...ஹா...ஹா...

சிலபேர் சொல்ராங்க நான் இப்படி வருவேன் அப்படி வருவேன்னு.. நான் எப்படி வருவேன்னு ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும் -- மீட்டிங்க்ல சொல்ராங்க புராஜெக்ட் இப்படி வரும் அப்படி வரும்னு.. ஆனா அது எப்படி வரும்னு அந்த ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும்.

அசைந்தால் அடிக்கிறது உங்க பாலிசி, அசையாம அடிக்கிரது பாபா பாலிசி -- படிச்சிட்டு ரெசூமில போடுரது தமிழன் பாலிசி, படிக்காமலே ரெசூமில போடுரது பலபேரு(ஹா..ஹா) பாலிசி

ஒன் மோர்?

அதிகமா ஆசைபடர ஆம்பளையும், அதிகமா கோபபடர பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை -- வேலை செஞ்ச நேரத்துக்கு அதிகமா பில் பண்ணுன ஆம்பளையும், வேலை செய்ற நேரத்துல ஷாப்பிங்க் பண்ணுன பொம்பளையும் வேலை உயர்வு அடைஞ்சதா சரித்திரம் இல்லை

இது எப்பிடி இருக்கு?...ஹலோ..ஹலோ..இது நான் உங்கள கேட்டது.

மக்களே...ஒரு கேள்வி

மடையர்களில் பல விதம், அதில் ஒரு வகை 'மாங்கா'...கூப்பிட்டு இருப்பீர்கள் அல்லது கேள்வி பட்டு இருப்பீர்கள். இதில் விஷேசம் என்னவென்றால்... குறிப்பாக 'ஆண்'-களை சொல்லும் போதுதான் அதிகம் உபயோகிப்பார்கள் - அவண் ஒரு 'மாங்கா மடையண்டா'-னு.

ஏன் அப்படி? மாங்கவுக்கும் ஆண்களுக்கும் என்ன ஒரு ரிலேசன்? சொல்லுங்க மாங்காகளே...ஹி..ஹி..மகா(இங்கு 'ங்க்' -கு சைலண்ட்) மக்ககளே.

நம்ம பிள்ளையாரும் முருகனும் உலகத்தை சுத்தி வந்த கதை தெரியும் தானே? கதை சுருக்கம் இதோ - பல கதை அதில் இது ஒரு கதை - நம்ம நாரதர் மாமாவுக்கு ஒரு ஸ்பெசல் மாம்பழம் கிடைத்தது, அதை அவர் திங்காம சிவ/பார்வதி-யாண்ட கொண்டாந்து குடுத்தாரு, அவ்வா ரெண்டு பேரும் அதை தன் பிள்ளைகள் தின்பதுதான் உசிதம் என்று...ஃபிளா... ஃபிளா... முருகன் மயில் ஏறி போனாரு... நம்ம ஸ்மார்ட் பிள்ளையர் அப்பா/அம்மா-வ சுத்தி வந்து மேங்கோ-வ டேக் ஒவர் பண்ணிட்டார். ஊர சுத்தி வந்த முருகன் டென்ஸ்ன் ஆகி ஆண்டியா போயிட்டார். இதுதான் கதை?!

இதத்தான் இத்தன நாளா நம்பினோம். இத நம்பினவுங்க எல்லோரும் 'த சோ காள்ட்' மாங்கா. ஹா..ஹா. பின்ன என்னங்க யாரவது ஒரு மாங்காய்க்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பாங்களா? நம்ம பிள்ளையார் எந்த அளவுக்கு ஸ்மார்டோ...அந்த அளவுக்கு நம்ம முருகன் ஜெண்டில் மேன்...டேய் அண்ணா நீயே சாப்பிடு...எண்ஜாய்னு சொல்லிட்டு போயி இருப்பாரு.

ஹூம்.. நீங்க எல்லொரும் யோசிக்கிறிங்க மக்களே...எனக்கு தெரியுது. நம்ம வடிவேலு பாணியில சொன்னா...அப்ப மேட்டரு மாங்க-யில இல்லியா? மாங்கான்னு நெனைச்ச நான் தான் மாங்காயா?...அவ்..வ்...வ்..வ்....அப்ப என்னதான் மேட்டரு?

சிவனும் பார்வதியும், பிள்ளையாரையும் முருகனையும் கூப்பிட்டு... மக்கா... ஒங்களுக்கு கல்யாண வயசு வந்துடிச்சி...ஆனா யாருக்கு முதல்ல கல்யாணம் பண்ணுறதுன்னு தெரியல...அதனால யாரு முதல்ல உலகத்த சுத்தி வரீங்களோ...அவங்களுக்கு தான் கல்யாணம்னு சொல்லிட்டாங்க. ஆக...உலகத்த சுத்த சொன்னது மாங்காய்கு இல்ல...மங்கைக்கு. (அந்த ப்பிளா..ப்பிளா... கதைய இங்க சேர்த்துகுங்க).

ஆக நம்ம முருகன் ஊரை சுத்தி வந்து 'மடையன்' ஆனது மங்கை-க்காக. So அது 'மங்கை மடையன்' மேட்டர். நான் நினைக்கிறேன் முருகன 'மங்கை' மேட்டர்-ல நு சொன்னா நல்ல இருக்காதுன்னு 'மாங்காய்' நு சொல்லிட்டாங்க. மங்கை மேட்டர்-ல படம் விட்டதால 'ஆண்'கள 'மாங்கா'-னு சொல்லுறாங்க போல இருக்கு.

வேட்டையாடு...விளையாடு

நம்ம எல்லோரும் பயங்கர software பிஸ்த்து...(நாமே சொல்லிகாட்டி யாரு சொல்லுவாங்க?)...அதான் கலக்கி கிட்டு இருக்கோம். Executable-ல குடுத்தா பிச்சு பிராண்டி source code எடுக்குற ஆளுங்க இல்லியா...அது மாதிரி இது ஒரு special project discusstion...இது மக்கள்ஸ் டி.வி-யின் "சிறப்பு நிகழ்ச்சி"...என்ன நிகழ்ச்சிக்கு போவோமா?

ப்ராஜக்ட்: வேட்டையாடு...விளையாடு
ப்ராஜக்ட் ஒனர்:காஜா மொய்தீன்/ஆஸ்கர் ரவி/நாராயணன்ப்ராஜக்ட்
லீடர்/ஆர்கிடெக்ட்: கெளதம்
மாடியூல் லீடர்ஸ்:ஹாரிஸ்/தாமரை/ரவி வர்மா

ப்ராஜக்ட் மீட்டிங்க்:

கௌ: பால்ஸ், இந்த மீட்டிங்கோட அஜண்டா ஒரு பாட்டு. உங்க எல்லாரோட உழைப்பும் ரொம்ப முக்கியம். நான் RS - ரெக்குயர்மெண்ட் ஸ்பெசிஃபிகேஸன் காப்பிகொண்டு வந்து இருக்கேன்...இந்தாங்க...பிஸி ஸ்கெடியூல்ல மெயில் அனுப்ப முடியல, பட் நான் இப்போ என்னனு எக்ஸ்பிலைன் பண்ணுரேன். ஒகே...வா.

நம்ம கதா நாயகன் ஒரு விடோவர், காதா நாயகி ஜஸ்ட் ரிலேசன் பிரேக் ஆனவங்க. அவங்க ரெண்டு பேர்குள்ளயும் ஒரு விதமான ஈர்ப்பு...ஆன அத எப்பிடி சொல்லறதுன்னு தெரியல. So, இந்த மெஸேஜ நாம ஒரு பாட்டு மூலமா ஆடியன்சுக்கு சொல்லனும். புரியுதா?

ரவி நீ என்னா பண்ணுற? நான் சொல்லுறத கேக்குறியா?

ரவி: கௌவ்த், நீ இன்னும் என் சப்ஜெக்ட்டுக்கு வரல...அதான் நெட்டுல கொஞ்சம் சிவாஜி பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன். எப்பிடியும் பாட்ட US-ல எடுக்குரோம்ப...வுடு... நாலு ஃபிரேம்ல கமல், நாலு ஃபிரேம்ல ஜோ மத்த படி எல்லாம் எனக்கும் உனக்கும் US-ல புடிச்ச இடத்த எல்லாம் சுட்டுட வேண்டியதுதான். ஹரி கண்ண முழிச்சிகிட்டே தூன்குறான் பாரு, அவன எழுப்பு முத்ல்ல.

ஹாரிஸ்: கைய்ஸ், நான் என்ன டியூன் போடலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். தாமரையோட வரியில தான் மெஸேஜோட உயிர் இருக்கு. நான் ஒத்துக்கும் ரெடி, குத்துக்கும் ரெடி.

கௌ: என்ன தாம்ஸ்(தாமரை)... நீ solution யோசிக்கிறியா? இல்ல... coding கஸ்டம்-னா சொல்லு இன்னும் ரெண்டு (வாலி & வைர முத்து) பேர ஹையர் பண்ணிக்கலாம்.

தா: கௌ... என்ன ஆ..வூ.. நா ஹையர் பண்ணிக்கலாம் அவுட் சோர்ஸ் பண்ணிக்கலாங்கற. நீ சொல்லும் போதே பாதி coding பண்ணிட்டம்பா...கேக்குறியா?

கௌ: அட...அட...மேனேஜ்மெண்ட் இவ்வளவு பாடு படுத்தியும் நான் ஏன் இவ்வளவு பாடு படுறேன் தெரியுமா...உங்க எல்லரோட டீம் ஸ்பிரிட்-தான். தாம்ஸ்..எங்க பாட்ட சொல்லு கேப்போம்.

தா:மஞ்சள் வெய்யில் மாலையிலே மெல்ல மெல்ல இருலுதே
பளிச்சிடும் விலக்குகல் பகல் போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகல் தொடருதே
அடுதது என்ன என்றேதான் தேடுதே

கௌ: தாம்ஸ், என் மனசுல உள்ளத அப்பிடியே சொல்லிட்ட, சூப்பர். ஹரி, ரவி நீங்க என்ன சொல்லுறீங்க?

ஹரி: எல்லாம் ok அந்த மஞ்சள் வெயில்-தான் கொஞ்சம் மாத்தி போடுவோமா?

ரவி: வேணாம்பா...மாத்தாத....அமெரிக்காவோட அந்தி மாலைய அருமையா சுட்டு தரேன்..அப்பிடியே வை.

தா: மாலை-ல சந்திக்கிறான்ங்க...ரொமாண்டிக்-ஆ இருக்கும்-னு நெனைச்சேன். மா-வுக்கு ம rhyming-ஆ இருக்கட்டுமே-னு தான் மஞ்சள் வெய்யில் மாலையிலே-னு போட்டேன். அங்க உள்ள light-அ பார்த்தோன்ன...அவனுக்கு கிளிக் ஆகுது.. அதான்..பளிசிடும் விளக்குகல்...பகல் போல் காட்டுதே. அப்புறம் சொல்ல தவிக்கிறாங்க இல்லியா...அதுக்கு தயக்கங்கள் விலகுதே...தவிப்புகல் தொடருதே அடுதது என்ன என்றேதான் தேடுதே

ஹரி: தாம்ஸ்...பாட்டு சோலோவா..இல்ல...

கௌ: சோலோ...அதுவும் மேல் வாய்ஸ்...background-ல. ஏன்னா நம்மா கதா Police-காரு, பக்குவ பட்டவரு...அது தான் மக்களுக்கும் பிடிக்கும். அதோட இல்ல...Ladies Club-ல சண்டைக்கு வந்துடுவான்ங்க...அது எப்படி...ஜஸ்ட் மேரேஜ் பிரேக் ஆன பொண்னு உடனே பிரபோஸ் பண்ணுவா-னு. எதுக்கு தலவலி...அதனால தான். தாம்ஸ்... நீ சொல்லு.

தா:ஒரே ஒரு சின்னசிரு மரகத மோச்சம் வந்து
குருகுரு மின்னல் என குருக்கே ஒடுதே...

கௌ:தாம்ஸ்..வெயிட். "மரகத மோச்சம் வந்து"-னு அவுங்ககுள்ள வந்த கெமிஸ்ட்டிரிய சொல்லுர..சரி தான? ஒரு சேஞ்ச்..."மோச்சம்" பதிலா "மாற்றம்"-னு போடு, யான்னா இப்பதான் அவனுக்கு தோனுது.

தா: சரி கௌ..மாத்திடலாம்.
ஒரே ஒரு சின்னசிரு மரகத மாற்றம் வந்து
குருகுரு மின்னல் என குருக்கே ஒடுதே...

அப்புறம் இத கேளுங்க...

இன்னும் கொஞ்சம் நீளவேனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி
நெஞ்சோரம் காதல் துளி
நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிற்க வைத்தால் பேச வைத்தால்
நெஞ்சோரம் காதல் துளி.

கமல் (ஜஸ்ட் knocking the door and joining in the meeting)...கைய்ஸ்..ஸாரி, I'm late-னு சொல்லி re-cap பண்ணிக்கிறாரு.

கமல்: தாம்ஸ்...இந்த பாட்டுக்கு உங்களுக்கு அவார்ட் கிடைக்க போகுது பாருங்க. நீங்க தப்பா நினைக்களன்னா ஒரு சின்ன change சொல்லவா?

தா: என்ன ஜி இப்பிடி கேட்டுட்டீங்க... நீங்க என்ன ஒரு ஜீனியஸ்..சொல்லுங்க பிளீஸ்.

கமல்: கதப்படி இன்னும் காதல் வல்ல...இப்பதான் அவங்க மனசுல தோனுது இல்லியா...அதனால "காதல் துளி"-கு பதிலா "பனி துளி"-னு போடலாம்னு நினைக்கிரேன். யேன்னா, பனி-னு சொல்லும் போது அதுல பல விஷயம் இருக்கு, வெண்மையானது, தூய்மையானது. அது காதலுக்கும் பொருந்தும்... நட்புக்கும் பொருந்தும்...காதல் நிராகரிக்கபட்டால் கூட நட்பு தொடரலாம் பாருங்க.

இன்னும் கொஞ்சம் நீளவேனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி
நெஞ்சோரும் பனித் துளி
நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிற்கவைத்தால் பேசவைத்தால்
நெஞ்சோரம் பனித் துளி.

ஹரி: தாம்ஸ்..பாட்டுக்கு ஒரு சரணம் சொல்லு..அங்க அங்க ஜிங்கில்ஸ் போட்டு அசத்தி புடுவோம். கை பர பரங்குது.

தா:
வென்னிலவே வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்...
வென்னிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாலம் கூட்டிகொண்டு வந்தாய்...

ஹரி: ok தார தர...தார தர...தார தர தா... நு நடுப்புர கோரஸ் போட்டுறன்

கௌ: கைய்ஸ்...வொண்டர்ஃபுல் மீடிங்க். ஆல் யு know what is in your plate.

ஹரி...தாம்ஸ் அல்மோஸ்ட் முடிச்சிட்டான்..உனக்கு பிரசண்டேஸன்ல பிசுரு அடிச்சா சொல்லு மாத்தி குடுப்பான்...தென்...ரெண்டு நாள் கழிச்சு உன் ரெக்கார்டிங்க் தியேட்டர்ல மீட் பண்ணுவோம்.

ஸீரோ-வோடு சேர்ந்த ஹீரோ

பன்றி(ஸீரோ) குட்டி-யோடு சேர்ந்த கன்று(ஹீரோ) குட்டி....

நம்ம ஹீரோ சென்னைக்கு வேலை பார்க்க வந்தாரு. வேலை பார்க்க வந்த இடத்துல நிறைய கெட்ட வார்த்தை கத்துகிட்டாரு. அதுல அவருக்கு ரொம்ப புடிச்ச வார்த்தை மூன்று எழுத்து வார்த்தை...சென்னை-ல ரொம்ப ஃபேமஸ்..."ஓ.."ல ஆரம்பிக்கும், 'தா'-வுல முடியும். வீட்ல, நண்பர்கள் கூட, எங்கேயும், எப்போதும்...சுருக்கமா சொல்லனும்னா வாய திறந்தா "ஓ" ஒடதான். ஒரு விஷயம் நல்ல இருக்குன்னு சொல்லனும்னா கூட "ஓ.. சூப்பரா இருக்கு"-னு தான் சொல்லுவாரு.

அவுங்க அம்மாவுக்கு ரொம்ப கவலையா போயிடுச்சி, நம்ம சிவபெருமான் கிட்ட போயி முறையிட்டாங்க...என் புள்ளைக்கு நல்ல புத்திய குடு...கொஞ்சம் திருத்தி குடுன்னு வேண்டிகிட்டாங்க. சிவபெருமான் அந்த அம்மா பட்ட கவலைய பார்த்து...முருகன கூப்பிட்டு அந்த ஸீரோவ ஹீரோவா மாத்து-னு சொன்னாரு. முருகன், அப்பா அவன் என் பக்தன், என்னை கும்பிடும் போதே "ஓ.." போட்டுதான் கும்பிடுவான்...சரியான முரட்டு பக்தன்னு நான் அவன கண்டுகிறது இல்ல...இருந்தாலும் அவன கரக்ட் பண்ணனும், விஷ்ணு மாமா-தான் அதுக்கு சரியான ஆளு, நான் அவர்கிட்ட சொல்லி "ஓ"-வுக்கு ஒரு ஸ்கெட்ச் போட சொல்லுறன்-னு மாமா கிட்ட ஹீரோவோட ஃபோட்டோ & அட்ரெஸ் குடுத்துட்டாரு.

விஷ்ணு சென்னைக்கு வந்தாரு...விசாரிச்சா ஹீரோ சிங்கப்பூர் போயிட்டாரு-னு சொன்னாங்க. விஷ்ணுக்கு ரொம்ப சந்தோஷம்...வேலை சுலபமா முடிஞ்சிடுச்சி, பையன் அங்க போயி திருந்தி இருப்பான், ஜஸ்டு ஒரு லுக் விட்டு கன்ஃப்ர்ம் பண்ணிக்குவோம்-னு சிங்கப்பூர் வந்தாரு. பையன் எங்க இருப்பான்னு விசாரிச்சா...சிராங்கூன் ரோட்டுலனு தெரிஞ்சுது, அங்கேயும் ஒரே கெட்ட வார்த்தை...சரி பேசி சரிபண்ணிடலாம்னு நேரா மீட் பண்ண போனாரு. பையன் இப்ப சிங்கப்பூர விட்டு கலிஃபோர்னிய போயி அங்க 'குப்ப' கொட்டுரான்னு அங்க போனாரு. ஹீரோ கெட்டா வார்த்தை பேசுரத நிறுத்து-னு சொன்னாரு. "ஓ..." நீ யாருய்யா அத சொல்ல-னு கேட்க, விஷ்ணு சொன்னாரு, சொன்னா கேளு இல்ல போட்டு தள்ளிடுவன்னாரு. ஹீரோ கொஞ்சம் புத்திசாலி இல்லியா, விஷ்ணு-கிட்ட வின்-வின் டீல், "ஓ..." நீ ஒரே ஒரு முறைதான் உன் ஆயுதத்த யூஸ் பண்ணனும்-னு சொன்னான், விஷ்ணுவும் சரி-னு சொல்லிட்டாரு. இருந்தாலும் நல்லா யோசி-னு சொன்னாரு. "ஓ.." நான் திருந்த முடியாது, உன்னால என்னா பண்ண முடியுமோ செஞ்சிக்க-னு ஹீரோ 'குப்ப' கொட்ட போயிட்டான்.

விஷ்ணு, அவர் ஆயுதத்த(சக்கரம்) எடுத்து...மவனே தீந்தடானு விரல்லேருந்து சக்கரத்த ரிலீஸ் பண்ணிட்டாரு. சக்கரம் ஹீரோ கழுத்து கிட்ட போயிடுச்சி...அப்பதான் ஹீரோ 'குப்ப'-ய கொட்ட குனிஞ்சான், சக்கரம் தலைய தாண்டி போயிடுச்சி. விஷ்ணு டென்ஷன் ஆயி சொன்னாரு...'ஓ...' ஜஸ்ட் மிஸ்-னு. அதனால...என் இனிய தமிழ் மக்களே.. நீங்க விஷ்ணு மாதிரி டென்ஷன் ஆகி - பன்றி(ஸீரோ) குட்டி-யோடு சேர்ந்த கன்று(ஹீரோ) குட்டி....ஆகிடாதீங்க.

உங்களுக்கு "கமல கண்ணன்"-ஐ தெரியுமா?"

கமல கண்ணன்" வேற யாரும் இல்ல நம்ம "மஹா விஷ்ணு"-தான்.

நம்ம வி(ஷ்ணு) தினமும் ஆயிரம் தாமரை(கமலம்)-யை வைத்து மச்சான் சிவா-வுக்கு பூஜை பண்ணுவார். வி மாம்ஸ் பண்ணுற பூஜைல மாப்ஸ்(பிள்ளையார்) கொஞ்சம் ரௌஸ் உடலாம்னு யோசிச்சாரு, கூப்பிட்டாரு சுண்டெலிய(அவரோட கைத்தடி), போயி அங்க உள்ள 1000-த்ல ஒன்ன உருவிட்டு வான்னு சொன்னாரு (நீங்க பார்த்து இருப்பீங்க...எல்லா பிள்ளையார் காலண்டரிலும் உள்ள சுண்டெலி வாயில் ஒரு தாமரை பூ வச்சி இருக்கும் - இதான் மேட்டர்), அதுவும் உருவிட்டு வந்துட்டுது.

வி பூஜைல 999 சுலோகத்த சொல்லிடாரு, 1000-த்த சொல்லும் போது பார்த்தா பூ-வ காணூம்...உடனே தன் கண்-ன எடுத்து(ஆஹா இது வல்லவா பக்தி) பூஜைய முடிச்சிட்டாரு.

கண்-னை கமலம்-ஆக பயன் படுத்தியதால் "கமல கண்ணன்"

ஸ்ப்ரிங்க் வந்துடுச்சி....இனி கலர்...பிறகு ஃபால்ஸ்...

ஊருல அவதான் கலரு
ஆள அசத்துர ஃபிகரு
பேசுர பேச்சு சுகரு

வேறு யாருமில்லை நிகரு
ஆனாலும் கொஞ்சம் திமிரு
பசங்க பண்ணுவாங்க கவரு

அம்மாதான் குருக்க செவுரு
செவுரை மீறி ஏது தவறு?....அதனால பசங்க...

போட வில்லை காள்ஸ்...
தர வில்லை டாள்ஸ்...
விட வில்லை ஃபாள்ஸ்...

அப்புறம்...என்னா கலரு?...எங்க ஃபால்ஸ்?

கலரு... கட்டிய சேலை...மனசை செய்யுது மகிழ்வு.
ஃபால்ஸ்... ஒட்டிய சேலை...மண்ணை செய்யுது உழவு.

மகளே...தூக்கி கட்டு சேலையை....பாழாப் போகுது ஃபால்ஸ்.

தேசி(Desi)...

எனக்கு விளங்க வில்லை... நான் தேசி?
என் மூளையே நீ கொஞ்ஜம் யோசி

என் அறிவுக்கு தெரிந்தது...சுதேசி...விதேசி...பரதேசி...
யோசித்த பிறகு..சற்றே விலகுது மூளையில் பிடிச்ச பாசி

சுதேசி...'சு'ற்றத்தை விட்டு விட்டு வந்ததால் தேசி?
விதேசி...'வி'றுந்துகளை விட்டு விட்டு வந்ததால் தேசி?பரதேசி...'பர'..'பர'ப்புகளை விட்டு விட்டு வந்ததால் தேசி?

இன்னும் எனக்கு விளங்க வில்லை... நான் தேசி?
என் மூளையே நீ இன்னும் கொஞ்ஜம் யோசி

'சு'-வை விட்டாய்,
'வி'-யை விட்டாய்...
'$' மீது உள்ள தாகத்தை விட்டாயா?
$ 'தா'கத்தால் மனதை விற்ற 'தா'சி
நீ...'தேசி'...'$'-யே நேசி

இன்னும்..இன்னும் எனக்கு விளங்க வில்லை...
நான் தேசி? என் மூளையே நீ இன்னும்...இன்னும் கொஞ்ஜம் யோசி

நீ...இங்கேயே தங்கிவிட்டால்...சுகவாசி
நீ...ஊருக்கு திரும்பினால்...விசுவாசி

காதல்...

எங்க ஊர் T.R. விஜய ராஜேந்தர் நினைவாக...

ஏய்...காதல்...
ஆரம்பத்தில தாண்டா ஜாலி
நண்பர்கள் செய்வாங்கடா கேளி
அப்பா,அம்மா போடுவாங்க வேலி...

ஜெயிச்சா கழுத்துல தாலி
தோத்தா மனசுல வலி

வலினு அழுதா சளி
விதினு நெனைச்சா களி

வலியோ...விதியோ...
பார்க்க மறந்துடாத உன் ஜோளி

ஆஹா...வெள்ளி...

அமெரிக்காவில் வெள்ளி கிழமைகள் அற்புதம், அதிலும் ஸ்ப்ரிங்க் மற்றும் சம்மர் ஜான்ஸே இல்ல...

அதிகம் இல்லை வேலை
ஆரம்பிக்கலாமா நூலை?

இதமாய் இருக்கு வானிலை
ஈ-னு இளிக்குது காளை
என்னனு கேட்கிறாள் சோலை
ஏற்றி காட்டுறான் தாளை

ஐ...அது...காகித ஓலை

ஒத்துவருமா நாளை?
ஓடிப்போச்சு மூளை...

ஔ.ஔ......(வடிவேலு போல்)

ஃப்ரியா இருக்கியா?
ஃப்லிமுக்கு போகலாமா?

ஏ மாப்பு கில்லி....

ஏ மாப்பு கில்லி....
இன்னிக்கு கிழமை வெள்ளி

பக்கத்துல யாரு மல்லி?
ஓரக்கண் பாக்குரா கள்ளி

செய்தி வந்துதா வர சொல்லி?
வந்துட்டியா உடனே துள்ளி

குடிக்க போறீங்களா மில்லி?
வீணாப்போயிடும் (Liver) கல்லீ...

கில்லி:MI India மெஸேஜ் போர்ட் நண்பர்.

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...
சௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...
இந்த Blog மெஸேஜ் போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...
இங்க அமெரிக்காவுல நடக்குதையா போர்களம்...
அந்த பாக்கிஸ்தானி ஆளுகெல்லாம் கும்மாளம்...

ஓஊ ஓஊ ஓஊ ஓஊ

போராட்டமாம் போராடட்டம் போராட்டமாம் போராடட்டம்
போராட்டமாம் போராடட்டம் போராட்டமாம் போராடட்டம்

சௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...
இந்த மெஸேஜ் போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...
போஸ்டிங்க்ஸ்ல அப்ப அப்ப உபயோகமான நூலு நாட்டியம்
ஐயா மேளதாலம் முழங்கி வரும் ஜோக்கு தானே வாத்தியம் போஸ்டிங்க்ஸ்ல அப்ப அப்ப உபயோகமான நூலு நாட்டியம்
ஐயா மேளதாலம் முழங்கி வரும் ஜோக்கு தானே வாத்தியம்

சௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...
இந்த மெஸேஜ் போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...

வேலை பாக்க வந்த இடதில் நடக்குது இந்த சண்டைங்கோ
இத உலவு பார்த்து வைக்க போறார் மேனஜர் ஆப்புங்கோ
வேலை பாக்க வந்த இடதில் நடக்குது இந்த சண்டைங்கோ
இத உலவு பார்த்து...வேலைக்கு வைக்க போறார் ஆப்புங்கோ

பஞ்சாயத்து தலைவர் நம்ம நடு நிலையான ஆளுங்கோ
பஞ்சாயத்து தலைவர் நம்ம நடு நிலையான ஆளுங்கோ
அவர் சொன்னபடி கேக்கறதுக்கு யாரும் ரெடியா இல்லீங்கோ...

சௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...
இந்த மெஸேஜ் போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...

மாபிள்ளை சொந்த பந்தம் தமிழ், தெலுங்கு Blogங்கோ
அதில் கர்நாடக Blog கொஞ்சம் குழப்பமா இருக்குங்கோ...
மாபிள்ளை சொந்த பந்தம் தமிழ், தெலுங்கு Blogங்கோ
அதில் கர்நாடக Blog கொஞ்சம் குழப்பமா இருக்குங்கோ...

பொண்ணுக்கு சொந்த பந்தம் மராத்தி, குஜராத்தி ஆளுங்கோ
பொண்ணுக்கு சொந்த பந்தம் மராத்தி, குஜராத்தி ஆளுங்கோ
அந்த வட நாட்டு Blog எல்லாம் கெட்ட வார்த்தை தானுங்கோ...
ஒரே....கெட்ட வார்த்தை தானுங்கோ...

சௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...
இந்த Blog போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...

மாப்பிள்ளை சௌத் இந்தியன் கொஞ்சமாதான் இருக்காங்கோ
மணபொண்ணு நார்த் இந்தியன் அமெரிக்கா ஃபுல்லா இருக்காங்கோ மாப்பிள்ளை சௌத் இந்தியன் கொஞ்சமாதான் இருக்காங்கோ
அந்த மணபொண்ணு நார்த் இந்தியன் அமெரிக்கா ஃபுல்லா இருக்காங்கோ

இந்த போராட்டாத்த வேடிக்கை பாக்குற எல்லாருமே இந்தியனுங்கோ
இந்த போராட்டாத்த வேடிக்கை பாக்குற எல்லாருமே இந்தியனுங்கோ

இந்த போராட்டாத்த அடக்குற பெரிய மனுசன் யாருங்கோ? . . . . .தலைவரு BLOG அட்மின் தானுங்க்கோ...

சௌத் இந்தியனுக்கும் நார்த் இந்தியனுக்கும் போராட்டாம்...
இந்த Blog போர்ட்ல போஸ்டிங்க்ஸா ஊர்கோலம்...
இங்க அமெரிக்காவுல நடக்குதையா போர்களம்...
அந்த பாக்கிஸ்தானி ஆலுகெள்ளாம் கும்மாளம்

சௌத் இந்தியன்...

நார்த் இந்தியன்...

Blog போர்டு...

அமெரிக்கா...

அந்த பாக்கிஸ்தானி ஆளுகெல்லாம் கும்மாளம்

முத்தமிட ஆசை...

Hi, I’m the pointer in Odometer, I had been kissed the 70 very long time back. I used to kiss 70 and 80 very often. You will not believe that I have kissed 90 and 100 too.
Still I remember the day, it was a weekend I go crazy and kissed 100 and 110 some times. All of the sudden I kissed 0.
Guess what…I got a ticket...”Traffic Ticket”, for me it is a “Terrific” day. That day onwards I never kiss 70…very thirsty.

படிச்ச 'நாய்' கடி...

நாய்க்கு நாலு கால் இருந்தாலும், அதால ஒரு STD, ISD ஏன் ஒரு Local call அட Missed கால் கூட போட முடியாது.

'நாய்' நம்மள கடிச்சா... நம்மளால பண்ண முடியாது

1. Local கால் - ஏன்னா Dr. நமக்கு போடுவாரு Xylocain-which is called "Local"

2. STD/ISD கால், - நம்மதான் போட வேண்டி இருக்கும் நம்ம சொந்த பந்தங்களுக்கு - உள்ளுருல இருந்தா STD - வெளி நாட்டுல இருந்த ISD

3. அப்புறம் யென்ன ஒரு Missed காலா? நாய் கடிச்ச பிறகு நம்ம Phone-ல தான் Missed கால்...(நமக்கு நாய் கடிச்ச இடத்த தடவவே நேரம் சரியா இருக்கும்)

தோப்புக்கரணம் - பிண்ணா

நம்ம பிள்ளையாரோட மாமா மாஹா விஷ்ணு இருக்காரே...அவர் ஒரு முறை பிள்ளையரை முறைச்ஜிண்டு...ஒரு காரியம் பண்ணிட்டார். அதனால பிள்ளயாருக்கு மாமா மேல கோவம் வந்துடுத்து...மாமாவுக்கு எப்பிடி வைக்கலாம் ஆப்பு-னு பார்த்தாரு...ஒரு நாள் விஷ்ணு மாமா குளத்துல நீராட மூழ்கிண போது...பிள்ளையார்...மாமாவோட சுதர்ஷன சக்ரத்த எடுத்து முழுங்க்கிட்டாரு.

குளிசிட்டு மேல வந்த மாமாவுக்கு அதிர்ச்சி...(இருக்காத பின்ன)...சுத்தி முத்தி பார்த்தாரு... ஒருத்தரும் இல்ல... வேற வழி இல்லாம SIL-லுகிட்ட போயி மேட்டர சொன்னாரு...SIL-லு அதாங்க சிவன் (அக்கா வீட்டுக்காரு Sister-In-Law) மேட்டர ஒடைச்சிட்டாரு...அது உன் மாப்பு (பிள்ளையார்) கிட்ட இருக்கு... உன் சக்கரம் அவன் வாயில/வயித்துல இருக்கு-னு சொல்லிட்டாரு.

மாமாவுக்கு தெரியாதா...மாப்பிள்ளைய எப்பிடி வழிக்கு கொண்டுவரனும்னு, மாப்பிள்ளை கிட்ட போயி மாமா கதை சொன்னாரு... ஜோக்கு சொன்னாரு... ஹ்ம்ம் யாண தலையன்... வாய தொறக்கர மாதிரி தெரியல. பார்த்தாரு இரெண்டு கையயும் காதுல வச்சி ஒரு தோப்புக்கரணம் (டான்சு - சிரிச்சி சிரிச்சி வந்த ம(ஹா)ஆன வி(ஷ்ணு)ஆன டோய்) போட்டாரு....மாப்பிள்ளை குஸி ஆகி சிரிக்கவும்...சக்கரம் வெளிய வந்து விழுந்துடுச்சி.

மூலக்கதை:Dhobirh karnam - in Sanskrit, means ‘ears by hands’

தோப்புக்கரணம் - கண்ணா

பிள்ளையாரை வணங்கும் போது கன்னத்துல போட்டுகிறது ஏன்? தப்பு செஞ்சா நாலு அறை உடு-னு சொல்லுவாங்களே அது மாதிரியா? நாமே நம்ம கன்னத்துல செல்லமா ரெண்டு போட்டு கிட்டு சாமி தப்பு செஞ்சிட்டேன் என்ன மன்னிச்சிடுன்னா?

சரி, ஆனா சில பேரு பிள்ளையார கும்பிடும் போது ஏன் "தோப்புக்கரணம்" போடுறோம் இல்ல போடுறாங்க?

வெற்றி வேல் முருகன் - கருத்து

என்ன கதை பிடிச்சி இருந்துதா? இந்த கதைய எனக்கு சொன்ன பெரியவர், மிச்சிகன் - போண்ட்டியாக் பராசக்தி ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றியவர். அவருக்கு சொந்த ஊர் கும்பகோணத்திற்க்கு அருகில் உள்ள நாச்சியார்கோவில். அவருக்கு நன்றி.

வெற்றி வேல் முருகன் -"பிண்ணா"

மக்களே...உங்கள் மான்னா...வந்து விட்டேன் "பிண்ணா"-வோடு.
நான் கேட்ட கதைய கொஞ்சம் உஜாலா (ஹி..ஹி...பாலிஸ்) பண்ணி உட்டுருக்கேன்...அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

இலங்கை-ல, "கதிர்காமம்"-கிற ஊர்ல நம்ம முருகன் "தவம்" அதாங்க "தியானம்" பண்ணிக்கிட்டு இருந்தாரு. அப்போ ஒரு அசுரன்/அரக்கன் முருகன தியானம் பண்ண உடாம தொந்தரவு பண்ணிகிட்டே இருந்தாரு..இருந்தாரு என்ன...இருந்தான். முருகன் சொல்லி சொல்லி பார்த்தாரு...அவன் கேக்குற மாதிரி தெரியல...முருகன் சொன்னாரு...இங்க பாரு நான் விதி 1-ன்ன மட்டும் உபயோகம் பண்ணுரேன், விதி 4-ல உபயோகம் பண்ண வச்சுடாத போயிரு-னு சொன்னாரு.

அவன் கேக்குல...என்ன முருகா நம்ம கைல ரூல் பேசுர...என்ன அது ரூல் 4-னு கேட்டான். உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே நம்ம 4 ரூல்? அதாங்க four tactics 1.சாம [Peace Talks] 2. தான [Give ransom to keep our mouth shut] 3.பேத [Divide and Rule] 4.தண்டம் [using Force].

நம்ம.."தண்டாயுதபாணி" என்கிற முருகன் சுத்தி பார்த்தாரு...தவம் பண்ணுற எடத்துல எங்க கிடைக்கும் "தண்டம்"? ஆன ஏதாவது பன்னி ஆவனுமே... பக்கதுல பார்த்தா... ஒரு "வெற்றிலை" கொடி இருந்துச்சி... அந்த "வெற்றிலை" கொடியில் இருந்து ஒரு "வெற்றிலை"-ய பறிச்சி... அத "வேலா" அந்த அசுரன் மேல உட்டாரு..அசுரன் மே...ல பூட்டாரு.

இப்ப தெரிஞ்சுதா..."வெற்றி வேல்" முருகன் எங்க இருந்து வந்தாருன்னு. அவர் "வெற்றி-இலை-வேல்" முருகன்...நம்மதான் மாப்பிள்ளைய மாப்ஸ்/மாப்பு-னு சுருக்கமா கூப்பிடுர ஆளச்சே..."வெற்றி-இலை-வேல்" முருகன்-ல இலை-ய கட் பண்ணி "வெற்றி வேல்" முருகன்னு ஆக்கிட்டோம்.

வெற்றி வேல் முருகன் - "கண்ணா"

இதோ ஒரு "கண்ணா"...
நம்ம முருகருக்கு(கடவுள்) பல பேரு இருக்கு...கந்தன், சரவணன், வேலவன் இப்படி. நான் பேர பத்தி சொல்ல வல்ல...முருகன்-ன உடனே நமக்கு என்ன நினைவுக்கு வரும்? இரண்டு பொண்டாட்டியா? இல்ல... இல்ல...வேல்...மயில்..(கொடியில) கோழி...(காலுல) பாம்பூ..சரி...கையில் வேல் இருப்பதால வேலவன்-னு கூப்பிடுரோம்...

ஆன..திருவிழாவுல(தை பூசம்)...சவுண்டு வுடும் போது...என்ன உடுவோம்..?"வேல்..வேல்..வெற்றி வேல்""வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா"-னு சொல்லுரோம் இல்ல சொல்லுவாங்க. அப்போ...."வெற்றி"-கு opposit என்ன? "தோல்வி"அப்படீன்னா முருகன்...எங்கயும் தோத்துட்டாரா? இல்ல ஜெய்ச்சிகிட்டே இருந்தாரா?

ஆக....வேலுக்கு ஒரு வாலு மேட்டர் இருக்கு...என்ன அது? அந்த வாலு மேட்டர் தான் நம்ம நிகழ்சியோட "பிண்ணா"(வாலு-னு சொல்லிட்டோம்ல...அப்ப பிண்ணாடி தான வரும்...முறைச்சா எப்புடி?)

கண்ணா...பிண்ணா...

வணக்கம் மக்களே...வணக்கம். சொல்வது உங்கள் "மன்னா"
இது...மக்கள்ஸ் TV. என்னடா திடீர்னு TV-னு சொல்லுரானேனு பாக்குறீங்களா? உங்கள சந்தித்து உரையாடி மகிழ ஒரு ஊடகம் தேவை இல்லையா அதான்.

இது ஒரு புத்தம் புதிய நிகழ்சி..."கண்ணா...பிண்ணா"இந்த "கண்ணா...பிண்ணா" நிகழ்சி வழியா உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்சி..சரி... நம்ம நிகழ்சி பத்தி கொஞ்சம் பார்ப்போமா? நிகழ்ச்சி-யோட பேரு "கண்ணா...பிண்ணா"-னு இருக்கேன்னு தப்பா நினைக்காதீங்க...இது ஒரு தரமான நிகழ்ச்சியா இருக்கும்னு சொல்லிக்கிறேன். அப்புறம் ஏன் "கண்ணா...பிண்ணா"-னு கேக்குறீங்களா? நான் குடுக்க போர ஒரு ஒரு விஷயமும்/செய்தியும் "கண்" அதாங்க நம்ம Eye மாதிரி கண்ணு கண்ணா இருக்கும்.

ஓ...ஓ..அதுகுள்ள உங்க புருவத்த உயர்த்தினா எப்புடி? அப்புறம் என்ன "பிண்ணா"-னு தானே கேக்குறீங்க?நான் சொன்ன "கண்ணா" விஷயம்/செய்தி கூட கொசுரு தகவல் "பிண்ணா"-ல சொல்லுவேன்...சரியா?

இந்த பக்கத்தை பற்றி...

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

நான் படித்த, ரசித்த விசயங்களை என் பாணியில் (எக்கலும் நக்கலுமாக) பதிவு செய்து உள்ளேன்...உங்கள் பார்வைக்காக - நீங்கள் படித்து மகிழ.

என் பதிவுகள் அனைத்தும் கதை மற்றும் கற்பனை. யாரையும் குறிப்பிட்டோ, குறை கூறியோ அல்லது குற்றம் கண்டு பிடித்தோ அல்ல. நன்றி.

வாழ்க தமிழ், என் முதல் படி...

என் இனிய தமிழ் பேசும், படிக்கும் மக்களுக்கு இந்த அரசூரானின் வணக்கம்.

என் முதல் படி...முதல் பதிப்பு...

அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவான் முதற்றே உலகு.