மங்கள்யான் - செவ்வாயில் இந்தியன்!


வந்திட்டேன் வந்திட்டேன் ஆர்பிட்டச் சுத்தி


சொல்லாதீங்க சொல்லாதீங்க என் ரகசியத்தக் கத்தி!

மங்களாயன் வானில் பத்திரமாய் பயணித்து சென்றது செவ்வாய்

மக்கள் வாயில் இனிப்பாய் மெள்ளக் கிடைத்தது அவலாய்!

ஆசியாவில் முதலாம், அகிலத்தில் நான்காம் (முயற்ச்சித்தவை ஆறாம்)

அண்டவெளியில் பயணித்ததோ அறுபத்தி ஐந்து கோடி கிலோமீட்டராம்!

நாசா உட்டா காசு, இஸ்ரோ உட்டா லேசு

கிலோமீட்டருக்கு நான்கு ரூபாய் மட்டுமே செலவு செய்தது கிளாஸூ!

கணணி துறையில் மட்டும் இல்லடா நாங்க கேடி

அதை அமெரிக்கா கிட்ட சொல்ல வராரு எங்க மோடி!!

ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்… வாலி

நேற்று வரை… திரையுலகில் உன் பெயர் ”வாலி”

இன்று முதல்… பூவுலகில் அந்த இடம் ”காலி”

வயதானாலும் உன் பாடல்களில் துள்ளும் “ஜாலி”

காமத்துப் பாடல்களில் போட்டிருப்பாய் “வேலி”.

பொருளுடன் பாடல் எழுதினாய் கிடைக்கவில்லை துட்டு!

பொருளுக்கு பாடல் எழுதினாய் கிடைத்தது கைத்தட்டு!!

இன்று வானுலகம் சென்றுவிட்டீர் எங்களை விட்டு!!!

எப்பொருள் யார் யார்…


(வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் கணவன்…)

கணவன்: என்னம்மா உடம்பு ஏதும் சரியில்லையா? ஒரு மாதிரி இருக்க?

மனைவி: எனக்கென்ன, எப்பவும் போலத்தான் இருக்கேன்!

அப்ப சரி, நீ காப்பி குடிச்சிட்டியா? எனக்கு ஒரு காப்பி கொடேன்

எதுல காப்பி போட?

என்ன இது புதுசா கேட்கிற, வழக்கம் போல போடு

டூ பர்சண்டல போடவா இல்லை ஹோல் மில்க்ல போடவான்னு கேட்டேன்

இது என்ன புதுக் கேள்வி? நாம டூ பர்சண்ட் மில்க்குக்கு மாறி பல வருஷம் ஆயிடுச்சே, காப்பிய போடு முதல்ல.

நான் என்ன லூசா? புதுசா கேட்கிறதுக்கு?


உனக்கு என்ன பைத்தியமா? சம்பந்தம் இல்லாம பேசுர? இப்ப காப்பி போடுறயா இல்லை நானே போட்டுக்கவா?

ஆமாம் நான் தான் பைத்தியம், அதைதான் அய்யா ஊர் முழுக்க சொல்லிகிட்டு வரீங்க போல இருக்கு

என்ன சொல்ர? நான் என்னத்த ஊர் முழுக்க சொல்லிட்டு வரேன்?

கோமதி வீட்ல என்னப்பத்தி என்ன சொன்னீங்க?

நான் என்ன சொன்னேன்? உன்னைப் பத்தி ஒன்னும் சொல்லலியே, அப்படியே சொன்னாலும் பெருமையாத்தானே சொல்லியிருப்பேன்?!

பொய் சொல்லாதீங்க, உங்களை காணோம்னு இப்பதான் கோமதிகிட்ட பேசினேன், அவ அங்க நடந்தது எல்லாத்தையும் சொன்னா

எல்லாத்தையும் சொன்னான்னா எனக்கு என்ன தெரியும், நான் என்ன சொன்னேன்னு சொன்னா?

என்ன பைத்தியம்னு சொன்னீங்களாம், அதுவும் சுத்தப் பைத்தியம்ன்னு சொன்னீங்களாம், என்ன பார்த்தா என்ன லூசாவா தெரியுது உங்களுக்கு?


ஓ… அதான் விசயமா? எதையுமே சரியா புரிஞ்சிக்காம சொன்னா இப்படித்தான். வீட்ல எடுத்த பொருள் எடுத்த எடுத்துல வைக்கனும்னு சொல்லுவ, வீட்டை நீ ரொம்ப சுத்தமா துடைச்சி துடைச்சி வெச்சிப்ப இல்லையா? அதைதான் நான் நீ ”சுத்தப்” பைத்தியம்னு சொன்னேன்.

காலையில் ஒரு காப்பி, மாலையில் ஒரு காப்பின்னு காப்பி பைத்தியமா இருக்கோமே அத மாதிரி சொன்னேன். அதப்போய்…

சரி, சரி இந்தாங்க காப்பி.


எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அறிவு.

ஐ.பி.எல்லே…

இந்தியனுக்கு பெருமை சேர்த்த விளையாட்டு கிரிகெட்டு!
இன்று புக்கிங்கால் ஆயிடுச்சி தரங்கெட்டு, தரிகெட்டு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிராடு லீகா?

ஆட்டக்காரன் ஆட்டத்தை குறைத்து மைதானத்தில் பணம் பேசி ஆடுகிறான்!
ஆட்டக்காரி ஆடையை குறைத்து மைதானத்தில் மனம் கூசி ஆடுகிறாள்!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிளேபாய் லீகா?

சூதில் பணம் சேர்த்து சொத்து சேர்த்தவன் மூன்று பேரு!
அதில் மனம் தோற்று செத்து போனவன் முன்னூறு பேரு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பித்தலாட்ட லீகா?

மூன்று பேரும்…
ஒத்துக்கிட்டா தூக்கி மத்திய-சிறையில போடு!
இல்லாவிட்டா துரத்தி என்-கவுண்டர்ல போடு!!
சங்க சந்தை...

சங்க சந்தை
மீண்டும் ஒரு முறை கேளுங்கள்

தலைப்பை கவிதையாக்க அல்ல, சரியாக புரிந்து கொள்ள!
ஆம், சங்க சண்டை அல்ல தலைப்பு, சங்க சந்தை!

சங்க நிகழ்வுகளால் ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் இருக்க
பங்கு சந்தையல்ல நம் உறவு!

மன மகிழ்வுகளால் இன்முகமாகவும் பன்முகமாகவும் இருக்க
நன்கு அறிய வேண்டியது நம் உறவு!

காளையோ கரடியோ அல்ல - நாம்
உணர்வால் விழுந்து எழ அல்லது புரண்டு அழ!

நாம் உணர்வால் தமிழ்ப் பால் குடித்த சிங்கம்

உரிமையோடு சொல்வோம் நாம் ஒவ்வொருவரும்
தமிழ்ச் சங்கத்தின் அங்கம்!

மதுரையானந்தா...





அன்பர்கள் தினப் பெயர்ச்சியா?

ஆத்தா... தாயே பராசக்தி, உன் கோவிலில் சனிப் பெயர்ச்சி பூசை பார்த்திருக்கிறேன், குருப்பெயச்சி பூசை கூட பார்த்திருக்கேன். இது என்ன அன்பர்தினப் பெயர்ச்சியா? இந்த பூசை விளம்பரத்தை பார்த்தவுடன் எனக்கு பேர் அதிர்ச்சி!

ஆத்தா... கலியுகம் ஆத்தா கலியுகம். இன்னும் உன்னை வைத்து என்ன என்ன பூசையெல்லாம் பண்ண போகிறார்களோ தெரியலயே? அவ்வ்வ்வ்.


பின் குறிப்பு: இது எவர் மனதையும் வருந்த வைக்க அல்ல... இக்கோவிலுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடந்து சென்றவன், கோவில் வலைப்பக்கத்தில் இதைக் கண்டேன்... என் மன வருத்தத்தை பதிவு செய்யவே.