பெண் புத்தி பின் புத்தி

பெண் புத்தி பின் புத்தி - பழக்க மொழியோ இல்ல வழக்க மொழியோ இது எப்படி என்று நம்ம கண்ணா-பின்னாவில் ஒரு ஆராய்ச்சி.

சாதாரணமா சொல்லனும்னா இது அதிக படியா பெண்கள் மூளையை சற்று குறைத்து மதிப்பிட்டு சொல்லப்படுவது. பெண்கள் தாமதமாக அல்லது ரொம்ப யோசித்து காலதாமதமாக செயல்படுவதால் அவர்கள் எடுத்த முடிவால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும்.

அது சரிதானோ என நினைக்க தோன்றுகிறது - இதோ ஒரு புராதாண கதை சான்று - மஹாபாரத்தில் இருந்து.

பாஞ்சாலியை துகிலுரிய அழைத்து வர துரியோதனின் காவலர்கள் அவள் வீட்டுக்கு சென்று அரன்மனைக்கு வருமாறு அழைக்கிறார்கள். அதற்கு பாஞ்சாலி தான் வீட்டை விட்டு வர இயலாது என்று ( நான் நைட்டி போட்டு இருக்கேன்-சாக்கு, வீடுக்கு தூரம்-போக்கு) சொல்லுகிறாள், காவலர்கள் பலவந்தமாக இழுத்து செல்லுகிறார்கள்.

சபைக்கு சென்றவுடன் துரியோதனன் அவளை துகிலுரியுமாறு கட்டளையிடுகிறான். பாஞ்சாலி உடனே பெருங்குரலெடுத்து பாடுகிறாள் (என்ன மானமுள்ள பெண்ணுன்னு மதுரையில கேட்டாக... அந்த மாயவரத்துல கேட்டாக மெட்டுல)
எனக்கு புருஷன் 1-க்கு 5-பேரு இருக்காக...
மெத்த படிச்ச துரோணரய்யா இருக்காக...
அவுகளமீறியா என்மேல கைய வெப்பீக...-ன்னு

பாஞ்சாலி பாட்ட கேட்ட துரி-க்கு வந்தது வெறி. பார்வையால் காவலர்களை எறித்தான்... காவலர்கள் துகிலை உறித்தான்.

பாஞ்சாலி அழைத்தால் பரமாத்மாவை... கண்ணா... அவர் உடனே கேட்டார்...என்னா?

பிறகு நடந்தது என்ன என்று உங்களுக்கு தெரியும். இதுக்கும் நம்ம பழமொழிக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்க்குறீங்களா?

இந்த பாஞ்சாலி பின்-னாடி கூப்பிட்ட கண்ணன வீட்டுல முன்-னாடியே கூப்பிட்டு இருந்தா (ஹி...ஹி நான் இப்படி ஒரு பதிவு போட்டு இருக்க முடியாது) இவ்வளவு அவமானம் நடந்திருக்காது இல்லையா? பாஞ்சாலிக்கு பின் புத்திதானா?

சரி அத இந்த அரசூரான் சொல்லுறது கிடக்கட்டும், நாலு நல்லவர்களை என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா?

சாலமன் பாப்பையா: நல்லா கேட்டீங்கய்யா, இதுக்கு நான் பதில் சொல்லுறத விட ஒரு பட்டி மன்றம் வச்சு சரிதான்னு சொல்ல இங்கன நாலு பேரு, இல்லன்னு சொல்ல அங்கன நாலு பேருன்னு எட்டு பேர பேச சொல்லி ஒரு நல்ல தீர்ப்பா சொல்ரேன் ய்யா... கொஞ்சம் பொருங்கய்யா.

திண்டு.ஐ.லியோனி: எனக்கு ஒரு புது பாட்டு ஒரு பழைய பாட்டு-ன்னு ரெண்டு பாட்டு பாடனும் போல இருக்கு... அவிங்க படத்துக்கு என்ன தேவையோ அத பாடிட்டு போயிட்டாய்ங்க... அது நமக்கு சரியா வராதுல்ல. இருந்தாலும் நீங்க கேட்டதுக்கு பதில் சொல்லனும்ல்ல. அது ஒன்னும் பெரிய விசயம் இல்ல... அது நம்ம பொம்பள பிள்ளைக ஆம்பிளைங்கள குத்தி குத்தி (முடிஞ்சா கொண்டை ஊசியால இல்லன்னா வார்த்தையால) பேசுரது... அதாங்க பஞ்ச் டயலாக்.

சுகி சிவம்: நான் சக்தி உபாசகன். பெண்களை அன்னை உமயவளுக்கு ஒப்பானவர்களாக கருதுபவன். அவர்கள் எடுக்கும் முடிவு நல்ல முடிவு... அவர்கள் இன்று எடுக்கும் முடிவால் பின் நாளில் என்ன நல்லது கெட்டது நடக்கும் என்று யோசித்து எடுக்கும் முடிவு. பின் வருவதை முன் கூட்டியே யோசிப்பவர்கள். பின் விளைவை நினைக்கும், யோசிக்கும் முன் புத்தி உடையவர்கள்.

ஏது... நம்ம சுகி சிவம் அய்யா சொல்லுறத பார்த்தா இதுக்கு பின்னால சுவையான பல விசயம் இருக்கும் போல... என்னன்னு பார்த்துடுவோமா? பாஞ்சாலி முன் புத்தியோட யோசிச்ச விசயத்த பார்ப்போமா?

சாக்கு-போக்கு: இதை வீட்டுக்கு வந்த காவலர்களிடம் சொல்லாம சபைல வந்து சொல்லியிருந்தா கணவர்கள் மற்றும் அங்க உள்ள பெருசு எல்லாம் என்ன சொல்லியிருக்கும்? யாம்மா நீ எல்லாம் ஒரு குடும்ப பெண்தானா? இதை உன்னை அழைக்க வந்த காவலர்களிடம் சொல்லியிருந்தால் உன்னை இங்கு அழைத்து வந்திருக்க மாட்டர்களே... உன் கணவர்களுக்குதான் அறிவில்லை பெண்ணை வைத்து சூது ஆடிவிட்டர்கள்... நீயாவது இங்கு வருவதை தவிர்த்திருக்கலாமே என்று பிளேட்டை மாத்தி போட்டு இருப்பார்கள். இப்ப சொல்ல முடியாதுல்ல. அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி-ன்னு பாஞ்சாலி பஞ்ச் போட்டிருக்கும்.

ஆன்றோர்களே-சான்றோர்களே:
கண்ணனை கூப்பிடுவதற்க்கு முன் கணவன்களை கூப்பிடுகிறாள்...காப்பற்ற சொல்லி (குத்து பாட்டு)
சபைக்கு வந்திருக்கா பாஞ்சா
உங்களுக்கு இருக்கா மாஞ்சா
வாங்கடா அஞ்சா... நெஞ்சா...

கணவனுக்கு முன் கண்ணனை கூப்பிட்டிருந்தால்...ஏய் நாங்க ஐஞ்சு பேரும் இல்லாம யாரடி அவன் கண்ணன்? எங்கள எல்லாம் என்ன கையாலாவதவன்னு நினைச்சியான்னு ஊடு கட்டியிருப்பாங்க. ஹும் பஞ்சாத்தாவ வெச்சு மங்காத்தா ஆடுன அஞ்சாம்பிளையும் அவுட்.

ஆண்டவனை கூப்பிடுவதற்க்கு முன் அரசவை அறிவாளிகளை கூப்பிடுகிறாள்... நாட்டமை வேட்டிய தூக்கி போடுங்க... என் மானத்தை காப்பாத்துங்கன்னு.

ஆத்தா... இதே மங்காத்தவா இருந்து 2-ண்ட போடு ரம்மி சேரும், 5-அ போடு பட்டை சேரும்-ன்னா போட்டுடலாம். உன் புருஷனுக்கு அதெல்லாம் போட்டும் அவுட்டாயிட்டனுவோ. எஞ்சி இருப்பது வேட்டி மாட்டும்தான் அதையும் உன்கிட்ட கொடுத்துட்டா உன் மானம் போகுதோ இல்லயோ எங்க கோ-மனம் போயிடும், துரியோதனன பத்தி உனக்கு தெரியாதுன்னு பம்மிட்டாங்க.

நாட்டாமைய எல்லாம் கூப்பிடாம இருந்தா என்ன பண்ணியிருக்கும் பெருசெல்லாம். எவனோ கண்ணனாம்ல்ல... எங்கள மீறி சபைக்கு வந்துட முடியுமா? வந்தாலும் துரியோதனன்தான் அவன் பேச்ச கேட்டுடுவானா? சுத்து பட்டி பதினெட்டுலயும் துரியோதனன அடக்க எங்கள விட்டா ஆள் இருக்கா?-ன்னு சொம்ப தூக்கிவிட்டுகிட்டு கிளம்பி இருக்கும். இப்ப நாட்டமை எல்லாம் தலைய நட்டுகிச்சி.

பாஞ்சாலிக்கு தெரியாதா இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அவனுக்கு வீடும் சபையும் ஒன்றுதான். இப்ப நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... பெண் புத்தி பின் - வருவதை முன் கூட்டியே யோசிக்கும் முன் - புத்தியா இல்லையா என்று.