முல்லை பெரியாறு – த மஸ்ட்

வலை முழுவதும் முல்லை பெரியாறு பற்றிய பல ஆவணங்கள், யூ-டியூப் காணொளிகள் என்று ஆயிரக் கணக்கில் உள்ளன. எனவே நான் அவற்றை இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.

முல்லை பெரியாறு – த மஸ்ட், சிவாஜி – த பாஸ்-லேருந்து என் எண்ணமாக நான் சொல்ல நினைப்பது.

எப்படி சிவாஜி (பழைய படம் இல்லை, சங்கர் இயக்கத்தில் வந்த்து) படத்தில் சிவாஜி என்ற ஒரு தனி மனிதன் ஒரு நல்ல நோக்கத்தோடு கல்வி மற்றும் மருத்துவ கூடங்களை நிறுவ பல வகையான எதிர்ப்புகளை எதிர் கொள்ளுவார். சுய நலம் கொண்ட தனி மனித எதிர்ப்பு, அனுமதி பெறவேண்டி அரசு அலுவர்களின் லஞ்ச லாவன்ய கெடுபிடி, லோக்கல் ரவுடியில் ஆரம்பித்து கடைசியில் ஒரு மாநிலத்தின் கல்வி மற்றும் முதல் அமைச்சர் வரை.

முல்லை பெரியாறு விவகாரத்திலும் அதுதான் நடைபெறுகிறது. பென்னிகுயிக் என்ற ஒரு நல்ல மனிதன் இரண்டு மாநிலங்களுக்கும் உதவட்டுமே என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒரு சிறந்த அணையை நமக்கு அளித்துவிட்டு சென்றிருக்கிறார். பின்னாட்களில் நடக்கப் போவதை முன்கூட்டியே அனுமானிக்க கூடியவர்கள் அறிவாளிகள் – தீர்க்கதரிசிகள். அப்படிப்பட்ட அறிவாளிகள் எதிகாலத்தில் சுய நலக் காரர்களிடம் இருந்தும், அரசியல் வியாதிகளிடம் இருந்தும் மனித வாழ்வாதாரமான தண்ணீரை காக்க அதை 999 வருட ஒப்பந்தமாக நிலை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மாநிலத்திலும் மத்தியிலும் அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், அங்கு அவர்களின் ஆட்சிக்கு அச்சுருத்தல்கள் வரும்போதும் அவர்கள் பிரச்சனைகளை திசை திருப்பவே முல்லைப்பெரியாறு அணையை கையில் எடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. [சிவாஜி படத்தில் சொல்வது போல், நீங்க கொடுத்ததெல்லாம் அந்த பார்ட்டிக்கு, எனக்கு என்ன கொடுப்பீங்க, உங்க புராஜெக்ட் வேல்யு எவ்வளவு?]

தன் சுய லாபத்திற்க்காக அணைப் பிரச்சனையை கிளறி விடும் அயோக்கியர்களே, உங்கள் ஒவ்வொருவரு ஆட்சி மாற்றதிற்க்கும் உறுதியாக இருக்கின்ற அணையை ஓட்டை போட்டு ஓட்டை போட்டு அணையின் உறுதியை உருகுலைக்கும் அரசியல் வாதிகளே, நீங்கள் போட்ட ஓட்டையால் அணையில் நீர்க்கசிவு உண்டாகிறதோ இல்லையோ, ஒற்றுமையாய் வாழும் தமிழக-கேரள மக்களின் இருதயத்தில இரத்தக் கசிவை உண்ட்டாக்கி விட்டீர்கள். போதும் உங்கள் சோதனை, இம்முறை செய்யும் சோதனை இறுதியாக இருக்கட்டும், முடிவு உறுதியாக இருக்கட்டும்.

மனம் இருந்தால் மார்க்கமுண்டு. உங்கள் அருகில் உள்ள சிறிய நாட்டைப் பாருங்கள், கற்றுக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் – இயற்க்கை வளம் இல்லாத நாடு/ஊர். மலேசியாவிடம் இருந்துதான் குடிநீர் பெறுகிறது. இங்கு உள்ள பிரச்சனைகள் போலத்தான் அங்கும் நிகழ்ந்தது. உதாரணத்திற்க்கு ஒன்று – மலேசியாவிடம் இருந்து பெற்ற நீரை சிங்கப்பூரில் சுத்தப்படுத்தி, பாட்டிலில் அடைத்து அதை மலேசிய சந்தையில் விற்பாதாக. [தமிழகம் கேரள தண்ணீரில் விவசாயம் செய்து அதை கேரளத்தில் விற்பது போல்].

சிங்கப்பூரின் மதியுக அமைச்சர் லீ-குவான்-யூ மற்றும் முதல் அமைச்சர் கோ-சோ-தோங் அணி 2010-ல் முடிவுக்கு வர இருந்த தண்ணீர் ஒப்பந்தத்தை மிக அழகாக கையாண்டார்கள். அப்போது மலேசியா இதில் மலேசிய மக்களின் சிங்கப்பூர் மத்திய சேமிப்பு நிதி இருப்பை (சி.பி.எஃப்) துருப்புச்சீட்டாக உபயோகப்படுத்தியது. எதை எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதை விட்டுகொடுத்து, இரண்டு நாட்டிற்க்கும் எது நல்லதோ அதை முன்னிறுத்தி சிங்கப்பூருக்கு 2011 முதல் 2061 வரை, தற்போதைய விலையை விட 46 பைசா (செண்ட்) அதிகம் கொடுத்து தண்ணீர் வரத்தை உறுதி படுத்தினர். இது தொலை நோக்கு பார்வை மற்றும் பயணத்திற்க்காண தீர்வு, இனி 50 ஆண்டுகளுக்கு அவர்கள் அதைப்பற்றி பேசப்போவது இல்லை.
ஒரே நாட்டில், அருகருகில் உள்ள இரண்டு மாநிலங்களுக்குள் உள்ள தண்ணீர் தேவையை/பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியாதா?
இரு மாநில மக்களும் சொல்லவேண்டிய ஒரே வாக்கியம், அது சிங்கப்பாதை வாக்கியம் : முல்லை பெரியாறு – த மஸ்ட்

Most Unenviable Source to Tamilnadu
Mallus Use and Secure Tenancy