பயணங்கள் முடிவதில்லை...

ஒரு எந்திரத் தாயின் இறுதிப் பயணம். அவள் இதுவரை தான் விண்ணுக்குச் சுமந்து சென்றர்வர்கள் அனைவரையும் மீண்டும் பத்திரமாக மீண்டும் வீடு கொண்டுவந்து சேர்த்திருக்கிறாள்.

1984-ல் கரு பெற்றால் உரு பெற்றால், அன்றுமுதல் இன்று வரை பல விண்வெளி தகவல் திரட்டு, ஆராச்சி மற்றும் சர்வதேச விண்வெளி மேடை அமைப்பு பணிகளை செவ்வனே செய்திருப்பவள்... அவள் பெயர் டிஸ்கவரி (விண்வெளி ஊர்தி).

இது நாள் வரை அவள் கொண்ட பயணம் முப்பத்தி எட்டு, பயணப் பட்ட தொலைவு மில்லியனில்... 142,917,535 மைல்கள் ( 230,003,477 கிலோ மீட்டர்). விண்ணில் வாழ்ந்த நாட்கள் 351, சுமந்து சென்ற விண்வெளி அறிவியலர் 246 பேர்.

நாஸாவில் இவளைப்போல் மூன்று பேர் இருந்தாலும் இவளே முதுமையானவள், பயணம் என்றால் பயப்படாமல் பெட்டி படுக்கைகளை தயார் செய்பவள். இன்று இன்னும் சில மணி நேரங்களில் அவளின் கடைசி விண்வெளிப் பயணம் தொடங்க போகிறாள்... அவளின் இப்பயணமும் முந்தைய பயணங்கள் போல் வெற்றியடையா வாழ்த்துகிறேன்.

இன்று அவள் செல்லப் போகும் பயணம் வேண்டுமானால் இறுதியாக இருக்கலாம், ஆனால் அவளுடைய பயணங்களும் அதன் பயன்பாடுகளும் விண்வெளி ஆராச்சியிலும், சாதனையாக அருங்காட்சியகத்திலும் தொடரப்போகின்றன... டிஸ்கவரியின் பயணங்கள் முடிவதில்லை.

முதல் 10 நிமிடப் பயணம்...

பொறுப்பி: 39-வது பயணத்திற்க்குப் பிறகு டிஸ்கவரியை நீங்கள் ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்-ல் உட்வர் கேஸி மையத்தில் பார்க்கலம்.

வாழ்க்கைக்கு உறுதுணை உறவா நட்பா?

கேட்ஸ் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாவில் பட்டிமன்றம் புகழ் திரு.ராஜா தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்தினார்... அவருக்கே உரிய நகைச்சுவையுடன். அதில் பங்கு பெற்றோரும் சிறப்பாகவே பேசினார்கள்.

அதை நீங்க கண்டு கேட்டு ரசிக்க இத்துடன் காணொளித் தொடர்புகளை இணைத்துள்ளேன்.

பட்டிமன்ற நிகழ்வுத் தொடக்கம்...

பட்டிமன்ற ராஜா தொடக்கவுரை...

திரு.பிரதீப் திருமலை உறவே...

திருமதி.லெக்ஷ்மி தேசம் நட்பே...

திருமதி.சுரேகா பாலாஜி உறவே...

திரு.ஸ்ரீராம் சுப்ரமணியம் நட்பே...

அரசூரான் (ராஜா) உறவே...

திருமதி. அவ்வை மகள் நட்பே...

பட்டிமன்ற ராஜா தீர்ப்புரை...


நன்றி.

கேட்ஸ் பொங்கல் விழா 2011... தகவல்கள்

பொங்கல் விழா இனிதே நடந்தேறியது. நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும், தொலைபேசியில் வாழ்த்து சொன்ன அன்பர்களுக்கும் நன்றி... நன்றி... நன்றி.

500 பேர் அமரும் அரங்கம்... உட்கார இடமின்றி அரங்கத்தின் இருபுறமும் நின்றவாறு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் விருந்தினர்கள்.

காலை சின்னஞ்சிறு மொட்டுக்களின் ஆடல் பாடலுடன் தொடங்கிய விழா, சிறப்பு விருந்தினர், லில்பர்ன் மேயர் திருமதி டயானா ப்ரஸ்டன் அவர்களின் சீறிய உரையுடன் மதிய இடைவேளையை தொட்டது. அரங்கத்தில் ஒருபுறம் தாளம் மறுபுறம் கோலம், ஆம் வண்ணமயமான கோலப்போட்டியும் நடைபெற்றது.

கோலத்தைக் காண...இங்கே சொடுக்கவும்...

அரங்கம் நிறைந்து வழிந்தோடிய கூட்டம், நின்றுகொண்டே விருந்தினர்கள் பட்டிமன்றத்தை கேட்டு ரசித்தனர். பட்டி மன்றம் ராஜா, தனக்கே உரிய பாணியில் தமிழ் சங்கங்களின் சேவைகளையும் மற்றும் அதில் உறுப்பினராவதின் தேவைகளையும் வலியுறுத்தி பேசியதோடு, புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையில் நட்பின் அவசியத்தையும், உறவின் தாக்கத்தையும் ஒப்பிட்டு, வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது உறவே என தீர்ப்பு கூறி பட்டிமன்றத்தை நிறைவு செய்தார். (நான் தான் உறவு அணிக்கு தலமை பொறுப்பேற்றிருந்தேன்... அப்படி என்ன பேசினோம் என்றுதானே கேட்கிறீர்கள்... ஹா... ஹா... ஹா... உண்மையப் பேசினோம்)

விரைவில் பட்டிமன்ற காணொளியை இணைக்கிறேன்.