ஆந்திரா காரனுக்கு புத்தி லட்டு

ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு... அது பழ மொழி, நம்ம தலைப்பு தாங்க இப்ப புது மொழி.

கொல்டி - இது தெலுங்கு என்கிற வார்த்தையின் உல்டா என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. அவர்கள் உல்டா (புரட்டி) போடுவதில் வல்லவர்கள் என்பதற்க்கு பல விசயங்கள் உள்ளது. படிக்காமலே பட்டம் வாங்குதல், கணணி மொழியில் அனுபவமில்லாததில் ஐந்து முதல் பத்து வருடங்கள் அனுபவம் என்று ரெஸ்யூம் தயார் செய்தல் இப்படி பல...

அந்த கொல்டி மகுடத்தில் இபோது ஒரு வைர கல்லை பதித்து இருக்கிறார் சத்யம் ராமலிங்க ராஜூ... (SATYAM) உண்மை-யை உல்டா பண்ணி (MAYTAS) மேடாஸ் என்று... பின்ன அவரும் கொல்டிதானே.

நண்பர் சொன்னார் ஒரு புது மொழி...

ஆமை புகுந்த வீடும் ஆந்திரா காரன் புகுந்த கம்பெனியும் உருப்படாது.

ஆந்திராவில் ஸ்டியரிங்கோ, கரண்டியோ பிடித்தவன், மற்றும் ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தையில் இருந்து எல்லாம் இங்க வந்து கணிப்பொறி எஞ்ஜினியராக வேலை செய்கிறார்கள் என்று.

நம்ம கொல்டி நண்பர் என்ன சொல்ரார்ன்னு கேளுங்க...

கொல்டி: விடுங்க சார்... எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?

அங்க கார் டிரைவர்... இங்க ப்ராஸஸ் டிரைவர்

அங்க கோங்குராவ குக் பண்ணுனோம்... இங்க (COBOL) கோபால் கோட குக் பண்ணுரோம்.

ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தை என்ன சார், டெலிவுட்ல மார்கெட் போன லைட் பாய்லேருந்து டைரக்டர் வரைக்கும் இங்க இருக்கோம் சார்.

சார்... இங்க கோடு எழுதர கூட்டத்துல ஜெயில்ல இருந்து தப்பி வந்த சில நக்சல்பாரிகள் கூட இருக்காங்க... ரொம்ப பேசுனீங்க... சம்பேஸ்தானு.

சார் இக்கட ரா சார்... உங்களுக்கு SAP தெரியுமா சார்?

நானும் சொன்னேன் அது ஒரு இ.ஆர்.பி, அது இதுன்னு.

கொல்டி: சார் தெரியிலன்னா தெரியலன்னு சொல்லு சார். SAP-ன்னா Software for Andra Pradesh-ன்னு

இப்ப சொல்லுங்க இந்த இடுக்கையின் தலைப்பு சரிதானே?

கொல்டி சொல்லுரது இருக்கட்டும் நம்ம சூப்பர் ஸ்டார் என்ன சொல்ரானுன்னு கேளுங்க

ஆ... ஹா... ஹா...
கண்ணா... நான் சொல்ரேன் நல்லா கேட்டுக்கோ...
மண்ணோட மணமும்...
மனுஷனோட குணமும்...
மாறவே மாறாது...

ஆ... ஹா... ஹா...
அது ஆந்திராவா இருந்தாலும் சரி
அமெரிக்காவா இருந்தாலும் சரி..

ஆ... ஹா... ஹா...
கண்ணா... ஆந்திராகாரன் அறிவ வெச்சு வேலை செய்ரவன்...
நான் தமிழன்...
அறிஞர் அண்ணா சொன்ன பகுத்தறிவ வெச்சு வேலை செய்ரவன்...

ஆ... ஹா... ஹா...
கண்ணா... அறிவு பெருசா இல்ல
பகுத்தறிவு பெருசான்னு கூட்டி கழிச்சி பாரு...
கணக்கு கரக்டா வரும்... ஆ... ஹா... ஹா...

எளே யாருளே அது முழிக்கிறது... அறிவு மூணு எழுத்துலே... எளே பகுத்தறிவு அஞ்சுல்லே... பின்னே பெருசுதானே...

இந்தியனே... நீ கருப்பா இல்லை வெள்ளையா?

அமெரிக்காவில் ஒரு கருப்பின அதிபர் வந்தபின் எங்கள் அலுவலகத்தில் என் குழுவில் அதை பற்றி பட்டும் படாமல் பேச்சு நடந்தது. எங்கள் குழுவில் கருப்பு இனத்தவர் இல்லாததால் கொஞ்சம் வெள்ளை தூக்கலாக இருந்தது. அதை பார்த்த எனக்கு வழக்கமாக வரும் நக்கல் தூக்கலாக...

நான் கருப்பு பாதி வெள்ளை மீதி
இரண்டும் சேர்ந்த கலவை நான்
கருப்பை கொன்று கருப்பை கொன்று
வெள்ளை வளர பார்க்கிறதே...

ஏய்... நாங்கெல்லாம் பி-க்கு பி, டபிள்யூ-க்கு டபிள்யூ.
புரியல? பிளாக்கு-க்கு பிரவுனு, வொயிட்டு-க்கு வீட்ட்டு.

அதாண்டா கோதுமை...

ஏண்டா எருமை
இப்ப புரியாதடா
எங்க அருமை?

நான் தப்பையும் அடிப்போம்,
தவிலையும் அடிப்போம்,
ரெண்டும் கிழிஞ்சி போனாதச்சி போட்டு அடிப்போம்...

ஏ டண்டனக்கா..
ஏ டணக்குனக்கா...

(ஹி... ஹி... எல்லாம் எங்க ஊர் காரர் தாக்கம் தூக்கலாக ஆனதால் வந்த விளைவு. )

வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதன்...

அமெரிக்கா... லேண்ட் ஆஃப் ஆப்போர்ச்சுனிட்டீஸ்...

America – Land of Opportunity… is there any limit on the Opportunity? No… here is the evidence, today a Black man in White House. I salute this country.

வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்...
வந்தோரை அதிபராக்கி அழகுபார்க்கும் அமெரிக்கா...

அதை கண்ணதாசனின் கவிதை வரிகளால்....

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
கருப்பு மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
கருப்பு மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் ஜெயித்தாலும் கறுப்பு மனிதன் ஜெயித்தாலும்
அதிபர் என்ற பேரிலே ஆட்டம் போடும் மாளிகையே
அதிபர் என்ற பேரிலே ஆட்டம் போடும் மாளிகையே

(ஒன்று)

வெள்ளை மனிதன் கலரை காட்டி விரட்டியடித்தான்
மார்டின் லூதர்கிங் எதிர்த்து நின்று வழியை காட்டினான்
மற்றும் ஒருவன் மானிலதில் செனேட்டர் ஆனான்
நேற்று காண்டலிஸா ரைஸ் வெளியுரவு மந்திரியானார்
இன்று ஓபாமா வெள்ளைமாளிகையில் இடைத்தை தேடினார் - வரும்
நாளை கருப்பர் ஏழு உலகை ஆள போகிறார்

(ஒன்று)

வெள்ளையர் ஆட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
கருப்பர் ஆட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
மக்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே

வெள்ளை மாளிகை கட்டி தந்ததெங்கள் கைகளே
கருப்பரை தேர்தலில் தேர்ந்தெடுத்ததெங்கள் நெஞ்சமே
ஆப்போர்ச்சுனிட்டி இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
ஆப்போர்ச்சுனிட்டி இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே

(ஒன்று)

ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...

சத்யம் ராமலிங்க ராஜு (ரா.ரா)-வுடன் சிறையில் ஒரு பிரத்தியேக நேர்காணல்...

நிருபர்: வணக்கம் சார்.
ரா.ரா: வணக்கம் தம்பி.

நி: சார், சத்தியம் பற்றி சொல்லுங்களேன்.
ரா.ரா: நான் சொல்வதெல்லாம் சத்யம், சத்தியத்தை தவிர வேறு எதுவும் இல்லை.

நி: சார் நான் நீதிபதி இல்லை நிருபர், நீங்க தவறா புரிஞ்சிகிட்டீங்க.
ரா.ரா: நான் சரியாதான் தம்பி சொன்னேன். சத்யம் தான் என் நிறுவனம், மேடாஸ் பற்றி எதுவும் தெரியாதுன்னு சொன்னேன்.

நி: உங்க நிறுவனதில் நடந்த முறைகேடுகள பிரைஸ் வாட்டர் ஹவுஸ் போன்ற சிறந்த கணக்கீட்டார்களால் கண்டு பிடிக்க முடிய வில்லையே எப்படி?
ரா.ரா: சத்யம் நிறுவனம்தான் பி.வா.ஹ பயன்படுத்தும் மென்பொருளை செய்தது, எங்கள் நிருவனம் சம்பந்தமான கணக்கீடு செய்யும் போது சில வளைவு நெளிவுகளை உட்படுத்தியிருந்தோம். அது பிற்ரால் கண்டுபிடிக்க முடியாத ஒரு சிறிய முன் ஏற்பாடு.

நி: பொதுவா சிறைக்கு வந்தவங்க சத்திய சோதனை படிப்பாங்க, நீங்க புத்தரோட புத்தகங்களை படிக்கிறீங்களே?
ரா.ரா: சத்யத்துக்கு சோதனை பண்ணின நான் சத்திய சோதனை படிச்சா ஊரே சிரிக்கும், அதனால கொஞ்சம் நல்ல புத்தி வரட்டுமேன்னு புத்தரோட புத்தகங்களை படிக்கிறேன்.

நி: உங்கள் நேரத்திற்க்கு நன்றி சார்
ரா.ரா: நன்றி தம்பி, என்கிட்ட கொஞ்சம் சத்யம் ஷேர்ஸ்/பங்கு இருக்கு வாங்கிகிறீங்களா? ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...

நி: வேண்டாம் சார் இப்ப பங்கு வாங்கி எனக்கு நானே சங்கு ஊத விரும்பல.