அக்கடா... துக்கடா... - 2

செய்தி: கோலிவுட்டில் சிம்பு தனுஷ் டைட்டில் போட்டி

தனுஷ்: பொல்லாதவன்
சிம்பு: மோசமானவன்

அப்ப மத்தவங்க எல்லாம்....

கேப்டன்:கோபமானவன்
சித்தப்பா:பாசமானவன்
தல:வேகமானவன்(ரேஸ் பார்ட்டி)
விஜய்:அடக்கமானவன் (ண்னா..வேணாங்கனா)
விக்ரம்:விவரமானவன்
சூர்யா:ஒளிமயமானவன் (ஜோதியோடு)எஸ்.ஜே.சூர்யா:விவகாரமானவன்
விஷால்:வீறாப்பானவன் (முறைச்சது போதும் கொஞ்சம் சிரிப்பா)

எல்லாரையும் கவர் பண்ணிட்டனா?

ஹி... ஹி... பெருந்தலைகள் இல்லாட்டி எப்புடி?
கமல்:கண்ணியமானவன் (டைட்டில மட்டும் தான்)
ரஜினி:வயசானவன் (யூத்தா டைட்டில் சொன்னா என் பேரன் பெண்டு/பேத்து எடுத்துடுவான்)

போர்வால் டு ஃபயர்வால்

மன்னர்: யாரங்கே?
மந்திரி: மன்னா?
மன்னர்: அரசியிடம் வலை தளத்தில் யாரும் கடலை போடமல் இருக்க ஃபையர் வால் போட சொன்னேன், ஆனால்...
மந்திரி: என்ன ஆச்சு மன்னா?
மன்னர்: இப்போது நானே உள்ளே போக முடியாமல் அந்தபுரத்தை சுற்றி நெருப்பு வேலி போட்டு இருக்கிறார்கள்.
மந்திரி:??!!!

சின்ன ஆப்பா...பெரிய ஆப்பா...

(டைட்டில் சாங்க்:சின்ன ஆப்பா...பெரிய ஆப்பா...சந்திச்சலே ஆப்புதான்ப்பா...)

சி.ஆ: நான் அடிச்சா அது நைஸு
பெ.ஆ: நான் அடிச்சா அது சைஸு

சி.ஆ:ஆமாம் நம்மள ஏன் ஆப்பு-ன்னு கூப்பிடுறாங்க?
பெ.ஆ:அடிக்க ஆரம்பிச்ச ஒடனே வலிக்கும்ல, வலிக்கும் போது என்ன சொல்லுவாங்க..ஆ..ஆ-ன்னு, அடிச்சு முடிஞ்ச போது... அப்பா-டான்னு இருக்கும். சோ...ஆ-வும், அப்பா-வும் சேர்ந்து ஆப்பா ஆயிடுச்சி.

சி.ஆ: அப்ப ஆப்பா-ன்னு சொல்லம ஏன் ஆப்பு-னு சொல்லுறங்க?பெ.ஆ:அதுவா...ஆப்பா பிரஸண்டென்ஸ்/புலூரல்... ஆப்பு... பாஸ்டென்ஸ்/சிங்குலர்.

சி.ஆ:ஆப்புக்கே ஆப்பு அடிக்கிறவங்க இருக்காங்களா?
பெ.ஆ:தோ...அது நீதான்...உன் கேள்விய உன்கிட்டயே கேட்டுப்பாரு...அப்ப தெரியும்.

புராஜக்ட் சப்போர்ட்...பேட்டா ராப்...

தல: இன்னாப்பா? தலைல கைய வச்சிகினு உக்காந்துட்ட? இன்னா மேட்டர், யாங்க் கைல சொல்லுப்பா.
கில: ஆங்க்...அது நேத்து ரன் பன்னுன ஜாப் ஊத்திக்கிச்சுபா...அதான். நீ வந்து கேட்டா உன் கைல என்னா சொல்லுரதுனு தெரியாம முழிச்சிகினு இருக்கென்.
தல: அட தோ பாருடா, சப்ப மேட்டரு, அதுக்கு பொயி இன்னாமோ கப்ப கவுந்தமாரி இருக்க. போ போயி இப்ப ரீஸண்டா இன்னா சேஞ்ச் பன்னுனோம்னு யோசி, அப்பால விட கப்புனு கிடைக்கும்.
கில: யான்பா... என்கு அதுகூட தெரியாதா, நான் என்ன கூமுட்டையா? நேத்தி நம்ம கபாளி தான் கியூசி பன்னான்பா, எல்லாம் கறீட்டா கீது-னு சொன்னான்பா.
தல: கஸ்மாலங்களா, அதுக்குதான் கோட் செய்யசொல்லோ கொஞ்சம் புரோஆக்டிவா எக்ஸப்சன் ஹேண்டில் பன்ன்னுங்கோன்னு சொன்னேன், யவனாவது கேட்டீங்களா? இப்போ அனுபவிங்கோ.
கில: சும்மா கூவாதிங்க, கோட் பன்ன அஞ்சு நா கேட்டா ரெண்டு நா குடுக்க வேண்டிது, அதுல கூட அப்ப அப்ப கொசுரு வேளையும், இப்ப வந்து புரோஆக்டிவ், புரோட்டாவுக்கு ஸால்னானு...
தல: என்னாமே, நம்ம கைல ராங்க் பேசுர? ஏத்தமா உன்கு? நீ இன்னா பன்னுவியோ ஏது பன்னுவியோ என்கு தெரியாது, கோழி கூவசொல்லோ யாங்கைல ரிப்போட் இருக்கனும்..ஆங்க்.

வார்த்தையில் வன்முறை...

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு என்ன கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

பொருக்கியா இருந்த நான் வருக்கியா ஆயிட்டேன்....

நான்...ஊருல பெறிய பொருக்கி
குறுக்க வந்தா ஒரு சிறிக்கி
கூபிட்டா கைய்ய சொடுக்கி

அவ...ஊருல மேனா மினுக்கி
கட்டி அனைச்சிட்டா என்ன இருக்கி
மனம் விழுந்துடிச்சி தடுக்கி

நான் அவ வாயில இப்ப வறுக்கி

கல்லூரி கானா...

கல்லூரி கானா...

வகுப்புல யென் பேரு கிட்டு
கிட்ட சுத்தி நிறைய சிட்டு
அதுல பல பேரு அட்டு, சில பேரு லட்டு

மாலாதான் யென்னோட பிட்டு
மயக்கத்துல ஊ..ல..லா..லா பாட்டு
மார்க்குல ஓ..ல..லா..லா கோட்டு

கையில கொடுத்தா ஒரு சீட்டு
அமெரிக்காவுக்கு விட போரா ஜூட்டு
நான் இப்ப வெத்து வேட்டு.

(கீழே உள்ள வரிகள் தனி நபர் தனிக்கைக்கு உட்பட்டது...U/A சர்டிஃபைடு)
பச்சை

அவள்... பக்கதுல பாக்கி(யம்/ஸ்தானி) பச்சை
கண்ணுல காமிக்குரா இச்சை
மார்புல கட்டியிருக்கா கச்சை
கண்கள் கேட்காது என் பேச்சை
நிறுத்த போகுது என் மூச்சை
கயட்டி போடுவாலா பிச்சை?

ஹி...ஹி..துவைத்து போடத்தான்.

சிரிக்காதே...

சிரிக்காதே...
சிரித்தால் உன் கண்ணத்தில் குழி...
என் மனம் தடுக்கி விழுந்து விட போகிறது

கண்களைத் திற...
அந்த ஒளியில் தான் நான்
உன் இதழ் என்ற இருவரி கவிதையை படிக்க முடிகிறது.

மௌனத்தை கைவிடு...மரணம் நிகழ்ந்துவிட போகிறது

உன் கயல் விழியால் ஒரு கடைகண் பார்வை...
கண்ணக் குழியோடு ஒரு கள்ளமில்லா சிரிப்பு...
காற்றுக்கும் வலிக்காமல் ஒரு கையசைவு...
ஒன்றே... ஒன்று மட்டும்... என் உயிர் பிழைக்க.

பெண்ணே நீ ஒரு மாயம்...

முகத்தில் எப்பொழுதும் முக-சாயம்
ஆடை அணிவதில் சிக்கனம் அணி-யாயம்
இவற்றால் என் மனதில் பெரும் காயம்
காயத்திற்க்கு மருந்தாக...
நீ என் கூட விளையாட வறியா தாயம்?

நானும் மாயவரம்- தாங்கோ

ஹேய்...யாருடா நீ பருப்பு?
மனசுல என்னா நெனப்பு?
மும்தாஜ் இடுப்பாடா அடுப்பு?
மத்தத பாத்தியா என்ன எடுப்பு?
நீ ஏத்தாத எனக்கு வெறுப்பு
"வீரா"வுக்கு வந்துடும் கடுப்பு.

செட்டு போட்டு எடுத்தா தான் அது படம்
பிட்டு போட்டு(அடிச்சி) பாஸ் பண்ணுனா அது பாடம்
சாமியாரு இருந்தா அது மடம்
மாமியாரு இருந்தா அது மாடம்
அடுக்கு மொழி பேசுனா அது டி.யா.ரு
என்ன கேக்க நீ யாரு?


ஆட்டோ ஷோ... (மிச்சிகனில்)

நான் பார்க்க போனேன் காடி
சுத்தி பார்த்தேன் தேடி
ரொம்ப புடிச்சது ஆடி
காரணம் அதோட பாடி
விலைய பார்த்தா...ஆத்தாடி
வீட்டுக்கு வந்துட்டேன்... ஓட்டமாய் ஓடி

தண்டனை...

கனவு கை கூடவில்லை - என் பெற்றோருக்கு,
காதலியுடன் என் கல்யாணம்

கால் காசு செலவில்லை - என் பெற்றோருக்கு,
காலையில் பதிவு திருமணம்

காலில் விழுந்து ஆசிபெற வழியில்லை - எங்களுக்கு,
காலம் கணிந்துவர காத்திருக்கிறோம்.

மல்லு கட்டு

'ஜல்லி கட்டு'... நக்கலுக்காக அது ஆயிடுச்சி 'மல்லு கட்டு'.

(அறிவிப்பாளர்: இந்த வருட மல்லு கட்டு நிகழ்ச்சியை நமது 'பட்டி மன்ற பாவலர்' அய்யா...சாலமன் பாப்பைய்யா தொகுத்து வழங்குவார்)

அனைவருக்கும் வணக்கம். ஒரு திரு நாளு... பண்டிகை அப்படீன்னா கொண்டட்டம் இருக்கனும்யா... அப்பதானா மனசு குதூகலமா இருக்கும். உண்மைய சொல்லனும்னா... இங்க 'ஜல்லி கட்டா' / 'மல்லு கட்டா'-னு ஒரு பட்டி மன்றம் நடத்துலாம்யா... இல்லியா பின்ன... அங்க பாருங்க... ஒரு பக்கம் கொம்பு சீவி, பல பல-னு வண்ணம் பூசி... சும்ம ஜில்..ஜில்-னு முரண்டு புடிச்சி நிக்கிற காளைங்க... மறு பக்கம் அந்த ஜல்லி கட்டு காளைய 'மல்லி மொட்டு'-னு நினைச்சி அடக்க துடிக்கிர வாலிப காளைங்க... திறந்து விடுங்கய்யா...காளைங்கல மோதி பாத்திறட்டும்.

தோ...திறந்து விட்டச்சய்யா முதல் காளைய... ஆங்க்... ஆகாங்க்... அருமைய்யா... தலைய ஆட்டுது, தரைய பிராண்டுது... முட்டப் போவுதா இல்ல முனகப் போவுதான்னு பாப்போம்.

அடடா... அம்புட்டு பேரும் கிளம்பிட்டாங்கய்யா காளைய அடக்க... பள்ளிக்கூடத்துல ஒரு வாத்தியார் பல காளைங்கள அடக்குவார்... அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி... இங்க ஒரு காளைய பல காளைங்க துரத்துது. ஓ... ஓய்... சும்மா சொல்லப்பிடாதுய்யா காளை அது வேளைய ஆரம்பிச்சிடுச்சி... சும்மாவா... அலங்காநல்லூர்ல... நம்ம பசங்கள ரவுண்டு கட்டுது.

ஓரு பயபுள்ள ஆர்வ கோளாருல காள வால புடிக்குது... நம்ம காள ஒரு யு டேர்ன் அடிக்குது. வால புடிச்ச புள்ள இப்ப காளையோட கால்ல... அவனுக்கு இந்த 'மல்லு கட்டு' இனி 'மண்ட கட்டு' தான்.

இதோ வந்துட்டாரு ஒரு மதுரகார தம்பி துள்ளிகிட்டு... தலையில முண்டாசு கட்டு (ஏதாவது 'பாபா' கட்டா இருக்குமோ)... பார்வையில ஒரு தெணாவெட்டு... இருக்காத பின்ன... அது மதுர மண்ணோட பிறந்தது ஆச்சே... அவரு காளைய பாக்க... காளை அவுர நோக்க... காளைகிட்ட கண்ணாலயே சொல்லுறாரு... மதுரக்காரன் அடக்கிடுவோம்ல...

அதான் சொன்னோம்ல... மதுரக்காரன் யா... காள இப்ப கதருதுல்ல... இதுக்கு மேல கமெண்டரி எதுக்கு... கிளம்புங்கய்யா வீட்டுக்கு போவோம்.

அறிவியல் முன்னேற்றம்...50/50

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல, ஒரு நிகழ்வுன்னா நல்லது கெட்டது இரண்டும் நடப்பது போல...(ரொம்ப பில்டப் பண்ணுரனோ?) அறிவியல் முன்னேற்றமும் "ஆக்கப்பாதை" "அழிவுப்பாதை"-னு 50/50-யா இருக்கு.

ஆக்கப்பாதை பற்றி நான் ஒன்னும் புதுசா சொல்ல தேவை இல்லை இங்கே. அழிவுப்பாதைய பற்றி கொஞ்சம் அலசலாம். அடடா இவன் ஏதோ குண்டு வைக்கப் போரத பத்தியோ இல்ல இனையதளங்களால் தடுமாறிப்போகும் தற்குறிகளை பற்றியோ சொல்லப் போரான்னு நினைக்காதீங்க... இது ஆக்கப்பாதையில் உள்ள அழிவுப்பாதை பற்றியது (அங்க பில்டப் பண்ணுனேன்... இங்க பினாத்துரேனோ?). சரி புரியர மாதிரி சொல்லுரேன்... குறை-யில் குறை-யை காணாமல், நிறை-யில் குறை-ய பத்தி பார்ப்போம்.

ஒரு சராசரி மனிதனை நினைவில் வைத்து சில விசயங்களை அலசுவோம்...

1. நினைவாற்றல் - குறைய காரணமாகிறது

கால்குலேட்டர கையாலுவதே ஒரு திறமை, அத வச்சு சைன்/காஸ் தீட்டா இல்ல ஒரு பெரிய எண்ணோட மடங்கு/மூலம் இதெல்லம் அதிவேகமா போட பயன் படுத்த ஆரம்பிச்சோம்... இப்ப 5-யும், 9-யும் கூட்ட கால்குலேட்டர் எங்கன்னு தேடுராங்க. சரி இத விடுங்க சிலபேர் கணக்குன்னாலே கடுப்பாய்டுவீங்க. இந்த டெலிஃபோன் சமாச்சாரத்த பார்ப்போம்... என்னமோ டிஜிடல் டயரியாம்... பர்சனல் ஆர்கனைசராம்... அப்போல்லாம் 5 இல்ல 15 நம்பர பட படன்னு சொல்லுவோம்... இப்ப? அய்யோ நம் நம்பர் நமக்கே தெரியாது... என்ன ஒரு சாமர்த்தியம் நமக்கு... நம்பர் கேட்கும் நண்பரிடம் சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாருங்க... " நீங்க ஒங்க நம்பர சொல்லுங்க... அப்படியே என் செல்லு ஏத்திகிட்டு... அப்படியே ஒங்களுக்கு ஒரு மிஸ்டு கால் விடுரேன்... நீங்க அத அப்படியே ஸ்டோர் பண்ணிக்கலாம்" (ஹும் அவரே இதுக்கு-தான உங்க நம்பர கேட்டாரு). நான் யாரையும் குத்தம் சொல்ல விரும்புல... அடிக்கடி பிளான் மாறுது இல்ல புரொவைடர மாத்துரோம்... இதையே அடுத்தவங்களும் செய்ய... இப்ப நிலமை? "யாரு சிம்முல யாரு"-ன்னு ஒரு நிகழ்ச்சியே நடத்துலாம் போல இருக்கு.

2. சோம்பேரிதனம் - அதிகரிக்க காரணமாகிறது

என்ன கொடுமையா இருக்கு... எதுக்கெடுத்தாலும் கால்கடுக்க நிக்க வேண்டியிருக்கு... ஈ.பி பில்லுக்கு, டெலிஃபோன் பில்லுக்கு, பஸ்/ரயில்/விமானம் பயண முன்பதிவு செய்ய... அப்பாடா... வந்தாச்சு டெலி பேமெண்ட், டெலி புக்கிங்க், ஆன்-லைன் பேமெண்ட், ஆன்-லைன் புக்கிங்க... உங்களது அனைத்து தேவைகளும் உங்கள விரல் நுனியில்... சுழற்றுங்கள் அல்லது சொடுக்குங்கள்(கிளிக்குனுமாம்) நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே... ஓ இதான் அந்த "கவுச் பொட்டடோ"-வா.

அட அத இன்னாமோ சொல்ராங்கப்பா... ஆங்க் "ஐடெண்ட்டி தெஃப்ட்", அதாம்பா நம்ம விசயங்கள நமக்கு தெரியாம அடுத்தவன் ஆட்டைய போடுரது. இது சின்ன விசயதுலேருந்து பெரிய விசயம் வரைக்கும் நடந்துகிட்டு இருக்கு. நம்ம பேசாத பில்லுக்கு நமக்கு பில்லு வருது, நம்ம வாங்காத பொருளுக்கு பற்று அட்டை-க்கார வங்க்கியிலுருந்து பணம் கட்ட சொல்வது, இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டு போகிறது... எங்க போயி முடிய போகுது?

"ஐடெண்ட்டி தெஃப்ட்" என்பது "ஐடியா தெஃப்ட்"-ஆக அல்லது "மனசு தெஃப்ட்"-ஆக... நீங்க செய்யல்லாம்னு மனசுல நினைக்கிறத உங்களுக்கு அருகில் உள்ள ஒருவர் அல்லது உங்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு உடைய ஒருவர் அதை செய்துவிட்டு இருப்பார்.

"கால் கடுக்க" நின்ன காலம் போய் "மனசு நடுங்க" வேண்டிய காலமா ஆயிடுச்சி.

சோம்பேரிகளான நாம் இனி அடிக்கடி உச்சரிக்க போகும் வார்த்தை - "நான் அவன் இல்லை".

சமையல் விமர்சனம்

சினிமா விமர்சனம், கதை, பாட்டு இப்படி பார்த்துகிட்டு இருக்கோம். ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே...அதனால இப்ப "சமையல் விமர்சனம்". ஒரு புதிய முயற்சியா சமையல் குறிப்பு பத்தி பார்க்க போறோம்.

சமையல் நிகழ்ச்சினா உங்களுக்கே தெரியும், அவங்க சமைக்கிரத விட அவங்க பேசி சமாளிக்கிரதே பெரிய விசயமா இருக்கும். ஏன்னா உங்க கவனம் எல்லாம் அவங்க பேச்சில இருக்கனும், சமயல் (குறிப்பு)-ல இருக்க கூடாது, அதுக்குத்தான். இந்த "சமையல் விமர்சனம்" நிகழ்ச்சியும் அப்படிதான்...உண்மைய சொன்னா, நம்ம பாணியில சொன்னா இது ஒரு "நக்கல் சமையல்"

இன்று ஒரு குவிக் ரெசிப்பி, மைக்ரோவேவ் ஓவன்ல, அஞ்சு நிமிஷத்தில் அல்வா, அதுவும் உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு இல்லாத, சுகர் பேஸண்ட்லாம் கூட சாப்பிடலாம்...அத்திப்பழ அல்வா.

என்னடா அல்வா-வானு நினைக்காதீங்க, நிறைய பேருக்கு பிடிச்ச ஸ்வீட், குறிப்பிட்டு சொல்லனும்னா சிலபேருக்கு அல்வா சாப்பிட பிடிக்கும், பல பேருக்கு அல்வா குடுக்க பிடிக்கும். (உன்களுக்கு எப்படி?)

இதோ தேவையான பொருள்கள்:
1. அத்திப்பழம் - 100 கிராம், நீங்க உலர்ந்த அத்தி பழத்த எடுத்து சுமார் 1 மணி நேரத்துக்கு ஊர வச்சிக்கனும். (என்ன முரைக்கிறீங்க? 5 நிமிஷம்-னு சொல்லிட்டு 1 மணி நேரம்-னு சொல்லுரனேனு நினைக்கதீங்க, ஊர வைக்கிரத "பிரிப்பரேஸன் டைம்"-னு சொல்லனும்..ஹி..ஹி)
2. பால் பவுடர் - 100 கிராம். (குழந்தைகளுக்கு குடுக்கிறது இல்லீங்கோ)
3. ஜீனி (அதிகம் இனிப்பு தேவைபட்டால்)
4. முந்திரி பருப்பு - 10 கிராம் (பாதியாக பிரித்தது)
5. பாதாம் பருப்பு - 10 கிராம் (கடையில ஃபிளேக்ஸா கிடைக்குமே அது)

பார்த்தீங்களா நேரம் மட்டும் இல்லீங்க தேவையான பொருள் கூட 5 தான்.

ரெடியா...அல்வா கிண்டுவோமா?

ஊர வச்ச அத்தி பழத்த எடுத்து மிக்ஸியில போட்டு நல்ல விழுதா அரைச்சிடுங்க. அரைக்கும் போது ஊர வச்ச தண்ணீரயே விட்டு அரைச்சிக்கலாம். அரைச்ச அத்தி விழுத ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி (அகலமான வாய்-ன உடனே உங்க வாய்-னு நினைச்சிகாதீங்க...அது நீட்டு...ஐ மீன் வாய் நீளம்) அது கூட பால் பவுடர சேர்த்து நல்ல கலக்கி, நான் முன்னமே சொன்ன மாதிரி இனிப்பு அதிகம் தேவைபட்டால் ரெண்டு ஸ்பூன் ஜீனி சேத்துக்கலாம். இந்த கலவைய ஒரு 3 நிமிஷம் மீடியும் ஹீட்ல குக் பண்ணுங்க. ஏன்னா மில்க் சாலிட்ஸ் ரொம்ப சாஃப்ட், ஈஸியா அத்தி பழத்தோட மிக்ஸ் ஆகி நல்லா வெந்து கம கம-னு இருக்கும். 3 நிமிஷம் ஆகிடுச்சி, எடுத்துடலாம். வேறு ஒரு கப்புல மாத்தி அது மேல முந்திரி மற்றும் பாதாம் வச்சு இப்படி டெக்கரேட் பண்ணி பரிமாரலாம்.

ம்..ம்..வாசனை அருமையா இருக்கு (பிளாக்-ல படிகிற உங்களுக்கு தெரிய போவுதா என்னா?) வாரம் ஒரு முறை இத சாப்பிடலாம் வயிற்றுக்கு ரொம்ப நல்லது, மல சிக்கல் குணமாகும்.

என்ன நேயழ்கலே நீழ்ங்க அச்சிபழ அழ்வா செழ்ஞ்சி ஷாப்டு பாழுங்க...(சாழி...அழ்வா வாயில ஒட்டிகிட்டு அதான் வாய் கொழருது)

(பிஹைண்ட் த ஸ்கிரீன் - அன் எடிட்டெட் ஸாட்ஸ் நம்ம மக்களுக்காக)

பிரசெண்டர்: ஏன்ங்க 3 நிமிஷம் போதுமா?
ஒருவர்: போதது, 5 நிமிஷம்-னு சொல்லிட்டோம், 1 நிமிஷம் அரைக்க, 1 நிமிஷம் கலக்க, பாக்கி 3 நிமிஷம் குக் பண்ண.
இன்னொருவர்: அது சரி, நமக்கு டைம்தான் முக்கியம், டேஸ்ட் பத்தி கவல இல்ல.
பிரசெண்டர்:நான் இன்னைக்கு டேஸ்ட் பண்ணவே இல்ல, கம கமன்னு இருக்குன்னு சொல்லி சமாளிச்சிட்டேன். டேஸ்ட் பண்ணியிருந்தா அம்மாடி... நாக்கு நம நமன்னு போயிருக்கும் போல.

பின் குறிப்பு: உண்மையில் இது ஒரு நல்ல ரெசிப்பி, ரோஜா குல்கந்து போல - இது ஒரு நல்ல மலம் இலக்கி (லக்ஸாடிவ்).

துளி...துளி...பனித்துளி

ஊரெல்லாம் பனி வெண்மை
கொல்லுது நண்பரில்லா தனிமை
சொல்லவா ஒரு உண்மை?

என்...
பக்கத்துல ஒரு எருமை
அதன் நிறம் கருமை
குணம் ரொம்ப அருமை

ஆனா...
கொஞ்சம் கூட இல்ல திறமை
அதனால...
எனக்கு மிஞ்சியது வெறுமை.
அது...
ஆண்மை-யோ இல்ல பெண்மை-யோ

எங்க...
HR பாலிசி ரொம்ப கடுமை
அது பேச சொல்லுது இனிமை
தவிர்க்க சொல்லுது பகைமை

ஆக... அமெரிக்காவில்
நமக்கு வேண்டியது மன வலிமை

ரோபோ ஃபீவர் வந்துடுச்சி....

என் பாணியில் சொல்லவா?
பேர கொஞ்சம் பிரிச்சி மேயவா?

ரோபோ... ரோ + போ
துணை எழுதுகளாகிய ரெட்டை கொம்பையும், கால் எழுத்தையும் எடுத்துட்டு படிங்க...

ரோபோ... ர + ப
அதாங்க, சங்கரோட பிரமாண்டம், சுஜாதவோட ஹைடெக் ரெண்டும் இல்லன்னா ரோபோ... ர ப... புரிய வில்லை?
ர ப... 'ர'ஜினி 'ப'டம்

ஆஹா...ஆஹா எஃப்.எம்-ல கேட்டேன்...
அரிசி இடிச்சா....மாவு
ரோபோ அடிச்சா....சாவு

ரோபோ-வாக அய்யா ராமாதாசு...
அடிக்கடி எம்ப்லாயர மாத்துனா அதிக துட்டு கிடைக்கும்
அது "ஐ.டி" பாலிஸி
அடிக்கடி கட்சிய மாத்துனா அதிக சீட்டு கிடைக்கும்
இது "அய்யா" பாலிஸி

காதல் கடிதம்...

என்ன...
நான் எழுதியது என்ன...
உன்னக்காக எழுதியது என்ன...

கடிதம்...
என்ன கடிதம்...
காதல் கடிதம்...

கவிதை...
என்ன கவிதை...
காதல் கவிதை...

கசக்கிவிடாதே...
காகிதமென்று கசக்கிவிடாதே...
கவிதையென்று கசக்கிவிடாதே...

கசங்கபோவது...
காகிதமும் இல்லை...
காதல் கவிதையுமில்லை...

அது... காதலால் கசிந்துருகிய என் கணத்த இதயம்.

மனை உச்சவரம்பு

நில உச்சவரம்பு சட்டம் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள்... 1963 இல்லை அந்த கால கட்டத்தில்... ஒருவர் எவ்வளவு நிலம் வைத்து இருக்கலாம் என நிர்ணயம் செய்தார்கள்... பினாமிகள் உருவான அல்லது உருவாக்கப்பட்ட காலம்... பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, வண்டியோட்டி என்று பல பேரிடம் பட்டா பங்கு போடபட்டது. எது எப்படியோ பெரிய நில சுவாந்தார்கள் மேலும் நிலம் வாங்கினால் நமக்கு சங்கு... உள்ளதை காப்பற்றி கொண்டால் போதும் என்ற நிலமை.

அது போல் தற்பொழுது ஒருவர் ஓன்றீரண்டு (வீட்டு)மனைதான் வைத்து இருக்க வேண்டும் என் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்... வீடு என்பது ஒரு நடுத்தர வர்கத்தின் கனவு, எந்த ஒரு சாதாரண மனிதனும் ஆசைப்படும் விசயம்... அதை முன்பெல்லாம் அழகாக சொல்வார்கள்... "குந்த ஒரு குச்சி, கொழுகுத்த ஒரு நிலம்" என்று. கிராமமோ நகரமோ... இப்போது 'முதலீடு' என்ற பெயரில் அந்த கனவு தகர்க்கப்பட்டு வருகிறது.

நான் சின்ன வயதிலிருந்தே பார்த்து கேட்டு இருக்கிறேன்... புதிதாக வீடு வாங்கி குடியேரும் குடும்பத்தினர் அடையும் மகிழ்ச்சியை. அந்த மகிழ்ச்சி வரும் காலங்களில் வெறும் கைகூடா கனவாக ஆகிவிடுமோ?

திரி சூலம்...

என்னமோ நான் இங்க பழைய சிவாஜி படத்தை பத்தி (மூன்று வேடம்) சொல்ல போரேன்னு நினைக்காதீங்க... இது நான் எழுதிய(தாக சொல்லப்பட்ட) காதல் கடிதத்தின் கையொப்பம்... அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு-பி கிளாஸ்... கோ எஜுகேஸன்... ஏ-செக்ஸ்ன் (மகளிர் மட்டும்) ஃபுல் ஆனா பி-செக்ஸன்-னுக்கு மாணவிகள் அனுப்புவது வழக்கம், இல்லைன்னா மாணவர் மட்டும்தான். ஆனா நான் படிச்ச 5 வருசம் வரைக்கும் (6-லிருந்து 10-வரை) 9-பி செக்ஸன் கோ-எட்தான்.

இந்த பி-செக்ஸன்ல இடம் கிடைக்காதான்னு காத்து கிடந்தவர்கள் பல பேர்... நான் இல்லீங்கோ... ஏன்னா என் "பவுண்டேஸனே" பி-ல இருந்துதான், 6-பி, 7-பி, 8-பி... ஆக வேறு மிட்டில் ஸ்கூல்லேருந்து புதுசா "எங்க" ஹை ஸ்கூலுக்கு வர பொண்ணுங்கள தவிர, பழைய பி-செக்ஸ்ன் மாணவர்கள் தாக்கு பிடிக்கனும்னா அவன் நல்லா படிக்கிற பையனா இருக்கும்... ஏன்னா கிளாஸ் டீச்சர் அவங்க செக்ஸன் நல்ல பேர் எடுக்கனும்கிற ஸ்டேடஜிய வச்சு, கழிசடைகலை சி-க்கும் டி-க்கும் கழிச்சி கட்டிடுவாங்க... இப்ப தெரியுதா நான் ஏன் கவலைபடுலேன்னு... சரி அதவிடுங்க... உங்க காதுல வர புகை இங்க அடிக்குது.

ஒரு நாள் காலை வழக்கம் போல் நான் வகுப்பில் (முதல் பெஞ்ச்ல) உட்கார்ந்து இருந்தேன், பசங்க எல்லம் ஒரு பக்கம்... வாசல் அருகில், பெண்கள் உள்பக்கம் உட்கார வைக்கப்பட்டு இருப்பார்கள்... எல்லா பெண்களும் எங்கள கடந்து தான் செல்ல வேண்டும்... அப்ப புதுசா திருச்சி-யில் இருந்து வந்த ஒரு பொண்ணு, அவங்க பேரு இந்திரா... கண்ணு நிறைய "ஐ-டெக்ஸ்" மை விட்டு பார்க்கவே பயமா இருக்கும்... என்ன ஒரு லுக்... அதாங்க ஒரு முறை முறைச்சிட்டு போனாங்க... சரி, அது மூஞ்சி அப்படித்தான் என்று நான் ஒன்னும் சீரியஸா எடுத்துக்கல... அதோட எனக்கு அந்த கிளாஸுல ரெண்டு போட்டியாளர்கள்... அதுல இது ஒரு பெண்... சரி எதுலயோ நம்ம அதிகமா மார்க் வாங்கிட்டோம் போல... அங்க புகையுதுன்னு நினைச்சிகிட்டேன்.

பள்ளி மணி ஓலித்தது... பிரேயர் முடிந்து வகுப்பிற்கு வந்தோம், என் வகுப்பு ஆசிரியர் (அவர் ஒரு மாக்கான்... நல்லா பாடம் நடத்துவார் ஆனால் அடிக்கும் போது வாட்ச கயட்டி வச்சுட்டு அடிப்பார்... நீங்களே யோசிச்சி பாருங்க அடி எப்படி இருக்கும்னு) வழக்கத்திற்கு மாறாக சிறிது நேரம் கழித்து வந்தார், வந்தவர் வெங்கடேஸ், ராஜா, பழனி மூன்று பேரும் வகுப்பு வெளியில் முட்டி போடுங்கன்னார்... எங்களுக்கு ஒன்னும் புரியல... ஏன்னு கேட்ட பின்னி எடுத்துடுவார்... சரின்னு 45 நிமிஷம் முட்டி போட்டோம்... இதுல என்ன கொடுமைன்னா இந்த 9-பி இருக்கே அது எங்க ஸ்கூலோட லேடீஸ் எண்ட்றன்ஸ்... அன்று லேட்டா வந்த எல்லா பொண்ணுங்களும் எங்கள பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு... மானம் போய் விட்டது.

வகுப்பு முடியும் நேரம் மூனு பேரையும் உள்ள கூப்பிட்டு வெங்கடேஸ் மூஞ்சியில் விட்டெரிந்தார் ஒரு பேப்பரை... படிக்க வந்தீங்களா இல்ல லவ் பண்ண வந்தீங்களா என கேட்டு ஒரு அடி (அவன் கொஞ்சம் குசும்பன்) வேறு அவனுக்கு, எனக்கு தெரியும் அவர் என்னை அடிக்க மட்டார் என்று... ஏன்னா நம்ம "பேக்கிரவுண்ட்" அப்படி... அங்க உள்ள வாத்தியார்ல பாதி பேர் எங்க அப்பா ஃபிரண்ட்... அதோட என் சகோதரிகள்... ஒன்னா... ரெண்டா... நாலு பேர் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தார்கள்... அவர் பங்குக்கு ஒரு முறை முறைத்துவிட்டு... அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார். அடுத்து வந்த சகுந்தலா டீச்சரிடம்... இந்த பசங்க மன்னிப்பு கேட்டா உள்ள விடுங்க இல்ல வெளியில் நிற்கட்டும் என்று சொல்லிவிட்டார்.

அப்பாட, சகுந்தலா டீச்சர் வந்தது பெரிய ஆறுதல்... நான் அவர்கள் செல்ல குட்டி... என்னடா இதெல்லாம் என்றார்கள்... அப்போதுதான் அந்த "லவ் லெட்டர்" என் கைக்கு வந்தது... அதில் சில வாசாகம்... ஞாபகம் இல்லை... முடிவில் இருந்ததுதான் நம்ம " நெஞ்சில் நின்ற" வரிகள்...

இப்படிக்கு,
(திரிசூலம்)
வெங்கடேசன்
வே.இராஜா
பழனி

உடனே டீச்சரிடம் சொன்னேன்... இது எங்கள் கையெழுத்து இல்லை... வேறு யாரோ எங்கள் பெயரை "பஞ்சர்" பண்ணிவிட்டார்கள் என்று. முட்டி போட்ட அவமானம்... மூலை பர பரத்தது... யார் அந்த கள்ளன்/கள்ளி? மட மட வென்று பட்டியல் இட்டோம்... நம் மூவரின் பொது எதிரி யார்... நிட்சயம் பெண் இல்லை... பிறகு... வெங்கடேஸ் கிளாஸ் லீடர்... கிளாசில் பாதி பேர் அவனுக்கு எதிரி... பழனி... கோபம் வந்தால் பட் என்று அடித்து விடுவான்... அவனிடம் அடி வாங்கியவர் கடைசி ரெண்டு பெஞ்ச்... எனக்கு ஒருவன் கூட இல்லை... மீண்டும் ஒரு முறை படிதேன் அந்த கடிதத்தை... உடனே கேட்டேன்... டேய் கனகசபை எங்கே?

ஆகா பாதி கண்டு பிடித்து விட்டேன்... மனதிற்க்குள் என் தமிழ் ஆசானுக்கு நன்றி சொன்னேன்... தமிழில் பெயர் எழுத சொல்லி வர்புறுத்தியவர் அவர்தான். தமிழ் கட்டுரை நோட் திருத்துவது எனக்கு கொடுக்கப் பட்டு இருந்தது... ஓரளவுக்கு எல்லோருடைய கையெழுத்தும் எனக்கு அத்துபடி... வெங்கடேஸிடம் கத்தினேன்... டேய் நம்ம வகுப்புல "வே"-வன்னாவுல உள்ள ரெட்டை சுழி-ய/கொம்ப "எட்டு" மாதிரி போடுர ஓரே ஒருத்தன் கனகசபை... இது அவனோட எழுத்து-ன்னு சொன்னேன். லவ் லெட்டர் கொடுத்தானே... இன்னிக்கு லீவ் லெட்டர் கொடுத்தானா-ன்னு கேட்டேன்... லீடர் வெங்கடேஸுக்கு சந்தோஷம் தாங்கள... எடுறா சைக்கிள... விடுறா வல்லத்துக்கு என்றான்.

கனகசபையோட வீடு வல்லம் என்ற ஊர்... 5 கி.மி போயி... ஆளுக்கு 4 அரை விட்டுட்டு... அவன் கட்டுரை நோட்டோட வந்து சேர்ந்தோம்... ஆதாரம் வேணும்ல்ல?

நாங்கள் நிரபராதி என்று நிரூபித்த பின் நன்றி சொன்னேன்... பரலோகம் சென்று விட்ட என் தந்தை "வேணு" விற்கு.

பால் வாளி...

எங்கள் வீட்டின் வருமானத்தின் ஒரு சிறு பகுதி பாலும் பாலை சார்ந்தும் இருந்தது. பாலின் தரத்தை கவனத்தில் கொண்டு எங்கள் வீட்டு பால் சில கடைகளில் பிரதான இடம் பிடித்து இருந்தது... தரம் மட்டும் அல்ல நேரம் தவறாமையும் கூட... காலை 5 மணிக்கு என்றால் 5 மணிக்கு பால் கடையில் இருக்கும், காரணம் என் தத்தா அரசூரார், இந்த வலை தலத்தின் கதாநாயகன். 4 மணிக்கு எழுந்து பால் கறந்து... எனது மூத்த சகோ மூலம் பட்டுவாட செய்யப்படும்.

இது... பால் வாளியும் அம்மாவசையும்...

இப்படி பால் கொண்டு போகும் வாளி திரும்பி வரும்போது அதில் பண் அல்லது "ஆட்டுகால் கேக்" (மைதாவும் + ஜீனி-யில் செய்யப்பட்ட ஒரு திண்பண்டம்) உடன் திரும்பிவரும், அது வீட்டில் கடைக்குட்டியான எனக்கு, அது கடைசியில் என் சகோ-க்களால் முற்றுகையிடப்பட்டு ஒரு பகுதி எனக்கு வந்து சேரும். இதுல அம்மாவாசை எங்க வந்துதுன்னு பார்க்குறீங்களா? அம்மாவாசை அன்று நாங்கள் கொடுக்கும் பாலுக்கு கடைகாரர் பணம் கொடுக்க மாட்டர், பதிலுக்கு ஸ்வீட்ஸ் (ஓ இதுதான் பண்டமாற்று முறை போலும்) கிடைக்கும்.

ஆக அம்மாவாசை-ன்னா எங்களுக்கு கருப்பு தினம் இல்லை இனிப்பு தினம்.

இது... பால் வாளியும் ரயிலடியும்...

நான் வளர்கிறேனே மம்மி... பால் குடிச்சிகிட்டு இருந்த நான் வளர்ந்து பால் வாளி தூக்கும் நாட்கள்... பல நாட்கள் கோபப்பட்டு இருக்கிறேன்... ஏன் இந்த வீட்டில் வந்து பிறந்தோம் என்று, குளிரில்... மழையில்... நாள் தவறாமல் இந்த வேலை... மழை நாட்களில் குடை பிடிது கொண்டு போக முடியாது... தாத்தா யூரியா சாக்கு பையை இரண்டாக மடித்து குடை போல் போட்டு அனுப்புவார்... ரெண்டு கைல பால் வாளிய வச்சுகிட்டு கொடைய எப்படி பிடிக்க முடியும்? அதனால இந்த சாக்கு குடை ஏற்பாடு.

பால்வாளிக்கு ரயிலடில என்ன வேலை? ரயிலடி எங்கே? ரயிலடி... அதாங்க எங்க ஊர் ரயில்வே ஸ்டேசன்... எங்க வீட்டுக்கும் கடைத்தெருவிற்க்கும் இடையில், அங்க நிறைய வாதாம் மரம் ( நாட்டு பாதாம்) இருக்கும், அதில் வந்து தங்கும் பறவைகள் மற்றும் அணில்கள் இரவு முழுதும் எனக்காக பறித்து போட்ட பழங்கள், கொஞ்சம் தாமதமா போனா கிடைக்காது, அந்த வாதாம் கொட்டைக்கு அவ்வளவு டிமாண்ட்... நான் என் ரெண்டு வாளியும் முழுவதும் நிரப்பி கொண்டு வருவேன்... ஹும் சரியான "பொருக்கி பையன்" என்னமா பொருக்கி இருக்கேன்... பிறகு அதை காயவைத்து, உடைத்து... அப்பப்பா... அது ஒரு வாரம் நடைபெறும்... கடைசியில் வாதம் பருப்பு என் பையில்... கையில்... வாயில்...

இதில் வேடிக்கை என்னன்னா இந்த வாதாம் பருப்பிற்க்காக என்னை நண்பனாக வைத்துக்கொள்ள பள்ளியில் போட்டா போட்டி... இருக்காத பின்ன? எல்லோருக்கும் கொடுக்க நான் என்ன இளிச்சவாயான?

கொவூகி

கொவூகி குருமா...

பெயரை பார்த்து பயப்படாதீங்க... நாம கரோகி ஸாங்க் மாதிரி... கொஞ்சம் ரெடி மேட்... கொஞ்சம் ஃபிரஸ்... கொவூகி ரெடி.

தே.பொ:

1. வெள்ளை கொண்டை கடலை - 1 சிறிய கப் (ஊரிய பின் வேக வைத்தது)
2. உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு (தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக, கொ.க அளவுக்கு, வெட்டியது)
3. தக்காளி - 2 (சிறிய துண்டுகளாக வெட்டியது)
4. வெங்காயம் - 1 நடுத்தர அளவு (சிறிய துண்டுகளாக வெட்டியது)
5. இஞ்சி பூண்டு விழுது - 1/4 டே.ஸ்
6. ஆச்சி சிக்கன் மசாலா - 1 டே.ஸ்
7. கரம் மசாலா - சிறிதளவு9. பச்சை கொ.மல்லி - 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
8. எண்ணை - 5 டே.ஸ்
9. உப்பு தேவைக்கு ஏற்ப்ப

செய்முறை:

1. வாணலியில் எண்ணை சூடானவுடன் வெங்காயம் + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
3. தக்காளி + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
4. வதங்கிய மசாலா கலவையை ஸ்மாஸர் வைத்து நசுக்கி மசாலாவை விழுதாக மாற்றவும் (கையில் தெம்பு இல்லன்னா மிக்ஸில போட்டு அரைக்கலாம் - சுவை கொஞ்சம் குறையும்) நசுக்கினா அம்மா அம்மியில் அரைத்து செய்தது போல இருக்கும்
5. நறுக்கிய உ.கி சேர்த்து, வாணலியை மூடி ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் (சில உ.கி முன்ன பின்ன வேகலாம்)
6. கொ.க + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் கரம் மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு மேலும் ஒரு 5 நிமிடம் - மிதமான சூட்டில் - வேக வைக்கவும் (கொ.க முன்பே வேக வைத்தது, இந்த 5 நிமிடம் மசாலாவுடன் கலக்க)
7. பச்சை கொ.மல்லி சேர்த்தால் குருமா ரெடி.

இத நீங்க டிரை அல்லது கிரேவி எப்படி வேணுமோ அப்படி பண்ணிக்கலாம்... தலையெழுத்து நீங்க ஊத்துர தண்ணியில இருக்குஇத எதுகூட வேணும்னாலும் கூட்டணி வைச்சுக்கலாம்... பிரட், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா... எதோடு வேண்டுமானாலும்... ஏன்னா கொவூகி கூட்டணி அப்படி... கொ.கி + உ.கி + தக்காளி.

அன்பே... ராமதாசு...

டாக்டர் மு.க-வும் டாக்டர் ராமதாஸும் பல விசயங்களில் மோதி கொண்டு இருக்கிறார்கள்... இதை டாக்டர் மு.க ஒரு பாட்டாக பாடுகிறார்...
படம்: அன்பே... ஆருயிரே...
மூலப்பாடல்: மரம்கொத்தியே... நீ மரம்கொத்தியே...

மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...

குழு (ஆற்காட்டார், பொன்முடி, ...):
கட்சியோடு கட்சி கட்டி புடிக்கனும்
தொடர்ந்து இருக்கனும் கூட்டணி...
ஒன்னுக்குள்ள ஒன்னா ஒட்டி கிடக்கனும்
தமிழ்னாட்டை அடிக்கனும் கொள்ளை...

மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...

என் பார்ட்டியும்... உன் பார்ட்டியும்
ஒரு ஆறுவிடாம அள்ளுரானுவோ மண்ணை...

என் பார்ட்டி மந்திரிங்க மட்டும்
அதிகமா சுருட்டும் இடம் சென்னை...

ராம:
எம்.பி சீட்டும் குடுக்க மாட்டேங்குர...
டாஸ்மாக்குல பங்கும் குடுக்க மாட்டேங்குர...
பின்ன எதுக்கு இந்த கூட்டணி...

மு.க:
ஆட்சி கூட்டணிய நீ கொள்ளை கூட்டணின்னு புரிஞ்சிகிட்டது தவறு...
அரசியல்ல நான் ஒரு சூத்ரதாரி என்பது வரலாறு... வரலாறு...

மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...

சினிமாவுக்கு பாட்டு எழுதுவது எப்படி?

நான் கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்களின் பேட்டியை படித்தும் கேட்டும் இருக்கிறேன்... சமீபத்தில் யுக பாரதி-யின் பேட்டி கூட.

ஆர்வம், முயற்சி, கற்பனை இதோடு கொஞ்சம் அதிஷ்டம்... பிறகு என்ன நீங்களும் கவிஞர்தான்.

இருந்தாலும் சில அடிப்படை விசயங்கள் தெரிந்து கொண்டு ஒரு வேலை செய்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது பாருங்க... அதான் இந்த வகுப்பு.

படத்தின் இயக்குனர் பாடல் காட்சிக்கான சூழலை சொல்லுவார், அதை வைத்து ஒரு பல்லவி இரண்டு மூன்று சரணம் எழுத வேண்டும், மற்றதை இசையமைப்பாளர் பார்த்துக்கொள்வார். ஆக "பல்லவி"-யும் "சரணம்"-மும் தான் சினிமா பாடலுக்கான இலக்கணம். துள்ளல் பாடல்கள், அதாங்க "குத்து பாட்டு" இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது.

சரி, தியரி வகுப்பு முடிஞ்சிடுச்சி, அடுத்து பிராக்டிகள். நம்ம அத ஒரு உதாரணத்தோட பார்த்தோம்னா பட்டுன்னு புரிஞ்சிக்குவீங்க.

படம்: சிவாஜி
பாடல்: சஹானா சாரல் தூவுதோ

சூழல்: நாயகனும் நாயகியும் பாடுர டூயட் பாட்டு. நாயகன் நாயகிய தன் வீட்டு விருந்துக்கு அழைக்கிறார். தன் காதலை சொல்லுறார், தான் அவளுக்காகவும் தன் குழந்தைக்காவும் என்ன என்ன வாங்கி வச்சிருக்கேன்னு காண்பிக்கிறார். இது எல்லாத்தையும் பார்த்த நாயகிக்கு காதல் வருது, அப்ப இந்த பாட்டு வருது.

பல்லவி: (காதல் பாடல்களில் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பல்லவி-தான், மாறுபட்ட கருத்தை வலியுறுத்தும் போதுதான் ரெண்டு பல்லவி)

சஹானா சாரல் தூவுதோ...
சஹானா பூக்கள் பூத்ததோ?

சரணம்:1

ஆண்:
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா...
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ?
அது என்னுடன் தேனீர் கொண்டதோ?

பெண்:
கனவோ?, நிஜமோ?
காதல் மந்திரமோ?

ஆண்:
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

(பெண் - பல்லவி...கோரஸ்)

சரணம்:2

பெண்:
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு...
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியால்
புலன்களை திறந்துவிடு...

ஆண்:
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிறப்பாட்டுமா?
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

கோரஸ்:
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...

இப்ப பாட்ட கேட்டு பாருங்க... படம் அப்படியே நம் கண் முன்னாடி ஓடும். ஒரு நல்ல இயக்குனர் இத சீன் பை சீன் கண்ணுல ஓட்டுனாதான் பின்னாடி செல்லுலாய்ட்-ல ஓட்ட முடியும்.

http://www.youtube.com/watch?v=YKvjPXns3jw&feature=related