அஞ்சா நெஞ்ஜன் அசாங்...

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் பால் அசாங் பற்றி நிறைய படித்திருப்பீர்கள், இல்லையேல் பதிவர் சுடுதண்ணி-ய படிங்க. இது சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.




தகுதி என்பது...1

காஞ்சி மகாப் பெரியவர் பற்றி திரு.சுகி சிவம் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன்... ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவர் அல்லது பொது நலச்சேவையில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும், சிலர் எப்படி வாழ்ந்தார்கள் என்று சொன்னார்... அப்படி நான் கேட்டதில் ஒன்றிரண்டு... நன்றி சொல்வேந்தர் சுகி அவர்களுக்கு.


அன்று வழக்கம் போல் பூசை முடிந்தது, மகா பெரியவர் தனக்கு பிட்சை (உணவு) வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். சரி பெரியவருக்கு பசியில்லை போல என நினைத்து அலுவலர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள். இரண்டாம் நாளும் பெரியவர் பூசை முடித்து போசனம் வேண்டாம் என்று சொல்லி சென்றுவிட்டார். மடாலய நிர்வாகிகளுக்குள் சற்று பயம், ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர், யார்-என்ன-ஏது நடந்தது என தகவல் பறிமாற்றம் தீவிரமடைந்தது.

மூன்றம் நாள், பெரியவர் வழக்கம் போல் பூசையில், இன்று எல்லா மட நிர்வாகிகளும் ஆஜர், பிட்ஷைக்கு அழைப்பு, பெரியவர் மறுப்பு. மடத்தின் நிர்வாகிகள் இன்று நாங்கள் செய்த தவறு தெரியாமல் வேறு வேலை செய்யப்போவது இல்லை (உணவு உண்பது உட்பட) என்று பெரியவரிடம் சொல்ல, பெரியவர் சொன்னாராம்... சரி என்னை விடமாட்டீங்க போல இருக்கு, தவறு செய்தது நான் தான் என்றும், அதற்க்கு தண்டனையாய் உணவருந்தாமல் இருப்பதாகவும் சொன்னாராம்.

கீரைக்கு ஆசைப்பட்டு...


அவர் அப்படி என்ன தவறு செய்தார் தெரியுமா? பெரியவர் சொன்னதாக..
ஒரு நாள் (பிட்ஷை வேண்டாம் என்று சொன்ன மூன்று தினங்களுக்கு முன்) உணவில் கீரை சாப்பிட்டேன், நன்றாக இருக்க கொஞ்சம் அதிகம் சாப்பிட்டேன், அதை கவனித்த மட சிப்பந்தி இரண்டாம் நாளும் அந்த கீரையை சமைத்து பறிமாறினார், அன்றும் நன்றாக சாப்பிட்டேன். மூன்றாம் நாள் பூசையின் போதே மனம் பூசையில் ஒட்டாமல் இன்றும் சமையலில் கீரை இருக்குமா என்று நினைக்க ஆரம்பித்து விட்டது. அந்த ஆசையை ஒழிக்கவும், பூசையில் மனமில்லாமல் உணவை நினைத்ததிற்காகவும் நான் எனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனை இது, நீங்கள் அவர் அவர் தங்கள் அலுவல்களை கவனியுங்கள் என்று சொன்னாராம்.

பெரியவர்... தன் செயல்பாட்டால் என்றுமே பெரியவர்.

என்னை மன்னியுங்கள் அப்பா...

உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சாது
விவசாயத்தில் விழுந்து விழுந்து
உடலும் மனமும் காயம் ஆகும்முன்
உன் ஆடை சாயம் போகும்முன்
படி படி என்றாள் அம்மா.



படித்தவுடன் வேலையை
பிடி பிடி என்றாள் பாட்டி
உள்ளூரிலே வேலை ரொம்ப
கடி(னம்) கடி(னம்) என்றாள் மனைவி
விவசாயத்தை விட்டேன்
விமானத்தை தொட்டேன்.



கலந்துரையாடைலில் நண்பர்கள் சொன்னார்கள்
என் அப்பா டாக்டர்... நானும் டாக்டர்
என் அப்பா எஞ்ஜினியர்... நானும் எஞ்ஜினியர்
அப்பா... நான் என்ன சொல்ல?
மவுனமாய் இருந்து விட்டேன்
விவசாயத்தை மறந்து விட்டேன்
அப்பாவை மறைத்து விட்டேன்...

என்னை மன்னியுங்கள் அப்பா...

இன்னா பேசுர நீ?

தமிழ்தான் பேசுரேன்னு சொன்னீங்கன்னா சந்தோசம்.

இன்னா தமிழு அது? தஞ்சாவூரா, மதுரையா, திருநெல்வேலியா, கோவையா இல்ல சிங்கார சென்னையா?

தமிழ அழகா எப்பவும் எங்க மண்வாசனையோடுதான் பேசுவேன்னு சொன்னீங்கன்னா ரொம்ப ரொம்ப சந்தோசம்.

அது உங்களுக்கும் உங்க உடல் நலத்திற்க்கும் நல்லது. மற்றவரைப் போல பேசுதல் தலைவலியில் ஆரம்பித்து நம் உயிரையே எடுக்கும் அபாயம் கொண்டதாம்.

இன்று தொலைகாட்சி பார்த்தபோது இதுபற்றிய தகவல் அறிந்தேன், அதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இது பேசும் தன்மை பாதிப்பு (மன நல பாதிப்பு மாதிரி) – ஸ்பீச் டிஸ்ஸாடர்/SPEECH DISORDER-ன்னு சொல்லி, அதை ஒரு உடல் நலக் குறைவு அல்லது நோய் என்று வகைப்படுத்துறாங்க... பேர் இன்னா நைனான்னு யாங்கைல கேட்க்காதீங்க... அவங்க அத “ஃபாரின் ஆக்ஸண்ட் சிண்ட்ரோம்”-ன்னு சொல்றாங்க.

நாங்க ஃபாரினே போகல எங்களுக்கு எப்படி ஃபாரின் ஆக்ஸண்ட் சிண்ட்ரோம் வரும்ன்னு கேட்க்க கூடாது. நம்ம ஊருல உள்ள முள்ளு நம்ம ஊருலயே நம்ம கால்ல குத்தினால் நமக்கு சீழ் பிடிக்கும், காரணம் முள்ளு (மரத் தூள்) நம்ம பாடிக்கு ஃபாரின் பாடி, அதான் ஒவ்வாமைன்னு சொல்லுவேமே அந்த அலர்ஜிதான்.

எலே என்னலே சொல்றே, தமிழ மாத்திபேசுனா தலவலியாம்லேன்னு லேசானா விசயமா நினைக்காதீங்களே... இத படிச்சி பாருங்களே...

விக்கி என்ன சொல்லுதுன்னா...

மேலதிகத் தகவலுக்குன்னா...

கண்ணு, ரோமாபுரியில் இருக்கும் போது ரோமானியனா இருன்னு சொல்லியிருக்காங்க, அத வுட்டுபோட்டு சிண்ட்ரோம் காந்திபுரம்ன்னு சொல்லிகிட்டு திரியிரிங்கன்னுதான கேட்கிறீங்க?

புரியிது... புரியிது. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த நம் இந்திய மக்கள், அதுவும் குறிப்பா நம் தமிழ் மக்கள் அமெரிக்கர் மாதிரியே ஆங்கிலம் பேசி அசத்துரதுல கெட்டிக்காரங்க. வாயில ‘ர’-வே வராம ‘ழ’-வாவே பேசுவாங்க... வென் ஐ டிழைவ் த காழ்-ன்னு பெருமையா பேசுவாங்க. பேசுங்க... நீங்க உங்கள் பணி சம்பந்தமா உங்கள் வாடிக்கையாளர்களிடம் பேசும்போது பேசுங்க. நம்மவர்களுடன் பேசும்போது நார்மல பேசலாமே?

இங்க ஒரு அம்மா சாமி வந்த பூச்சரியா பேசுது கிளிக்கி பாருங்க.

நாம் நம் மனத்தாலும், சொல்லாலும்/பேச்சாலும், செயலாலும் நாமாக இருக்கும்போது நாம் எந்தவகை சிண்ட்ரோமையும் வென்றோம் என்று சொல்ல முடியும்தானே?

ஓம் டெக்னாலஜியே நமக...

வீட்டில்...

ஒரு இடத்துக்கு போகனும்னா நேரம் காலத்தோட வர்றியா? எப்ப பாரு லேட்டு லேட்டு லேட்டு.
ஏன் சொல்ல மாட்டீங்க, மருந்துக்கு கூட ஒரு வீட்டு வேலை செய்யறது கிடையாது, எல்லாத்தையும் செய்துட்டுதான வரனும்.
நீ ஒன்னும் செய்யவேணாம் வா, மேக்கப்ப கூட கார்லயே போட்டுக்கலாம்.
காரில்...

என்னங்க, ரூம் லைட்ட ஆஃப் பண்ணினீங்களா?

என்ன எங்கிட்ட கேட்கிற? நீதான கடைசியா ரூம்லேருந்து வந்த... லைட்ட ஆஃப் பண்ணலியா?

இல்லீங்க நான் ஆஃப் பண்ணினதா ஞாபகம் இல்லை. அடுப்புல உங்களுக்கு குடிக்க வெண்ணீர் போட்டேன்... நீங்க படுத்தின பாட்டுல அதையும் ஆஃப் பண்ண மறந்திட்டேன்.

சரி சரி விடு... டென்ஷன் ஆவாத, என் ஃபோனில் ஹோம் பேஜ் போ, அதுல ஹோம் அப்லையன்ஸ்ன்னு ஒரு ஆப் இருக்குபாரு, அதுல எது ஆணாயிருக்கோ அதையெல்லாம் ஆஃப் பண்ணு.
சிறிது நேரத்திற்க்குப் (மேக்கப்) பிறகு...

என்னங்க, இன்னிக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இருக்கே, டி.வி ரெக்கார்டர ஸ்கெடியூல் பண்ணியிருக்கீங்களா?

நான் டி.வி.ரிமோட்ட தொட்டு ரெண்டுநாள் ஆவுது, எல்லாத்தையும் இப்ப வந்து கேளு, வீட்டுல அப்படி என்னாத்த வெட்டி முறிக்கிறியோ தெரியல.

ஆ...ஊ-ன்னா அதையே சொல்லுங்க. அதான் வெட்டினாலே துண்டாயிடுமே அதையேன் முறிக்கனும்? இல்ல தெரியாமத்தேன் கேட்கிறேன்... பதில் சொல்லுங்க.

போனாப் போவுது டி.விய ரெக்கார்ட் பண்ணுவோம்ன்னு நினைச்சேன்... கேள்வியா கேட்கிற நீ?

அட உடனே கோவிச்சிக்காதீங்க, வீட்டோட ரெண்டு சாவியும் நம்மகிட்ட இருக்கு, எப்படி யார விட்டு ரெக்கார்ட் பண்ண சொல்றது?

என் ஃபோனுல அதுக்கும் ஒரு ஆப் இருக்கு பாரு, அதுல டைரக்ட் டி.வி-ன்னு ஒன்னு இருக்குல்ல, அதுல சேனலையும், நாளையும், டையதையும் போட்டு ஓ.கே பட்டன அழுத்து.

என்னங்க... கமலஹாசன் ஒரு படத்துல சொல்லுவாறே... நிஜமாவே டெக்னாலஜி காட் ஸோ இம்ப்ரூவ்டுங்க.
வாயாலதான் சொல்லுற... வீட்டிற்க்கு செட்பண்ணியிருக்கிற ஆட்டோமேட்டிக் அலார்ம் சிஸ்டத்த நம்பாம இன்னும் ஊருலேருந்து எடுத்துகிட்டு வந்த திண்டுக்கல் தொட்டிப்பூட்டல்ல போட்டு பூட்டுற.

அய்யய்யோ...

என்னாச்சு... லிப்ஸ்டிக்க மறந்துட்டு வந்திட்டியா?

இல்லைங்க, பூட்ட பூட்டி இழுத்துப் பார்க்க மறந்துட்டேங்க... உங்க ஃபோனுல ஏதாவது ஆப் இருக்கா?

அம்மா தாயே... சத்தியாம அதுக்கெல்லாம் ஆப் இல்லம்மா, முடிஞ்சா எந்திரன் வசீகரன கூப்பிட்டு சிட்டி சும்மா இருந்தா ஒரு எட்டு போயி பூட்ட இழுத்து பார்த்திட்டு வர சொல்லு.

வேணாங்க வேணாம்... அது பூட்டோட கதவையும் இழுத்து பார்க்கும். சொந்த காசுல சூனியமா? வேண்டவே வேண்டாம்.

சும்மா படம் காட்ட...

அப்போது ஃபோன் சினுங்குகிறது...

அம்மாடி ஃபோனு உங்கிட்டதான இருக்கு, யாரு கூப்பிடுறாங்கன்னு பாரு...

உங்க பாஸுங்க...

அவன் கிடக்கிறான் லூஸு, நான் இன்னொரு லைன்ல இருக்கேன் என்னன்னு கேளு.

.....

என்ன சொன்னாரு?

நீங்க பண்ணுன அப்பிளிகேஷன் ஊத்திகிச்சாம், உங்க எல்லோருக்கும் ஆப்பு அடிக்க உங்க பெரிய லூஸு...சாரிங்க... பெரிய பாஸு வராராம், அதனால் திங்க கிழமை வொரிகிங் ஃபிரம் ஹோம் போடாம ஆப்பீஸுக்கு வரச் சொன்னார்.

ஏங்க ஃபோனுல ஆப் இருக்கு... ஆப் இருக்குன்னீங்க... இப்படி ஒரு ஆப்பு இருக்குன்னு சொல்லவே இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

எனக்கு ஐ.ஜி-ய தெரியும்...

எனக்கு ஐ.ஜி-ய தெரியும்... அ-னா, ஆனா, இனா, ஈயானா... இப்படி எத்தனை போட்டாலும் அவருக்கு என்ன தெரியாது.

இந்த அக்டோபர் மாதத்தில் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் நிகழ்வுகள் வாயிலாக தமிழ் நாட்டின் சில சிறந்த மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது... அதற்க்காக கேட்ஸ் செயற்க்குழு உறுப்பினர்களுக்கு என் நன்றி.



1. தமிழக சட்டசபையின் சபாநாயகர் (ஸ்பீக்கர்) திரு.ஆவுடையப்பன். அவருடைய வட அமெரிக்க பயணத்தின் நடுவில் எங்கள் ஊரில் நடைபெற்ற தமிழ் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சிறு உரையாற்றினார். மிக எளிமையான, பழகுவதற்க்கு இனிமையானவராக இருந்தார். கழக கண்மணிகள் இல்லாம இருக்கும்போது (சிங்கம் சிங்கிளா வந்தது) நம் தலைவர்களின் உண்மையான அன்பையும் பண்பையும் நாம் காணலாம் என நினைக்கிறேன்.


2. தமிழக தன்னார்வத் தொண்டர் திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் அட்சயா ட்ரஸ்ட்-க்கு உதவி. எங்களால்முடிந்த அளவிற்க்கு ஒர் நிதிதிரட்டு போட்டி நடத்தினோம். நீங்களும் உதவலாம் நிதி அளிக்காமலே... எப்படியா? சி.என்.என் நடத்தும் கதாநாயகர்கள் வாக்கெடுப்பில் கிருஷ்ணனுக்கு ஒரு ஓட்டு போட்டால் போதும்... போட்டுட்டீங்களா? நன்றி.


3. தமிழக (டான்சி-யின் நிர்வாக இயக்குனர்) அரசு இயந்திரத்தில் ஒரு அப்பழுக்கற்ற மனிதர் திரு. உமாசங்கர் (இ.ஆ.ப). அமெரிக்காவின் ஐந்தாவது தூண் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு குழு சந்திப்பு இது. திரு. உமாசங்கர் அவர்களை 18 வருடங்களுக்கு முன் மயிலாடுதுறையில் சப்-கலெக்டராக என் மாணவர்களுடன் சந்தித்தேன்... சில தினங்களுக்கு முன் அதே முனைப்பில் ஊழலை எதிர்த்து போராடும் ஒரு போராளியாக.

இணைப்புகளை தொட்டுப்பாருங்கள்... உங்கள் மன ஓட்டமும் அதுவாக இருந்தால் தொடர்ந்து பாருங்களேன்... அது நிதி உதவியாக இருந்தாலும் சரி... ஊழலுக்கு மணியடிக்கும் நிர்வாக உதவியாக இருந்தாலும் சரி... நன்றி... நன்றி.

அய்யோ பாவம் பூதம்

ஒரு நாள் நம்ம ஆளு ஒரு முனிவரை சந்தித்தார். இறை நம்பிக்கை இல்லாத நம்ம ஆளு அந்த முனிவரை பார்த்து இறைவன் இருக்கிறாரா அப்படி இருந்தால் நமக்கு ஏன் இவ்வளவு கெடுதல்கள் தருகிறார், மேலும் அவர் நாம் வேண்டுவதை கொடுப்பதே இல்லை என்றான்.


அதற்க்கு முனிவரோ, சரி சரி அது ஒரு நம்பிக்கைதான் நாம்தான் நன்றாக வாழ முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

முனிவரின் பேச்சில் திருப்தி அடையாத நம்ம ஆளு, இல்லை இல்லை நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றான்.

முனிவரோ, சரி நீயே சொல் நான் என்ன செய்யவேண்டும் என்று, நானாவது நீ விரும்புவதை தர முயற்ச்சிக்கிறேன் என்றார்.

முனிவரோ முயற்ச்சி அது இது என்று பேசுகிறார் அவரிடம் மொத்தமா ஒரு சில கோடிய கேட்டா போடா கேடின்னு சொல்லிவிடுவார் என நினைத்து நம்ம ஆளு சமயோசிதமாய் விக்கிரமாத்தனிடம் வேலைசெய்த வேதாளத்தை மனதில் நினைத்து ஒரு நல்ல வேலை செய்யும் பூதம் வேண்டும், அதை வைத்து நான் முயற்ச்சி செய்து பார்க்கிறேன் என்றான்.

முனிவரும் சரி உன் ஆசைப்படியே நான் ஒரு பூதத்தை தருகிறேன், உனக்கு தெரியும் தானே நீ பூதத்திற்க்கு வேலை கொடுக்கவில்லை என்றால் அது உன்னை கொன்றுவிடும் என்பதையும் நினைவு படுத்தினார். (முனிவர் ரொம்ப நல்லவர், விதிமுறைகள் சிறிய எழுத்தில் இருக்கு, படிச்சி தெரிந்துகொள் இல்லையேல் பரலோகம் செல் என்று சொல்லவில்லை).

நம்ம ஆளுக்கு இப்போ ஒரு சின்ன சந்தேகம் கூடவே சந்தோஷமும்... ஒரு வேளை கடவுள் இருக்கிறாரோ... கேட்டவுடனே பூதம் கிடைத்து விட்டதே என்று சந்தேகம், பூதத்த வெச்சி கடவுளையும் ஆராய்ச்சி பண்ணிடலாம்ன்னு ஒரு சந்தோஷம்.

தினத் தேவைகளையும் தன் பணத் தேவைகளையும் முடித்து கொண்டபின் நம்ம ஆளுக்கு பூதத்தை வைத்து ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லாததால், இனி கடவுள் ஆராச்சி (ஆத்திகம் / நாத்திகம்) என முடிவு செய்து ஆன்மீகம் பற்றி அந்த தகவலை கொண்டுவா இந்த தகவலை கொண்டுவா என அனுப்பினான். அது அர்த்தமுள்ள இந்து மதம் முதல் ஓசோ வரை பல தகவல் நூல்களை அள்ளிவந்து கொடுத்தது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தை படித்தவுடன் நம்மாளுக்கு சந்தேகம்... இந்த பூதம் வேலைகளுக்கு நடுவில் முனிவரை சந்திக்குதோ, அவர்தான் இந்த நூலை நம்மகிட்ட கொடுக்க சொல்லியிருப்பாரோ என்று. சந்தேகத்தை தெளிவு செய்ய நாத்திகம் பற்றி ஆராய்வது என முடிவு செய்து அந்த தகவல்களை கொண்டுவருமாறு கட்டளையிட்டான் (அது பதிவுலம் தெரிந்த பூதம் போல, ரொம்ப சிரம படாமா வினைவு, தமிழ் ஓவியா போன்ற தளங்களில் இருந்து தகவல்களை நொடிப் பொழுதில் கொண்டுவந்து கொடுத்தது).

நம்ம ஆளூ ஆராய்ச்சிய ஆரம்பிக்கவே இல்லை, ஆனால் பூதம் மீண்டும் அய்யா வேலை என்றது... இப்போதுதான் நம்மாளுக்கு தெரிந்தது அவனிடம் பூத்ததிற்கு சொல்ல ஏதும் வேலையில்லை என்று. பூதம் கொன்றுவிடுமே என்ற பயம் வந்தது, என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு முனிவரின் நினைவுதான் முதலில் வந்தது. மீண்டும் அய்யா வேலை என்ற பூதத்திடம் சொன்னான்... என்னை முனிவரிடம் அழைத்துச்செல் என்று.

முனிவர் கேட்டார், நீ கேட்டதை கொடுத்தேனே இறைவனை பார்த்தாயா?
என்ன கைய புடிச்சி இழுத்தியா? (அய்யோ அய்யோ பதிவ ரொம்ப படிக்காதன்னு சொன்னா கேட்டாதான) என்ன இறைவனை பார்த்தாயா? சாமியாவது பூதமாவாது? இது மனுசன நிம்மதியா இருக்கவிடமாட்டேங்குது, அய்யா வேலை அய்யா வேலைங்குது, எனக்கு இந்த பூதம் வேண்டாம் நீங்களே திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்றான்.

நம்மாளு சாமி இருக்குதோ இல்லையோ... இனி இந்த முனிவர் இல்லை... பூதம் கேட்கிற வேலைக்கு இடையில் இவரு வேதம் படிக்கிறாரா இல்லை பூதத்திற்க்கு சாப்பிட சாதம் போடுறாரான்னு (என்ன ஒரு வில்லத்தனம்) பார்க்கிறேன் என அமைதியாக நின்றான்.

முனிவர் சொன்னார், சரி பூதத்தை பற்றி நீ இனி கவலைகொள்ளத் தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ செல் என்றார்.
அய்யா நான் உங்களுடன் அமர்ந்து கொஞ்சம் தியானம் செய்துவிட்டு போகிறேன் என்றான்.


முனிவரும் சரி அப்படியே ஆகட்டும் என்றார். அதற்க்குள் பூதம் அய்யா வேலை என்றது. முனிவர் சொன்னார், காட்டிற்க்குச் சென்று கழு மரம் செய்ய கூடிய ஒரு நல்ல மரத்தைக் கொண்டுவா என்றார். உடனே கொண்டு வந்தது. சரி அதில் நன்கு விளக்கெண்ணையை தடவு என்றார்... ஆச்சு என்றது பூதம். சரி நான் கூப்பிடும் வரை அதில் ஏறி இறங்கி கொண்டிரு, தேவையிருப்பின் உன்னை அழைக்கிறேன் என்றார். பூதமும் அப்படியே ஆகட்டும் என்று தன் வேலையை பார்க்க போயிற்று… அய்யோ பாவம் பூதம்.


முனிவரோ அமைதியாக வேதங்களை படிக்க ஆரம்பித்து விட்டார்.

முந்தி முந்தி...

முந்தி முந்திச் சென்றேன்
முச்சந்தியில் முட்டி நின்றேன்
முதலில் முட்டியது நானில்லை என்று
முரண்டு பிடித்ததில் - பயன் ஏதுமில்லை.


அபராத புள்ளிகள் மூன்று
அபராத வெள்ளிகள் முன்னூறு
முச்சந்தி என்பதால்
மூன்றும் முன்னூறும் - முழுவதுமாய் எனக்கே.


முந்திச்செல் என்று ஒரு மூளை
ஊளையிட்டாலும், இப்போது
மூன்றும் முன்னூறும்தான் முந்திச் செல்கின்றன
முந்தாமல் நான் – முழுக்கட்டுப் பாட்டில்.

மூன்று முகம்

முகப்புத்தகத்தில் தன் நிஜமுகத்தை இழந்து
அறி-முகமில்லாரோடு அன்பாய் பழகி
முகமெல்லாம் சந்தோஷம் – உலகமெங்கும் நண்பர்கள்
முகம்மறந்து போனேன் – உள்ளூர் நண்பர்கள் யாரென்று.

முகப்புத்தகத்தை கண்டெடுத்தவன்
முகமறியா முன்கோபம் கொண்டேன்
முட்டாள், ஐனூறு மில்லியன் முகத்தை ஒருமுகமாக்கி
எழுனூறு பில்லியன் மணித்துளிகளை மரணித்துவிட்டானென்று.

வாய்ப்புகள் நிறைந்த நாட்டில் தற்போது வேலையிழப்பு
அதனால் கல்வியின் முகவரியிழப்பு - வேதனை
கொட்டி கொடுத்திருக்கிறாய் நூறு மில்லியன்
இன்று உன் முகமும் தெரிந்தது, அகமும் தெரிந்த்து
இருபத்தியாறு வயதில் இணையில்லா – சாதனை.

மெது ஓட்டம்...


அந்தி மாலை
பசுமைச் சாலை

உச்சியிலிருக்கு நிலவு
வீடு இருக்கு தொலைவு




குறிலைக் (பம்பு) கண்டேன் வந்தது தாகம்
நெடிலைக் (பாம்பு) கண்டதும் கொண்டேன் வேகம்

விரைந்து வந்து தொட்டேன் இல்லக் கதவு
மறக்கும் முன் இட்டேன் இந்தப் பதிவு.

அன்றும்... இன்றும் – 2

அன்று, மாலை வழக்கம் போல் பூப்பந்து விளையாடிவிட்டு சற்று இளைப்பாறும் வேளையில் அந்த வருடத்திற்க்காண விளையாட்டுப் போட்டி நடத்துவது குறித்து பேச்சு வந்தது. உடனே ஒரு மூத்த உறுப்பினர் சொன்னார் சரி அனைவரும் இன்று இரவு யோசித்து வந்து சொல்லுங்கள், இந்த வருடம் சென்ற வருடத்தைவிட சிறப்பாக செய்ய வேண்டும். மற்றவைகளை நாளை பேசலாம். (ஏன் பெரிசு எங்ககிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கேட்டுபுட்டு சொல்ல மாட்டீங்களா?)

இன்று, நண்பர்கள் ஒருவருக்கொருவர் கைத்தொலைபேசியில் அழைத்து இந்த ஆண்டு கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடத்துவது குறித்து பேச, உடனே ஓரிரு தினங்களில் ஒரு குழுச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. (என்னப்பா எல்லோருக்கும் ஓ.கே-தான? இல்லன்னா சொல்லுங்க சந்திப்ப ரெண்டு நாள் தள்ளி வச்சிக்கலாம்...அது சரி)

மாலை விளையாட்டு முடிந்தவுடன் மூத்த உறுப்பினர் வழக்கம் போல் தேனீர் அருந்தும் போது அனைவரையும் விழா பற்றிய விருப்பங்களை கேட்டு சிறப்பு விருந்தினராக யாரை அழைப்பது, முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுத்தொகை எவ்வளவு, யார் யார் எந்த வேளையை பார்க்க போகிறோம் என்பதும், எப்போது என்பதும் முடிவாகியது. (திண்ணையும் சொம்பும் இல்லாமலேயே தீர்ப்ப சொல்லி முடிச்சிட்டா எப்பூடி? ரொம்ப லோக்கலால்ல இருக்கு!)

குழுச் சந்திப்பில் முதல் வேலையாக, வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு யார் இந்த நிகழ்வை/குழுவை தலைமை தாங்கி நடத்துவது என்பதற்க்காண வாக்கெடுப்பு மற்றும் வெவ்வேறு குழுக்களின் தலைமை மற்றும் குழு உறுப்பினர்கள் யார் என முடிவு செய்யப்பட்டது. (என்னதான் இருதாலும் படிச்சவங்க இல்லியா? ஜனநாயக முறைப்படி நடந்துகிறாங்க... திங்க் குளோபல்!!)

நான் நம்ம காவல் நிலையம் சென்று புதிதாக வந்துள்ள சட்ட ஒழுங்கு ஆய்வாளரை விழாவிற்க்கு அழைக்கிறேன், அவர் விளையாட்டு பிரியராம். (திடலிலேயே முடிவு எடுத்திடுராங்க, திடமான முடிவாய் எடுக்கிறாங்க).

நான் நம்ம நகைக் கடைக்கார்ர பார்த்து பரிசுக்காண ஏற்பாட்டை செய்திடுறேன். ( நம்பிக்கையும் வாக்கும் தானே வாழ்க்கை)

நான் நம்ம அரிசி மண்டி தம்பி, மற்றும் மளிகை கடைகளை பார்த்து உணவுக்கு பொருட்களை தயார் பண்ணிடுறேன். (வருசா வருசா கேட்டாளும், எப்படி அண்ணே உதவி பண்ணுறீங்க... ரொம்ப பெரிய மனசுன்னே)

நான் நம்ம அச்சகத்துல கொஞ்சம் நோட்டீஸ் அடிக்க சொல்லிட்டு, அப்படியே நிருபரை பார்த்து செய்திதாள்கள்ல வர ஏற்பாடு பண்ணிடுறேன். (ஹேய்... அந்த கலர் நோட்டீஸ்தான? சைக்கிள்ல போயி குடுப்பீங்களா இல்லை மாட்டு வண்டியா?)


டேய் குட்டிப் பசங்களா... நீங்கதாண்டா களப்பணி எல்லாம் செய்யனும்... தயாரா இருங்க. (சின்ன பிள்ளைகலா வேலை செய்தாலும் சிறப்பா செய்வோம்ல)

விழாக் குழு தலைவர்... யார் சீஃப் கஸ்ட காண்டாக் பண்ண போறீங்க? நம்ம குழுவப் பத்தி ஒரு மெயில் அனுப்பி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கோங்க. ஒன்னுக்கு ரெண்டுபேரா பார்த்து பேசுங்க. ஒருத்தவங்கதான் வருவதா இருந்தா அவங்களே எல்லா பரிசையும் கொடுக்கட்டும். ரெண்டு பேர் வந்தா இன்னொருத்தவங்க நம்ம வாலியண்டர்ஸுக்கு மெமண்டோ கொடுக்கிற மாதிரி பண்ணிடலாம் (ரூம் போட்டு யோசிக்கிறாங்க...பிளான் – ஏ, பிளன் – பி எல்லாம் இல்லாட்டி எப்பூடி?)

பைனான்ஸ் டீம்: பட்ஜெட் தயார் பண்ணிகிட்டு இருக்கோம், ஸ்பான்ஸர்ஸ் லிஸ்ட் அடுத்த வாரம் தயார் ஆயிடும். (பார்த்து பட்ஜெட்ல துண்டு விழுந்திட போகுது....அவ்வ்வ்வ்வ்)

லாஜிஸ்டிக் டீம்: நாங்க விளையாட்டு திடல், பந்து மற்றும் வந்து போகிறவர்களுக்காண சாப்படு உதவி/ஏற்பாடுன்னு வேலைய பிரிச்சிக்கிறோம். (ஸ்பான்ஸ்ர்ஸ்க்கு பூத் கொடுக்கனுமா? அவங்க எல்லாம் கோவிச்சிக்க போறாங்க)

கம்மியூனிகேஸன்ஸ் டீம்: நாங்க மெயில் எஸ்கலேசன், கடைகளுக்கு ஃபிளையர்ஸ், நியூஸ் ஜேர்னல்ஸ் போஸ்டிங் (தமிழ் மணத்துல உண்டா?) வேலைகள பார்த்துக்கிறோம். (அய்யோ... இன்னொரு ஜங்க் மெய்லா? ஏன் பில்டர் ஆவுல?)

யூத் டீம்... நீங்க உங்களுக்கு பிடிச்ச டீம்ல உதவி பண்ணுங்க. உங்க திறமைகள வளர்த்துக்க இந்த விழாவை சரியா பயன்படுத்திக்கோங்க. (அதெல்லாம் நாங்க பண்ணுவோம், நீங்க எல்லாம் உள்குத்து இல்லாம வேலை செய்ங்க)

அன்றும் விழாக்கள் சிறப்பாக நடந்தன,
இன்றும் விழாக்கள் சிறப்பாக நடக்கின்றன.

அன்று ஒரு குடும்பமாய்...
இன்று பல குழுக்களாய்.

எந்திரன்... மந்திரன்... தந்திரன்

பல திறமைசாலிகள் ஒன்றிணைந்து விரைவில் நாம் வெள்ளித்திரையில் காணக் கிடைக்கப்போகும் ஒரு பெரிய விருந்து எந்திரன். இது தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று. மிகப் பெரிய வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொலவை காட்டும் கல், சராசரி படமாக இருந்தால் சினிமா என்ற நெடுந்தொலைவு பயணித்தில் சற்றே அமர்ந்து செல்ல ஒரு ஒய்வுக் கல்.

எந்திரன்... ரஜினி, அவர்தானே கதாநாயகன். ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ அதை தருவதில் ரஜினி என்றும் ஏமாற்றியது இல்லை. ஆக்‌ஷன், ஸ்டைல், சிரிப்பு, டயலாக் டெலிவரி... அது குசேலனோ, சிவாஜியோ இல்லை எந்திரனோ அவர் பகுதியை சிறப்பாக செய்திருப்பார்.

மந்திரன்... சங்கர், அவர்தானே இயக்குனர். தன் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முந்தைய படத்தினை விட அடுத்த ஒரு படி மேலே செல்ல என்ன செய்ய வேண்டும் என யோசிப்பவர். சிவாஜி இயக்குனர் சங்கரை வெல்வது எப்படி என சிந்தித்து நிச்சயமா எந்திரனில் பல புதிய மந்திரங்களை உச்சரித்து இருப்பார்.

தந்திரன்... கலாநிதிமாறன், அவர்தானே தயாரிப்பாளர். வியாபார தந்திரம் அறிந்த எந்திரன் & மந்திரன். காசை போட்டு காசை எடுக்கும் இயந்திரம் எந்திரன் என்பதை அறிந்து இயக்குனர் கேட்ட கோடிகளை கொட்டிக் கொடுத்த (கேடி) மந்திரன். இசைத் தகடு வெளியீட்டை வெளிநாட்டில் (மலேசியாவில்) வெளியிட்டு முதல் வருமானத்தை வெள்ளிகளில் (டாலர்களில்) வெள்ளாமை செய்ய ஆரம்பித்து விட்டார். இனி எந்திரன் எழுத்தது, ஆயிபோனது, பல்துலக்கியது என்று இரவு எந்திரன் தூங்கப்போனது வரை அனைத்தையும் சன் நெட்வொர்க்கில் நீங்கள் பார்த்து ர(இம்)சிக்கலாம். அதுதானே அவரது வியாபார தந்திரம்.

எந்திரனோ, மந்திரனோ இல்லை தந்திரனோ, ஒரு இந்திரனாக தமிழ் சினிமா ரசிகர்களை இரட்சித்து மகிழ்விக்க வேண்டும்.

கலியுகமா இல்லை பலியுகமா?

ஆட்டுரலில் குழவி நின்று கல் சுற்றியது
கலி காலமாம்

தொடர்வண்டி நீராவியில்லாமல் ஓடுகிறது
மின்சாரத்தின் உதவியாம்

தொடர்பில்லாமல் தொலைக்காட்சியும் தொலைபேசியும்
தகவல்தொடர்பின் புதுப் பரிணாமமாம்

கடல் நீரைக் குடி நீராக்கி குடிக்கப்போகிறோம்
சுழற்ச்சி மாற்றமாம்

ஆமாம், இவையெல்லாம்
கலியுகத்தின் மாற்றம் பலியுகத்தின் தோற்றம்.

மறந்து விட்டோம் பண்பாட்டை
இழந்து விட்டோம் செயல்பாட்டை

அறிவியல் ஆடுகிறது வேட்டை
ஓசோனில் போடுகிறது ஓட்டை

தெரிகிறதா அதுகாட்டும் நடைபாட்டை?
அடையப்போகிறோம் விரைவில் சுடுகாட்டை.

வண்ணாந்துறை

ஒவ்வொரு நாட்டிலும் சைனா டவுன் இருப்பது போல் வண்ணாந்துறையும் இருக்கும் போல, சென்னையில் அது வண்ணாரப் பேட்டை, சிங்கப்பூரில் அது தோபி காட் (பிரிட்டிஷ் காலணிகளில் என்று நினைக்கிறேன்).

அன்று வண்ணாந்துறையில் அழுக்கு வெளுக்கப் பட்டு பலரும் பொலிவுடன் வளம்வர காரணமாயிருந்து உள்ளது. இன்று அந்த வண்ணாந்துறைய மையமாக வைத்து ஒரு சிறந்த தமிழ்ப் படம் வந்துள்ளது. இது தமிழ் சினிமாவில் உள்ள இன்றைய இயக்குனர்களின் மனதை வெளுக்குமா?

ஒரு படத்தின் கதாநாயகன் அதன் இயக்குனர் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது, ஹீரோ-தான் மாஸு என சொல்பவர்கள் என் பார்வையில் வெரும் லூஸு. வெரும் வெளிர் வெள்ளை வேட்டியில் ஒரு கதா நாயகனை இன்று நம் கண்ணில் காட்டியுள்ளது இப்படம்.

வடநாட்டு கோழியைப் போட்டு வறுத்தால் மசாலாவாக இருக்கும் என்று எண்ணி கதையை நம்பாமல் வெள்ளைச் சதையை நம்பி படம் பண்ணும் இயக்குனர்களின் நம்பிக்கையை வெளுக்க இதோ ஒரு தமிழ்ப் படம். அறைகுறை ஆடையில் (ஏமி ஜாக்ஸன்) – அள்ளித்தர இருந்தாலும் அவரை அழகியாக (ஏமி மில்கின்ஸனாக) காட்டியவர் இப்பட இயக்குனர்.

டெக்னாலஜி ஹாஸ் ஸோ இம்ப்ரூவ்ட் ஆனால் இயக்குனர் சைக்காலஜி ஹாஸ் ஸோ டேமேஜ்ட், கணணி வரைகலையை இப்ப உள்ள படத்துல பார்த்து கண்கள் அவிந்து போனதுதான் மிச்சம் என்று சொல்லும் அளவிற்கு கதாநாயகன் கைய தூக்குனா மின்னல் வெட்டுது, கால தூக்குனா பொறி பறக்குது, கதாநாயகி நடந்து வரும்போது கலர் கலரா உடை மாறுது என்ற மாயை கலர்களை வெளுத்து சிங்கார சென்னையை கருப்பு வெள்ளையில் அழகாக காட்டுவதற்கு கணணி வரைகலையை பயன் படுத்திய இயக்குனருக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

இப்படி பல இடங்களில் வெளுத்து வாங்கி,

தமிழ் சினிமாவில்
கதைக்கு இல்லை வெற்றிடம்
சதைக்கு இல்லை புகளிடம்
நல்ல இயக்குனரிடம்
மனம் இருந்தால் எடுக்கலாம்
மதராசப்பட்டினம் போல் வெற்றிப்படம்

மதராசப்பட்டினம் – இன்றைய தமிழ் சினிமா இயக்குனர்களின் மன அழுக்கை வெளுக்க வந்த வண்ணாந்துறை.

எனக்கு சாதி பிடிக்கும், மதம் பிடிக்கும்

சத்தியமாய்
சாதிப் பிடிக்காது
ஆனால்
மதம் பிடிக்கும்.

மதம் பிடிக்கும்
சில சமயங்களில்
எனக்கு
சாதியைப் பிடிக்கும்

சண்டாளா
சாதி மதம் பிடிக்காதென்று
பதிவு எழுதி பேசியது?

பேசியது உண்மைதான்...
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
அதை மீண்டும் உணர்த்திச் சொல்லப் பதிவு

பதிவெழுதி பதிவெழுதி
பலவேலைகளை நான் கால தா-மதம் செய்தும்
அதை பொருட்-படுத்தாத
என் பெண்-சாதியை பிடிக்கும்
அதை பொருட்-படுத்தினாலும்
மதம் பிடிக்காத பெண்-சாதியை பிடிக்கும்

தா-மதம் தா-மதம் என்றாலும்
இன்னுமொரு இடுக்கை இடவில்லையா
என பதிவெழுத சம்-மதம் சொல்லும்
மதம் பிடித்த பெண்-சாதியை பிடிக்கும்.

குடைச்சல்...

ஒருவன்தான் உணவுண்டேன்
சோற்றுடன் கறி ஒன்று
ஒழித்துப் போட்டேன்
பத்துப்பசை பாத்திரங்கள் ஒன்பது
கழுவிப் போட்டேன்
கையெல்லாம் வலி குடையுது

என்னவளை எண்ணினேன்
நித்தம் கறி இரண்டு
ஒழித்துப் போடப்போட
வற்றா பத்துப்பசை பாத்திரங்கள்
கைவலித்ததாய் செவிமடிக்கவில்லை
மனதெல்லாம் வலி குடையுது

கவி.பர்வீன் சுல்தானாவிற்கு நன்றி

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்பது – அன்று
கருணாநிதி வீட்டிக் கட்டில்தறி கவிபாடியது – இன்று

கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிதையாய்
பாரில் இனி உன் தமிழ் சொல் தானா?

அவையில் உங்களை
பேசச்சொல்லி அழைத்தவர் துணைத்தலைவர் ரவி
கேட்டு ரசித்ததோ அவையில் உள்ளோரின் செவி.

தலைப்போ சிகரம் தொட்டு
தலைப்போ “பெண்மையின்” சிகரம் தொட்டு
திகைத்தோம் உங்கள் உரையைக் கேட்டு
காரணம் – நீங்கள் பேசியவை
ஒவ்வொன்றும் எங்கள் மனதைத் தொட்டு.

நீங்கள் பேசியதெல்லாம் பெண்ணின் “சுயம்”
அதைக்கேட்ட ஆண்களுக்கு சற்றே பயம்.

அகநானூறு சொன்னீர், புறநானூறு சொன்னீர்
ஆம், அகம் சொன்னீர், புறம் சொன்னீர்
அகமோ, புறமோ
உங்களால் இந்த முத்தமிழ் விழாவில் நாங்கள் பெற்றது
தமிழ் எனும் சுகம் சுகம் சுகம்.

கொசுத் தொல்லை...

அமெரிக்கா வந்த ஐந்து ஆண்டுகளில் நான் (ஏன் இந்த கொசுக் கடிய ஒவ்வொரு தேசியும் அனுபவிச்சி இருப்பாங்க) அதிகம் கடி பட்டது இரண்டு கொசுக்களிடம். ஒன்று தேசிக் கொசு, மற்றொன்று விதேசிக் கொசு. இந்த ரெண்டு கொசுக்களை அடையாளம் காணுதல், அவற்றை கையாளுதல் மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். நகச்சுவைக்காக மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல.

தேசிக் கொசு:

இந்தக் கொசு தேசியை மட்டும்தான் கடிக்கும். இது மளிகை கடை, காய்கறி கடை மற்றும் வால்மார்ட் போன்ற தேசிகள் அதிகம் நடமாடும் இடங்களில் தென்படும். இது உங்களை பார்த்தவுடன் சிரிக்கும், நீங்கள் பதிலுக்கு சிரித்தவுடன் (சிரிக்கா விட்டாலும்) உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று குசலம் விசாரிக்கும். பிறகு பழகுவதற்க்கும், தொடர் நட்பிற்க்கும் என்று சொல்லி உங்கள் தொலைபேசி எண்ணை கேட்கும். தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு மீண்டும் சந்திக்கலாம் என்றும், வீட்டிலிருந்தபடியே பணம் பண்ணலாம் என்றும் கடிக்கும். இந்த சிறுகடி ஒரு நாள் பெருங்கடியாக மாறும். இது ரொம்ப சமர்த்தான கொசு கடைசி வரை ஏன் கடிக்கிறேன் எதுக்கு கடிக்கிறேன் என்று சொல்லாது... ஆனா கடிக்கும். இந்த கொசு உங்களை ஒரு வியாபார குழு சந்திப்பிற்க்கு அழைக்கும், உங்களுக்காக அது ஒரு இருக்கையை முன்பதிவு செய்திருப்பதாக சொல்ல... சிறுது நேரத்தில் ஒரு கொசுக் கூட்டம்... உங்கள் காதில் (கிழிய) ரத்தம் வர வர கடிக்கும். நீங்கள் கொஞ்சம் ஏமார்ந்தால் அன்றே அது உங்கள் மணி பர்சையும் கடிக்கும்.

இந்த கொசுக்களை நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். மேற்ச்சொன்ன இடங்களில் இந்தக் கொசு வெறும் வண்டியுடன் (எம்டி கார்ட்) சுற்றும்.
இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? அது மிகச் சுலபம். உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் வரும் மன மகிழ்வு தொலைபேசி எண்களை (உதாரணத்திற்கு, கொஸ்ட் எண்) நினைவு படுத்தி அதை அந்தக் கொசுவிடம் கொடுத்து விடுங்கள். பிறகு என்ன? உங்களுக்கு ஜாலி... கொசுவுக்கு டென்சன்.

விதேசிக் கொசு:

இந்தக் கொசு பெரும்பாலும் தொடர் குடியிருப்பில் உள்ள அனைவரையும் கடிக்கும். இது சனிக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் உங்கள் கதவை தட்டும். உங்கள் நாடு மற்றும் அமெரிக்கா பற்றிய சில நல்ல விசயங்களை கடித்துவிட்டு மெல்ல உங்களை சமயம் பற்றி கடிக்க ஆரம்பிக்கும். இந்த கொசு பரிசுத்த வேதகாமம், பழைய/புதிய ஏற்பாடுகளில் இருந்து சில நீதி/வசனம் என்று சொல்லியும், உங்களை வருகின்ற ஞாயிற்றுக் கிழமை கூட்டு பிரார்த்தனைக்கு வாங்க என அழைத்துக் கடிக்கும்.

இந்தக் கொசுவையும் நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். இந்தக் கொசு வீட்டிற்க்கே வந்து கதவை தட்டி கடிப்பதால், கையில் உள்ள விசயங்களை வைத்து முடிவு செய்து விடலாம்.

இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? இந்த விதேசிக் கொசு தேசிக் கொசுக்களைக் காட்டிலும் பல மடங்கு நல்ல கொசுக்கள். இதன் நோக்கம் நல்ல(?!) நோக்கம் என்பதாலும், கடிக்கும் போது நல்ல விசயங்களை சொல்லி கடிப்பதாலும் இந்தக் கடியை பொருத்துக் கொள்ளலாம். மேலும் இதை உங்கள் மன நிலைக்கும், பக்குவத்திற்க்கும் ஏற்ப்ப இதைக் கையாளலாம். உதாரணத்திற்கு, கார்ட் ப்ளஸ் அமெரிக்கா, பிறகு சந்திப்போம் என்று சொல்லி அனுப்பி விடலாம். இல்லை எனில் இந்தக் கொசு பரிசுத்த வேதகாமம் என்று ஆரம்பிக்கும் போது நீங்களும், பகவத்கீதை, சுலோஹம் 67, ஸ்ரீ பகவானுவுவாச்ச-ன்னு உங்க பராக்கிரமத்த (கடிதான்) காட்டலாம்.

அன்புடன் அழைக்கிறேன்...

நீங்கள் அட்லாண்டா (அமெரிக்கா – ஜார்ஜியா மாகாணம்) வாழ் தமிழராகவோ அல்லது அட்லாண்டா அருகில் வாழும் தமிழார்வம் கொண்டவராகவோ இருப்பின் உங்களை கேட்ஸ் – கலிஃபோர்னியா தமிழ்க் கழகத் தமிழ்ப் பள்ளிகளின் முதலாம் ஆண்டு விழாவிற்க்கு, விழாக் குழுவினரின் சார்பில் உங்களை வருக வருக என வரவேற்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாள் : மே 16, 2010 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2 மணி முதல்
இடம் : இண்டிபெண்டன்ஸ் உயர் நிலைப் பள்ளி,
மில்டன் மையம், 86 – ஸ்கூல் டிரைவ், அல்ஃபரட்டா, ஜார்ஜியா – 30009.

நிகழ்ச்சிக் குறிப்பு : 141 குழந்தைகளுக்கு கல்வியாண்டு சான்றிதழ் வழங்குதல், அவர்களின் கலை நிகழ்ச்சிகள் – ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு, காவடியாட்டம் போன்ற தமிழ்க் கலாச்சார மற்றும் பண்பாட்டு கலைகளுடன்.

150-க்கு மேற்ப்பட்ட தமிழ்க் குடும்பங்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்களின் சந்திப்புக்கள்.

உங்கள் பகுதியில் புதிய கல்விக்கூடம் அமைப்பதற்க்காண வழிகாட்டுதல்கள்.

இளவேனில் கால மஞ்சள் நீராட்டு

இளவேனில்...

ஊரெல்லாம் மஞ்சள்
மகரந்தத்தின் கொஞ்சல்
இது
இளவேனில்கால கெஞ்சல்
வரும் கோடைக்கான அஞ்சல்

மஞ்சள் நீராட்டு...

கை படாமல் கார் வாஷ் செய்து
கராஜில் நிற்காமல் காற்றாட நின்றவளை

அங்கமெல்லாம் மஞ்சள் பூசி சென்றவன் எவன்?
அவள் மாமனோ? அவன் பெயர் போலனோ?

ஓவ்வாமை...

காதலி
காதோடு ஆடுது கம்மல்
காரணி
உன்னால் வந்த தும்மல்.

இவர்கள் சந்தித்தால்....

மரப் புலியும்... அதாங்க டைகர் உட்ஸ்-ம், நம்ம காவிப் பு(போ)லியும் சந்தித்தால் என்ன பேசிப்பாங்க?
மரப் புலி: நான் ஒரு விளையாட்டுப் பிள்ளை, என்னை வீணா வாம்புல மாட்டி விட்டுட்டாங்கையா... என் பெண்டாட்டி ஒரு பக்கம், பத்திரிக்கை காரர்கள் ஒரு பக்கம்ன்னு பின்னி எடுத்துட்டாங்கப்பா.

நித்தி: எங்க ஊருல பெண்கள் புலிய முரத்தால் அடித்ததாக வீர வரலாற்று செய்திகள் இருக்கு, ஆனா முகத்துல அடிச்சதா இல்லை. நீ வேஸ்ட்டப்பா. மூஞ்சில அடிவாங்கின சரி, காரை ஏன் கொண்டி மரத்துலயும் ஃபயர் ஹைட்ரண்ட் மேலயும் மோதின?

புலி: உண்மைதான் சாமி, எனக்கு உங்களவுக்கு திறமை இல்லை. உங்க கூட ஆசிரமத்துக்கு வந்து கொஞ்சம் பயிற்ச்சி எடுத்துக்கனும். நீங்க ஜாலிய படுத்து இருக்கீங்க, எல்லாத்தையும் அந்த புள்ளையே பண்ணுது.
நித்தி: (மனசுக்குள்... அட பாவிங்களா, இவன் நம்மூரு டி.வி.யும் பேப்பரும் படிக்க மாட்டான்னு நினைச்சி கொஞ்சம் பில்டப் பண்ணுலாம்ன்னு பார்த்தா இமேஜ டேமேஜ் பண்ணிட்டீங்களா?) புலி அதெல்லாம் கிராபிஃக்ஸ், நம்பாதீங்க.

புலி: சாமி, விடுங்க சாமி காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் இந்த விவகாரத்துல உங்களுக்கு திறமை பத்தாது சாமி, நான் இதுமாதிரி காரியத்துக்கெல்லாம் தனி சொகுசு படகு வெச்சிருக்கேன்... தயங்காம கேளுங்க கொடுத்து உதவுரேன்.

சிறிது நாட்களுக்கு பிறகு...
சாமி: புலி, என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிட்டீங்க?

புலி: சாமி, தெரியாம ஒன்பது பொண்ணுங்கன்னு ஒலறிட்டேன், ஒழுங்கா மத்ததையும் மறைக்காம சொல்லுன்னு உட்காரவெச்சி கேள்வி மேல கேள்வி கேக்கிறாங்க சாமி

சாமி: என்ன பாருங்க... அதெல்லாம் அலிஹேஸன், கான்ஸ்பைரஸி, கன்ஃபியூஸன், மிஸ்ரெப்ரஸண்டேச்ஸன், மேனிப்புலேஸன், பெனிப்ஃட் ஆஃப் டவுட்டுன்னு சொல்லிட்டு... எனக்கு கும்ப மேலா வேல இருக்குன்னு எஸ்கேப் ஆயி ஹிமாச்சல் போயி செட்டில் ஆகிட போறேன்.

புலி: என்னமோ சாமி நீங்க ஸன்... ஸன்-ன்னு சொல்றீங்க, எந்த சன்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல.

சாமி: உனக்கு ஒன்னும் புரியாது. இனிமேலாவது திருந்து, கேள்ஸ்ஸ விடு, கோல்ஃப் விளையாட்ட மட்டும் பாரு.

பழமையின் குதபகாலம் – பின்னூட்ட பதிவு

சாமியார்களும் சந்திப்புகளும்

சாமியார்கள் அன்றும் இருந்தனர், இன்றும் இருக்கின்றனர், சந்திப்புகள் அன்றும் நடந்தது, இன்றும் நடக்கின்றது. ஆனால் இன்று அந்த சந்திப்புகள் சந்தி சிரிக்கின்றன... காரணம் சாமிகள் இல்லை இன்றைய ஆசாமிகள்.

அன்று அருள் வேண்டி சென்றனர், இன்று பொருள் வேண்டி செல்கின்றனர். சாமியோ, சாமியாரோ... அவர்கள் என்ன கருவூலத்தின் காரியதரிசிகளா... நீங்கள் வேண்டியவுடன் காசு (பொருள்) கொடுக்க?

அன்று அமைதி வேண்டி நடந்த சந்திப்புகள்... சாமிகளை பார்க்க சென்றேன் ஒரு விடிவுகாலம் பிறந்தது என்று சொல்லுவார்கள். அது சாமியார் செய்த மாயமோ மந்திரமோ இல்லை, அங்கு நடந்த சந்திப்பினால் பெற்றது. உதாரணத்திற்க்கு எல்லா காரணிகளும் சரிவர இருந்தும் ஒரு சரியான மேளாலர் இல்லாததால் மனம் நொந்த ஒரு நிறுவனத்தின் முதளாலி, தன் நேர்மையான செயல்பாட்டால் வேலையிழந்த ஒரு தொழிலாளி, சாமியாரின் தரிசனத்திற்க்கு காத்திருக்கும் வேளையில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்கின்றனர், இருவரின் தேவைகளும், மன எண்ணமும்/ஓட்டமும் ஒரே அலைவரிசையில் இருக்க இவர் அவருக்கு, அவர் இவருக்கு என்று உதவ இருவரது வாழ்விலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட அது சாமிகளின் சந்திப்பால் உண்டானது என்று தோன்றி, மீண்டும் அங்கு செல்ல அடுத்த சந்திப்பில் அங்கு வேறு சிலரை சந்திகின்றனர், அவர்களுடைய தேவை ஒரு மருத்துவ உதவியாக இருக்க, அதற்க்கு இவர்கள் உதவ, இவர்கள் செயத அந்த “அறம்” தொண்டு மரமாக (விரிட்சம்) வளர்ந்தது. சாமியார் கற்றதும் பெற்றது ஏதும் இல்லை, மாறாக சாமியாரை காணவந்தவர் கற்றது பெற்றதும் அவரவர் கண்ணும் காதும் திறந்திருந்தற்க்கு ஏற்ப்ப. சாமியாரின் தரிசனத்திற்க்கு காத்திருந்த காலமும், அங்கு வந்திருந்தவர்களின் பிரச்சனைகளை பார்த்த/கேட்ட பிறகு தன் பிரச்சனை ஒரு விசயமே இல்லை எனவும், அதை தானே எவ்வாறு சரிசெய்து கொள்ளலாம் என நினைக்கத்தோன்றும் “சுய தேடல்” அடையும் மனத் தெளிவுமே நீங்கள் அங்கு பெற்ற ”அரு-மருந்து”.

இன்று, காத்திருப்பது காணாமல் போய் எல்லாவற்றிர்க்கும் ஒரு பரபரப்புடன் இருப்பதால் சாமியாரை பார்க்க ஒரு ”கால கட்டம்” அதற்கு கப்பம் ”கட்டாய கட்டணம்”, சாமியார் மருந்தாய் அருளுவது ஒரு ”காய கல்பம்”... என அல்பம் சொல்பம்-ஆகி விட்டது.

சாமியை தேடுவதற்க்குமுன் உங்கள் மனச் சாவியை தேடுங்கள், திறந்த மனதோடு உங்கள் குடும்பத்தினருடன் பேசுங்கள், நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்கான காரணங்கள் தோரணங்களாக மாறும்.

பொன்னேரு...

ஏய் சின்னவனே, சாமி அலமாரியிலிருந்து பஞ்சாங்கத்த எடுத்துகிட்டு வாடா.

எந்த பஞ்சாங்கம் தாத்தா?

அந்த பாம்பு படம் போட்டிருக்குமே, கௌரி பஞ்சாங்கம்டா.

தாத்தா ஏதும் விசேஷம் வருதா நம்ம வீட்டுல?

ஆடி பொறந்துடுச்சில்ல, விதைவிட வேண்டாமா? பொன்னேரு கட்டுறதுக்கு நல்ல நாள் பாக்கனும்ல்ல அதுக்குடா.

தாத்தா... இன்னிக்கேவா பொன்னேரு கட்ட போரோம்?

இல்லடா... இன்னும் ரெண்டு நாள் கழிச்சி... புதன் கிழமை காலைல கட்டுவோம், நீ இப்ப பஞ்சாங்கத்த கொண்டுவந்து கொடுத்துட்டு... கொள்ளைல செல்லதுரை இருப்பான்... அவனை போயி மணவெளி பங்குல... சனி மூலைல காட்ட கழிக்க சொல்லு, வயல் பக்கம் கொத்தி போட்டுட்டு... அப்படியே வரப்ப செத்தி வெக்க சொல்லு... சாமிக்கு படையல் வைக்கினும்ல்ல அதுக்கு.

சரி தாத்தா.

[பொன்னேரு (பொன் + ஏர்)... வருடத்தில் ஒரு நாள் பொன்னேரு பூட்டும் நாள்... ஒரு சிறப்பு தினமாக இருக்கும்]

அன்று அவன் அம்மா அரிசியில் வெள்ளம், தேங்காய், எள்ளு எல்லாம் போட்டு அந்த பூட்டரிசி-யை தயார் செய்வாள், அது கூட அவல், வெள்ளம், பொட்டுக்கடலை கலவையும் இருக்கும். பிரப்பங் கூடையில் பூ, பழம், பூட்டரிசி போன்ற பூசை சாமான்களுடன் புதுப் பெண் போல் விதை நெல்லும் அதில் இருக்கும். தீபாவளிபோல் அதிகாலையில் குளித்து தயாராகவிடுவான் அவன்... தாத்தாவிற்க்கு முன் சனி மூலையில் சட்டான் பிள்ளையாய்.

மணல்வெளி என்பது ஒரு வயலின் பெயர், காவிப் படுகையில் இருமண் பாடு கொண்ட நிலம், பொன் போட்டால் பொன் விளையும் என்று அவன் தாத்தா சொல்லுவார். அதில்தான் வருடா வருடம் பொன்னேறு கட்டுவார். ஆடிப் பதினெட்டில் எப்படியும் காவிரி ஆற்றில் தண்ணி வந்துவிடும், அதற்க்கு இரு வாரம் முன்பாக பொன்னேறு கட்டி, மறு நாளே “மோட்டார் பம்ப்” குழாய் வழி நீர் பாய்ச்சி மணல்வெளி நிலத்தில் விதை தெளித்து... இரண்டு வாரத்தில் மற்ற நிலங்களுக்கு நாற்று தயாராகிவிடும். பொன்னேறு கட்டிய அன்று சட்டான் பிள்ளையாய் இருந்த அவன் நாற்றுடன் தானும் வளந்து, நாற்று பரிக்கும் போது தாத்தா சொல் கேட்கும் சமத்து பிள்ளையாய் அவன்.

வருடங்கள் உருண்டோடின...

அவன் பஞ்சாங்கம் பார்பதை தவிர்த்தான், காரணம் தாத்தா அவனை தவிக்கவிட்டு போனார் என்பதால் அல்ல, ஆடியில் காவேரியில் தண்ணீர் வருவது தவிர்த்து போனதால். பொன்னேரு மறந்து போனான், காரணம் அம்மா பூட்டரிசி செய்யாததால் அல்ல, வானம் பொய்த்து போனதால்.

இன்று அந்த
பொன்னேரு பூட்டிய விவசாயின் கண்ணில் கண்ணீரு,
பூட்டரிசி படைத்த வயல்வெளிக்கு இன்று வாய்க்கரிசி.

விவசாய நிலங்களில் பார் வீடு
வாய்க்கால் வரப்புகளில் தார் ரோடு
வித்திடுறான் இயற்கைக்கு சீர் கேடு
விழித்துக்கொள்... இல்லையேல்…
வாய்சோற்ற்க்கு ஏந்தனும் திரு வோடு

(காலிப் பெருங்காய டப்பா... ஆனால் அதன் மணம்... இன்றும் நறுமணமாய்)

துரியோதனன் – சொ.கா.சூ

ஒருவர் நம் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றால் அவர் சொல்வதை நாம் நம்ப வேண்டும்... இல்லையென்றால் சொந்த காசில் சூனியம் (சொ.கா.சூ) வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

மஹாபாரதத்தில் அதை மிக அழகாக சொல்லியிருப்பதை பார்க்கலாம். கிருஷ்ணன் துரியோதனனை சந்தித்து பேசுகிறார், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைகிறது. சரி இனி இவனிடம் பேசி பயனில்லை என்று கிருஷ்ணன் அவன் மாளிகையிலிருந்து புறப்படுகிறார். அப்படி புறப்பட்டு வரும் போது மாளிகை வாயில் பாதையில் அஸ்வதாமன் வருவதை பார்க்கிறார், துரியோதனன் கோபத்தில் மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறார். சரி இதுதான் சமயம் இவன வெச்சு அவன் மண்டைய குழப்பிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி காய் நகர்த்துகிறார்.

எதிரணியில் கிருஷ்ணன் இருந்தாலும், அஸ்வதாமன் மரியாதை நிமித்தம் கை குவித்து கிருஷ்ணனுக்கு வணக்கம் தெரிவிக்கிறான். அதுதான் சமயம் என்று கிருஷ்ணன் தன் மோதிரத்தை கழட்டி கீழே விட, கிருஷ்ணன் மரியாதைக்குரியவர் என்பதால் அஸ்வதாமன் அதை குனிந்து எடுத்து கிருஷ்ணன் கையில் கொடுக்கிறான். கிருஷ்ணன் அதை நன்றியுடன் (சிறிது கயை பிடித்து அழுத்தி) வாங்கி கொள்கிறார். ஒன்றும் பேசிக் கொள்ளவே இல்லை, பிறகு இருவரும் வணங்கி விடை பெருகின்றனர்.

மாளிகையின் மாடியிலிருந்து இந்த காட்சியை ஊமைப் படமாய் துரியோதனன் பார்க்கிறான். கிருஷ்ணன் அஸ்வதாமனிடம் பேசி அவனை அவர்கள் (பாண்டவர்கள்) பக்கம் மாற்றிவிட்டான் என எண்ணுகிறான்.

இனி... துரியோதனனும் அஸ்வதாமனும் பேசிக்கொண்டது…

துரி: ஏண்டா பண்ணாட... அவ்ந்தான் நம்ம எதிரியாலுன்னு தெரியும்ல... அவன் கைல உனக்கின்னாடா பேச்சி வேண்டிகிடக்கு?

அஸ்: தோ...டா. என்னமோ புச்சா சொல்லவந்திட்டாரு. நாங்களும் உப்பு போட்டுதான் சோறு துண்றோம்... எங்களுக்கும் சொரண இருக்கு... நான் எவ்ன் கைலியும் பேஸ்ல... சும்மா மரியாதைக்காண்டி ஒரு அலோ சொல்லிகினோம்...
துரி: சரி நீ பேஸ்ல... உன்ன நம்பறேன்... ஒரு பேச்சுக்கு நீ பேஸ்லன்னே வெச்சுகிறன். நான் இங்கன இருந்ததால நீ பேஸ்னயா இல்லியான்னு என்னால கட்டன்ரைட்டா சொல்லமுடியல. ஆனா அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணியே... இன்னா மேட்டரது... அத்த சொல்லு.

அஸ்: இன்னாது... நான் அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணினா? யாம்பா... உன்கு ஏதாவது மண்ட கிண்ட ஓடிப்போச்சா? இல்ல... ராத்திரி அட்ச்ச மப்பு இன்னும் தெளியலயா?

துரி: நீ என் கைல டபாய்ககாத... என் ரெண்டு கண்ணால பார்த்தேன். தரையிலேருந்து மண்ண எடுத்து அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணுன.

அஸ்: யோவ்... இன்னாயா உன்கூட படா பேஜாராகீது... பேசாதத பேஸ்னேங்கிற... செய்யாதத செஞ்சேங்கிற... இத்தான் பெரியவங்கோ சொல்றத கேட்கனுங்கிறது. நீ யான் தோஸ்த்து, நீதான் எனக்கு முக்கியம்னு... நீ தப்பானவன்னு தெரிஞ்சும் உன்கு உதவ வந்தம் பாரு... எம்புத்திய ஜோட்டால அடிக்கனும்... அக்காங்.

(எது எப்படியோ, கிருஷ்ணன் அவர் நினைச்ச வேளைய கச்சிதமா செய்து முடித்திட்டார்).

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், உடையவரிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதே மெய்.

எனக்கு பிடித்த பத்து பெண்கள்...

என்னை நண்பர் கோபி பிருந்தாவனத்திலிருந்து இந்த தொடர் பதிவிற்க்கு அழைத்திருந்தார். நன்றி கோபி... இனி கூப்பிட்டா நிபந்தனை இல்லாம கூப்பிடுங்க. இல்லையா நிபந்தனைய கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் என சொல்லுங்களேன். (சரி... சரி... ஏன் இவர கூப்பிட்டோம்ன்னு வருத்தப் படாதீங்க). கற்ப்புக்கரசி ஒருவரை சொல் என்றால் கண்ணகிக்குமுன் நமக்கு நினைவிற்க்கு வரவேண்டியவர்கள் நம் அன்னையும் பிறகு (திருமணமாகியிருந்தால்) நம் மனைவியுமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நிபந்தனை இல்லையெனில் கொஞ்சம் சோப்பு போட்டிருக்கலாம்...

1. குண்டு டீச்சர் : செம்பனார்கோவில் உதவி பெரும் நடு நிலைப்பள்ளியில் என் முதல் வகுப்பு ஆசிரியை, பெயர் ஜெயலெட்சுமி. நான் காலந்தவறாமையை கற்றுகொண்டது இவரிடம்தான் என்பேன். உட்கார்ந்த இடத்திலிருந்தே நெய்வேலி காட்டாமணி-யால் வகுப்பு எடுத்தவர். இவர் எனக்கு பிடித்தவர் மட்டும் அல்ல என் மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்தவர்... எனக்கு முதலில் பிடித்தவர்.

2. அவ்வையார் : திருவள்ளுவரின் இரு வரியில் நான் உலகை அறியும் முன் ஒரு வரியில் பல உண்ணதங்களை “ஆத்திச் சூடி”-யின் மூலம் அறிய செய்தவர். அறம் செய விரும்பு, ஆறுவது சினம்... அவரை மறக்குமா என் மனம்?

3. புஷ்ப்பவள்ளி டீச்சர் : மயிலாடுதுறை தி.ப.தி.அர. மேனிலைப் பள்ளியில் எனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவர். அவர்களை பிடிக்க இரண்டு காரணங்கள், 1. எப்போதும் புன்னகை, 2. மாணவர்களின் மனமறிந்து பாடம் சொல்லிக்கொடுத்த தன்மை. வெட்கப்படாமல் தந்தி ஆங்கிலம் பேசு என்று தட்டிக்கொடுத்தவர்... ஏறிங் த மாடி, அடிச்சிங் த பம்ப் என்று சொல்லு என சொல்லி... சிரிக்காமல் புன்னகைத்தவர். (டீச்சருக்கு தெரியாது, தந்திக்கு பிறகு இண்டர்னெட்டு, ஈமெயிலு-ன்னு வந்திருச்சு... ஆனா தம்பி இன்னும் தந்திதான் அடிச்சிகிட்டு இருக்காருன்னு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

4. மேரி-கியூரி : மரியா எனும் இயர்பெருடன் பிறந்து, மணமானபின் கணவர் பியரி-கியூரின் பெயரால் மேரி-கியூரி ஆகி அணு ஆராய்ச்சியில் நோபல் பரிசு பெற்றவர். கணவன் இறந்த பின் கைம்பெண்ணாக இருக்காமல் கியூரி அணுகதிர்வீச்சு சோதனை மையத்திற்க்கு தலைமை ஏற்றதோடு ரேடிய-கதிர்வீச்சை மனித சிகிச்சைக்கு தக்கவாறு பிரித்தெடுத்த பெருமைக்குரிய நோபல் மங்கை.

5. அன்னை தெரசா : அண்டைய தேசத்திலிருந்து கல்வி கற்றுக்கொடுக்க வந்தவர்தான், க(கொ)ல்கத்தா சாலைகளில் அவர் கண்ட காட்சி… அவரை கல்விப் பணியிலிருந்து களப்பணிக்கு அற்பணிக்க வைத்தது. நோபல் பரிசுக்கு இவரால் பெருமை... அவரைப் பிடிக்கா விட்டால் என் மனதில் ஏதோ சிறுமை.

6. ஸ்டெஃபி கிராஃப் : ஸ்டெஃபி... அழகில் குல்ஃபி, டென்னிஸ் உலகில் ஆட்டத்தில் பேட்டா ராஃப்... இருப்பினும் நான் இதுவரை வாங்கவில்லை அவரிடம் ஆட்டோகிராஃப்.

7. ஷான் ஜான்சன் : பார்க்கத்தான் ஆள் குட்டி, பல்டி அடிப்பதில் படு சுட்டி. ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் எனக்குப் பிடித்த குட்டி(ப் பிசாசு).

8. நடிகை காஞ்சனா : காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தவர். விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றி பின் நடிகையாகி தமிழ் சினிமாவை அழகு படுத்தியவர். (தற்போது அவர் பொருளாதாரத்தில் நலிவடைந்து மிக மோசமான நிலையில் இருப்பதாக எங்கோ படித்தேன்... வருத்தமாக இருந்த்து)

9. பாடகி அனுராதா ஸ்ரீராம் : அழகிய குரல்களால் என்னை கவர்ந்தவர். எவ்வளவோ பாடல்கள்... மல்லிகையே... மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் கூறு... என்று என்னைத் தேடி இருந்தாலும்... கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

10. கவிஞர் தாமரை : ஒரு கவிஞராய்தான் எனக்கு தெரிந்தவர், பிறகு பாடலாசிரியையாய்... வியாபார உலகில், வளர்ந்து வரும் கலைஞர் எவர் ஒருவரும் செய்ய துணியாத ஒன்றை, என் எண்ணமும் எழுத்தும் ஒன்றே என தன்னை ஈழத் தமிழர்களுக்கான போரட்டத்தின் போது வெளிப்படுத்தியது... தெரிந்தவரை பிடித்தவர் ஆக்கியது.

கதவை தாண்டி வருவாயா...

குமுதத்தை திறந்தேன்
கட்டுரையை படித்தேன்
கதவைத் திறந்தேன்
காற்றாய் வந்தாய்!

கணனியைத் திறந்தேன்
பதிவை படித்தேன்
கணொளியைக் கண்டேன்
காணாமல் போனாய்!!

நித்யானந்தரே
நீர் ஒரு கல்பதரு
நான் ஒரு கவிதைதரு!!!

நாங்களும் ரவுடிதான்

விண்டர் ஒலிம்பிக்ஸ் - 2010

வாங்கூவர் - கனடாவில் 2010-ன் விண்டர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள்... கடந்த மூன்று வாரங்களாக பனி விளையாட்டுடன் கொண்டாட்டங்கள் என்று சொல்லும் அளவிற்க்கு நடந்து முடிந்துள்ளது.

நான் பெரும்பாலும் முதல் மற்றும் இறுதி நாள் கொண்டாட்டங்களை காணத்தவருவது இல்லை. இந்த வருடம்/முறை தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ன் உதவியால் அவதார் படத்தை மிஞ்சியது என்று சொன்னால் மிகையாகாது.

முதல் நாள் கொண்டாட்டங்கள்... காணொளிகள யுடியூப்ல பாருங்க... இங்க சில முக்கிய படங்கள்

நாங்களும் ரவுடிதான்...

கடந்த மூன்று விளையாட்டுகளை பார்த்த பொழுது மனதில் ஒரு சிறு வருத்தம் இருக்கும்... அத்தனை கொடிகளுக்கு இடையில் சக்கரம் பதித்த நம் மூவர்ண கொடி எங்கே என்று என் கண்கள் தேடும். இந்த ஆண்டு அதை ஒரு சிங்கம் சிங்கிளா உயர்த்தி பிடித்த பொழுது நினைத்தேன்... இனி நாங்களும் ரவுடிதான்.

இம்முறை இந்தியா கலந்து கொண்ட மூன்றில் லூஜ் எனப்படும் ஸ்லெட் பனி சறுக்கில் உலக தரவரிசையில் 29-ம் இடத்தை பெற்று தந்த "சிவ கேசவன் கண்ணன் பாலன்".

அடியால்... ரவுடி... தாதா

இந்த விளையாட்டு போட்டிகள் நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடம் என்ன?

ஒரு விசயத்தை பற்றி தெரிந்து வைத்திருந்தாலே நாம் எதையோ சாதித்துவிட்டோம் என்று நினைக்கும் எண்ணத்தை மாற்றி...

அந்த விசயத்தில் நாம் திறமை வாய்ந்தவராகவிட்டால் நாம் அந்தத் துறையில் இருந்து தூக்கியெறியப்படுவோம் என்பதை உணர்த்தியதோடு...

இன்று அந்த துறையில் வல்லமை அல்லது நிபுணத்துவராக இருக்க வேண்டும் என்பதை பறைசாற்றுகிறது.

தங்கத்திற்க்கும் வெள்ளிக்கும், வெள்ளிக்கும் வெண்கலத்திற்க்கும் இடைவெளி வினாடிகளில் நூற்றில் ஒரு பகுதி... உதாரணதிற்க்கு ஒன்று பாப்ஸ்லெய் என்ற பனிசறுக்கில் அமெரிக்கா எடுத்துகொண்ட நேரம் 3:24:46 - மூன்று நிமிடம் 24 வினாடி நூற்றில் 46 வினாடி, ஜெர்மனி 3:24:84, அமெரிக்காவை விட நூற்றில் 38 வினாடிகள்தான் குறைவு (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்), மூன்றாம் இடம் வந்த கனடா 3:24:85... நூற்றில் ஒரு வினாடியில் ஜெர்மனியிடம் வெள்ளியை பறிகொடுத்தவர்கள்.

இனி நான் ரவுடி, அடியால்ன்னு சொல்லிக்கிறது ஒரு விசயமே இல்லை. தாதாவ இருந்தாத்தான் ஜீப்புல (பிழைக்க) ஏற முடியும். ஜீப்பா இல்ல ஆப்பா?

அன்றும்... இன்றும்... -1

அன்று...
ஆசிரியர்: முருகா, வர வெள்ளிகிழமை விளையாட்டு போட்டிக்கு ஒரு 100 பேர் உட்கார பெஞ்சு போடனும்டா... அந்த வேளைய நீ பார்த்துக்கோ.

இன்று...
நண்பர்: முருகன், வர வெள்ளிகிழமை பிறந்த நாள் பார்ட்டி, ஒரு 100 பேர் உட்கார நாற்காலி ஏற்பாடு பண்ணும்... அத நீங்க பார்த்துக்கிறீங்களா?

முருகன்: சரி சார், காலைல ஏ.பி சார்கிட்ட சொல்லி அட்டெண்டன்ஸ் போட்டுட சொல்லுங்க... நான் கூட ரவிய அழைச்சிகிறேன், விளையாட்டு மைதானத்துல மதியம் பெஞ்ச இறக்கிடுறோம்.

ஒன்னும் பெரிய விசயம் இல்ல, ஒரு ஒன் அவர் அவே ஃப்ரம் டெஸ்க்னு போட்டுட்டு, மதியம் லன்ச் பிரேக்ல போயி எடுத்து கொண்டுவந்து வீட்டுல போட்டுடுறேன்.

டேய் ரவி வாடா ஒரு 20 பெஞ்சு ஏத்தனும், எங்க சிகப்பு காளை மாட்ட ஓட்டிக்கலாம், எங்க பார வண்டி சரிபடாது, உங்க வீட்டு டயர் வண்டிய எடுத்துப்போம், நம்ம தெருவிலேயே எடுத்து கொண்டாந்து இறக்கிடலாம்.

கணேஷ், லன்ச் பிரேக்ல ரெண்ட்-ய-பிளேஸ் வரை போயி கொஞ்சம் சேர் ஏத்திட்டு வந்திடலாமா? என் வண்டில ஏத்த முடியாது, யூகால்ல டிரக்க எடுத்துக்கலாம், அப்படியே ராஜ் வீட்டுல இறக்கிட்டு வந்திடலாம்.

பாட்டி: முருகா, பெஞ்ச ஒடைச்சி கொண்டாந்து போடுறீங்களா? காலு நொடிக்குது?

சேல்ஸ் லேடி: எச்சூசுமி, ரெண்டு சேரு டேமேஜ் ஆயிருக்கு

முருகன்: பாட்டி, அது ஏத்தும் போதே நொடிச்சிகிட்டுதான் இருந்துது... நீ பாக்கு இடிச்சி இடிச்சி... நொடிச்சி போச்சி. கவலை படாத அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு ஆசாரியார் வராரு அவர கூட்டிவந்து சரி பண்ணிதரேன்.

நாங்க செக் பண்ணல, உங்க டெலிவரிமேன் தான் லோட் பண்ணுனார், இருந்தாலும் இன்சூரன்ஸ் எடுத்திருக்கோம், அதுல கவர் பண்ணிக்கோங்க.

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...
ஆனால் முருகனும் நானும் வேறல்ல...


இந்தியாவில் பாதி... அமெரிக்காவில் மீதி...
அன்றும் இன்றும் நம் நினைவுகள் ஒன்றல்லோ...


இத கவியரசர் கண்ணதாசன் எவ்வளவு அழகா பாட்டா எழுதியிருக்கார்.... கேட்கனுமா... இங்க அழுத்துங்க.

சோதனை

இனிய காலை பொழுது, நண்பர்களுடன் வழக்கமாக கூடும் இடத்தில் அன்றும் வழக்கமான விசயங்களை பேசிக்கொண்டிருந்தான். அஞ்சல்காரர் அவ்வழி கடக்கும் போது சொன்னார்... தம்பி உங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது அதை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன் என்று.

கடிதம் பற்றி பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. என்ன விவசாய கூட்டுறவு சங்கத்திலிருந்து கடன் கட்டச்சொல்லி வந்திருக்கும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டு நண்பர்களுடனான அரட்டையை தொடர்ந்தான்.

தெரு கைப்பம்பில் தண்ணீர் எடுக்க வந்த நண்பனின் அம்மா நண்பனை காலை சிற்றுண்டிக்கு கூப்பிட்டார், வழக்கம்போல நண்பர்களையும். நண்பர்கள் மறுத்து... மீண்டும் மாலை சந்திப்பதாக கூறி அவர் அவர் இல்லம் சென்றனர்.

வீட்டில் இட்டிலியுடன் அம்மா கடிதத்தையும் கொடுத்தார்... இதை பார் ஏதோ அரசாங்க கடிதம் போலிருக்கிறது என்று. உறையின் முகப்பை பார்த்தவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி... ”எய்ம் ஹை”, இந்திய விமானப் படையின் தாரக மந்திரத்துடன் வந்திருந்தது அந்த கடிதம்.

விவசாய குடும்பத்தில் பிறந்து அறிவியல் முதுகலை பட்டம் பெற்ற அவனுக்கு, ஊதியத்துடன் முனைவர் படிப்பும்பெற வாய்ப்புடனுள்ள ஒரு வேலைவாய்ப்பிற்க்கான அழைப்பானை அது. ஒரு வாரம் மைசூர் இந்திய விமான பயிற்ச்சி மையத்தில் உடல் மற்றும் அறிவு சோதனை, தேர்ச்சி பெற்றால் ஐந்தாம் நாள் நேர்முக தேர்வு என்றும், சென்று வர செலவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று கூறியது கடிதம்.

முதல் நாள் இரவு தொடர்வண்டி பயணம், மைசூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல இந்திய விமானப்படைக்கு சொந்தமான லாரி வந்திருந்தது. மையத்தில் அழைப்பானை சரிபார்க்கப் பட்டு பயிற்சி சீருடைகள் மற்றும் தேர்வு அட்டவணை வழங்கப்பட்டது.

முதல் நாள் “டெஸ்ட் ஆஃப் ரீசனிங்”, முக்கோணங்கள், சதுரங்கள் போன்ற வடிவங்களின் வரிசை பற்றியும், எண்களின் தொடரமைப்பு பற்றியுமான சோதனை. நெல்லை பார்த்து இது ஐ.ஆர்.எட்டு, டி.கே.எம்.ஒன்பது என்று சொல்லும் ஸ்லம்டாக் விவாசாயிக்கு இது ஒரு பெரிய சோதனையாக இல்லை, மிகச் சுலபமாக கையாண்டான்.

இரண்டாம் நாள் “டெஸ்ட் ஆன் பிஸிகல் பிஃட்னஸ்”, ஓடுதல், தாண்டுதல், கயறு ஏறுதல், வளையத்தில் புகுந்து வருதல் போன்ற சோதனை. வைக்கோல் பிரியை மாங்காய் மரத்தில் கட்டி ஏறிய அனுபவம், கோடை எள் சாகுபடியின் போது கட்டி முட்டியில் ஆடுகளை விரட்டி ஓடிய அனுபவம், வேலிகளின் இடுக்கில் புகுந்து வாழையை அழித்த பன்றிகளை விரட்டிய அனுபவம்... இன்றும் சோதனைகள் சுலபமாக.

மூன்றாம் நாள் “திட்டமிடல், குழு வழி நடத்துதல் மற்றும் குழு ஆளுமை” பற்றிய சோதனை... குறிப்பாக இக்கட்டாண கால கட்டத்தில் ஒருவரின் செயல்பாடு பற்றி கண்டறிய. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை கையில் உள்ள கயிறு மற்றும் மரப் பலகை கொண்டு கரையேற்ற வேண்டும். காவிரிப் படுகையில் வெள்ளத்தில் அறுவடை செய்தவன், மிதக்கும் வெள்ளத்தில் வாழை மரங்களை மிதவையாக்கி, அதன் மீது நெற்கதிர்களை சேர்த்துக்கட்டி களம் சேர்த்த அனுபவம் கை கொடுத்தது… ஸ்லம்டாக் விவசாயிக்கு இன்றும் வெற்றி.

நான்காம் நாள் காலை, முதல் மூன்று நாட்களுக்கான மதிப்பு வெளியீடு, தேர்வு பெற்றவர்களுக்கான “சோசியல் கேதரிங்” - சாப்பட்டு மேசை மற்றும் பழகுதல் பற்றிய சோதனை மற்றும் திறனாய்வு. வங்கி கடன்பெற கூட்டுறவு சங்க அலுவலர் வரும்வரை அருகில் உள்ள நூலகத்தில் அமர்ந்து படித்தன் பயன் இன்றும் கை கொடுத்தது. தெரிவுபெற்ற பத்து பேரில் மூன்றாம் இடத்தில் ஸ்லாம்டாக் விவிசாயி.

ஐந்தாம் நாள், விமான படை உயர் நிலை அதிகாரிகளுடன், கழுத்தில் தொங்கும் கோவணத்துடன் (டை), நேர்முக தேர்வு. ஒரு அதிகாரி அவன் தகுதி மற்றும் மதிப்பீடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்தவர் அவன் பின்புலம் என்ன என்று வினவினார்... (ஸ்லம்டாக்) விவசாயம் என்று பெருமையுடன் சொன்னான். இறுதி ஆனை இல்லம் அனுப்பப்படும் என்ற வாசகத்துடன் விடைபெற்றான்... சேற்றில் செந்தாமரை இன்றுவரை முளைக்கவில்லை.

இன்றும் அவன் “எய்ம் ஹை” என்ற தாரக மந்திரம் விவசாயத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உ(ழ)ண்று வாழ்கிறான், ஆனால் வறண்டு போன காவிரியும், காலம் தவிர்த்து பெய்யும் வானமும் இன்றும் அவனுக்கு சோதனை மேல் சோதனையாய்... ”உன் எய்ம் பொய்” என சாதித்துக்கொண்டு இருக்கின்றன.

3 + 5 + 6 + 7 = 19

என்ன ஏதோ புதுசா (தப்பு) கணக்கு சொல்லிகொடுக்கப் போரேன்னு நினைச்சிங்களா? இல்லை... நான் அவன் இல்லை.

தலைப்பில் உள்ளது எல்லாம் ஜப்பான் நாட்டில், வாகன (கார்) உற்பத்தியில் முதன்மை நிறுவனமான, மிகத்திறன் வாய்ந்த, தரத்திற்க்கு பெயர்பெற்ற டொயோட்டா நிறுவனத்தின் இன்றைய அமெரிக்க கணக்கு.

உற்பத்தி துறையில் ஜப்பானியர் எட்டிய உயரம் மிகப் பெரியது... காரணம் தரக்கட்டுப்பாடு. அதை அடைய அவர்கள் பயன்படுத்திய வாய்ப்பாடு 3எம், 5எஸ், 6சிக்மா, 7டபியு எனப்படும் உற்பத்தி திறன் தரக்கோட்பாடுகள்.

உண்மைதான், சென்ற வாரம் வரை அமெரிக்காவில் விற்க்கப்பட்ட டொயோட்டா வாகனங்களில் 80% சதவிகித வாகனகள் இன்னும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்ற பெருமையோடு.

இன்று, எங்கோ ஏற்ப்பட்ட ஒரு சிறு தவறு 19 உயிர்களை பலிகொண்டுவிட காரணமாகிவிட்டது. காரணம் கண்டுபிடிக்கப்பட்டு (விசையுந்து பலகை) அதை சரிசெய்து கொடுக்க ஆவணம் செய்யப்பட்டும், அமெரிக்க வாகன சந்தையில் முதன்மை நிலமையை இழக்கும் தருவாயில் நிலமை உள்ளது.

3 + 5 + 6 + 7 = 19? இப்போதைக்கு கணக்க சரி பண்ண ஒரேவழிதான். டொயோட்டாவுக்கு (20)10-ல 7 1/2 (ஏழரை) = 19

மொழி படத்துல பிரகாஷ்ராஜ் சொல்லுவாரே... தாத்தா தினம் வெள்ள பூண்டு சாப்பிட்டு திடமா இருந்தார். ஒரு நால் மழைல நனைந்து ஒரு தும்மல் போட்டார், பொட்டுன்னு போயிட்டார். அவர அந்த வெள்ளப்பூண்டால் கூட காப்பாத்த முடியலன்னு. டொயோட்டாவுக்கு இன்று அதே நிலமை... கெய்ஸானால கூட காப்பாத்த முடியல.

என்ன செய்யமுடியும் 3,5,6,7 எல்லாத்தையும் விட ஏழரை பெரியதால்ல இருக்கு,

அமெரிக்காவும் பேச்சு சுதந்திரமும்

நான் தலைப்பை பற்றி பெரிதாக அல்லது புதிதாக ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை. அது உலகமறிந்த விசயம். அமெரிக்காவின் முதல் குடிமகனை நீங்கள் அவர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் முன்பு நின்று திட்டலாம். அடியாலுடன் ஆட்டோ வராது.

நான் சொல்ல வந்தது இப்போது என்.பி.சி தொலைகாட்சியில் நடக்கும் "டாக் ஷோ"-வின் பேச்சு சுதந்திரம். இரவு பத்து மணிக்கு மேல் நடைபெறும் "கேளிக்கை பேச்சு" நிகழ்ச்சிகளில் ஜே லெனோ மற்றும் கேனன் ஓ பிரையன் என்பவரின் நிகழ்ச்சிகள் பிரபலமான ஒன்று. நிகழ்ச்சியின் தரவரிசை அது இது என்று கேனன் ஓ பிரையன் நிகழ்ச்சி ஒரு வழியாக இந்த வாரத்துடன் முடிவடைகிறது.

இது நிச்சயம் மற்ற போட்டியாளர்களான பாஃக்ஸ் & சி.பி.எஸ்-க்கு மகிழ்ச்சி. என்.பி.சி-யையும் டாக் ஷோ நடத்துவர்களையும் விட்டு கிழி கிழி என்று கிழிக்கிறார்கள். நம்ம ஊருல நடக்கிற அதே கூத்துதான் (கலக்குறதுக்கு கரண்டி போதும், அசத்துரதுக்கு ஆள் வேணும்னு நக்கலடிக்கிற மாதிரி).

தான் வெளியேற்றப்படப்போவது உறுதியானதும் கேனன் ஓ பிரையன் அடிச்ச கூத்துதான் நான் குறிப்பிட வந்த விசயம். அமெரிக்காவின் பேச்சு சுதந்திரத்தின் தற்போதைய உச்சத்தை தொட்ட விசயம். கே.ஓ.பி தன் நிகழ்ச்சியில் என்.பி.சி பற்றியும், அதன் நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் பற்றியும் போட்ட போடு இருக்கே... இங்கு பதிவில் சொல்ல முடியா வார்த்தைகள். உதாரணத்திற்க்கு. என்.பி.சி என்றால்... நத்திங்க் பட் கு...( நீங்களே போட்டுகோங்க, தமிழ்ல ரைமிங்கா வரும்)-ன்னு சொன்னார். இவ்வளவுக்கும் என்.பி.சி அவருக்கு கொடுக்கும் தொகை (குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னாள் நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள) 45 மில்லியன் அமெரிக்க டாலர்.

நம்ம ஊர நினைச்சி பார்த்தேன். ன் டி.வி-ல ஹோஸ்ட் பண்ணும் போது லா நிதிய சும்மா பேர மட்டும் மாத்தி காலாவதி-ன்னு சொல்ல முடியுமா? ஹோஸ்ட் அப்புறம் பேஸ்ட் ஆயிடுவாரு.

கே.ஓ.பி முதல் நாள் கெட்ட வார்த்தைல பேசினார். உடனே இரண்டாம் நாள் வந்து என்னை என்.பி.சி வக்கீல் பேசகூடாதுன்னு சொல்லிட்டார் அதனால நான் பாடப்போரேன்னு கெட்ட வார்த்தைல பாடுனார். மூன்றாம் நாள் வந்து வடை போச்சே...பேசவும் பாடவும் கூடாதாம் என்ன பண்ணுரது... சரி ஆங்கிலத்துல பேச பாடகூடாது... ஆனா நான் ஸ்பேனிஸ்ல திட்டுவனேன்னு மனுசன் திட்ட ஆரம்பிச்சுட்டார் (ஆங்கில சப் டைடிலோட).

சொந்த காசுல சூனியம் வெச்சுகிறது எப்படின்னு என்.பி.சிய பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். நாற்பத்து ஐந்து மில்லியன கொடுத்து நாக்கை பிடிங்கி கொள்ளவது மாதிரி நாளுக்கு நாள் நாலு கேள்வியவேற கேட்டுக்க வேண்டியதாகிவிட்டது.

கேனன் ஓ பிரையன் நிகழ்சிகளைகாண இங்கே சொடுக்குங்கள்...

இஷா - இரண்டாம் சுற்று வாக்குப் பதிவு

அன்பர்களே... இது ஒரு நல்ல காரியத்திற்க்காண நிதி திரட்டும் முயற்ச்சி. உங்களால் ஒரு ஓட்டு...
நண்பர்களால் ஒரு ஓட்டு...
சேஸ் வங்கி கொடுக்கபோகுது நோட்டு...


Vote For Isha
and Spread the Word!!!
Round 2 of Voting for Chase Community program has started.

You can now vote for Isha on Facebook until January 22nd. But don't wait!
Vote NOW then inform your family and friends about this opportunity to make a difference for thousands of people in Rural India and America.

VOTE FOR ISHA NOW!

http://www.ishafoundation.org/mailmarketer/link.php?M=53125&N=86&L=192&F=H

For More Information Visit
www.ishafoundation.org/vote

"How deeply you touch another life
is how rich your life is" - Sadhguru

பொங்கலோ பொங்கல்

இன்று அந்த நாள் ஞாபகம்... முன் வாசலில் பரங்கி பூவுடன் தெருவடைத்து வண்ணக் கோலங்கள். பின் வாசலில் சாணத்தில் பாத்தி கட்டி மங்கள நீர் விட்டு அதில் மிதக்கும் வெள்ளைத் தும்பை பூ...

மஞ்சளுடன் வெள்ளை... மனது போகும் கொள்ளை.

உழவர்களை கொண்டாடி, பெரியோரிடம் ஆசி பெற்று, இன்பமாய் சுற்றித் திரிந்த அந்த இளமை காலம்...

பரங்கி

கோலத்தின் நடுவில் பரங்கி
நின்றேன் தெருவில் கிறங்கி
நினைத்தேன் மனதில் வருந்தி
மறந்தேன் இரவில் உறங்கி.

தும்பை

மாட்டுக் கொட்டிலில் தும்பை
பண்பாட்டை காட்டினால் அன்னை
பதிலுக்கு காட்டினோம் அன்பை

உழவர்

அன்று
உண்ண உணவு பயிரிட உழவர்
இன்று
எண்ண எலும்பு தெரிந்திட கிழவர்
நாளை
உன்னை என்னை மறந்திட இளையர்.

இன்று போல் என்றும் மங்களம் பொங்க
இனிய பொங்கலோ பொங்கல்.

பண்பாடு...

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கலைஞ்சர் தொலைகாட்சியில் ஒரு புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்ச்சியில் ஒரு பேராசிரியர் அவர் மாணவர் எழுதிய கவிதையாய் இதை கூறினார்.

பல்லவனில் இடிபாடு
பக்கத்தில் தடிமாடு
பட்டணத்தில் பண்பாடு
படுகின்றது படாதபாடு.

எனக்கு உடன் நினைவுக்கு வந்தது பதிவர்களின் பண்பாடு. அழகிய ஈரோடு நிகழ்விற்க்குப்பின் தமிழ்மணத்தில் பெரும் கூப்பாடு. நற்குடியில் ஆரம்பித்து...

பதிவர்களின் பண்பாடு...

பதிவுன்னு மொக்கைய போடு
பெயரில்லாம பின்னூட்டம் போடு

மீள் பதிவா போட்டதையே போடு
மீத பஃர்ஸ்டுன்னு அட்டெண்டன்ச போடு

படிச்சி பிடிச்சா ஓட்டப்போடு
பதிவு பிடிக்காட்டி ஓடிப்போய்டு

பாஃளோயர் இருந்தா காட்டு நீ வித்த
சிங்கிளா இருந்தா மவனே நீ செத்த

தொழிலல்ல சோசியம்
ஆரம்பத்தில் ஓசியாம்
நெருங்கினால் காசியாம்

ஒரு பதிவு
ஒருவருக்கு சந்தனம்
ஒருவருக்கு சாணி

ஒரு பதிவு
ஒருவருக்கு பழுது
ஒருவருக்கு பாம்பு

பதிவு சந்தனமோ சாணியோ...
சந்தனமெனில் முகறப் பழகு
சாணியெனில் ஒதுங்கப் பழகு

பதிவு பழுதோ பாம்போ...
பழுதெனில் பற்றப் பழகு
பாம்பெனில் தாண்டப் பழகு

ரௌதிரம் பழகு... ரௌதிரம் செய்னு சொல்லலியே!

சமைத்துப் பார்... சாப்பிட சொல்லலியே!!

களவும் கற்று மற... உன்னை திருட சொல்லியே!!!

படித்த பதிவருக்கு என்ன பண்பாடு?
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு - அழகாண அருமையான குறளை படித்திருக்கிறீர்கள்... அதை செயல்படுத்துவதில் ஏன் இத்தனை முரண்பாடு?

உங்கள் தமிழ் எழுத்து வளரட்டும்!
உங்கள் மண ஓட்டம் உயரட்டும்!!