அரசியல்ல இது சகஜமப்பா









மு.க: ஜாக்கி, அந்தர் பல்டி அடிக்கிறது உங்கள போல ஒருவர நான் பார்த்ததே இல்ல

ஜா: நீங்க அடிக்கிற அரசியல் பல்டிக்கு முன்னாடி நான் சும்மா!!!

அறைஞ்சா சும்மா அதிருதுல்ல

செய்தி: நேற்றைய ஐ.பி.எல் மேட்ச்சில் ஹர்பஜன் ஸ்ரீசாந்த்-தை அறைந்தார்
ஸ்ரீ: ஏண்டா டி.வி-ல சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன் எல்லாம் ரியாலிட்டி ஷோ-வில போடுற மாதிரி சும்மா சண்ட போட்டு நம்மலும் நடிச்சி மீடியாவில இமேஜ பில்டப் பண்ணலாம்னு தான சொன்னேன், இப்படி ஏண்டா கண்ணத்துல அறைஞ்ச?

ஹர்: மவனே... கிரவுண்டுல ஆடாத ஆடாதன்னு எத்தனை தடவ சொன்னேன், கேட்டியா... சான்ஸ் கிடைச்சுது அதான் ரெண்டு போட்டேன்.
ஹர்பஜன்: யோவ்...யோவ்... சொன்ன கேளுங்கய்யா... நான் அவன அறைஞ்சி மூனு நாள் ஆயிடுச்சி... அவன் மூஞ்ச பாருங்க... வரலாறு பட அஜீத் மாதிரி ஆக்ட் குடுக்குறான்...
டேய்... டேய் வேணாண்ட... உன்னால எனக்கு இது வரைக்கும் மூனு கோடி நஷ்டம் ஆயிடுச்சி... மவனே மூஞ்ச நேரா வைய் இல்ல மைக்கால மூக்கு மேல போடுவேன்.



களவும் கற்று மற...

திருட்டு... களவும் கற்று மற... என்று சொல்ல வேண்டுமானல் எளிதாக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை... என் அனுபவம் அப்படி... இன்று வரை மறக்க முடியாமல் நினைத்து கொண்டிருக்கிறேன்.

பின்ன மறக்குமா... என்ன சாதாரண திருட்டா? மத்திய அரசாங்கத்தோட சொத்தல்ல திருடினோம்... ஆமாம் கூட்டு கொள்ளை... என் இளம் வயது பள்ளி தோழனுடன். திருடிய பொருள் ரயில் வண்டியிலிருந்து பல்ப்.

விடுமுறை நாட்களில் மதிய வேளையில் (எங்கள் வீட்டிற்கு அருகில் தான் ரயில் நிலையம், சில கட் சர்வீஸ் ரயில் எங்கள் நிலையத்தில் நீண்ட நேரம் நிற்க்கும்) ரயிலில் ஒழிஞ்சான் பிடிச்சி மற்றும் ஆலமர விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவது வழக்கம். அப்படி விளையாடி கொண்டிருக்கும் போது எங்க குள்ள ஒழிந்து கொண்டிருந்த சயிண்டிஸ்ட் முழித்துக் கொண்டான். பாட்டரி மற்றும் சைக்கிள் டைனமோவில் இருந்து மின்சாரம் தயாரித்து அதை வைத்து பல்ப் எரிய விடுவதற்க்காக இந்த ரயிலின் பல்பை ஏன் உபயோகப்படுத்த கூடாது என்று பேசி... பல்பை சுடுவது என்ற முடிவுக்கு வந்தோம்.

எங்களை கேனையர்கள் என்று நினைக்காதீர்கள். செய்யபோவது திருட்டு, மாட்டினால் என்ன ஆவது என்று யோசித்தால்... சரி போலீஸ் ஸ்டேசன் போவோம்... அங்கு எல்லோரும் தெரிந்தவர்கள்... மாட்டினால் சமாளித்து கொள்ளலாம் என்று முடிவு செய்து ரயிலின் கழிவரையில் உள்ள பல்பை சுட்டு விட்டோம்... எங்கள் போராத நேரம்... (இததான் அவன் மூஞ்சியே திருட்டு பயல காட்டி குடுத்துடும் என்று சொல்லுவாங்க போல) காங்கி மேன் கூப்பிட்டார்... நாங்கள் திருதிருவென முழிக்க... அவருக்கு சந்தேகம் வலுக்க... பையில் பல்ப் முந்திரி கொட்டை போல் தெரிய... பையில் என்னடா... வெளியில் எடு என்று சொல்ல... மாட்டிக் கொண்டோம்.

அவரும் தெரிந்தவர்தான் திட்டி அனுப்பி விடுவார் என்று நினைத்த எங்களுக்கு பெரிய அதிர்ச்சி... ஸ்டேசன் மாஸ்டரிடம் கொண்டு விட்டு விட்டார்... இந்த பெரிய இடத்து பிள்ளைகள் பண்ணுகிற கூத்தை பாருங்கள் என்று. அன்று எங்களுக்கு தெரிந்தவர் இல்லை... இவர் புதியவர்... எங்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டார்... முடிவாக உங்களை மத்திய போலீஸில் (அடி ஆத்தி... மானில அரசு, மத்திய அரசு அப்படீன்னா என்ன என்று தெரிஞ்சிகிட்டோம்ல) ஒப்படைக்க போகிறேன் இல்லை அபராதம் ரூபாய் 20 கட்டு என்று சொல்லி விட்டார். அபராதம் கட்டுவது என்றால் ஒருவன் இங்கு (ஆபீஸ் அரஸ்ட்) இருக்க வேண்டும் ஒருவன் போய் பணம் எடுத்து வரலாம் என்றார். நண்பன் கை விரித்து விட்டன். அப்போது எனக்கு கிடைக்கும் புது ரூபாய் நோட்டுகளை என் ஸ்டாம்ப் கலெக்ஸனுடன் சேர்த்து வைத்திருப்பேன், அதிலிருந்து கொண்டுவந்து கொடுத்து சிறை மீண்டோம்.

இதுல கொடுமை என்னன்னா... இத கேள்வி பட்ட என் அண்ணன் சொன்னான்... டேய் எனக்கு 5 ரூபாய் கொடுத்திருந்தா உங்களுக்கு ரெண்டு பல்ப் கொண்டுவந்து குடுத்திருப்பேன். எனக்கு கொடுக்காம பணத்த பூட்டி பூட்டி வெச்ச பாரு... அதான் இப்படி மாட்டிகிட்ட-ன்னு சொல்லி நக்கல் அடிச்சான்.

கை காசு...2

3. தீப்பெட்டி சட்டம் அடுக்குவது (அப்போது எங்கள் தெருவில் புதிதாக ஒரு தீப்பெட்டி தொழிற்ச்சாலை, குடிசை தொழிலாம்... ஒரு வீட்டில் ஆரம்பித்து இருந்தார்கள்) எங்கள் வீட்டின் சுவற்றின் (பெரிய சுவர்) ஓரம் பெரிய சந்து, அதில் என் தாத்தா (இந்த வலை தளத்தின் கதாநாயகன்) மூன்று சிறிய (சார்பு)வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார், அந்த வீட்டில் குடியிருந்த ஒருவர் அந்த தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்ய சென்றபோது, முதலாளி ரெஃபரன்ஸ் கேட்க, அவர் எங்கள் வீட்டில் குடியிருப்பதாக சொல்ல... எங்கள் வீட்டிலிருந்து யாரவது வந்து சொன்னால் வேலை தருகிறேன் என்று சொல்லி, அவரே என் தாத்தாவை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வந்து விட்டார். அவர் வந்த போது நான் தீபெட்டி தாயாரிப்பதை பார்க்க வேண்டும் என்று கேட்டேன்.

தயாரிப்பை பார்க்க போன எனக்கு சில தகவல்கள் கிடைத்தது... சட்டம் அடுக்குவதை "அவுட் சோர்ஸ்" பண்ணலாம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லு என்றார்கள். சரி என்று சொன்ன நான், எங்கள் வீட்டில் வேலை செய்த மற்றும் குடியிருந்த சிலரிடம் சொன்னேன்... பிரதி உபகாரமாக் எனக்கும் ஒரு உதவி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு...

இங்கு நீங்கள் தீப்பெட்டி தாயாரிப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.வெறும் தீக்குச்சிகளை (இயந்திரத்தால் வெட்ட பட்டது) ஒரு சட்டத்தில் ( நூரு குச்சிகள் பதியுமாரு வரும்பு இட பட்டிருக்கும்) வைத்து, 40/50 சட்டங்களை ஒரு ஃப்ரேமில் கோர்த்து (இது 1 அச்சு) அதை அச்சின் ஒரு பக்கம் சமன் செய்ய (இப்போது மறு பக்கமும் சீராக, குச்சிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி, இருக்கும்) அதை கலந்து வைக்கப்பட்டிருக்கும் கந்தக கலவையில் ஒத்தி எடுப்பார்கள்... தீக்குச்சி ரெடி... பிறகு டப்பாகளில் அடைத்து, ஆயத்தீர்வை லேபிள் ஒட்டி அனுப்புவார்கள்.

நிபந்தனை படி அவர்கள் எனக்கும் சேர்த்து குச்சிகளும் அச்சுகளும் எடுத்து வர வேண்டும், அடுக்கிய அச்சுகளை கொடுத்து விட்டு எனக்கு காசு கொண்டு வந்து கொடுக்க வேண்டும்... எங்கள் வீட்டு மோட்டார் கொட்டகையில் உட்கார்ந்து தீக்குச்சிகளை சட்டத்தில் அடுக்குவேன்... நல்ல பொழுது போக்கு + வருமானம்.

இத்துடன் என் இளம் வயதில் சம்பாதிக்கும் ஆசை முடிந்து... தொழில் அதிபர் ஆவது எப்படின்னு யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

கை காசு...1

கை செலவுக்கு காசு... பாக்கெட் மணி... அட எப்படி வேணும்னாலும் சொல்லலாம்... நாகரீகமா சொல்லனும்னா இளம் வயதில் சம்பாதிப்பது எப்படி? நான் ஒன்னும் இங்க வளரும் வாலிபர்களுக்கு ஏதோ யோசனை சொல்ல வில்லை... நான் அடிச்ச கூத்த உங்க கிட்ட சொல்ல போரேன் அவ்வளவுதான்.

எங்க வீட்டில் இந்த வெளி செலவுக்கு எல்லாம் காசு கொடுக்க மாட்டார்கள், அப்பா இருந்த வரை கையை நீட்டினால் காசு... குறைந்தது 2-லிருந்து 5 ரூபாய் வரை கிடைக்கும், அது பொற்காலம் அது என் 12 வயதோடு முடிந்து விட்டது. அந்த வயதில் கை செலவு என்பது பள்ளிக்கு செல்லும் போது ஏதாவது திண்பண்டம் வாங்குவதற்க்கே... அப்படி ஏதாவது வேண்டும் என்றால் அம்மா அதை வீட்டில் செய்து கொடுத்து விடுவார்கள்... ஹும் வெளியில் வாங்கி சாப்பிடுவது கெட்ட பழக்கமாம்.

சரி சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவு செய்தாகி விட்டது... என்ன வழிகல் இருக்கிறது? நண்பர்களிடம் விசாரித்து பட்டியலிட்டேன். அவை...

1. கரி பொருக்கி விற்பது (எங்க வீட்டிற்கு எதிரில், அருகிலேயே புகைவண்டி நிலையம்) ரயில் வந்து நிற்க்கும் போது ரயில் டிரைவர் எரிந்த சாம்பல் கரியை கீழே தள்ளுவார், அதில் எரியாத கரியும் வந்து விழும், அத கரியை சேகரித்து எடுத்து கொண்டுபோய் கொல்லர் பட்டரையில் கொடுத்தால் காசு தருவார்கள்... அது எல்லோரும் வந்து போகும் பாதை, கரி பொருக்கினேன் என்று வீட்டில் போய் யாராவது சொல்லி விட்டால்... ஊஹும்... இது சரிபட்டு வராது என்று முடிவு செய்து விட்டேன்.

2. மட்டை முடைவது (1 மட்டை முடைந்தால் 5 காசு என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டின் எதிரிலேயே, கூப்பிடும் தொலைவில் ஒரு வீட்டில் கூரைக்கு வேயும் தென்னங்க் கீற்று, தென்னை மட்டை வாங்கி அதை முடைந்து (பின்னி), விற்ப்பார்கள். அவர்கள் எங்கள் வீட்டிற்கு தெரிந்தவர்கள், நான் வந்து கேட்டது அல்லது மட்டை முடைய போவது வீட்டிற்கு சொல்ல கூடாது என்ற அன்பு கட்டளையுடன் அவர்களிடம் அப்பரண்டிஸாக சேர்ந்தேன்... ஒரு மூன்று நாளில் நான் மட்டை பின்ன கற்று கொண்டேன்... தலை கட்டு கட்டுவது தவிர.

ஆரம்பத்தில் கடினமாக இருந்தது, மட்டை நன்றாக மடிக்க வரவேண்டும் என்பதற்க்காக தண்ணீரில் ஊர வைத்து இருப்பார்கள்... அது சற்று துரு நாற்றம் அடித்தது... அதை எல்லாம் சமாளித்து ஒரு மணி நேரத்தில் 10 மட்டை (20 கீற்று) முடைய (பின்ன) தேர்ச்சி பெற்றேன்... விசயம் என் தாத்தாவிற்கு தெரிந்து விட்டது... அவர் என் முதுகில் பின்னி விட்டார்.

(ஒரு துடிப்பான் இளைஞன வளர விடாம என்ன அட்டகாசம் பாருங்க... ஆக அதுவும் போச்சு... ஒரு ஆண்டிற்கு பிறகு... கை காசு...2)

கத்தாழ கண்ணால... பாடல் வரிகள்

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன

(கத்தாழ)

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
கூந்தல் கூரையில் குடிசையை போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு

(கத்தாழ)

கலகலவென ஆடும் லோளாக்கு நீ
பலபலவென பூத்த மேலாக்கு நீ
தல தலவென இருக்கும் பல்லாக்கு நீ
வலவலவென பேசும் புல்லாக்கு நீ
ஐயாவே ஐயாவே அழகிய பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வென்னிலா சொந்தக்காறீங்க

(கத்தாழ)
சையா... சையா... சையாரேய்...

தலுதலுவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கல் வாய் பேசுதே
பலபலவென பற்கல் கண் கூசுதே
பகல் இரவுகல் என்னை பந்தாடுதே
உன்னோட கண் ஜாட இலவச மின்சாரம்
ஆன்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் றீங்காரம்

(கத்தாழ)
(கத்தாழ)

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
கூந்தல் கூரையில் குடிசையை போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு

(கத்தாழ)

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

தொலை தொடர்பு துறையில் குசும்பு குப்புசாமி...

(கு.கு ஓட மொக்கை திறமைய தெரிஞ்சி அவருக்கு Air Tel கம்பெனியில் கஸ்டமர் சப்போர்ட்-ல வேலை குடுத்தாங்க)

கஸ்: என் ஃபோன்ல இருந்து யாருக்காவது ஃபோன் பண்ணுனா ரிங்க் போகுது... ஆனா எதிர் முனைல யாரும் ஃபோன எடுக்க மாடேங்கிராங்க... கேட்ட அவங்களுக்கு என்கிட்ட இருந்து ஃபோனே வரலங்கிறாங்க... ஏதும் என் ஃபோனுல பிரச்சனைய இல்ல உங்க சர்வீஸ்ல பிரச்சனைய?

கு.கு: சார் பிரச்சனை ரெண்டுத்துலயும் இல்ல... நீங்க புரிஞ்சிக்கிட்டதுல தான் பிரச்சனை.

கஸ்: என்னது நான் புரிஞ்சிக்கிட்டதுல தான் பிரச்சனையா?

கு.கு: ஆமாம் சார்... நீங்க யாருக்கு ஃபோன் பண்ணுமோ அவங்க நம்பர டயல் பண்ணிட்டு தகவல காத்துல சொல்லிடுங்க, அதான் 'ஏர் டெல்'... தகவல அவங்க காதுல சொல்லனும்னா எங்க போட்டி கம்பெனியான Ear Tel-லுல சர்வீஸ் எடுத்துக்கோங்க.

(கு.கு Ear Tel கம்பெனிய ரெக்கமண்ட் பண்ணுனதால அவர VOIP செக்ஸன் கஸ்டமர் சப்போர்ட்-க்கு அனுப்பிடுறாங்க)

கஸ்: எங்க ஃபோன்ல இருந்து யாருக்காவது ஃபோன் பண்ணுனா அவங்க பேசுரது எங்களுக்கு கேட்குது... ஆனா நாங்க பேசுரது அவங்களுக்கு கேட்கலையாம்... என்னய்யா சர்வீஸ் பண்ணுறீங்க?

கு.கு: சார் பொறுமையா பேசுங்க, சத்தமா பேசி பி.பி ஏறிடப் போகுது...

கஸ்: ஓஹோ... முன்ன எல்லாம் அதிக நேரம் பேசினாத்தான் ஃபோன் பில் ஏறும்... இப்ப சத்தம் போட்டு பேசினாலே ஏறுமா?

கு.கு: சாரி சார்... நீங்க தவறா புரிஞ்சிகிட்டீங்க... நான் சொன்னது உங்க பிளட் பிரஸர... ஃபோன் பில்ல இல்ல. நீங்க எங்களோடதுல என்ன ஃபோன் சர்வீஸ் உபயோகிக்கிறீங்க?

கஸ்: இப்போ என்னமோ ஒரு ஐ.பி-னு அதான் VOIP போன் வெச்சுருக்கோம்

கு.கு: சார் VOIP-ன்னா (V)வாயஸ் (O)ஒன்லி (I)இந்த (P)பக்கம்... ஒங்க ஃபோன் சரியாத்தான் வேலை செய்யுது.

(கு.கு-வோட கஸ்டமர் சப்போர்ட் திறமை தெரிஞ்சி அவருக்கு BSNL-ல வேலை குடுக்குறாங்க)

கஸ்: சார் என்ன அனியாயம் இது பேசாத ஃபோனுக்கு பில்லு அனுப்பியிருக்கீங்க

கு.கு: நியாயமா அனியாயமான்னு நாங்க சொல்லுறோம் சார்... உங்க பிரச்சனை என்னன்னு முதல்ல சொல்லுங்க

கஸ்: நான் ரிங்க் பண்ணுனேன்... ரிங்க் போச்சு... ஆனா நான் பேசுனது அவங்களுக்கோ இல்ல அவங்க பேசுனது எனக்கோ கேட்கல... ஆனா பேசுனதா பில்லு மட்டும் வந்துருக்கு

கு.கு: சார் என் வேலைய நீங்க சுலபமாக்கீட்டீங்க நீங்க, நீங்க என்ன சொன்னீங்க " நான் பேசுனது அவங்களுக்கோ இல்ல அவங்க பேசுனது எனக்கோ கேட்கல" அதுதான் எங்க சர்வீஸே... (B)oth (S)ide (N)ot (L)istening... இப்பல்லாம் இன்கமிங்க் ஃபிரீ என்பதால ஒருத்தர் பேசுரத அடுத்தவங்க காதுல வாங்குறதே இல்ல... கஸ்டமரோட கஸ்டம் புரிஞ்ச நாங்க கூடுதல் சேவையா ரெண்டு பக்கமும் கேட்காம பண்ணிட்டோம்.

மூன்றாம் உலகப் போர்...

தாகம் எடுத்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத போது தவிர்க்க முடியாமல் ஏற்படப் போகிற யுத்தம் - மூன்றாம் உலகப் போர் என்று முன்னுறைத்து இருக்கிறார்கள்.

அதற்கு முன்னோட்ட்டம் பார்க்கின்றார்கள் இந்தியாவை சார்ந்த மூன்று மானிலத்தினர்... தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் தமிழகத்திற்க்கு தண்ணீர் தருவதில் தார்மீகத்தை தவித்து தலையில் தட்டுகின்றனர்.

காரணம் ஆந்திரா, கர்னாடகா மற்றும் கேரள மானில அரசியல் வாதிகளின் நாகரீகமற்ற மூன்றாம் தர அரசியல்.

முட்டாள்களே, தமிழனை வைத்து மூன்றாம் உலக போருக்கு முன்னோட்டம் பார்க்காதீர்கள். தமிழர்கள் தன்மானத்துடன் தணிந்த மனமும் உடையவர்கள்.

தண்ணீருக்காக உலகத்தை சென்னீர் சிந்த வைக்க மாட்டோம்... சிந்தித்து செயல்படுவோம்