போட மறந்த பதிவு...

இயக்குனர் சேரன் சொல்ல மறந்த கதை-க்கு பின் ஏதும் மிகப் பெரிய வெற்றி படங்கள் அமையாததற்க்கு காரணம் தான் வைத்த படத்தின் பெயர் என்று நினைத்து சில பெரிய மனிதார்களை தன் அடுத்த படத்திற்க்கு நல்லதொரு பெயர் வைத்து தருமாறு கேட்க... அவர்கள் பரிந்துறைத்த பெயர்கள்

க.மு.க: (என்னை வந்து) பார்க்க மறந்த நடிகை

மருத்துவர் ராமதாஸ்: ( நெடுஞ்ச் சாலைகளில்) வெட்ட மறந்த மரம்

செ.ஜெ: (ஆட்சியில் இருந்தபோது) நீக்க மறந்த அமைச்சர்
சசி: (அக்கா ஆசியுடன் வளைக்க) வாங்க மறந்த இடம்

வை.கோ: (கொள்கையை மட்டுமா?) என்னையே மறந்த நான்

சு.சா: (மன்மோகன் தாடி போச்சே) வைக்க மறந்த பார்ட்டி

அழகிரி: (அமைச்சர் ஆனதால்) அனுப்ப மறந்த ஆட்டோ

ஸ்டாலின்: ( நான் மட்டுமா?) நாற்காலி மறந்த நாலுபேர்

வைரமுத்து:(பொய்யில்லாம எப்படி) எழுத மறந்த கவிதை

ஆசிரியர்: (அட்டை டு அட்டை) எடுக்க மறந்த பாடம்

மாணவன்: (அட்டு முதல் அழகி வரை) சொல்ல மறந்த காதல்

நீங்களும் சொல்லலாம்ல...

யார் கடவுள்?

யார் நம் பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்களோ அவுங்கதான் கடவுள். பல சமயம் அது நம் நண்பர்களாகவே இருக்கும். அடிக்கடி சொல்லி இருப்போம்... என்ன செய்வது என்று அறியாது விழித்துக்கொண்டிருந்தேன்... நல்ல வேளை கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினாய் என்று. சில சமயம் அது நம் வலி/துயர் தீர்க்கும் மருத்துவராக கூட இருக்கலாம். டாக்டர்... பிழைப்பேனா இல்லை இறப்பேனா என்று கிடந்தேன்... கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள் என்று சொல்லுவோம்.

மேலே சொன்ன பல சமயம் மற்றும் சில சமயம்-ல எந்த சமயத்துல யார் கடவுள்? இந்து சமயத்துல பல கடவுள், கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய சமயத்தில் சில கடவுள் அல்லது தேவ தூதர்கள்... அவர்களும் கடவுள் தான்.

இந்து மதத்தில் ஏன் பல கடவுள்? அது தேவையா?

நாம் அனைவரும்/ஒவ்வொருவரும் ஒரு நிறுவாகத்தின்(பிரபஞ்ஜத்தின்) ஒரு அங்கம். உதாரணத்திற்க்கு ஒரு சிறிய அளவில் ஒரு பள்ளி / கல்லூரி / அரசாங்கம்-ன்னு எடுத்துக்கோங்க.... அதை நிறுவகிக்க ஒரு தலைமை, உப தலைமைகள், வேறுபட்ட துறைகள் என்று... திறம்பட செயல்பட.

இந்து மத கடவுள்களும் அப்படித்தான் தோன்றி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அக்னி பகவான், வாயு பகவான், வருண பகவான்... என்று பஞ்ச பூதங்களுக்கு கடவுள். பின்னர் துறைகள்... பிறப்புக்கு பிரம்மா, கல்வியா அதற்க்கு சரஸ்வதி, பொருளாதாரமா அதற்கு லட்சுமி... இறப்புக்கு எமதருமன்.

சரி எமதருமன் தவறு செய்து விட்டால்? கணக்கை சரி செய்து காளனை வெள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்... என்றும் இந்த கடவுள்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது...

சரி கடவுள்கள் சரியாத்தான் இருக்காங்க... தலைமை யாரு? அதுவம் சரியாகவே சொல்லப்பட்டு இருக்கிறது... கடவுள்கள் (காட்-GOD) பல... ஆனால் தலைமை (லார்ட்-LORD) ஒருவரே... அவர் கிருஷ்ண பரமாத்மா.

டிக்கெட்... டிக்கெட்... சார் டிக்கெட்

நாம் மரணத்தை குறிப்பிடும் போது அவர் சிவலோகத்திற்க்கு அல்லது பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கிவிட்டார் என்று சொல்லுவோம், அந்த சொல் எந்த அளவிற்க்கு நம் நடைமுறை வாழ்விற்க்கு பொருந்தும்?

உதாரணத்திற்க்கு நாமும் நம் நண்பரும் ஒரு பேருந்தில் பயணம் செல்லுவதாக வைத்துக்கொள்வோம், நீங்கள் சராசரி சாரீரம் கொண்ட நபர், உங்கள் நண்பரோ இரட்டை நாடி, இருப்பினும் அவருக்காக நாம் இரண்டு டிக்கெட் எடுக்க வேண்டாம், எந்த ஒரு பயணத்திலும்... அது தொடர்வண்டியோ அல்லது விமான பயணமோ... எதுவாயினும் பயணச்சீட்டு உருவத்தை பொருத்து வழங்கப்படுவது அல்ல. (பிறகு?....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

அப்படி பயணிக்கும் போது நமக்கு மரணம் சம்பவிக்கிறது என வைத்துக்கொள்வோம்.... பிறகு என்ன நடக்கும்?

நடத்துனர் சொல்வார்... அதை கீழே இறக்கு என்று.

நம் நண்பர் சொல்லுவார்... சார் அவர் டிக்கெட் எடுத்திருக்கிறார் எதுக்கு பாதியில் இறங்க வேண்டும் என்று?

யோவ்... வேணும்னா லக்கேஜா மேல போட்டு கொண்டுவா, இங்க சீட்டுல உட்கார்ந்து வரமுடியாது... சொன்னாக்கேளு

சார்... இது என்ன அநியாயம்? டிக்கெட் எடுத்தவர் இதோ உட்கார்ந்து இருக்கிறார், அவர் பையில் அவர் வாங்கிய பயணச்சீட்டு இருக்கிறது, பிறகு ஏன் லக்கேஜுல போடனும்? டிக்கெட் இவருக்குதானே கொடுத்தீங்க?

யோவ்... டிக்கெட் வாங்கனப்ப இவருக்குள்ள இருந்த அவரு இப்ப இல்லைய்யா?

யாரு இப்ப இல்ல? இவருதான் டிக்கெட் வாங்கினாரு, இவருக்குள்ள அவரு இருந்தாரா? அவர நான் பார்க்கலையே... நீங்க பார்த்தீங்களா? அப்ப அவருகிட்ட கொடுத்த டிக்கெட் இவரு பையில எப்படி வந்தது?

அய்யா, உடல் என்பது பருப்பொருள்... உயிர் என்பது பரம்பொருள்... அந்த பரம-ஆத்மா பரமாத்தாவை பார்க்க பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கி இருக்கிறது. இந்த டிக்கெட் இனி செல்லாது... இனி புதுசா ஒரு லக்கேஜ் டிக்கெட் வாங்கு.

(பகவத்கீதை சொற்பொழிவில் நான் கேட்டது... இறப்பு என்பது உடலுக்கு... உயிருக்கு அல்ல... சற்றே நகைச்சுவையுடன் இங்கு. ஒருவரின் பிறப்பை வைத்தோ, உருவத்தை வைத்தோ மதிப்பது தவறு... எல்லா உயிரும்/டிக்கெட்டும் ஒன்றே)

இன்பமான வாழ்க்கை...

இன்பமான வாழ்க்கை – இந்தியாவிலா? இல்லை அமெரிக்காவிலா?
(அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம் - 2009 தீபாவளி பட்டிமன்றம்)

நான் இந்தியாவில் என்று பேசியது...

இந்த அரங்கில் குழுமியிருக்கும் அனைத்து தமிழ் தமிழ் ரசிகப்பெருமக்களுக்கும், பட்டிமன்ற தலைவி திருமதி உமயாள் முத்து அவர்களுக்கும், இம்மேடையில் அமர்ந்திருக்கும் சக நண்பர்களுக்கும் என் வணக்கங்களும் தீபத்திரு நாள் வாழ்த்துக்களும்.

இன்பம், சந்தோசம் அல்லது மகிழ்ச்சி அமெரிக்காவில் இருக்கின்றது… ஏன் ஆப்பிரிக்காவில் இருக்கின்றது, ஐரோப்பாவில் இருக்கின்றது, அதை யாரும் மறுக்க முடியாது, அதானால்தான் நாம் எல்லோரும் பிறந்த மண்ணை, தாய் நாட்டை விட்டு இங்கு வந்திருக்கிறோம். சந்தோசம் என்பது ஒரு சத்தம் மாதிரி, அது அழுகின்ற குழந்தையின் அழுகையில் இருக்கிறது, நாம் விடுற குறட்டைல இருக்கிறது, கொத்து பரோட்டா போடுகிற கல்லில் இருக்கிறது, அதையா நாம் விரும்புகின்றோம்? இல்லையே... அதே சத்தம் இசையா ஒரு குழந்தையின் சிரிப்பில், இளையராஜாவின் பாடலில், குயிலின் கூவலில்... என்று இதமாக இருக்கிறது... நாம் அதைத்தான் விரும்புகிறோம். சத்தமாக இருந்தாலும் அது இசை... எதிரணியினர் பேசிய அமெரிக்காவில் சந்தோசம் என்கிற வாதம் வெறும் சத்தம். அது இசையா? இல்லை அது இம்சை.

எதிரணியில் பேசிய சகோதரி ஜெயா பேசிய போது பலவற்றை சொன்னாங்க, சுருக்கமா நாங்க நல்லாதான் நடக்கிறோம் என்கிறார், அவருக்கு பின் பேசிய நண்பர் தங்கமணி நடக்குரோம்ல்ல...என்கிறார். நானும், சகோதரி ராஜியும் என்ன சொல்கிறோம், அதே நடைய... சிங்கம் மாதிரி ராஜ நடையா நடங்கன்னு சொல்லுறோம், இல்ல நாங்க நண்டு மாதிரிதான் நடப்போம்கிறீங்க, மக்களே உங்களுக்கே தெரியும் நண்டு நேராக பார்க்கும் ஆனா பக்கவாட்டுலதான் நடக்கும், அதேமாதிரிதான் அமெரிக்க சந்தோசமும்.

நான் உங்களுக்கு என் அணியின் சார்பாக இரண்டு இன்பங்களை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஒன்று குழந்தை பருவ சந்தோசம், மற்றொன்று வாலிப பருவ சந்தோசம்... அமெரிக்காவில் 50 வயசு ஆனாலும் நாம யூத்து... யூத்து... யூத்து.

அமெரிக்க பெற்றோர்கள் எவ்வளவு பேர் குழந்தையை இடுப்பிலோ இல்லை தோளிலோ தூக்குறோம்? பிள்ளை ஸ்டோலர்ல வசதியா இருக்கான்னு சொல்லி ஷாப்பிங் போகும் போது அப்பா தள்ளுரார், வரும் போது அம்மா தள்ளுராங்க... அப்படி வளர்ந்த குழந்தை பின்னாலில் பெற்றோரை முதியோர் இல்லாத்தில் தள்ளுகிறது. உண்மயில் அந்த குழந்தை பெல்டை பிடிச்சி பிராண்டி அப்படியே தாவி தவிச்சிகிட்டு வரும். அது இன்பமா? இந்தியாவில் அந்த அம்மா... மகனே நான் பார்க்கின்ற உலகை நீயும் பார் என்று இடுப்பிலே தூக்கி அலைவால்... அப்பா... அம்மாவுக்கு ஒரு படி மேல போய், மகனை தோளில் தூக்கி வைத்து கொண்டு சொல்லுவார்... மகனே... நான் பார்க்காத உலகத்தையும் நீ பார் என்று, அம்மாவின் இடுப்பிலும், அப்பாவின் தோளிலும் உலகத்தை பார்த்த குழந்தை இன்பமா இருந்துச்சா இல்லை ஸ்டோலர்ல தவ்விகிட்டு வந்த குழந்தை இன்பமா இருந்துச்சா?

இப்படி வளந்த குழந்தைங்ககிட்ட ஒரு அழகான பெண்ணை காண்பித்து மூன்று வரிகளில் ஒரு கவிதை எழுதுன்னு சொன்னா... ஸ்டோலர் குழந்தை எழுதுனுது... “கொக்க கோலா” – கவிதையின் தலைப்பு, அட்லாண்டாவில் பிறந்து வளர்ந்த பிள்ளையா இருக்கும் போல… அப்ஜெக்டிவ் டைப்ல படிச்சி படிச்சி அழகான பெண்ணை ஆப்ஜெக்டா பார்க்கிறான்... மூன்று வரி கவிதை...

முப்பதியெட்டு...
இருபத்தி நாலு...
முப்பத்தியெட்டு,


தவறில்லை சந்தோசம்தான் நமக்கு. அம்மா தூக்கி வளர்ந்த பையன் சொன்னான்... “அம்மா” - கவிதையின் தலைப்பு, அம்மா இடுப்புல உட்கார்ந்து வளர்ந்த பையன் சப்ஜெக்ட்டிவா எழுதுனான்...

எர்கனாமிக் ஈஸி ச்சேரில் இல்லை...
எஸ்கிளாஸ் ஏஸி காரில் இல்லை...
உன் இடுப்புக்கு ஈடான இன்பம் –னு,


அடுத்த குறிப்பு... இங்கு அமெரிக்கவில் சந்தோசத்திற்க்கு ஒரு விடுமுறை அல்லது மணமகிழ் இடத்திற்கு செல்லுகிறோம்னு வெச்சுக்கோங்க, உதாரணத்திற்க்கு மூன்று நாள் டிஸ்னிலேண்ட் பயணம்ன்னு வெச்சுக்கோங்க...., ஆகா.. ஓகோன்னு ஒரே அலம்பலா இருக்கும், நாலாம் நாள் வீட்டுக்கு வந்தோன்ன ஒரு நண்பர் கேட்பார்... டிரிப் எல்லாம் எப்படி இருந்ததுன்னு? நாமும் சொல்லுவோம் நல்லா இருந்துங்க... நணபர்... ஓ அப்படியா-ன்னு சொல்றதுக்குள்ள... நாம என்ன சொல்லுவோம்... ஆனா கூட்டம்தான், வரிசைல நின்னு கால் வலிதான் மிச்சம்... பற்று அட்டைய தேய்த்ததுதான் சொச்சம்-ன்னு பல ம்-முவோம்.

அதே ஒரு கோடை விடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு வந்தத சொல்லும் போது... அவங்கள பார்த்தேன், இவங்கள பார்த்தேன், நான் படித்த பள்ளிக்கு போனேன், முக்குல உள்ள கடைக்கு போய் இலந்த அடை சாப்பிடேன், கடலை மிட்டாய் சாப்பிட்டேன், டீ குடிச்சேன்... அந்த இன்பம் பாருங்க இங்க பெட்டி கடை போடுற அளவுக்கு வந்திருக்கு. நீங்க சொல்லும்போதே... உடனே நண்பர் சொல்லுவார்... எங்க ஊர் பேருந்து நிலையத்துல ஒரு லஸ்ஸி போடுவான் பாருங்க-ன்னு அவர் ஆரம்பிப்பார்... இவ்வளவுக்கும் அவர் மூன்று வருசத்துக்கு முன்ன ஊருக்கு போயிட்டு வந்திருப்பார்... அந்த இன்பம் அவர் மனசுல மூன்று வருசமா வாழ்ந்துகிட்டு இருக்கு... அது அவர் அடுத்த முறை இந்தியா சென்று வரும் வரை வாழும். அங்க பாருங்க... ஒரு கோவை நண்பர் இப்பவே நெஞ்ச தடவுகிறார் (அது பழமை இல்லீங்கோ)... கோவை காந்திபுரம் பேருந்து நிலைய லாலா கடை இனிப்பு சாப்பிட்டத நினைத்து சந்தோசம். இங்க உட்கார்ந்திருக்கிற ஜெயாவா, அரங்கிற்க்கு வெளியில் என் மனைவியுடன் பார்த்தேன்... நடுவர் அவர்களே உங்களுக்கே தெரியும் அவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என்று... புடவைதான்.. என் மனைவி சொன்னாங்க... ஜெயா புடவை அருமையாயிக்குன்னு... ம்... ம்... நல்ல இருக்கா, போனமுறை இந்தியா போனப்ப எடுத்துட்டு வந்தேன்னு சொல்லி அப்படி ஒரு மகிழ்ச்சி. சரி ஏதோ மேடைக்காக பேசுகிறேன்னு நினைப்பீங்க...இல்லை. மற்றுமொரு நிகழ்வு... நான் இப்ப சொல்லப்போவது ஒரிரு மாதத்திற்க்குள் நடந்த நிகழ்வு. நான், நம் கேட்ஸ் செயலாளர் திரு.ரவி பழனியப்பன், கூட ஒரு நண்பர்... நான் பேர சொல்ல விரும்பல... தமிழ் கல்வி பயிற்சி முகாம் முடிந்து, மதியம் ஒரு சமுதாய கூட்டம், அருகில் சப்வே-ல சாப்பிட நண்பரின் வேனில் போனோம், வேன்ல பார்த்தா சில பல ஸிப்லாக் பாக்கெட்... பகோடா... ரொட்டி... நண்பர் சொன்னார்... எடுத்து சாப்பிடுங்க... ஊருலேருந்து எடுத்துட்டு வந்தேன்... அருமையா இருக்கும் அப்படின்னார்... சொல்லும்போது அப்படி ஒரு சந்தோசம்... ஆனா நான் அவர் பேர சொல்ல விரும்பல (அவர் எதிரணியில் வாதாடிய தங்கமணி).

ரொம்ப சுருக்கமா சொல்லானும்னா... அமெரிக்க வாழ்க்கையில் சந்தோசம் என்பது (தலையை தொட்டு) இங்க கேட்டு வேளை செய்வது, இந்திய வாழ்க்கையில் சந்தோசம் என்பது (நெஞ்சை தொட்டு)இங்க கேட்டு வேளை செய்வது... இத நான் உங்ளுக்கு சொல்லத் தேவையில்லை... ஏன்னா... நீங்க எல்லோரும் தமிழ் என்கிற அன்பால சேர்ந்த கூட்டம்... இன்பமான வாழ்க்கை இந்தியாவில்-ன்னு உங்க சார்பா நான் சொல்லிட்டேன்... நல்லதொரு தீர்ப்ப அதிரடியா நீதிபதி சொல்லுவாங்க... அதற்கு சரவெடியா உங்கள் கரகோசத்தை தாருங்கள் எனக்கூறி... வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன்... நன்றி...வணக்கம்.

குவாட்டர், ஹாஃப்... புஃல்

இது பழமையின் "அரைலூசு யார்" என்ற "என் கேள்விக்கு என்ன பதில்"?

இலங்கைக்கு சுற்றுலா போன எம்.பி-ங்க எல்லோரும் கால் (குவாட்டர்) லூசு.

ஒரு இந்தியனா, இனப்படுகொலைக்கு காரணமாணவரை நம் பக்கத்து மானிலத்திற்க்கு வர வைத்து நம்மை ஆழம் பார்க்கும் இந்திய அரசு அரை (ஹாஃப்) லூசு.

இது போதாது தமிழ் கடவுள் முருகனையும் தமிழகம் வந்து சேவித்து செல் இல்லையேல் அவர் கோவித்து கொள்வார் என அழைக்க காத்து கிடப்பவர்கள் முழு (புஃல்) லூசு.

அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போடும் நாம் வெறும் "காமெடி பீஸு"

அமெரிக்க பராசக்தி

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி எழுதி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்ட பராசக்தி வசனம் இது.

இந்த ஆண்டின் தீபாவளி மலர் நகைச்சுவையை மையக் கருவாக கொண்டதாலும், அமெரிக்கா வந்த நம்மில் பலர் கடந்து வந்த சில நிகழ்வுகளையும், பலர் சொல்ல நினைத்ததையும் சற்றே நகைச்சுவையுடன் உங்களுக்காக, யார் மனதையும் வருத்தப் படுத்த அல்ல... கற்பனை மட்டுமே.
(தீபாவளி விழா மலருக்காக எழுதியது – இங்கு மீள்பதிவாக )
***

அமெரிக்கா, லேண்ட் ஆஃப் ஆப்போர்ச்சுனிடீஸ்... விசித்திரம் நிறைந்த பல நாட்டவரை உள்ளே விட்டிருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டிருக்கின்றது, ஆனால் இந்த தேசியின் கூவல் விசித்திரமானதும் அல்ல கூவும் நான் புதிய தேசியும் அல்ல.

அமெரிக்க ஆசையிலே... ஒரு சாதாரண தேசியாக ஹெச்-1-ல் வந்தவன்தான் நான், இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதற்க்காக அடிக்கடி எம்ப்ளாயரை மாற்றினேன், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று ஹெச்-1-க்கு விண்ணப்பித்து லாட்டரிக்கு வழிவகுத்தேன், கிரீன் கார்ட் பிராசஸை ரிட்ராகேஸனுக்கு தள்ளினேன் – இப்படி எல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருகிறேன் நான்.

நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள், இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை.

அடிக்கடி எம்ப்ளாயரை மாற்றினேன்... இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதற்க்காக அல்ல, கிளையண்ட்டிடம் 90 டாலர் வாங்கி எனக்கு 30 டாலர் கொடுத்து... நாம் கொடுப்பதைத்தான் வாங்கிகொள்ள வேண்டும் என்று மார்தட்டினார்களே... அந்த எம்ப்ளாயரின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பத்றக்காக.

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று ஹெச்-1-க்கு விண்ணப்பித்து லாட்டரிக்கு வழிவகுத்தேன்... ஏன்? அதனால் இன்னொரு சக தேசிக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கெடுக்க அல்ல, என்றோ ஒரு நாள் என்னுடைய தற்போதைய எம்ப்ளாயரிடம் வேலை போய்... நான் என் சோற்றுக்கு லாட்டரி அடிக்ககூடாது என்பத்றக்காக.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... தேசிகள் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்? நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பலரது குடும்ப நலமும் கலந்து இருக்கிறது. என் வேலையை பற்றி மட்டுமே கவலைப்படாமல்... எல்லா தேசிகளுக்காகவும் கவலைப்பட்டேன், தனக்கு சாப்பிட உணவு கிடைத்தால் ஊரையே கூப்பிடுமே... அந்த காக்கையை போல.

என்னை குற்றவாளி என்பீர்களா? இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். தானே முன்வந்து சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் எம்ப்ளாயர் இல்லை என் வேலையில்... அலுவலக அரசியலில் படாதபாடுபட்டேன் நான்.... தங்கமானவன் என்று யாரும் தட்டிக்கொடுக்கவில்லை என்னை... தத்தாரிகளை தாண்டி வந்திருக்கிறேன் நான்.

கேளுங்கள் என் கதையை, இவன் தேசி இல்லை பரதேசி என்று பரிகாசம் செய்யும்முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... தஞ்சை மாவட்டத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. நன்கு படித்தவரின் தலை எழுத்திற்க்கு நான் மட்டும் விதிவிலக்கா? சிங்கப்பூர் என்னை சீராட்டி வரவேற்றது, தகுதியை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது.

சரி அமெரிக்காவையும் ஒரு முறை பார்த்துவிடலாமே என்று அமெரிக்கா வந்தேன். இன்று லாட்டரி ஹெச்-1-னால் கலகலத்துபோய் இருக்கிறார்களே இந்த மேன்பவர் கம்பெனிகள்... அவர்கள் விரித்த வலையில் விழுந்த ஆயிரக் கணக்காணவர்களில் நானும் ஒருவன்... இண்டர்வியூ நன்றாக செய்தும் ரேட் சரியில்லை என்று பென்ச்ஞில் உட்கார வைக்கப்பட்டேன்... நல்ல ரேட்டிற்க்காக சீனியாரிட்டியை பறிகொடுத்தேன்... மனம் உடைந்தேன்... கடைசியில் கன்சல்டண்ட்டாக மாறினேன்.

காண வந்த அமெரிக்காவை கண்டேன்... அகண்டு விரிந்த மாகாணங்களாய்... ஆம் தறிகெட்ட தட்ப வெட்ப நிலையிலும், நாலு வேறுபட்ட நேரங்களுடனும். தரையிரங்கியா ஊரோ சிகாகோ... அடித்தது குளிர் என்னை சிக்-ஆக்க. தடுமாறிவிட்டது டிராபிகல் வெதரில் வளர்ந்த என் உடம்பு.

கூட்டாளிகளின் தொல்லை... குடிக்க சொன்னார்கள், எனக்கு பிடித்ததோ கல்யாணி... கூட்டாளிகள் ஹாட்டுக்கு அலைந்தார்கள்...கல்யாணிக்காக நான் அலைந்தேன். கண்டுபிடித்தோம் ஒரு கடையை, கல்யாணிக்காக காத்திருந்தனர்... அதில் காளையர் பலர், கண்ணியர் சிலர். கல்யாணியின் டிமாண்டை பார்த்து காசு கூடகேட்டான் அந்த கடைக்காரன்.

சம்பள பாக்கியில் சம்பந்தப்பட்டு லேபர்கோர்ட்டில் பாப்பர் சொல்லி நிற்க்கிறார்களே இந்த இன்க் கம்பெனிகாரர்கள்... பகட்டு வார்த்தையால் பலபேரை பதம் பார்த்தவர்கள்... என்னையும் மயக்க பார்த்தார்கள்... என் நண்பர்கள் தடுத்திருக்காவிடில் நானும் மாட்டியிருப்பேன். அமெரிக்க கம்பெனிகள் காப்பாற்ற வந்தன என்னை... பிரதி உபகாரமாய் டிராவலிங் ஜாப் பண்ணவேண்டும் என்று சொன்னார்கள். அதில் தலையாய பங்கு வகித்த கம்பெனி ஆர்.பி.எம். நாலு நாள் வேலை பார்த்தால் போதும் என்றனர்... ஆனால் அந்த நாலு நாளில் என் நாடி நரம்பையெல்லாம் கயட்டி விட்டான் அவன் கிளையண்ட்.

ஆர்.பி.எம்-ல் வேலை என்ற பெருமை... விட்டுவர மனமில்லை, குடும்பத்தை விட்டு அலையவும் விருப்பம் இல்லை... அதனால் டிராவலிங்கை கைவிட்டேன். விருப்பமான வேலையை விடுவது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... பாரட்-லா படித்தவர்... அவரே தேச சுதந்திரத்திற்க்காக வக்கீல் தொழிலை விட்டு இருக்கிறார்.

வேலை என்னை விரட்டியது... ஆரம்ப ப்ராஜக்ட் ஆர்கன்ஸாசில் என்றான்... அங்கு ஓடினேன்.... பக்கா ப்ராஜக்ட் பாஸ்டனில் என்றான்... அங்கும் ஓடினேன். ஜாப் ரிஸர்ஸன் என்னை பயமுறுத்தியது... ஓடினேன்... ஓடினேன்... அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களுக்கும் ஓடினேன். அந்த ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்... என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் அந்த கிரீன் கார்ட் பிராசஸ் பண்ணும் ஐ.என்.எஸ்... ஈ.ஏ.டி கொடுத்தார்களா? ஈ.ஏ.டி கொடுத்தார்களா படித்த ஹெச்-4 உள்ளவர்களுக்கு?

(ஒருவர் இடைமறித்து: இவர் வேலைக்காகவோ இல்லை கிரீன் கார்டுக்காகவோ கூவ வில்லை... யாரோட ஈ.ஏ.டி-க்காகவோ கூவுகிறார்)

இல்லை... யாரோட ஈ.ஏ.டி-க்காகவோ இல்லை... அதுவும் என் கூவல் தான்... என் மனைவிக்காண கூவல்... பட்ட படிப்பு படித்த மனைவியின் படிப்பை, திறமையை வீணடிக்காமல் துட்டு பார்க்க நினைப்பதில் என்ன தவறு?

தகுதி உடையவர்களை ஈ.ஏ.டி-யை காரணம் காட்டி வீட்டில் உட்கார வைத்தது ஒரு குற்றம், தேசத்திற்க்கு திரும்பி விட்ட தேசிகளை கணக்கில் கொண்டுவராமல் பழைய கேப் கவுண்டை காட்டுவது இன்னொரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார் காரணம்?

ஹெச்-4 அத்தைகளுக்கு ஈ.ஏ.டி கொடுக்காதது யார் குற்றம்? ஹெச்-1-ல் வந்தவனின் குற்றமா? அல்லது ஒருவருக்கே பல ஹெச்-1 தந்த ஐ.என்.எஸ்-ன் குற்றமா?

பணம் பறிக்கும் இன்க் கம்பெனிகளை வளர விட்டது யார் குற்றம்? அமெரிக்கா வந்தால் போதும் என்று வரும் தேசிகளின் குற்றமா? அல்லது கஞ்சமாக பலர் நெஞ்சை மிதிக்கும் வஞ்சகர்களின் குற்றமா?

பிரையாரிட்டி டேட்டை பிண்ணுக்கு தள்ளியது யார் குற்றம்? கோட்டா என்ற பெயரில் அப்ளிகேஸன் ”துட்டை” உயர்த்தி தேசியிடம் ”ஆட்டை”-யை போடும் ஐ.என்.எஸ்-ன் குற்றமா? அல்லது ”துட்டை” வாங்கி கொண்டு பதிலே பேசாமல் தேசியின் நெற்றியில் ”பட்டை”-யை போடும் அட்டர்னியின் குற்றமா?

இந்த குற்றங்கள் திருத்தப்படும் வரை இந்த ஹெச்-1/ஹெச்-4-ன் கூவல்களும் குமுறல்களும் குறையப்போவது இல்லை. இதுதான் நான் இங்கு படித்த பாடம், பட்டறிவு... பரிதாபமான அமெரிக்க அனுபவம்.

கனவு மெய்பட வேண்டும்...

தொலைபேசி...

சுருண்ட அந்த மின் கம்பி (வயர்) தான் அதன் அடையாளம், அடிக்கடி சுருட்டிக் கொள்ளும் அதன் சுருக்கத்தை நீவி விட்டுகொண்டே பேசினால்தான் சிலருக்கு பேசிய நிறைவு கிடைக்கும்... அது கனவாக்கிப்போனது இப்போது. புதிய இணைப்புகளுக்காகவும் மேம்பட்ட சேவைக்கும் என்று மாதம் ஒருமுறை பள்ளம் தோண்டி விழ வைப்பதுடன் விழாக்காலங்களில் எங்கள் சேவை உங்களுக்கு தேவை என அன்பளிப்பு வாங்கியது... அது கனவாக்கிப்போனது இப்போது.


காரணம் கைத்தொலைபேசி... மின்விசிறி...

இதமான காற்று தர உதவும் இறக்கை தான் அதன் அடையாளம். காற்றில் அது வெட்டிவரும் ஓசை கேட்டால்தான் சிலருக்கு தூக்கமே வரும்... அது கனவாக்கிப்போனது இப்போது. இலகுப்பசை (கிரீஸ்) இத்துப்போய் கிறீச் சத்தம் போடுவதோடு மாதம் ஒருமுறை என்மீதுள்ள தூசியை துடை என்று நம்மை வேலை வாங்கியது... அது கனவாக்கிப்போனது இப்போது.

காரணம் புதிய இறக்கையில்லா மின்விசிறி...
அரசியல்...

காரியம் என்றால் வாரியம் வரை நடக்கும்/செய்யும் ஊழல் தான் அதன் அடையாளம். மத்திய அரசு கொடுக்கும் மாநில மானியங்களை மத்திய அமைச்சர் மாமுல் வெட்டாமல் கொடுக்கனும்... அது கனவாக்கிப்போனது இப்போது. இலவசம் கொடுத்து எங்களை இளித்த வாயர்களாக ஆக்காமல் மாதம் ஒருமுறை மாவட்டம் வாரியாக புதிய வேலைவாய்ப்பை உருவக்குவது... அது கனவாக்கிப்போனது இப்போது.
காரணம் பாழாய்போன, பழசாய்போன, பழகிப்போன அரசியல்.

கம்பியில்லா தொலைபேசியை போல்,
இறக்கையில்லா மின்விசிறியை போல்,

சுருட்ட தெரியாத அரசியல்வாதி,
கையில் தூசிபடாத அரசியல்வாதி...

அரசியல்வாதியில்லா அரசு... என் கனவு.

பத்து கோடி படமும்... பத்து நிமிட பதிவும்

இன்றைய அளவில் ஒரு நடுத்தர படம் எடுக்க குறைந்த பட்சம் ஒரு பத்து கோடி தேவைப்படுகிறது.

கதையோ, உதையோ இல்ல சதையோ ஏதோ ஒன்றை நம்பி பல கோடி போட்டு எடுத்த படங்களின் இன்றைய நிலை என்ன?

படம் பார்த்து வந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில்... ஒரு பத்து நிமிட செலவில்... ஒரு பதிவு.

தயாரிப்பாளர்களுக்கு திருட்டு வி.சி.டி/டி.வி.டி தொல்லையோடு இன்றைய பெரும் தொல்லை ப.ப.ப (டம் திவிடும் திவர்) தொல்லை, அவர்களிடும் நக்கலுக்கு இல்லை ஒரு எல்லை.

பாவம் பத்து கோடி போட்டவரை பத்து நிமிடப் பதிவில் தெருக்கோடிக்கு கொண்டுவந்து விடுகிறார்கள்.

கத்திரிக்காய்க்கு கால் முளைத்தால்...

கத்தீரிக்காய்... கத்தீரிக்காய்...
குண்டு கத்தீரிக்காய்...
கண்ணம் ரெண்டும் கிள்ளச் சொல்லும்
காதல் பேரிக்காய்...

இங்கிலாந்து போகும்போது
ஏரோபிளேன் ஏறும்போது
டிக்கெட் ரெண்டு வாங்கச் சொல்லி
நோட்டீஸ் விடும்...

என்று ஒரு நல்ல பாடல், இப்ப கிடைத்த தகவலைப் பார்த்தால், வரும் நாட்களில் அமெரிக்கா இந்தியாவிற்கு நோட்டீஸ் விடும் போல இருக்கு.

செய்திக்கு...

எல்லாம் ஒப்புக்கொள்ளப் பட்டால்... முதலில் விதை இலவசம்னு ஆரம்பித்து... போக போக... கால் முளைத்து அமெரிக்கா சென்ற கத்தரிக்காயை... பேட்டர்ன் ரைட்ஸ் கொடுத்து கூட்டிக்கொண்டு வரப்போகிறோம்.

புதிய கத்தரிக்காய்...சேதி

மரபணு மாற்றப்பெயர்...பி.டி
பயிரிட்டாக் கிடைக்காலாம்... கோடி
சாப்பிட்டால் குறையலாம்... நாடி

இனி வரும் காலத்தில்
நாட்டுக்கத்திரியை தேடனும்... ஓடி


கண்டிருக்கிறார்கள் புதிய... விதை
நிறைய இருக்குமாம்... சதை
நாமெல்லாம் நம்பனுமாம்... அதை

இனி வரும் காலத்தில்
இந்திய வழுதணங்காய் வரலாற்றுக்... கதை


வரும் காலத்தில்...
கத்தரிக்காய் ஒரு பணம்
சுமை கூலி மூன்று பணம்.

உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

நான் அமெரிக்கா வந்த புதிதில் நண்பர்களுடன் பொருட்கள் வாங்க கடைகளுக்கு போகும் போது நான் வாங்கிய பொருட்களுக்கான ரசீதை பொருட்கள் வாரியாக சரி பார்ப்பேன், நண்பர்கள் எல்லோரும் மொத்த தொகையை பார்த்து விட்டு ரசீதை பையில் போட்டுவிடுவார்கள். ஏம்பா சரி பார்க்கலையா என்றால்... இங்கெல்லாம் அனைத்தும் கணிப்பொறி மயம், பைசா சுத்தமா இருக்கும் என்று சொல்லி அதற்க்கு ஒரு வங்கி உதாரணத்தையும் சொன்னார்.

ஒரு வங்கியில் நம் நண்பர் கணக்கில் ஒரு பைசா மட்டும் இருந்ததாம், கணக்கை முடித்தால் அவர் கடன் பற்று வரலாறு (கிரெடிட் ஹிஸ்டரி) பாதிப்படையும் என்று கணக்கை முடிக்காமல், ஆனால் பற்று வரவு இல்லாமல், வைத்திருந்தாராம். அதற்க்கு அந்த வங்கியில் இருந்து மாதா மாதம் குறைந்த மூன்று பக்கம் பற்று வரவு அறிக்கை என்று, அதற்கு அஞ்சல் செலவு வேறு, இருந்தாலும் நம் காசு ஒரு பைசாவாக இருந்தாலும் ரொம்ப ஞாயமாக நடப்பார்கள் என்று சொன்னார்.

இந்த கதை ஏதோ ஒரு 5 மாதம் இல்லை 6 மாதம்தான், பிறகு கணக்கை முடித்து கொள்ள சொல்லியிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள், இந்த கூத்து ஒரு இரண்டு வருடமாக நடந்திருக்கிறது. நான் கூட நண்பர் அமெரிக்காவ ரொம்ப தூக்கி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

இல்லை அது உண்மை என்பது போல் இன்று ஒரு நிகழ்வு. இந்த வருடம் ஜார்ஜியா மாஹானத்தில் வரிவிதிப்பில் சில சிறிய பிரச்சனைகள், சிலரிடம் சற்று அதிகமாக வரி வசூலித்து விட்டனர், இப்போது அதை சரி பார்த்து திரும்ப கொடுத்து வருகின்றனர். அந்த தொகைகள் ஒரு பைசாவிலிருந்து... சில நூறுகள் வரை.

இன்று செய்தியில் ஒருவருக்கு எட்டு பைசாவிற்க்கு, 42 காசு அஞ்சல் செலவு செய்து மாஹாண கருவூலத்தில் இருந்து காசோலை அனுப்பி இருக்கின்றனர், அரசாங்கத்திற்க்கு அஞ்சல் செலவு தெண்டம் என்று செய்தி வாசிப்பவர் கூறினார்.

உண்மையில் தெண்ட செலவு அந்த 42 பைசா மட்டும் அல்ல, காசோலை மற்றும் அதை அச்சு செய்ய, கிடைத்தவர்கள் அந்த எட்டு காசை பெற வங்கிக்கு கார் எடுத்து செல்ல, வங்கியிலிருந்து கருவூலத்திற்க்காண தகவல் மற்றும் பண பறிமாற்றம் என்று...பல தெண்டங்கள்.

இப்ப சொல்லுங்க... அவங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... சரிதான?

ஹும், நம்மூருல ஒரு பேரூந்து நடத்துனர் பணிகளிடம் 5 பைசா பாக்கி கொடுக்காம, அதை சேர்த்து மாடி வீடு கட்டிட்டார்ன்னு நையாண்டி பண்ணுவோம், இங்க கணிப்பொறி மயம்... அரசாங்க கஜானாவை காலி செய்து கொண்டிருக்கின்றது.

வளையுலக நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பூனை கண்ணை மூடினால்....

பூனை கண்ணை மூடினால் பூளோகம் இருண்டு போய்விடுமா? இப்படி ஒரு முதுமொழி உண்டு, அதை இந்த பத்திரிக்கை காரர்களும் நடிகர்களும் பின் பற்றி கண் மூடியோ இல்ல காதை பொத்தியோ இருக்கலாம். ஒரு பூனை (கண்) வாய் திறக்க பல பூனை இப்ப மணி கட்டி அலையிது.

அரசியல் வாதிக்கு வோட்டிங் பிரச்சனை,
நடிகர்களுக்கு டேட்டிங் பிரச்சனை,
பத்திரிக்கை காரங்களுக்கு ரேட்டிங் பிரச்சனை,
காவலர்களுக்கு கட்டிங் பிரச்சனை...

ஆக, அவன் அவன் அடுத்தவன் மேல இருந்த காண்ட கரெக்ட் பண்ணி மணியடிச்சிட்டீங்கள்ல... சரி, இடத்த காலிபண்ணுங்க.

பதிவர்களே... உங்களுக்கு என்னய்யா பிரச்சனை?
ஹி... ஹி... நமக்கு நாமேதான் பிரச்சனை.

மியாவ்... மியாவ்
மியாவ்... மியாவ்
மிய்..யா...வ்

மியாவ் மியாவ் பூனை
ரேட்டை சொல்லும் பூனை
சீ... போ... -ன்னு படிக்கமாட்டேன்
உன் பதிவுமேல ஆனை

மிய்..யா...வ்

சந்தோசக் காற்றில்...

அலேக்ரா அலேக்ரா... கந்தசாமியில் ஒரு காட்டு... மன்னிக்கவும் பாட்டு. நான் பாடல் வரிகளின் ரசிகன்... இசை மற்றும் பாடல் வரிகள்... வரிகளில் ஆங்கில கலப்பு அதிகம் இருந்தாலும்... என்னை கவர்ந்தது.

சரி பாடல் வரிகளை தாண்டி இந்தப் பாடலில் இசை அமைப்பாளரால் சேர்க்கப்பட்ட ஜிங்கிள்ஸ் வரிகள்... அலேக்ரா அலேக்ரா... இதில் ஏதோ இருக்க வேண்டுமே என்று தேடினேன்... அலேக்ரா... இத்தாலிய பெயர், பெண் பெயர்... அதன் அர்த்தம் "சந்தோசம்". வரலாற்றில் அலேக்ரா பைரோன்... பிரிட்டிஷ் கவிஞருக்கு தகாத உறவில் பிறந்த பெண்ணுக்கு 1817-ல் வைக்கப்பட்ட பெயர். இசையுலகில் அலேக்ரா என்றால் "சந்தோஷக் காற்று".

சரி... பாடல் வரிகள படிப்போம்...

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

இந்திய பொண்ணுதாங்கோ- இத்தாலி கண்ணுதங்கோ
நான் ஒரு மின்னல்தாங்கோ தில் இருந்தா வாங்கோ

ஹேய்.. மேனியே மேக்னெட் தாங்கோ சாப்பிட சாக்லேட் தாங்கோ
நான் ஒரு மின்சாரங்கோ, தள்ளி நின்னு போங்கோ

ரெட் வைன் பாட்டில் நான்...
காஷ்மீர் ஆப்பில்நான்...
கோல்டன் ஏஞ்ஞெல் நானே...

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

இசை...

ஆ- ஆடலம் டாங்கோ டாங்கோ
அடிகலம் போங்கோ போங்கோ
வாழ்கையே சார்டோ லாங்கோ
வாழ்ந்துபார்போம் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அலே-அலேக்ரா)

பாடலாம் சாங்கோ சாங்கோ
உதடுகள் வீங்கும் வீங்கும்
வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ
வாழ்வோம் இனிமேல் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அளே-அலேக்ரா)

ஓசோன் தாண்டி நம் ஒசை போகட்டும்
வானம் கை தட்டுமே

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலெலலே...

இசை...

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

ஓ...
ஆசைகள் ஒன்னோ ரெண்டோ
அடங்கிடும் மனசும் உண்டோ
நம்விழி ரெண்டும் விண்டோ
மூடி வைப்போம் ஏனோ

ஓ...ஓ...
வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ

நேற்று போயாச்சு
நாளை புதிராச்சு
இன்றே நிலையானது...து...து

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

மேலே கண்ட வரிகளில் சொரிவதற்க்கு நிறைய வரிகள்... இருந்தாலும் சில வரிகள் தமிழில் இருந்தால் இன்னுன் அழகாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ

இதையே...பெண்டுக்கு வளைவு என்று மாற்றி எழுதியிருக்கலாம்

வானவில் வளைவு என்றோ
பிறை நிலா வளைவு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ.

அதேமாதிரி... ஜிங்கிள்ஸ

அழகிடா அழகிடா
அழகிடா அழகிய-அழகிடா -ன்னு மாத்தி போட்டு படிச்சி/பாடி பாருங்க.

கூகிள்ஜி...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கூகிள் தேடு தளத்தில் காந்திஜியின் முகப்பு...

அன்று... எளிமையின் திரு உருவம்
இன்று... கூகிளின் திரை உருவம்

அஞ்சாவுப்பு புள்ளையோட அறிவாளியா நீங்க?

நீங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?

இது ஒரு அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சி (ஆர் யு ஸ்மார்டர் தன் பிஃப்த் கிரேடர்?), போட்டியிடும் பெரியவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுடன் மல்லுகட்ட வேண்டும். சரியாக பதில் சொன்னால் பணம் வரும்... இல்லையேல் மானம் போகும்.

மொத்தம் பத்து கேள்வி, பிறகு ஒரு கொசுறு (போனஸ்) சரியாக பதில் சொல்ல சொல்ல $250, $500, $1000 என்று பரிசு பணம் மில்லியனில் போய் நிற்க்கும்.

1-ம் வகுப்பிலிருந்து இரண்டு கேள்வி, 2-லிருந்து இரண்டு என பத்து கேள்விகள். ஒரு சில உதவிகள் உண்டு.

உதாரணத்திற்க்கு சில கேள்விகள்...

1. நட்சத்திர மீன்கள் எப்போதும் ஐந்து கைகளுடந்தான் பிறக்கும் -
சரியா / தவறா?

2. இந்த தொடரில் வரும் அடுத்த எண் என்ன?
1, 2, 6, 42, 1806, ?

3. 'மூஸ்' என்கிற வாத்தையின் பன்மை (ப்லூரல்) என்ன?
அ) மூஸஸ், ஆ) மீஸ்ஸ், இ) மூஸ்

கேள்விய பார்த்தா ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கா? நாம்லும் போட்டியில் கலந்து கிட்டா சுலையா... முள்ளங்கி பத்தையா 1 மில்லியன ஆட்டைய போட்ட்டுலாம்ன்னு தோணுதா? பதில் சொன்னா பரிசு... சொல்லாட்டி? தருமி மாதிரிதான் நம் நிலமை... கைபுள்ள கணக்கா எனக்கு இப்பவே கண்ண கட்டுதேன்னு சொல்லிட்டு கழண்டுகிலாம்... ஆனா... கேமராவ பார்த்து "சாமியோவ் நான் அஞ்சாவுப்பு புள்ள மாதிரி அறிவாளி இல்லீங்கோ"-ன்னு சொல்லிட்டுதான் நடைய கட்டனும்.

( 1 மில்லியன் தரேன்னு சொல்லி கூப்பிட்டு நான் தற்குறின்னு நானே சொல்லிக்கினுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதுக்கு நாக்கை பிடிங்கிகிட்டு சாவலாம்)

இதுவரை இருவர் 1 மில்லியன் அமெரிக்க வெள்ளியை பரிசாக வென்றுள்ளனர்.

விடை:
1. தவறு. (இது வரை ஒரு நட்ச்சத்திர மீன் 40 கைகளுடன் பிறந்து உள்ளதாம்)
2. 3263442 (எப்பூடி?)
3. மூஸ்

லாபம் நமக்கு மட்டுமே...

இலங்கையில் 11 வருசத்திற்க்கு பிறகு கிரிகெட்டு விளையாடி இலங்கை அணிக்கு நெத்தியில் திரு நாமத்தை போட்டுட்டு வந்திருக்காங்க நம்ம பசங்க.


அதுக்கு காரணம் யாரு? தோணி-யா? இல்லவே இல்லை... அங்கே அவன் உருவில் விளையாடிய பாணி.. நம் முருகன் தண்ட-பாணி.


சச்சின் எப்படி சதம் அடிச்சான்? எம்பெருமான் முருகன், தண்ட-பாணி கேப்டன் தோணி-யா மாறி சொன்னார்... சச்சின்... இலங்கை ஆட்டக்காரன் வீசுரது எல்லாம் பந்தே அல்ல அது பழனிமலை லட்டு... நீ அதை உன் இஸ்டத்துக்கு தட்டுன்னு.


லாபம் நமக்கு மட்டுமே... திருமுருக கிருபானந்த வாரியார் அருளியது...

பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.

அரசு ஒழிக என்று கோஷம் போடும் கைதிகளை சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார்.

சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.

சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.

கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.

பாத்திரமறிந்து பிச்சையிடு...

பாத்திரமறிந்து பிச்சையிடு... முதுமொழி
பதிவபடிச்சி பின்னூட்டமிடு... இது புதுமொழி
புது மொழிய விட்டுடுவோம், போடுறது மொக்கை அதை படிச்சி பார்த்து போடுனுமான்னு நீங்க கேட்க்க வேணாம், பதிவரே கேட்டுக்குவாங்க.
பீ கேர்புஃல்... நான் என்ன சொன்னேன்.
முது மொழிய பார்ப்போம், வாசலில் வந்து யாசகம் கேட்பவர் எல்லோரும் பிச்சைக்காறாரர் அல்ல அவர்களில் சிலர் சிவ/வைணவ அடியார்களாகவும் இருப்பார்கள், அவர்களில் சிலர் பழவகைகளை மட்டுமே பெற்றுகொள்வார்கள். அதனால் வந்திருப்பவரின் கையில் திருஓடு இருக்கிறதா இல்லை வேறு பாத்திரம் உள்ளதா என்பதறிந்து உணவிட வேண்டும் என்பதற்க்காக சொல்லப்பட்ட முது மொழி.
ராப்பிச்சை... வழக்கம் போலதான், எது போட்டாலும் வாங்கி கொண்ட காலம் போய், சூடா ஏதாவது போடுங்கன்னு கேட்டாங்க, அது இப்ப கொஞ்சம் சூடு பிடிச்சி... சூடா இல்லாட்டி பரவா இல்லை பணமா குடுங்க நல்ல கடையா பார்த்து நானே வாங்கி கொள்கிறேன் என்று சொல்லும் வரை வந்துவிட்டது.
காதல்பிச்சை... இப்ப காத-ல்/லில் பிச்சை எடுக்கிற ஸ்டைல்/டிரெண்டு ரொம்ப மாறிடுச்சி. கடற்க்கரையில் காதலி பாத்திரமே இல்லாமல் என்னங்க(!!!) என்றால் போதும் கையில் சுண்டலோ, பொறியோ, ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது. பதிலுக்கு காதலன் கண்ணத்தை காட்டுகிறான்... கிடைத்தது முத்தப் பிச்சை.

அற்ப்பனுக்கு வாழ்வு வந்தால்...

அற்ப்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பார்” என்று ஒரு முது மொழி. அமெரிக்கா காரர்கள் ரொம்பவே குடை பிடித்து இருப்பார்கள் போல இருக்கு, இப்போது அதை கொஞ்சம் அனுபவிக்கிறார்கள். சரி இனிமேலாவது குடை பிடிக்காமல் இருக்கலாம் அல்லவா? இல்லவே இல்லை... ஆடின காலும் பாடின வாயும் போல... வாழ்க்கையை அனுபவிக்க அமெரிக்கருக்கு நிகர் அமெரிக்கரே.

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இதை சொல்வதற்க்கு சங்கடமாக இருந்தாலும் இப்போது நான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தி, ”கேஸ் ஃபார் க்ளங்கர்ஸ்” - Cash for Clunkers, இது அமெரிக்க பொருளாதார சீர்குலைவை – குறிப்பாக நலிவுற்ற வாகன சந்தையை தூக்கி நிறுத்த - சரி செய்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டம். பழைய கார்களை பெற்று கொண்டு அதற்க்காக புதிய காரின் விலையில் $4500 டாலர் குறைத்து கொள்வது. மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சரி இப்படி பெறப்பட்ட பழைய கார்கள் என்ன செய்யப்படுகின்றன? அப்படியே நொருக்கப்படுகிறன, அதிலிருந்து எந்த ஒரு பாகமும் மறுபயனீட்டிற்க்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை, அதைத்தான் தொலைக்காட்சி செய்தியில் நான் கண்டேன்.

சரி அமெரிக்கர்கள் முன்பு குடை பிடித்ததை – மாதிரிக்கு ஒன்றே ஒன்று பார்ப்போமா? அலுவலகத்தில் வெளிச்சம் பெற கூறையில் சுமார் இரண்டு மூன்று அடிகளுக்குள் ஒரு வாழைத்தண்டு விளக்கு பொருத்தி இருப்பார்கள், மேலும் நாம் உட்கார்ந்திருக்கும் சதுரத்தில் (கியூபிகல்) ஒன்றோ அல்லது இரண்டோ ( நான் இப்போது வேலை செய்யும் இட்த்தில் மூன்று) பொருத்தி இருப்பார்கள், அது போதாது என்று அமெரிக்க நண்பர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு மேசை விளக்கு வாங்கி வைத்து இருப்பார்கள். வேலை இடம் சும்மா ஸூட்டிங் ஸ்பாட் போல பல பல என்று சொலிக்கும்.

ஏன் என்று கேட்டால் இதற்கு பெயர்தான் வாழ்க்கை தரம் என்பார்கள். பணக்காரனாய் வாழ்ந்து பிச்சைக்காரனாய் சாவது அமெரிக்கரின் தரம், மாறாக எதிர்காலத்திற்க்கு என்று சேமித்து சேமித்து பிச்சைக்காரனாய் வாழ்ந்து பணக்காரனாய் சாவது நாம் வாங்கி வந்த வரம்.

தாங்குமா தமிழகம்?

சமீபத்திய சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் அன்பழகன் நாம் ரூ.74,456 கோடி கடனில் இருப்பதாகவும், வரும் வருடங்களில் அது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தங்களது (தி.மு.க) ஆட்சியால் ஒன்றும் அது அதிகரிக்க வில்லை, அதற்க்கு முன் இருந்த ஆட்சியிலிருந்து அது தொடர்வதாக குறிப்பிட்டு உள்ளார். அது 2000-2001 தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சுமார் 28,000 கோடியாகவும், தொடர்ந்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அது சுமார் 57,000 பின்பு 60,000 என்று வளர்ந்து இன்று 75,000 கோடியை தொட்டு நிற்கிறதாம்.

நம் ஆட்சியாளர்களின் குறிகோள் என்ன? தமிழர்களை கடனில் முன்னேற்றுவதா? முந்தைய அட்சியில் இவ்வளவு கடன் இருந்தது அதை நாங்கள் குறைத்துள்ளோம் அல்லது உயராமல் பல நல்ல திட்டங்களை செய்துள்ளோம் என்று இருக்க வேண்டாமா?

தேவையான தொழிலுக்கு / துறைக்கு, நலிந்த மக்கள் வளர்ச்சிக்கு அரசு மானியம் மிக அவசியம். ஆனால் ஓட்டு தேவைக்காக அரசு மானியம் பல இலவச திட்டங்களால் வீணடிக்கப்பட்டு, தமிழர்களின் வீட்டை கொள்ளையடிக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.

சட்டசபை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடாம்... என்ன கொடுமை? அவர்களுக்கு அவர்கள் தொகுதியில் இல்லாத வேலை சென்னையிலா இருக்கிறது? அவர்கள் சட்டசபை கூட்ட நேரத்தில் தங்கிகொள்ளத்தானே பல கோடியில் சமீபத்தில் எம்.எல்.ஏ விடுதி புதுப்பிக்கப் பட்டது?

இலவசத்தாலும், தகுதிக்கு/திறமைக்கு மீறிய சம்பள முறையாலும் இன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சீரழிவு உங்களுக்கு தெரிய வில்லையா?

பட்டு தெரிந்துகொள்பவன் முட்டாள், பட்டு கெட்டவரிடம் இருந்து கற்றுகொள்பவன் அறிவாளி.

அமெரிக்காவின் கட்டமைப்பு அதனை எந்த சீரழிவிலிருந்தும் எழுச்சிகொள்ள செய்துவிடும். தமிழகம் தாங்குமா?

உருவாக்கத்தன்மையின் உச்சகட்டம்...

கிரியேட்டிவிட்டி என்கிற உருவாக்கத்தன்மைக்கு இன் நாளில் ஒரு சிறந்த உதாரணம் கூகிள் தேடு தளம் என்றால் மிகையாகாது.

அவர்கள் தொடர்ந்து அந்த நாளைப் பற்றிய சிறப்பை கூகில் முத்திரையாக பதிப்பதில் பெரும் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த நாற்பது ஆண்டுகள் நிறைவை கொண்டாடுவதை குறிப்பிடும் பொருட்டு கூகிளின் முத்திரை...




எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்...

இதுவும் ஒரு பெஃட்னா-2009 நிகழ்வு குறிப்புதான். இலக்கிய கவியரங்க நாள் அன்று கவிஞர் ஜெய பாஸகரன் சமகால கவிஞர்கள் பற்றி பேசிய போது "அரசியல்வாதி" பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றை சொன்னார்...

அவர் சற்று நகைச்சுவையுடன் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது... நீங்களும் படித்து மகிழுங்கள்.

இதுவரை
இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...
சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்.

பலமுறை
"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...
அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.

அடிக்கடி
"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...
ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்
"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...
அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

நன்றி: கவிஞர் ஜெய பாஸ்கரனுக்கு - காதால் கேட்டதை கண்ணால் குறிப்பெழுதி இங்கு இடுக்கையாக இட்டிருக்கிறேன் - தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

வென்றாக வேண்டும் தமிழ்...

வென்றாக வேண்டும் தமிழ்... அமெரிக்க மாகாணம் ஜார்ஜியா - அட்லாண்டாவில் நடைபெற்ற பெஃட்னா - 2009 நிகழ்வுகளில் நடைபெற்ற ஒரு இலக்கிய நிகழ்ச்சி.

அதில் குறிப்பிடப்பட்ட ஒரு கவிதை குறிப்பு...

இப்போது
இருதயம் கூட இயந்திரத்தில்
தமிழ் கூட தடுமாற்றத்தில்...

உண்மைதான், தமிழ் வென்றாக வேண்டுமோ இல்லையோ தமிழ் ஒன்றாக வேண்டும் என்பது என் ஆசை... காரணம் அங்கு நான் கண்ட சில காட்ச்சிகள். அவ மனதிற்க்கு மிக வருத்தமளிக்கும் வகையில் இருந்தது.

விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கவிஞர்களிடம் காணப்பட்ட வேற்றுமை. சிலர் அதை பேசும் போது வெளிப்படுத்தினர், சிலர் அவர்களது செய்கை / நடத்தையில் வெளிப்படுத்தினர்.

இருந்தாலும் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பேசினார்கள்... எனக்கு அதில் மகிழ்ச்சியே.

கவிஞர் வைரமுத்துவிற்க்கு என் வரவேற்ப்பு

பெஃட்னா 2009, அட்லாண்டாவில் மிக சிறப்பாக கொண்டாட பட்டது. கவிஞர் வைரமுத்துவிற்க்கு நான் வாசித்த கவிதை...

பெயரோ வைரமுத்து
கைகளிலோ விரல்கள் பத்து
உன் கவிதைகளோ பெரும் சொத்து.

முகத்திலே சாந்தம்
குரலிலே காந்தம்
கவிப்பாக்களிலே பாந்தம்
சுருங்கச்சொன்னால் நீயொரு ஏகாந்தம்.

மண்ணிற்க்கு கவிதை எழுதினாய்
மொழிக்கு கவிதை எழுதினாய்
மனிதனுக்கு கவிதை எழுதினாய்

ஏன்...மரத்திற்க்கும் கவிதை எழுதினாய்...

கவிதையின் தலைப்புத்தான் மரம்
அதில் ஒவ்வொரு வரியும் உலகத் தரம்
கவியே, நீ எங்களுக்கு கிடைத்த வரம்.

மரத்திலிருந்து... மரப்பாச்சி
மனிதனுக்கு... மனசாட்சி
கரிசலிலிருந்து... கருவாச்சி
அதுகாவியமாய்... உருவாச்சி.

தமிழை காதலித்தாய்... கவிஞனானாய்
பொண்மணியை காதலித்தாய்... கணவனானாய்
எதனை காதலித்தாய்?
கலைஞரின் நண்பனானாய்?

மொழிகளில் செம்மொழி
நம் தமிழ் மொழி
இவ்விழாவிற்க்கு அழைத்ததும்
இசைந்தது உன் விழி

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உனை வருக வருக எனவரவேற்க்குது
அட்லாண்டா தமிழ் சங்கம்.


பி.கு: நேரமின்மை காரணமாக வரவேற்ப்பு நன்றி நவிலலாய் மாறியது...

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உன் வருகைக்கு நன்றி நவிழ்கின்றது
அட்லாண்டா தமிழ் சங்கம்.

கள்ளக்குறிச்சியில்...

கள்ளக்குறிச்சியில்... விஜய.டி.ஆர்...ஆ... டர்..ர்..ர்

ஏய்...
நான் தேர்தல்ல நின்ன இடம் கள்ளக் குறிச்சி
மக்கள் தந்தாங்க தோல்வி அதிர்ச்சி
காரணம் எனக்கு சரியில்ல சனிப் பெயர்ச்சி

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

அரசியலில் எனக்கு இருக்கு முதிர்ச்சி
தொடர்ந்து செய்வேன் நான் முயற்ச்சி
அடுத்து வருது குருப் பெயர்ச்சி

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

மருத்துவருக்கு அடிச்சாங்க ஆப்பு
அம்மாவுக்கு கொடுத்தாங்க கேப்பு
வைகோவுக்கு வாயில டேப்பு
கலைஞர் ஆயிட்டார் ஸேஃபு
காங்கிரஸ் மொத்ததில் டாப்பு

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

சுதீசு மாமா கேப்டன்
ரித்தீசு மாமா டாப்டென்

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

தமிழர்கள் அறிவாளிகளா?

என்னை இப்படி ஒரு கேள்வி கேட்டு ஒரு பதிவு போட தூண்டியது தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்.

இந்தியாவில் 100 சதவிகிதம் படிப்பறிவு கொண்டவர்கள், இந்திய அளவில் முக்கிய உயர் பதவி வகிப்பவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட கேரள மக்களை காட்டிலும் தமிழ் மக்கள் ஓட்டறிவு பெற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

அன்னம் போல் வண்ணம் (ஜாதி) பெயரை கொண்டு கட்சி நடத்தியவர்களை இனம் கண்டு கொடுத்திருக்கின்றனர் பெரிய அடி.

ஈழப்பிரச்சனை இந்தியாவின் பிரச்சனை இல்லைதான். ஆனால் அவர்கள் தமிழர்களின் உறவுகள். அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டாம், ஆனால் ராஜீவ் காந்தி செய்தது போல் அமைதி படையை அனுப்பாமலும், இப்போது செய்யும் ராணுவ தளவாடங்கள் உதவியை கொடுத்து உபத்திரவம் செய்யாமலும் இருங்கள் என்று வன்முறை இல்லாமல் சாத்வீகமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் பெரிய இடி.

நான் பார்த்த தேர்தல்களில் இந்த தேர்தல் வாழ்க்கை முக்கியத்துவம் கொண்ட தேர்தல், இந்த முறை என்னால் வாக்கு அளிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் நல்ல தேர்தல் முடிவை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒரு பானை சோற்றிர்க்கு ஒரு சோறு பதம் என்பார்கள், அதற்க்கு எங்கள் மயிலாடுதுறை தொகுதி ஒரு முன் உதாரணம். சென்ற வருடம் ஊருக்கு சென்ற பொழுது தொகுதி மறுசீரமைப்பு பற்றி கேள்வி பட்டேன், அதனால் மயிலாடுதுறை தொகுதிக்காண இழப்பீடு பற்றி நண்பர்களிடம் பேசிய பொழுது, அவர்கள் தொகுதி வேட்பாளர் மணி சங்கர் அய்யரின் பங்களிப்பு பற்றி சொன்னார்கள். சரியாக சொன்னேன், இம்முறை அய்யர் சரியான பாடம் பெருவார், இனி அவர் ராஜ்ய சபா எம்.பி.யாக மட்டுமே தொடர முடியும் என்று. என் தொகுதி மக்களும் அறிவாளிகளே.

கலைஞரின் அணுகுமுறை சரியாக இருந்து தி.மு.க சார்பாக ஒரு இஸ்லாமிய வாக்காளர் நிருத்தப்பட்டிருந்தால் இது தி.மு.க கூட்டணிக்கு ஒரு வெற்றித் தொகுதி என்பது என் எண்ணம்.

ஓ.எஸ்.மணியன் வெற்றதில் சற்று வருத்தம்தான், அவருக்கு பதிலாக ம.தி.மு.க-வின் மகாலிங்கம் ஒரு நல்ல மாற்று வேட்ப்பாளராக வெற்றி கண்டு இருப்பார், அந்த வைகோ சைக்கோ தனக்கு பதில் அவரை அங்கு நிருத்தி இருந்தால் ம.தி.மு.க-வின் செல்வாக்கை கொஞ்சம் உயர்த்தி இருக்கலாம்.

எது எப்படியோ இந்த தேர்தலிலும் தமிழக மக்கள் 40-க்கு 40. பின்ன 7-க்கு 7 அவுட்ன்னா 40க்கு 40-தானே?

ஒப்பிட்டு பாருங்க... ஒப்பாறி வைக்காதீங்க

நாம் இப்போது எல்லாம் எதற்க்கு எடுத்தாலும் ஒன்றோடு மற்றொன்றை ஒப்பீட்டு பார்ப்பது வழக்கமாகி விட்டது.

எம்.ஜி.ஆர்-ன்னா சிவாஜி-கூட, ரஜினிகாந்தோட கமலஹாசன, சரோஜாதவி-ன்னா பத்மினி-கூட... தமிழ ஆங்கிலத்தோட...

இது ஒரு இந்திய அமெரிக்க நிலம் மற்றும் மக்கள் தொகை ஒப்பீடு.

எண்களில் சொல்லும் போது அது எண்ணத்தை அடைவதை காட்டிலும் படத்தில் பார்த்தால் பட்டுன்னு புரியும் இல்லையா? அதான் இந்த ஒப்பீடு...படத்த பாருங்க... பதறாதீங்க

நிலப்பரப்பில் இந்தியா ஒரு பங்கு (2,973,190 சதுர கி.மீ), அமெரிக்கா மூன்று மடங்கு (9,631,418 சதுர கி.மீ)

மக்கள் தொகையில் அமெரிக்கா ஒரு பங்கு (306 மில்லியன்), இந்தியா அதை போல் மூன்று மடங்கு (1,147 மில்லியன்).

ஈவ்வ்வ்... எம்பராஸிங்க்... டிஸ்கஸ்டிங்க்

அது எம்பராஸிங்க் இல்லை... அதுக்கு அர்த்தம் தமிழ்ல இன்பமா ரசிங்க... திரும்ப திரும்ப சொல்லி பாருங்க இன்பராஸிங்க்-ன்னு வரும்.

நம்ம தமிழ்/தெலுங்கு படத்துல வர பாட்டு... குறிப்பா வெளி நாடுகளில் நடு ரோட்டில் நம் கதா நாயகரும் நாயகியும் ஆடும் ஆட்டம் இருக்கே... அத பார்த்து இப்ப உள்ள பிள்ளைகள் சொல்லும் வார்த்தை... ஈவ்வ்வ்...எம்பராஸிங்க் இல்லைன்ன அடுத்த வார்த்தை டிஸ்கஸ்டிங்க் (இது ஆங்கில படங்களுக்கு).

இந்த பாடல்கள் ஒரு செட்டின் உள்ளே... பிறகு தோட்டத்தில் உள்ளே என உள்ளே எடுக்கப்பட்டு இன்பமாய் ரசிக்க பட்டது. பிறகு செட்டை விட்டு...பிறகு நம்ம நாட்டை விட்டு... பல பிறகுக்கு பின்னே வெளி நாட்டில் நடு தெருவில் எடுக்கப் பட்டு (பட்ஜெட்டால தயாரிப்பாளர் நடு தெருவுக்கு வருவது வேறு விஷயம்) எம்பராஸிங்க் ஆகிவிட்டது.

எவ்வளவு எம்பராஸிங்கா இருந்தாலும் ஹாலிவுட் கிராபிக்ஸ் பாடாவதிய பார்க்கும் போது நம்ம படத்த இன்பமா ரசிக்கலாம்.

ரசனை என்பதை சொன்ன உடனே எனக்கு ஒரு ஆங்கில படம் நினைவிற்க்கு வந்தது... நம்ம ஊரு ஆதி, பேதி, வில்லு, அம்பு அருவான்னு வர படங்களுக்கு நடுவில் பொம்மலாட்டம்-னு ஒரு படம் வந்த மாதிரி. கிராபிக்ஸ் கொடுமைகள் இல்லாம... கண்களுக்கும் காதுகளுக்கும் இதமா... எல்லோரிடமும் டிஸ்கஸிங்க் பண்ணக்கூடிய படம்.

பச்சை நிறமே... பச்சை நிறமே என பாடத்தோன்றும் அந்த படத்தை பார்த்த பிறகு. படம் முழுவதும் அப்படி ஒரு பச்சை வண்ணம். சார்லஸ் டிக்கென்ஸோட நாவலை தழுவி 1946-ல் பிரிட்டனில் எடுக்கப் பட்ட படம். அவசரப் படாதீங்க அது கருப்பு வெள்ளை படம், நமக்காக அந்த படத்தை மீண்டும் 1998-ல கலர்ல எடுத்திருக்காங்க...

என்ன கடைசியில் பச்சை நிறமே... பச்சை நிறமே... உடைந்தது என் இதயமே-ன்னு பாடுற மாதிரி ஆயிடுச்சி... அட இன்னும் படத்தோட பேர சொல்லவே இல்லையா நான்...கிரேட் எக்ஸ்பெக்டேஸன்ஸ்.

க.பி.கு: அதிக பட்சம் ஐந்து ஈர முத்தம், ஒரு முக்கால் நிர்வாண முதுகு.

வ.பி.கு: பெட்டியில் இருந்து தவறி வெளியே விழும் துப்பாக்கி, சத்தமில்லாமல் ஒரே ஒரு கத்தி குத்து.

இந்த படம் பற்றிய மேலும் தகவலுக்கு...
http://en.wikipedia.org/wiki/Great_Expectations_(1998_film)
கூகிள் பண்ணி பாருங்க... படம் கிடைச்சாலும் கிடைக்கும்.

எப்படி ஒரு எம்பராஸிங்க் தமிழ் படத்த இன்பாமா ரசிச்சோமோ... அது மாதிரி டிஸ்கஸ்டிங்க் ஆங்கில படத்த டிஸ்கஸிங்க பண்ணுனோம் அவ்வளவுதான்.

வெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்...

வெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்... என்ன எல்லாம் வெ வா வ-ன்னு கோர்வையாக வருகிறதா? இருக்காதா பின்ன பேசியது வைகோ-வாச்சே.

விருது நகர் லோக்சபா-விற்க்கு போட்டியிடும் அவர் சந்திரப்பட்டியில் பேசிய பேச்சை பாருங்கள்

"ரத்த ஆறு ஓடும் என்று சொன்னதை நான் மறுக்கவில்லை" முத்துக்குமரனைப் போல் தீக்குளிப்புகள் நடக்கும் என்பதை கூறினேன் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார். மேலும் " நான் என்ன கருணாநிதி பேசாததையா நான் பேசிவிட்டேன்" என்ற கேள்வி வேறு...

வடிவேலு: ஏ வென்று அந்த ஆள் சரியில்லை என்றுதானய்ய உன் பின்னே ஒரு கூட்டம் வந்தது, அதை புரிந்து கொள்ளாமல் நானும் சேற்றில் விழுந்து புரல்கிறேன் என்கிறாயே? கவுத்துப்புட்டாய்ங்கய்யா கவுத்துப்புட்டாய்ங்க.

ஜெயலலிதா ஒரு டி.வி-க்கு அளித்த பேட்டியில், நாங்கள் கொண்ட நட்பின் காரணமாக "இன்று நேற்றா வைகோ இதுபோல் பேசுகிறார், எத்தனை ஆண்டுகளாக பேசிவருகிறார்" என்று மேற்கோளிட்டு பேசியிருக்கிறார்.

கவுண்டமணி: அடங்கொன்னியா... அந்த அம்மா உண்மையாவே என்ன சொன்னுதுன்னு நீ தெரிஞ்சு பேசுறியா இல்ல தெரியாம பேசுறியா? நீ தி.மு.க-வுல இருந்தப்ப ஆடுன ஆட்டத்துக்குத்தான் உன்ன பொடாவுல போட்டுது, இப்ப கூட இருந்துகிட்டு டார்ச்சர் பண்ணுரன்னு போட்டு குடுக்குது, நீ என்னமோ நட்பு தோழமைன்னு கூட்டம் போட்டு பேசிகிட்டு இருக்கிற... நாராயணா இந்த (வைகோ) கொசு தொல்ல தாங்களடா.

கட்ட கடைசியா மக்கள பார்த்து ஒன்னு சொல்லி இருக்கிறார் " நீங்கள் மனிதாபிமானத்திற்க்கு ஓட்டு போடுவீர்கள் பணத்திற்க்கு ஓட்டு போடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று.

விவேக்: அட தோ பார்ரா மிஸ்டர் கிளீன் சொல்றாரு நம்ம எல்லோரும் கேட்கணுமாம், இவரு மட்டும் 30 கோடிய வாங்கிகிட்டு மூனு வருஷமா மூடிகினு இருப்பாராம்...ஹும் இந்த தமிழக வாக்காளார்களை ஆயிரம் பெரியார் இல்ல... கூட ஆயிரம் காமராஜர் சேர்ந்து வந்தாலும் காப்பாத்த முடியாது.

காதல் கல்யாணம்...

காதல் கல்யாணம்...

நான்கு கண்கள் பார்த்தன
இரண்டு மனங்கள் பேசின
ஒரு காதல் உருவானது...

ஒரு கல்யாணம் நடந்தது
இரண்டு வீடுகள் சம்மதித்து
நான்கு திசையிலும் சந்தோஷம்...

கூட்டி கழிச்சி பார்த்தா கணக்கு சரியா வருதா?

வோட்டு... அதுக்கு முன்னாடி

வோட்டு... அதுக்கு முன்னாடி
வேட்பாளருக்கு வெக்கிராங்க வேட்டு.

தொண்டன்: என்ன தலைவரே இப்படி ஆயிப்போச்சி

வேட்பாளர்: என்னடா என்ன ஆயிப்போச்சி இப்ப?

தொண்டர்: ஜெயிக்கிறதுக்கு நிறைய எலெக்சன் டெக்னிக் வச்சிருக்கேன்னு சொன்னீங்க, இப்ப நிக்க சீட்டு கூட கிடைக்கலியே

வேட்பாளர்: டேய், அது அம்மாவோட கலெக்சன் டெக்னிக்டா, முதல்ல அறிவித்த வேட்பாளர் சரியில்லைன்னு என்னை அறிவிப்பாங்க பாரு.

---

தொண்டன்: தலைவா, எல்லாம் நாசமாகிப் போச்சு தலைவா

வேட்பாளர்: என்னடா நாசமா போச்சி, நான் இன்னும் ஜெயிக்கவே இல்லையேடா

தொண்டன்: அது இல்ல தலைவா, எதிர் கட்சி வேட்பாளருக்கு இணையா நீங்க தாக்கு பிடிக்க மாட்டீங்கன்னு வேறு வேட்பாளர அறிவிச்சிட்டாங்க தலைவா

வேட்பாளர்: விடுடா, ஏற்கனவே எதிர்கட்சி வேட்ப்பாளர் எல்லாத்துலயம் பாதி கமிசன் தரேன்னு சொல்லிட்டாரு

---

தொண்டன்: தலைவா என்ன அதுக்குள்ளே எல்லோருக்கும் இனிப்பு வழங்குறீங்க

வேட்பாளர்: எதிர்கட்சி வேட்பாளர மாத்திட்டங்களாம்ல, பிறகு என்ன நான் ஜெயிச்ச மாதிரிதான

தொண்டன்: புரியலயே தலைவா

வேட்பாளர்: விடுடா பழைய வேட்பாளர் புது வேட்பாளர தோற்க்கடிச்சி தொகுதியில் அவர் பவர காமிச்சிடுவார்.

---

தொண்டன்: தலைவா, நீங்க எங்கயோ போயிட்டீங்க தலைவா

வேட்பாளர்: என்னடா சொல்லுற, ஜெயிச்சா டெல்லிக்கு போவேன், தோத்தா அடுத்த எலெக்சனுக்கு எதிகட்ச்சிக்கு போயிடுவேன் நீ எத சொல்லுற?

தொண்டன்: அதில்ல தலைவா, நேத்தி மப்புல் இருந்தப்ப நீங்க அடிச்சீங்களே ஜோக்கு, தேர்தல் பிரச்சாரம் பண்ண வெள்ளை மாளிகையில் இருந்து ஓபாமா வாரான்னு - அத சொன்னேன்.

ஏய்ய்... சைலன்ஸ்... கூட்டணி பாட்டு பாடிகிட்டு இருக்கோம்ல...

இடம்: போயஸ் தோட்டம்
நேரம்: கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிந்த நேரம்
காலம்: அந்தி மாலைப் பொழுது

( நீண்ட நாட்களாய் தன்னை திரும்பி பார்க்காமல் இருக்கும் சசிகலாவை பார்த்து நடராஜன் ஆரம்பிக்கிறார்)

நடராஜன்: யம்மாடி... ஆத்தாடி...
என்கிட்ட திரும்பி வருவியாடி...

ஜெ: செரினா-வ உள்ள போட்டு நொங்கு எடுத்தது மறந்து போச்சா... அப்படியே ஓடிபோயிடு...

சசி: அக்கா, விடுங்கக்கா... காய்ஞ்சி போயி வந்திருக்கிறார், நாமும் சீட்டு பேரம் பேசி மண்ட காய்ஞ்சி கிடக்கிறோம்... ஏதோ பாடிட்டு போகட்டும்... நீ பாடுய்யா...டி.ஆரோட குத்துப் பாட்டு சும்மா சூப்பரா இருக்கும்.

ஜெ: அப்படியா... சரி கூட்டணி தலைவர்கள் எல்லோரும் இருக்கீங்க... கூச்சப்படாம ஆளாளுக்கு ஒரு குத்து குத்துங்க

சசி: வைகோ ஸ்டார்ட் த மியூசிக்

நடராஜன்: யம்மாடி... ஆத்தாடி...
என்கிட்ட திரும்பி வருவியாடி...

சசி: அக்கா பாதி... நான் பாதி
அட சேர்ந்துபுட்டா தமிழ்நாடு காலி...

வைகோ: அம்மா காலில் விழுவோமா...
குடுத்த இடத்தில் நிப்போமா...

இடது சாரி: கலைஞ்சர் பேர கெடுப்போமா...
சேதுபாலம் பிரச்சனைன்னு சொல்லுவோமா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

நட: யம்மாடி... அய்யோ ஆத்தாடி...
எனக்கொரு எம்பிசீட்டு வாங்கித் தரியாடி...

சசி: ஏய் அக்காதாண்ட முதளாலி...
மத்தவனெல்லாம் எங்களுக்கு தொழிளாலி...

(கூட்டணி ஸ்பெசல் தலைவர் மரம் வெட்டி அய்யா எண்ட்ரி ஆகிறார்)

மரு.அய்யா: அச்சம்வேண்டும் மரம் வெட்டுவேண்ணு அச்சம்வேண்டும்
கூட்டணி தாவிப்பார்த்தா தாவிப்பார்த்தா சீட்டு கூடவரும்...

ஜெ:வெட்கம் கெட்ட அய்யாவத்தான்...
அனைச்சிகிட்டா சேர்த்துகிட்டா ஜெயிசிடுவோம்

மரு.அய்யா: நேத்துவர நேத்துவர
நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல...

ஜெ: ஓடுகாலி நீ ஓடுகாலி ஜெயிச்சபிறகு
நானும்தான் உன்ன நம்பவில்ல

வைகோ: எனக்கு தொகுதி கொஞ்சமடி...

சசி: நீ ஓடிப்போன கட்சிகாரன தேடிப்புடி...

(சுப்ரமணிய சாமி உள்ளே வருகிறார்)

சு.சா: உன்னைபோல என்னைபோல
தமிழகத்த காப்பாத்த யாருமில்ல

ஜெ: நல்லவரே... வல்லவரே
"அவளண்ட என்ன இல்லைன்னு" சொன்னவரே

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

வைகோ: அய்யோ... அய்யோ

(சைடில் நடராஜன் சசியை சரிகட்டியதை பார்த்த ஜெ-வுக்கு அதிர்ச்சி, பிறகு இருவரும் சுதாரித்து கொண்டு ரொமான்ஸ்)

ஜெ: ஆதாரமா... அவதாரமா...
ஆயிபுட்ட நெஞ்சுக்குள்ள

சசி: உன்ன விட்டா, என்ன விடும்
உயிர்தானம்மா உள்ளுக்குள்ள

ஜெ: உன்வாசம்தான் என்மூச்சில்வீசி
உயிருக்குள் உயிர்வாழுரேன்

சசி: நம் பேரத்தான் ஊரெல்லாம் பேசும்...
ஊமைக்கும் மொழியானது...

(ஜெ-சசி ரொமான்ஸை பார்த்த நட்டு மூட் அவுட், அவரை சரிகட்டுகிறார் சசி)

சசி: நீதாண்ட நீதாண்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்ன கட்டு
(சசி இருக்கிற சைஸுக்கு எங்க கட்டுரது)

நட: ஊருக்கும் பேருக்கும் மல்லுக்கட்டு
என்னோட பெட்டுக்கு டாட்டா காட்டு...டு ...டு... டு

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

நடராஜன்: யம்மாடி... ஆத்தாடி...
என்கிட்ட திரும்பி வருவியாடி...

சசி: அக்கா பாதி... நான் பாதி
அட சேர்ந்துபுட்டா தமிழ்நாடு காலி...

வைகோ: அம்மா காலில் விழுவோமா...
குடுத்த இடத்தில் நிப்போமா...

இடது சாரி: கலைஞ்சர் பேர கெடுப்போமா...
சேதுபாலம் பிரச்சனைன்னு சொல்லுவோமா...

சு.சா: ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... யம்மம்மா

மரு.அய்யா: யம்மா யம்மா யம்மா யம்மாயம்மா யம்மா யம்மம்மா...

வலது சாரி வரதராஜன்: என்னய்யா பாட்ட நிறுத்திட்டீங்க...பட்டய கிளப்பு...

நட: குத்துன்னா... கூட்டணியாத்தான் குத்தனும்... செமகுத்து... தேங்க்ஸுப்பா...

யம்மாடி... ஆத்தாடி...

ஆண்: யம்மாடி... ஆத்தாடி...
உன்ன எனக்குத் தரியாடி...

பெண்: நீ பாதி... நான் பாதி
அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி...

ஆ: அரைச்ச மாவ அரைப்போமா...
துவைச்ச துணிய துவைப்போமா...

பெ: ராமன் கதைய கேட்ப்போமா...
வில்ல வலைச்சி பார்ப்போமா...

ஆ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆ: யம்மாடி... அய்யோ ஆத்தாடி...
உன்ன எனக்குத் தரியாடி...

பெ: ஏய் நாந்தாண்ட முதளாலி...
நீதான் எனக்கு தொழிளாலி...

ஆ: மச்சம் வேண்டும் நட்ச்சத்திரம் நீ
எண்ணிப்பார்த்தா எண்ணிப்பார்த்தா வெட்கம்வரும்...

பெ:வெட்ட வரும் வில்லனத்தான்...
அடிச்சிபுட்டா உடைச்சிபுட்டா சத்தம்வரும்

ஆ: நேத்துவர நேத்துவர
நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல

பெ: வாழும்வர வாழும்வர
நீயும்தான் நானும்தான் ரெட்டபுள்ள

ஆ: வயசுப்ப் பையன் மூச்சிடி...

பெ: அடப் பட்ட இடம் பூச்செடி...

ஆ: உன்னைபோல என்னைபோல
காதலிக்க யாருமில்ல

பெ: நல்லவரே... வல்லவரே
வாழவைக்க வந்தவரே

ஆ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆ: அய்யோ... அய்யோ

பெ: ஆதாரமா... அவதாரமா...
ஆயிபுட்ட நெஞ்சுக்குள்ள

ஆ: உன்ன விட்டா, என்ன விடும்
உயிர்தானம்மா உள்ளுக்குள்ள

பெ: உன்வாசம்தான் என்மூச்சில்வீசி
உயிருக்குள் உயிர்வாழுரேன்

ஆ: நம் பேரத்தான் ஊரெல்லாம் பேசும்...
ஊமைக்கும் மொழியானது...

பெ: நீதாண்ட நீதாண்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்ன முட்டு

ஆ: பூவுக்கும் பேருக்கும் மல்லுக்கட்டு
என்னோட பெட்டுக் கட்டு...டு ...டு... டு

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆண்: யம்மாடி... ஆத்தாடி...
உன்ன உன்ன எனக்குத் தரியாடி...

பெண்: நீ பாதி... நான் பாதி
சேர்ந்துபுட்டா சிவன் சிவன் ஜாதி...

ஆ: அரைச்ச மாவ அரைப்போமா...
துவைச்ச துணிய துவைப்போமா...

பெ: ராமன் கதைய கேட்ப்போமா...
வில்ல வலைச்சி பார்ப்போமா...

ஆ: ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... யம்மம்மா

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

டி.ஆர்: என்னய்யா பாட்ட நிறுத்திட்டீங்க...பட்டய கிளப்பு...

சிம்பு: தேங்க்ஸுப்பா.

பாடல் வரிகள் தெரிந்து பாடல் கேட்பது ஒரு சுகம்... இப்ப கேட்டு பாருங்க பாட்ட...

http://geetham.biz/V/Vallavan/Tamilmp3world.Com%20-%20Ammadi%20Athadi.mp3

என்ன... எங்க ஊரு காரு...டி.ஆரு நல்லா பாடியிருக்காருல்ல... ரசிச்சிகிட்டே இருங்க... அரசியல் உள்குத்தோடா மீண்டும் வரேன்

என்ன ஆச்சு எங்க ஊருக்கு...

எங்கு பார்த்தாலும் மாயூரம் பற்றிய பேச்சு... என்ன ஆச்சு எங்க ஊருக்கு...

மாதவி பந்தலில் ஒரு அருமையான பதிவு...
http://madhavipanthal.blogspot.com/2009/04/blog-post_08.html

தட்ஸ் தமிழில் ஒரு ஏக்கம்...
http://thatstamil.oneindia.in/cj/vaithiyanathan-sowmian/2009/0409-will-mayiladuthurais-dream-come-true.html

என்ன செய்வது படித்தவர்கள் ஊரை முன்னேற்ற பார்க்கிறார்கள், பணம் படைத்தவர்கள் (இப்போதுள்ள பேரூந்து நிலையத்தை சுற்றி தொழில் செய்யும் பலவான்கள்) ஊரை பின்னேற்றுகிறார்கள்... சுயநலவாதிகள்.

ஊமைக் குசும்பன்...

நம்ம வலையுலக குசும்பு ஒன்லி குசும்பன உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும், நல்ல நகைச்சுவையா ஏழுதுகிறவர்... அவர் குசும்பன்.

சென்ற வாரம் அவர நட்ச்சத்திர பதிவரா இருந்து சில பல நல்ல குசும்புகளை எழுதியதால்... அவர் நட்ச்சத்திர குசும்பன்.

இப்போது ஆராவாரம் இல்லாமல் அவங்க ஊரு பண்ணையார் மற்றும் சொடலையின் லீலைகளை குசும்பி இருக்கிறாரே அந்த குசும்பனை வேறு என்ன சொல்ல... அவர்தான் ஊமைக் குசும்பன்.

வலையுலக ஈழ தோழர்களுக்கு...

வலையுலக ஈழ தோழர்களுக்கு...

உங்களில் நிறைய பேர் தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் ஈழ பிரச்சனைக்கு உதவுபவர்கள் என எண்ணி உங்கள் எண்ண குமுறல்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள், தவறு ஒன்றும் இல்லை... அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் சக பதிவர்கள் படித்து அவர்களால் முடிந்த உதவி கரத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டுமே உண்மை.

தமிழக அரசியல்வாதிகளால் இங்கு உள்ள காவிரி, முல்லை பெரியாறு மற்றும் ஒக்கேனக்கல் போன்ற உள் மாநில / நாட்டு பிரச்சனைகளை(யே) தீர்க்க முடியாத அவலத்தில் இருக்கின்றனர் இவர்கள் எங்கே வெளி நாடான ஈழத்திற்க்கு உதவ போகின்றனர்?

உங்கள் தேர்தல் பகிஷ்கரிப்பு கோஷங்கள் அவர்களை ஒன்றும் பெரிதாக பாதிக்க போவதாக எனக்கு தெரியவில்லை. பதவிக்கு வந்தவர்களும் வரப்போகின்றவர்களும் "இறையாண்மை" என்ற ஒரு வார்த்தையில் ஈழ "இயலாமையை" முடித்து விடுவார்கள்.

ஈழத்திற்க்கு ஓரளவு உதவ முடியும் என்றால் அது நிச்சயம் புஷ் போன்ற அமெரிக்க அதிபர்களால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர்(கள்)தான் இல்லாததை இருக்கு என்று சொல்லி - உதாரணத்திற்க்கு ஈராக்கில் சதாமை ஒரு வழி பண்ணியவர் - காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்கள். அப்படி பட்டவர்கள் உண்மையிலேயே ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட உதவுவார்கள். எட்டு ஆண்டு கால புஷ் ஆட்சியில் ஏன் அவர் ஈழ பிரச்சனையை கண்டுகொள்ள வில்லை? பிரச்சனையின் தீவிரம் அவருக்கு சரியாக சென்று சேரவில்லையா? நான் பத்திரிக்கை/மீடியா-களில் படித்த விசயங்களில் பதில் கிடைக்க வில்லை. நீங்களும், மற்ற ஈழ அமைதி விரும்பிகளும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

யோசியுங்கள்... ஓபாமா ஓரளவுக்கு உதவக்கூடும் என்பது என் கணிப்பு. அமெரிக்க பொருளாதார மீட்ச்சிக்கு பின் அவர் உலக அமைதிக்கு தன்னால் இயன்ற உதவி செய்வதாக கூறியிருக்கிறார்.

தேர்தல் திருவிழா...

காணாம போனாலும் வைகோ அழுதுகிட்டே அம்மாகிட்ட வந்து சேர்ந்துடுவாரு...

இந்த இடதும் வலதும் என்ன பண்ண போகுதுன்னு தெரியலயே? மத்தியில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிச்சது போல்... லெஃப்டல சிக்னல போட்டு ரைட்டுல கைய போட்டு ஸ்ட்ரெட்யிட்டா தமிழகத்துல பி.ஜே.பி-கூட போயிடுவாங்களோ

எஸ்.எம்.எஸ்

மருத்துவர் அய்யா அம்மாகூட கூட்டணி வச்சதிலிருந்து ஒரே எஸ்.எம்.எஸ்...

செல்வி ட்டுமே கோதரி - வருகிற தேர்தல் முடியும் வரை.

சிதம்பரத்துல ரம்வெட்டிக்கு ங்கு - சிதம்பரத்துல பொன்னுசாமி பா.மா.க வேட்பாளராம், சங்கு உறுதி.

சின்னைய்யாவுக்கு த்தியமந்திரி சிண்ட்ரோம் - ஒதுக்கி வச்சிருக்கிர ராஜ்யசபா சீட்டு அதுக்குத்தானே?

பங்கு சந்தையும் கண் கட்டு வித்தையும்...

பங்கு சந்தையும் கண் கட்டு வித்தையும்...

கண் கட்டு வித்தை - மேஜிக் (மாஜிக்) பொதுவாக நம் எல்லோருக்கும் பிடித்த பொழுது போக்குகளில் ஒன்று - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் ஒன்று.

கண் கட்டு வித்தை - இது ஒரு காரணப் பெயர், நாம் நம் கண்களை நன்கு அகல விரித்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு விசயத்தை மாயமாய் மறைய செய்வது. கண்களை நன்கு அகல விரித்து பார்த்த நாம் இப்போது வாயை ஆ என விரித்து ஆச்சரியமமாய் பார்ப்போம். நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த நிகழ்ச்சிகளில் சில மெஜீசியன் மறைய வைத்த விசயத்தை பிறகு (அதை) வேறு இடத்திலிருந்து கொண்டு வருவார்கள் - மேஜிக் என்பது மந்திரம் அல்ல தந்திரம் என்பது புரிய வந்தது.

இதை இந்தியாவில் தெருமுனையில் ஆரம்பித்து பின்பு பள்ளி, ஸ்டார் ஹோட்டல் மற்றும் பி.சி சர்கார் என இன்று அமெரிக்காவின் டேவிட் காப்பர் ஃபீல்ட் வரை பார்த்து ரசித்திருக்கிறேன்.

நான் பார்த்து ரசித்த தந்திரங்கள்...

தெருமுனை & பள்ளி: கையில் முட்டை மற்று நாணயத்தை காட்டி, மூடி திறந்தால் வெறும் கை.

ஸ்டார் ஹோட்டல்: புறா முயல் போன்ற சிறு உயிரினங்கள் - குல்லா அல்லது பெட்டியில் போட்டு மூடி திறந்தால் ஒன்றும் இருக்காது.

பி.சி சர்கார் / டேவிட் காப்பர் ஃபீல்ட்: கண் முன் இருக்கும் யானைய மறைய செய்வது, பெரிய ரயிலை மறைய செய்வது.

பங்கு சந்தை - ஷேர் மார்கெட் (ஹைடெக் மாஜிக்) வேணும்னா கண் காட்டி வித்தைன்னு கூட சொல்லலாம்.

ஆரம்பிக்கும் போதே காளை கரடி என்று அதிரடியா ஆரம்பிப்பார்கள். தினம் காளை எகிறிச்சா ( நம்மை முட்டி கீழே தள்ளுனுச்சா) இல்லை கரடி பிராண்டினுச்சான்னு சந்தை நிலவரத்தை பார்த்துகிட்டே இருக்கனும். இத பார்க்க வைக்கிறத்துக்காக சில பேர் திரை மறைவில் இருக்கறத இல்லாத மாதிரி காட்டுரது, இல்லாதத இருக்கிற மாதிரி காட்டுரது-ன்னு டகால்டி வேலை பண்ணிகொண்டு - இன்னும் சற்று விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் போலியான தேவையை உருவாக்குதல், தெரு கோடியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு பல் கோடியில் வியாபாரம் என சொல்லுவது - இருப்பார்கள்.

சுருக்கமாக் சொல்ல வேண்டும் என்றால் - பங்கு சந்தை என்பது ஊக வணிகம்.

என்னடா கிளைமேக்ஸ ( அதாங்க டைட்டில ) காணுமேன்னு பார்க்குறீங்களா? பங்கு சந்தைக்கும் கண் கட்டு வித்தைக்கும் என்ன சம்பந்தம்ன்னு புரியல? இதோ...

மேஜிக் - இதை இந்தியாவில் தெருமுனையில் ஆரம்பித்து பின்பு பள்ளி, ஸ்டார் ஹோட்டல் மற்றும் பி.சி சர்கார் என இன்று அமெரிக்காவின் டேவிட் காப்பர் ஃபீல்ட் வரை பார்த்து ரசித்திருக்கிறேன் - திருப்பி சொல்லிக்கிறேன்.

ஷேர் மார்க்கெட் - இதையும் இந்தியாவில் தெருமுனையில் சிட்-பண்ட் என ஆரம்பித்து பின்பு பைனான்ஸ் கம்பெனி மற்றும் மும்பை பங்கு சந்தை என இன்று அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் வரை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறேன்.

சிட்-பண்ட்: ஐனூரு ஆயிரம்ன்னு... தெருமுனை மேஜிக்... பெரும்பாலும் திரும்பி வந்துரும்... மெஜீஸியன் மறைந்த காசை கண்ணுல காண்பிப்பது போல்.

பைனான்ஸ் மற்றும் பெனிபிஃட் கம்பெனி: பத்தாயிரம் லட்சம்ன்னு - ஹோட்டல் மேஜிக், பணம் புறா மாதிரி பறந்து போயிடும் இல்ல முயல் மாதிரி ஓடி போயிடும்

மும்பை மற்றும் உலக பங்கு சந்தை : பிரைமரி மார்கெட், செகண்டரி மார்கெட், பாண்டு அது இதுன்னு கண் முன்னாடி கம்பெனிய யானையா காமிச்சு ரயில் மாதிரி ஊர் ஊர் ஊரா உலகம் முழுக்க பிஸினஸ், ஷேர் வேல்யு இன்கிரீஸ், டிவிடண்ட், போனஸ்-ன்னு சொல்லி... பி.சி சர்க்காருக்கு ஒரு ஹர்சத் மேத்தா, டேவிட் காப்பர் பீஃல்டுக்கு ஒரு மேடாஃப்-ன்னு எல்லாத்தையும் மறைய வைத்து விட்டார்கள்.

வர்ணாஸ்ரமா...

வர்ணாஸ்ரமா...

இந்த பதிவோட தலைப்பை படிப்பதற்க்கு முன் திருவள்ளுவரோட ஒரு திருக்குறள படிச்சிடரது நல்லது என்று நினக்கிறேன்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு - குறள்

வர்ணாஸ்ரமா / வர்ணாஸ்ரம் / வர்ணாஸ்ரம தர்மம் அப்படி இப்படி என முடிவாக வர்ணாஸ்ரமம் என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு சமஸ்கிருத வார்த்தையாக இருந்தாலும் இந்த வார்த்தைக்கு தமிழோடு அப்படி ஒரு அன்யோன்யம்/ஒற்றுமை இருக்கு.

அந்த வர்ணாஸ்ரமம் என்கிற வார்த்தையை தமிழில் கொஞ்சம் பிரிச்சி பார்ப்போமா...வர்ணாஸ்ரமம் = வர்ணம் + ஆ + சிரமம்... ஆமாங்க வர்ணத்த பற்றி பேச (ஆ)ரம்பித்தாலே சிரமம் தாங்க. ஆளாலுக்கு சண்டை போட்டுகிறாங்க.

இந்த வர்ணாஸ்ரமம் எல்லா இடத்திலேயும் ரொம்ப சிரமமாத்தான் இருந்திருக்கும் போல... அதனால யாராவது வர்ணத்த பத்தி பேசுனா நாம அவங்க கிட்ட ஒரு சரணத்த (கும்பிட) போட்டு மேலும் ஒரு கரணத்த (பல்டி) அடிச்சி ஓடி போயிடுவது நல்லது என நினைக்கிறேன்.

இந்த வர்ண சிரமம் உலகவில்தான் முதன்மையான சிரமத்தை - உண்மையான வர்ணத்தை வைத்து பிரித்து கருப்பினம் வெள்ளையினம் என்று இனப் பாகுபாடுக்கு வித்திட்டு இருக்கு எனலாம்.

நமக்கு எதுக்குங்க உலக பிரச்சனை, ஆ ஊ-ன்னா துப்பாகியால சுட்டுட்டுடுவாங்க. வாங்க நம்ம நாட்டுக்கு - இந்தியாவுக்கு வந்துடுவோம், எதுவா இருந்தாலும் நமக்குல்ல பேசி தீர்த்துக்கலாம் பாருங்க.

வர்ணாஸ்ரம்கிற வார்த்தைய உருவாக்கிய நம்ம நாட்டுல என்னத்த பேசன்னு நினைக்க கூடாது... எனக்கு தெரிஞ்சு நம்ம ஊருல நிறத்தை வைத்து பாகுபாடு பண்ணுவது மிக குறைவு, வேணும்னா... சிகப்பா உள்ளவங்க அவங்க நிறத்தை வெச்சி கொஞ்சம் பெருமை பட்டுக்குவாங்க அவ்வளவுதான். பிறகு எங்க இருந்து வந்தது இந்த வர்ணாஸ்ரம்? சமஸ்கிருதத்திலிருந்து வந்ததா? இல்லை சாஸ்திர சம்பிரதாயங்கள் என இடை புகுந்து... மேலும் குலம் கோத்திரம் என நம்மை ஆத்திரம் அடைய வைக்கவா? இல்லை, அது ஒருவர் செய்யும் தொழிலை வைத்து அவரை இனம் காண கையாளப்பட்ட ஒரு சொல். அதனால்தான் "செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நம் செல்வம்"-ன்னு சொல்லியிருக்காங்க.

யாரும் யாருடைய தொழிலையும் குறத்து பேசுவது தவறு, எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயத்திலும் அப்படி ஒரு குறிப்பிட தொழிலை தாழ்த்தி குறிப்பிட்டதாக தெரியவில்லை... அப்படி யாரேனும் பேசினால் அவர்கள் தர்குறிகள் அல்லது அறிவிலிகள்.

இதுல பாருங்க நம்மாளுங்க பண்ணுன கூத்த... என்னவோ சொல்லுவாங்க ஈர பேனாக்கி, பேன பெருமாளாக்கின்னு...வர்ணத்த நாலா... தலை, தோள், இடுப்பு மற்றும் கால்-ன்னு எங்கு யாருக்கு பலமோ அந்த பலத்த வெச்சி பிரிச்சத நம்மாளுங்க (உங்களுக்கே புரிஞ்சி இருக்கும், நான் அதை இங்க சொல்ல வேண்டாம்ன்னு நினைக்கிறேன்) உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதின்னு ஆக்கி... தீண்டாமை என்னும் பாவச்செயலை செய்திட்டாங்களோன்னு நினைக்கிறேன்.

யாருங்க சொன்னா தலைதான் உயர்ந்தது கால் தாழ்ந்ததுன்னு? ஒருவர் பெரியவர் நல்லவர் தீரிக்கதரிசி என்றால் என்ன செய்வீர்கள்? அவர் தலையை தொட்டு வணங்குவீர்களா இல்லை காலை தொட்டு வணங்குவீர்களா? நான் காலில் விழும் கலாச்சாரம் பற்றி சொல்ல வில்லை, தொழிலை மதிக்கும் கலாச்சாரம் பற்றி சொல்கிறேன். இதை பகவத் கீதையில் மிக அழகாக சொல்லியிருப்பதாய் என் குரு சொன்னார்.

நாம் தலையாய் இருக்க வேண்டுமா இல்லை காலாய் இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

வர்ணம் என்னும் பழமைபேசி அதர்க்காக சண்டை போட்டு நம் நேரத்தை வீணாக்குவது வெட்டி வேலை.

கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்து மதம்"-ன்னு சொல்லி இருக்கார்ன்னா அத்தோட முடிச்சிகனும், அப்ப மத்த மதத்துல அர்த்தம் இல்லையான்னு கேட்ககூடாது.

எது உயர்ந்து தாழ்ந்தது என முடிவு செய்வது நாம், அந்த முடிவில் நம் அறிவுக்கு எட்டிய வரையில் அதோடு கொஞ்சம் நம்ம விருப்பு வெருப்பு இருக்கும் இருக்க செய்யும்தானே? அப்படி இருக்கையில் அவர் அவர் அவர்களது வர்ணத்தை உயர்த்தி பேசுவது இயற்க்கையே.

என்னை எடுத்துக்கோங்க, நான் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் நண்பர்களுடன் பேசும் போது இந்தியாவை விட்டு கொடுக்க மாட்டேன், இந்தியாவில் இருக்கும்போது தமிழ் நாட்டை விட்டு கொடுக்க மாட்டேன். சென்னைல இருந்தா ஏய்... தமிழ் தரணியில் நெஞ்சை அல்லும் தஞ்சை-ன்னு சொல்லுவேன். அதே நண்பர் கூட்டம் தஞ்சாவூரா இருந்தா ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா-ன்னு பேசுவேன். என்ன ஊர பத்தி பேசுரனேன்னு பார்க்காதீங்க... அதுவும் நமக்கு ஒரு வர்ணம்தானே.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.

ங்கொய்யா... த கேஸ்

ங்கொய்யா... த கேஸ்

என்னடா இரண்டு பதிவுக்கு முன்னாடி "அய்யா த பாஸ்"-ன்னு போட்டான் இப்ப ங்கொய்யா த கேஸ்-ன்னு போடரானேன்னு பார்க்குறீங்களா... உண்மைய சொன்னேன் (பாட்ஷா ரஜினி மாதிரி படிங்க).

பின்ன பதவிக்காகவும் சீட்டுக்காகவும் மாறி மாறி படுக்கிறவங்கள மன்னிக்கவும் படுத்துரவங்கள கேஸ்-ன்னு சொல்லாம வேறு என்ன சொல்லுரது?


மணி: மருத்துவர் ங்கொய்யா "ஜன நாயக அடிப்படையில்" ஓட்டெடுப்பு எடுக்க போரேன்னு என்ன இது 7, 8-ன்னு போர்ட் தூக்கி காமிக்கிறீங்க? தி.மு.க-வில் 7 கோடி தரேன் அ.தி.மு.க-வில எட்டு கோடி தரேன்னு சொன்னாங்களா?
ங்கொய்யா: நம்மள மாதிரி சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் ஜன-ங்கள நாயாக அடி-ப்போம்ன்னு சொன்னேன். 7, 8 கோடியா, ஏய் மணி நீ வர வர ரொம்ப கேடியா மாறிகிட்டு இருக்க.
காடு வெட்டி: ங்கொய்யா, மணி ஏன் என்ன மாதிரி மாறனும், அதான் கேடியா நான் இருக்கேன்ல்ல, எனக்கு எதுக்கு ஒரு போட்டிய உருவாக்குறீங்க?சரி சரி இப்பவாவது சொல்லுங்க, என்ன அது 7, 8 -ன்னு போர்ட்-ல?
ங்கொய்யா: அதுவா தி.மு.க கூட்டணி வச்சா குண்டாஸ்ல உனக்கு 7 வருஷம், அ.தி.மு.க வோட வெச்சா 8 வருஷம்... உனக்கு வசதி எப்படி?
காடு வெட்டி: மரத்த வெட்டி, மாட வெட்டி இப்ப கடு வெட்டிகிட்டயேவா, வன்னிய சங்க தலைவன் மென்னிய புடிச்சி பார்க்குறீங்களா?
மணி: யோவ் காடுவெட்டி, இந்த மரம் வெட்டிய நம்புனா நம்ம கதி அதோகதிதான், அவருக்கு 7-ஓ இல்ல 8-ஓ சரி, நமக்குதான் 7 1/2 (ஏழரை)...சும்மா கம்னு இரு.

கோடை விடுமுறையில் ஆக்கப்பூர்வம்...

மார்ச், ஏப்ரல், மே மாதம் இந்தியாவில் பரிட்சை மற்றும் விடுமுறை காலம், இங்கு எங்களுக்கு ஸ்ப்ரிங்க் என்னும் வசந்த காலம், கடும் குளிரில் வீட்டில் அடைபட்டு கிடந்த குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதை பார்த்தவுடன் எழுத ஆரம்பித்து விட்டேன்.

ஆக்கப்பூர்வம் - கிரியேட்டிவிட்டி என்பதர்க்காண உரிய தமிழ் வார்த்தையாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஆக்கப்பூர்வ படைப்பு/சிந்தனை/கருத்து (கிரியேட்டிவ் ஆர்ட்/திங்கிங்க்/ஐடியா) -க்கு அடித்தளம் சிறந்த கற்பனை திறன், அந்த கற்பனை திறனை (சிறுவர்களிடம் இயற்க்கையாகவே இருக்கும், அதை கண்டு பிடித்து) வளர்க்க நாம் முயற்ச்சி செய்ய வேண்டும்.

இங்க நான் எப்படி அந்த ஆக்கப்பூர்வத்த வளர்க்கறது என்பதி பற்றி சொல்ல வரவில்லைங்க... என் சொந்தகதைய சொல்லுரேன் அவ்வளவுதான்.

ஆக்கப்பூர்வத்த உண்டாக்க இப்பவும் அப்பவும் பல விசயங்கள் இருக்கு அத ஒன்னு ஒன்னா சொல்லுரேன்.

இப்ப அத நம்ம இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் சம்மர் கேம்ப் அப்படின்னு சொல்லிகிறாங்க... நமக்கு அது கோடை விடுமுறை... எனக்கு அது கோடையில் மாடு மேய்த்தல். அதாங்க நமக்கு சொர்க்கம்... நமக்குள்ள இருக்கிற பல பரிமாணங்கள் அப்பதான் வெளிவரும்.

பிளே டோவ்: வயல்ல அப்பதான் அறுவடை முடிந்து களிமண் நல்ல பதமா இருக்கும்...அதான் எனக்கு பிளே டோவ்... சைக்கிள், கார், பஸ் ஏரோ பிளேன்-ன்னு எல்லாம் செஞ்சு காய வெச்சு இயற்க்கை வண்ணம் பூசி (கரி-கருப்பு, செங்கள்-சிவப்பு, பூலம் பழம்- நீலம்) வாழை மட்டைல நாறு உரித்து, வாய்ல சவுண்டு விட்டு வீட்டுக்கு ஓட்டிகிட்டு போயிடுவேன்.

லெகோ பிளாக்ஸ்: அடடா இந்த பிளாக்ஸ்ல என்ன ஒரு வெரைட்டி இப்போ... மக்கா இப்ப தெரியுதா நான் ஏன் சோகக்கதைன்னு சொன்னேன்னு. என் சம்மர் கேம்ப்ல நான் தேங்கா குரும்பை, நுனா காய், கோவைக்காய் (இப்ப இத சாப்பிடுராங்கடோய்), வேப்பங்காய் இப்படி சிறியதும் பெரியதுமாய் காய்களை ஈர்க்கு (தென்னை மட்டையில் உள்ள ஓலையில் இலையை சீவினால் கிடைக்கும்) குச்சியில் கோர்த்து பூம்புகார் கலைக்கூடம், அண்ணா அறிவாலயம், தாஜ்மஹால் மற்றும் ஈபிள் டவர் (இலங்கை டி.வி ரூபவாகினி-ல பார்த்தது) வரைக்கும் கட்டுவேன்.

ஸ்விம்மிங்க் ஃபுளோட்: வாழை சீஸன் முடிந்து இருந்தால் வாழை கொள்ளையில் வெட்டி போட்ட மரத்தை எடுத்து வந்து ஆத்துலயோ இல்ல குளத்திலயோ போட்டு தம்பட்டம் அடிப்போம். இல்லையா இருக்கவே இருக்கு எருமை மாடு... அது வாலை பிடித்துக் கொண்டே குளத்தில் நீந்தி வருவோம்.

இப்படி நாம் விளையாட்டாய் கற்ற ஒவ்வொன்றும் இன்று வியாபாரமாய்... வேறு என்ன சொல்ல?

கத்தி போயி புத்தி வந்தது டும்... டும்... டு... டும்

கத்தி போயி புத்தி வந்தது டும்... டும்... டு... டும்
பிளேடு போயி ஷார்ப்னர் வந்தது டும்... டும்... டு... டும்

ஒரு காரியத்த சிறப்பா செய்து முடிக்க கத்தியும் (சத்தம் போட்டு வேலை வாங்குதல்) உதவி இல்ல, கத்தியாலயும் (ஆயுதம் காட்டி மிரட்டியும்) உதவி இல்ல, உனது புத்தி உதவினால் தான் செய்து முடிக்க முடியும் எனபதை ஒரு சிறிய பழ மொழியில் "கத்திய தீட்டாத புத்திய தீட்டு"-ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

நாம ரொம்பவே பெரியவங்க பேச்ச கெட்டு நடக்குரோம்ன்னு நினைக்கிறேன்... ஏன்னா இப்ப புத்திய தீட்டி தீட்டி... த டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட் -னு சொல்லுற மாதிரி ஆயிடுச்சி.

இந்த பென்சில் சீவுர விசயத்த பாருங்களேன்... நம்ம எல்லோருமே இந்த அனுபவத்த பெற்று இருப்போம்ன்னு நினைக்கிறேன்.

பென்சில் சீவ உதவியது...

1. பிளேடு - அப்பா முகச் சவரம் செய்து தூக்கி போட்ட பிளேடு. புதுச எடுக்காத பழச உபயோகப் படுத்துன்னு சிக்கனத்தையும் கூட சொல்லி கொடுத்தது அம்மா (போட்ட) பிளேடு.

2. பென்சில் சீவி (ஷார்ப்னர்) - நம்ம எழுதி கிழித்த கிழியில் சீவி மாளாமல், பிளேடால் சீவும் போது விரலில் ஏற்ப்பட்ட ரணகளத்தால்... ஷார்ப்னர் ஒரு வர ப்ரஸாதம் என்று கூட சொல்லலாம்.

(கீழ்கண்ட இரண்டையும் நான் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் பார்த்தது இல்லை, அமெரிக்கா வந்த பிறகு பார்த்தது)

3. இயந்திர பென்சில் சீவி (மெக்கானிகல் ஷார்ப்னர்) - பென்சில அதற்குரிய துவாரத்தில் பொருத்தி, லீவர (காப்பி கொட்டை அறைப்போமே அது மாதிரி) நாலு சுத்து சுத்தி... கூர்மை போதுமான்னு பார்த்து, போதவில்லை என்றால் இன்னும் ரெண்டு சுத்து சுத்தினால் கூர்மை ரெடி.(அது சரி, எழுதி கை வலிப்பது மட்டும் குழந்தைகளுக்கு போதும் என்ற நல்ல மனதோடு இதை கண்டு பிடிச்சி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்)

4. மின்னியல் பென்சில் சீவி (எலக்ட்ரிகல் ஷார்ப்னர்) - இது இயந்திர பென்சில் சீவியை விட ஒரு படி மேலே. பென்சில அதற்குரிய துவாரத்தில் பொருத்தினால் போது அதுவே கூர்மை சரி பார்த்து சீவுவதை நிறுத்தி விடும்... பொருத்து - அழுத்து - எழுது.

த டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட் - உண்மைதான். அதனால் நாம் பெற்றவை எவை? இழந்தவை எவை?

பிளேடு உபயோகிக்கும் போது சிக்கனத்தையும், மறுப்பயன்பாட்டையும் (ரீசைக்கிள்), கவனத்தையும் கற்றுக் கொண்டோம். பென்சில் சீவி (கையால் / இயந்திர) உபயோகிக்கும் போது கைக்கு ஒரு பயிற்ச்சி (எக்ஸர்ஸைஸ்) மற்றும் துல்லியம் (பிரிசிஸன்) கற்றுக் கொண்டோம்.

கடைசியில்...அவசர உலகில், துரித உணவு உண்டு, பென்சில் சீவ கூட கையில் திராணி இல்லாமல், சோம்பேரிகளாக மாறி விட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது.

அய்யா...த பாஸ்

அய்யா... த பாஸ்
ஜீ.கே.மணி: அய்யா... என்ன இப்படி பொது கூட்டத்துல சிவாஜி படத்துல வர விவேக் மாதிரி சிரிக்கிறீங்க... கூட்டணி பத்தி பேச வரவங்க கோபப் பட போறாங்க.

மருத்துவர்: ஹா... ஹா... ஹா... மணி பத்திரிக்கை காரங்ககிட்ட தி.மு.க-வும் கூப்பிடல அ.தி.மு.க-வும் கூப்பிடலன்னு சொன்ன உடனே உழுந்தடிச்சி ஒடி வருவாங்க...

ஜீ.கே.மணி: வந்தா...

மருத்துவர்: வந்தா... அவங்கள அபீஸ் ரூமுக்கு அனுப்பு... 15 சீட்டு வேணும்... குறிப்பா நமக்கு வட மாவட்டங்கள்தான் வேணும்ன்னு கேட்கனும்.

ஜீ.கே.மணி: (இது எல்லாம் சாத்தியமா சிவாஜி-ன்னு விவேக் கேட்க்குற மாதிரி) அய்யா இது எல்லாம் நடக்கிற காரியமா?

மருத்துவர்: ஹா... ஹா... ஹா... மணி வர தேர்தல்ல அவன் அவன் எத திண்ணா பித்தம் தெளியும்ன்னு இருக்கானுவோ... நாம வைத்தியம் பண்ணிடுவோம்... சீட்டுங்கிற பேருல கூட்டணி கட்சிக்கு ஆப்பு அடிச்சிருவோம்.

பா.ம.க-ன்னா சும்மா பதருதுல்ல...

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை கூட கேட்கிறது...

சின்னக் கவுண்டரின் எம்.பி எண் கவுண்டர்

தே.மு.தி.க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்க விரும்பும் தி.மு.க அல்லது அ.தி.மு.க - விடம் 15 இடங்கள் கேட்டதற்க்கு, அது ரொம்ப அதிகம் "கூட கேட்கிறார்" என்று சொல்லி பேரம் பேச வந்த கூட்டணி தலைவர்களுடன்...

(கண்கள் சிவக்க புருவம் உயர்த்தி பேசுகிறார் கேப்டன்)

ஏய்... யார பார்த்து கூட கேட்குறேன்னு சொல்றீங்க... தமிலகத்துல இருக்கறது 39 எம்.பி சீட்டு, பாண்டிச்சேரி ஒன்னு மொத்தம் சேர்த்து 40 எம்.பி சீட்டு. அதுல சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ராசிபுரம், தென்காசி மற்றும் நாகப்பட்டினம்னு 5-ம் தொகுதி தனித் தொகுதி.

தமிலகத்துல அஞ்சி கச்சி பெரிய கச்சி அதுல மூனாவது பெரிய கச்சி எங்க கச்சி, அந்த அஞ்சி பெரிய கச்சிய வச்சு பிரிச்சா அய்யெட்டு நாப்பது. மூனு பெரிய கச்சிக்கும் 8 தொகுதின்னு பிரிச்சா மூவெட்டு 24, பாக்கி 16 சீட்டு. நாங்க கூட்டணி வெக்கப் போரது ஏதாவது ஒரு கச்சி கூடத்தான். அப்படி ரெண்டு பேருக்கும் சமமா பிரிச்சா ஆளுக்கு எட்டு சீட்டு. தே.மு.தி.க வுக்கு 8 சீட்டு + கூட்டணி தருமத்துக்கு எட்டு சீட்டுனு மொத்தம் பதினாறு சீட்டு.

நான் படத்துல நடிகனா பாக்கிஸ்தான் தீவிரவாதிய அடிக்கும் போதே கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் அடிப்பேன். இப்ப அரசியல்வாதியா இருக்கேன் விட்டுக் கொடுக்காம இருப்பனா? எங்களுக்கு உள்ள 16 சீட்டுல 1 சீட்ட பழம் பெரும் கச்சியான நீங்களே எடுத்துக்கோங்க, எனக்கு 15 போதும்.

எங்களுக்கு கெடச்ச 15-ல நாங்க 10 ஜெயிப்போம் 5 தோப்போம், அதே மாதிரி சீட்டுல ரெண்டு பங்கு வாங்கிட்ட நீங்களும் 10 தொகுதியில் தோப்பீங்க 15 தொகுதியில் ஜெயிப்பீங்க. ஆக நீங்க 15-ல வெற்றி, தே.மு.தி.க 10-ல வெற்றி மொத்தத்துல 25 தொகுதியில் நம்ம கூட்டணி வெற்றி.

இப்ப தனித் தொகுதியில் மாற்றம் செஞ்சி இருந்தாலும் சரி... தொகுதி சீரமைப்புனு மாற்றம் செஞ்சி இருந்தாலும் சரி... அதேதான் கணக்கு. என் கூட கூட்டணி வைக்கிறவங்களுக்கு வெற்றி நிச்சயம்.

ஏய்... யாரப் பார்த்து சொன்னீங்க கூட கேட்குறேன்னு? தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை கூட கேட்கிறது... கூட கேட்கிறது... கூட கேட்கிறது.

பதறினால் சிதறிடுவாய்

பதறினால் சிதறிடுவாய், எங்கயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கா? நம்ம ஊரு லாரியில் பின்னாடி எழுதியிருக்கும். லாரியை கடக்கும் போது நாம ரொம்ப கவனமா பதறாம இருக்கனும்னு சொல்லி இருப்பாங்க. மண்ணு லாரியையும் தண்ணி லாரியையும் பார்த்த பிறகுமா... அது சரி லாரிய ஓட்டிகிட்டு வருவது அவங்க... நாம எப்படி பதறாம இருக்கிறது?

அமெரிக்காவில் எனது நண்பர் அவர் பெயர் லேரி... நம்ம லாரி-ன்னு வைச்சுக்கோங்க. அவர் தன் மனைவி கொஞ்ச நாளா சரியா பேச மாட்டேன்கிறாங்க, சரியா சாப்பிட மாட்டேன் எங்கிறார்கள் என்று பதறி மனைவியை ஒரு குடும்ப நாட்டாமை டாக்டர் (ஃபேமிலி கவுன்சிலிங்) கிட்ட அழைச்சிகிட்டு போனாரு.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நாட்டாமை, லேரியின் மனைவி மிகவும் மன அழுத்தத்துடனும் மன சோர்வுடனும் இருப்பதை விளக்கி கூறி, மன அழுத்தம் போக வேண்டுமானல் லேரியின் மனைவி அவருடைய மன குமுறளை ஏதாவது ஒரு வகையில் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று கூறினார்...அதற்கு பெயர் வெண்டிங் த ஃப்ரஸ்ட்ரேஸன் என்று விளக்கினார்.

லேரிக்கும் லேரி மனைவிக்கும் ஒன்றும் புரிய வில்லை... (லேரி மனதிற்க்குள் திட்டிக் கொண்டு இருந்தான் இவதான் நம்மை தினமும் திட்டி தீக்குரா... இன்னும் என்ன என்று யோசிக்க). நாட்டமை நிலைமையை புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தார்...

உதாரணத்திற்க்கு இத பாருங்க... இது காற்று நிரப்பிய கம்பு... அடித்தால் வலிக்காது... இதால் உங்கள் கணவரை அடிக்கலாம் அல்லது... என்று மேற்கொண்டு பேச முற்பட... இடையில் லேரி சுதாரித்து கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்ல... நாட்டமை சொன்னார்... சற்று பொருங்கள் உங்கள் மனைவி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என சொல்ல... லேரியின் மனைவியோ... ஆமாம் நான் அவரை அடிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைப்பது உண்டு என்று சொல்ல...

நாட்டாமை லேரியை ஒரு பார்வை பார்த்து விட்டு காற்று நிரப்பிய கம்பை லேரியின் மனைவியிடம் கொடுக்க... லேரி மனைவி தண்ணி லாரி கணக்கா லேரியை வெளுக்க... அடி வாங்கி பதறிய லேரி சிதறிய குரலில் நாட்டாமையை கேட்டான்... நாட்டாமை அடித்தது போதுமா இல்லை நிறுத்திக்கலாமா என்று...

நாட்டமை சொன்னார்... எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை உங்கள் பார்வை நேரம் இன்னும் அரை மணி நேரம் மீதம் இருக்கிறது என்று.

நம்ம ஊர் லாரியின் வசனம் லேரிக்கு ரொம்ப பொருத்தமா இருந்தது.

அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே

அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா... தோப்புக் கரணம் போடவா...

நான் பாட்டு பாட வரலீங்க, தோப்பு கரணம் சம்பந்தமா ஒரு சுவையான தகவல்... இப்ப இது கொசுரு தான். தொடு உணர்வு சம்பந்தமா பல ஆராய்ச்சி, காது ஏன் குத்துரோம் மூக்கு ஏன் குத்துரோம்... ஃபிஸியோ தெராபிஸ்ட் கைரோ பிரக்டிஸ், அக்கு பஞ்சர் அப்படி இப்படி..., சரி சரி பட்டியல நிறுத்திட்டு பட்டுன்னு மேட்டருக்கு வரேன்.

தோப்புக் கரணம் பற்றிய எனது முதல் பதிவ கொஞ்சம் போயி படிச்சிட்டு வாங்க, சிந்திக்கிர மேட்டருக்கு முன்னாடி சிரிப்பு மேட்டர்.

http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_8580.html

http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_1541.html

படிச்சிங்களா... அதுல என்னவோ குறையுதுள்ள? சிரிக்கிர மேட்டரா அது சிந்திக்கிர மேட்டர், அது என்னவென்று கண்டு புடிச்சிட்டேன்.

அந்த காலத்தில் படிப்பு வரவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக் கரணம் போட சொல்லி இருக்கிறார்கள். தோப்பு கரணம் போடுடா அப்ப-வாவது புத்தி வருதான்னு பார்ப்போம்னு சொல்லி... அதோட மகிமை தெரிஞ்சி.

இப்ப யாரவது வாத்தியார் (பின்ன... முன்ன மாதிரி யாரு ஆசிரியர் இல்ல அய்யான்னு கூப்பிடுறாங்க... யோவ் வாத்தி-ங்கிறான் இல்ல ங்கொய்யா-ங்கிறான்) தோப்புக் கரணம் போடுன்னா அது இப்ப பனிஷ்மெண்ட் ஆயிடுச்சி... தோப்புக் கரணம் போட்ட பையனுக்கு புத்தி வருதோ இல்லியோ, போட சொன்ன வாத்தியாருக்கு பையனோட அப்பா கிட்ட இருந்து ஆப்பு வரும்.

இந்த வலை இணைப்பை சொடுக்கி பாருங்க உண்மை தெரியும். என்னுடன் கீதை படிக்கும் குழுவில் உள்ள ஒரு நண்பர் அனுப்பி இருந்தார்... அவருக்கு நன்றி.

http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

என்னங்க பார்த்தீங்களா? படிச்சா போதாது... அப்படியே எழுந்து ஒரு 50 போடுங்க... 1,2,3

மொக்கை...

கடவுளே வர வர எதுல ஆராய்ச்சி செய்வது என்ற விவஸ்தையே ( நான் என்ன சொன்னேன்... அவ்வ்வ்வ்வ்) இல்லாமல் போய் விட்டது... பின்ன மொக்கைக்கு ஒரு பதிவு போடுற அளவுக்கு போயிடுச்சில்ல.

சரி இந்த மொக்கை என்ற சொல் எப்படி வந்திருக்கும்? ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அதுதான் இந்த பதிவின் ஆராய்ச்சி. நான் நினைக்கிறேன் இருக்க வேண்டிய ஒரு விசயம் அங்கு இருக்காமலோ அல்லது நடக்க வேண்டிய ஒரு காரியம் அங்க நடக்காமலோ... இப்படி பல ...லோ-க்களை 'கை' விட்டு போதல் என்று சொல்லுவோம்.

உதாரணத்திற்க்கு சில 'கை-களை பார்ப்போம்.

வாயில் பல் இருக்க வேண்டும், அப்படி பல் வாயில் இல்லாவிட்டல் பொக்கை.

பழத்தில் சாறு இருக்க வேண்டும், அப்படி சாறு/சத்து பழத்தில்/பொருளில் இல்லாவிட்டால் சக்கை.

தலையில் முடி இருக்க வேண்டும், அப்படி முடி தலையில் இல்லாவிட்டால் வழுக்கை.

பதிவில் தகவல் இருக்க வேண்டும், அப்படி தகவல் பதிவில் இல்லாவிட்டால் மொக்கை.

சரி பல் போனா வாயில் பொந்து போல இருக்கும் பொ+கை = பொக்கை, பழமோ இல்லை எந்த ஒரு சத்து உள்ள பொருளில் இருந்து சத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதால் ச + கை = சக்கை.

அப்ப மொ + கை = மொக்கை, மொ-ன்னா என்ன? தகவல் தொலைந்து போனா தொக்கை என்றோ இல்லை சாரம் இல்லாத தகவல் தக்கை என்றோ அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

இப்படி ஏதாவது ஏடா கூடமா கேட்ப்பீங்கன்னுதான் அங்க வழுக்கை பத்தியும் போட்டிருக்கேன். அதுக்கு இதுக்கும் சரியா போயிடுச்சி. என்கிட்ட இருப்பது ஒரு கை, அது இப்படி மொக்கை பத்தி பதிவு போடலாம் என்ற நம்பிக்கை.

நான் பிச்சைக்காரன்...

பயப்படாதீங்க, நான் இத படிக்க வந்த உங்க கிட்ட பிச்சை கேட்களீங்க, நான் கடவுள்-னு ஒரு படம் எடுத்தாரே இயக்குநர் பாலா அவர்கிட்ட கேட்கிறேன்...

அய்யா... சாமி... பாலா... தயவு செய்து இப்படி கொல்லாதீங்க அய்யா... ஆசைபட்டு படம் பார்க்க வந்த எங்கள ஏன் சாமி இந்த பாடு படுத்துறீங்க... நாங்க என்ன சாமி குத்தம் செஞ்சோம்...

ஏதோ பாலா படத்துல கொஞ்சம் நகைச்சுவை இருக்கும் என்பதை மறக்காமல், பிச்சை எடுக்கும் போது அப்ப அப்ப பழைய சோத்துக்கு நடுவே சுடு சோறு கிடைக்குமே அதே மாதிரி, அங்க அங்க வரும் அந்த குள்ளர்களின் வசனமும், எம்.ஜி.ஆர் வேடத்தில் வருபவர் சிவாஜி வேடத்தில் உள்ளவரை பார்த்து "கணேசா எவன் எவனோ நடிகன்னு வந்து கொல்ராம்பா... நீ கொஞ்சம் நடிப்ப சொல்லி கொடுத்துவிட்டு போயிருக்க கூடாதா"-னு கேட்பார்... சிரிக்கும் படியாக இருந்தது.

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பார்த்து... அடடா ஒரு படத்திற்க்கு இயக்குநர் தான் கதாநாயகன்-னு மீண்டும் நிருபித்து இருக்கான்னு நினைச்சு சந்தோஷப் பட்டேன்... அத நீங்க காலி பண்ணிப்புட்டீங்களே சாமி... இது நியாயமா? தருமமா?

அய்யா... பிச்சை எடுக்கும் போது தருமம் பண்ணுங்க சாமின்னு கேட்ப்பாங்க... நானும் அதான் கேட்கிரேன்... காசு கொடுத்து சினிமா பார்க்க வர எங்கள தயவு செய்து பல்ல பிடிச்சி பதம் பார்க்காம... மக்களின் ரசனை என்கிற பல்ஸை பார்த்து படம் பண்ணுங்க சாமி.

யார் கடவுள்?
இயக்குநர் கடவுளா?? இல்ல...
படத்தோட கதை கடவுளா???

இல்லீங்க இந்த கருமத்த எல்லாம் காசு கொடுத்து படம் பார்க்கிற நம்ம தாங்க கடவுள்

தே பா ச...

2002 இந்திய அரசை பாரதிய ஜனதா பார்டி ஆட்சி செய்தபோது தேசிய நலனை கருத்தில் கோண்டு கொண்டுவரப் பட்ட சட்டம் (பொடா-PoTA) தே.பா.ச என்கிற தேசிய பாதுகாப்புச் சட்டம்.

ஆனா அது தேசியத்த பாதுகாத்ததை விட பல அரசியல் தேராவெட்டிகளை பாதுகாத்ததுதான் அதிகம். ஒரு கால கட்டத்துல வடக்கு முதல் தெற்க்கு வரை அது அரசியல் வாதிகளின் மீது தேடி பாயும் ட்டம் ஆக இருந்ததுன்னே சொல்லல்லாம்.

தமிழகத்துல நம்ம அ.இ.அ.தி.மு.க கொ.ப.செ (அட செல்வி ஜெயலலிதாங்க) அந்த தே.பா.ச-வ நம்ம வைக்கோ மேல போட்டாங்க... என்ன ஆச்சு? அண்ணன் மு.க தம்பி மீது சுமத்தப் பட்டுள்ள அவதூருகளை தேடி பார்த்தோம் ரியில்லை... அவரு வைக்கோ இல்ல சைக்கோ-ன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் பழ. நெடுமாறன் மேல, அவர் மேல இவர் மேலன்னு இப்ப இயக்குனர் சீமான் வரைக்கும் வந்து நிக்குது... தேடி பார்த்தோம் ரியில்லை என்று சொல்லி விடுவார்கள்.

ஆமாம் நீங்க இந்த பதிவுல என்னத்த தேடுறீங்க? மெஸேஜா? நையாண்டியா?

என்ன நக்கலா? பதிவோட தலைப்ப பாருங்க... மு.க சொன்னதையேதான் நானும் சொல்றேன். தே.பா.ச-ன்னா தேடி பார்த்தோம் சரியில்ல.

தி.மு.க-வின் கைப்புள்ள...

மத்திய அமைச்சர் ராசா என்னா சொல்லி இருக்காரு பார்த்தீங்களா? மருத்துவர் ராமதாசு பேசுவது "திண்ணையை பிடிக்கும் முயற்ச்சியே, திண்ணிய முயற்ச்சி இல்லை".

ஆஹா கலைஞ்சர் வீட்டு கட்டுத்தறி இசை அமைக்குதா இல்ல? கனிமொழி வீட்டு கட்டில் கவி பாடுதான்னு தெரியலயே?

சரி யார் சொல்லி கொடுத்து சொன்னா நமக்கு என்ன... எதுகை மோனையோட படிக்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா எனக்கு ஒன்னு நல்லா தெரியும், அமைச்சர் ராசா இப்படியே பேசிகிட்டு இருந்தார்ன்னா மரம் வெட்டி மருத்துவர் அய்யாவோட ஆளுங்க திண்ணிய முயற்ச்சி பண்ணி ராசாவோட மெண்ணிய பிடிப்பது உறுதி.

ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி இப்பதான் தாத்தா தயாநிதி கூட சேர்ந்து உனக்கு ஒரு ஆப்பு வெச்சாரு, நீ இத சொன்னதுக்கும் ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு நாளைக்கே மா.வெ.ம.அ கூட கூட்டணி வெச்சுடுவாரு, வெச்சதுக்கு பரிகாரமா உன் தொகுதிய பா.மா.க-வுக்கு விட்டு கொடுத்திடுவாரு... பார்த்து பேசுப்பா... மத்திய அமைச்சர் பதவி, பிறகு தொகுதி... அவ்வ்வ்வ்வ்வ்

கோடீஸ்வர சேரிநாய்

என்ன கொடுமை சார் இது? நீங்க இந்த பதிவோட தலைப்ப சொல்லுறீங்க... நான் எனக்கு தெரிஞ்ச தமிழ்ல ஸ்லம்டாக் மில்லினியர் படத்தோட பேர மொழி பெயர்த்தா அப்படிதாங்க வருது அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?

ஏங்க நான் தெரியாமதான் கேட்குறேன் இந்த படத்துக்கு கோடீஸ்வர சேரிபையன்-ன்னு அதாங்க ஸ்லம்பாய் மில்லினியர்-னு வெச்சிருந்தா இன்னும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம். நீங்க என்னா நினக்கிறீங்க?

எனக்கு என்னவோ டைரக்டர் டேனி பாயலுக்கோ அல்லது ரைட்டர் சைமன் பியூபாய்க்கோ தங்கபூமி விருது குழு-வில் யாரையாவது தெரிஞ்சிருக்கனும்ன்னு நினைக்கிறேன். விஹாஸ் ஸ்வரூப்-பின் மூலக் கதை, லவ்லீன் டேண்டனின் திரைக்கதை - சும்மா சொல்ல கூடாது மூன்று டிராக் கதை (ஹூ.வா.மி நிகழ்ச்சி - இண்ட் ராகேஸன் - பழைய சம்பவம்) ஒருங்கிணைப்பு அருமை... பாராட்டலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக அருமை. இளையராஜா இசைக்கு ஈஸ்வரன் என்றால், இவர் கோடீஸ்வரன்.

கௌவுதம் மேனன் மட்டும் வாரணமாயிரம் படத்துக்கு ஆங்கில பேரு வெச்சிருந்தா நிச்சயம் ஆஸ்கர் கிடைச்சிருக்கும். என்னடா இப்படி சொல்லுரனேன்னு நினைக்காதீங்க என்கிட்ட இருக்கு காரணமாயிரம். மக்கா படம் முழுவதும் ஒரே இங்கிலீஸுதான்.

சரி விடுங்க... இதுக்காக வடக்கு வாழ்கிறது தெற்க்கு தேய்கிறதுன்னு நினைக்காதீங்க. எப்ப ஒரு ஹிந்தி படம் தங்க பூமி விருது வாங்கினுதோ அது மணி ஓசை (வரும் முன்னே) யானை-யா (வரும் பின்னே) அடுத்தது ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருது வாங்கப் போவது நிச்சயம் - அதுவரை காத்திருப்போம்.

ஆந்திரா காரனுக்கு புத்தி லட்டு

ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு... அது பழ மொழி, நம்ம தலைப்பு தாங்க இப்ப புது மொழி.

கொல்டி - இது தெலுங்கு என்கிற வார்த்தையின் உல்டா என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. அவர்கள் உல்டா (புரட்டி) போடுவதில் வல்லவர்கள் என்பதற்க்கு பல விசயங்கள் உள்ளது. படிக்காமலே பட்டம் வாங்குதல், கணணி மொழியில் அனுபவமில்லாததில் ஐந்து முதல் பத்து வருடங்கள் அனுபவம் என்று ரெஸ்யூம் தயார் செய்தல் இப்படி பல...

அந்த கொல்டி மகுடத்தில் இபோது ஒரு வைர கல்லை பதித்து இருக்கிறார் சத்யம் ராமலிங்க ராஜூ... (SATYAM) உண்மை-யை உல்டா பண்ணி (MAYTAS) மேடாஸ் என்று... பின்ன அவரும் கொல்டிதானே.

நண்பர் சொன்னார் ஒரு புது மொழி...

ஆமை புகுந்த வீடும் ஆந்திரா காரன் புகுந்த கம்பெனியும் உருப்படாது.

ஆந்திராவில் ஸ்டியரிங்கோ, கரண்டியோ பிடித்தவன், மற்றும் ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தையில் இருந்து எல்லாம் இங்க வந்து கணிப்பொறி எஞ்ஜினியராக வேலை செய்கிறார்கள் என்று.

நம்ம கொல்டி நண்பர் என்ன சொல்ரார்ன்னு கேளுங்க...

கொல்டி: விடுங்க சார்... எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?

அங்க கார் டிரைவர்... இங்க ப்ராஸஸ் டிரைவர்

அங்க கோங்குராவ குக் பண்ணுனோம்... இங்க (COBOL) கோபால் கோட குக் பண்ணுரோம்.

ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தை என்ன சார், டெலிவுட்ல மார்கெட் போன லைட் பாய்லேருந்து டைரக்டர் வரைக்கும் இங்க இருக்கோம் சார்.

சார்... இங்க கோடு எழுதர கூட்டத்துல ஜெயில்ல இருந்து தப்பி வந்த சில நக்சல்பாரிகள் கூட இருக்காங்க... ரொம்ப பேசுனீங்க... சம்பேஸ்தானு.

சார் இக்கட ரா சார்... உங்களுக்கு SAP தெரியுமா சார்?

நானும் சொன்னேன் அது ஒரு இ.ஆர்.பி, அது இதுன்னு.

கொல்டி: சார் தெரியிலன்னா தெரியலன்னு சொல்லு சார். SAP-ன்னா Software for Andra Pradesh-ன்னு

இப்ப சொல்லுங்க இந்த இடுக்கையின் தலைப்பு சரிதானே?

கொல்டி சொல்லுரது இருக்கட்டும் நம்ம சூப்பர் ஸ்டார் என்ன சொல்ரானுன்னு கேளுங்க

ஆ... ஹா... ஹா...
கண்ணா... நான் சொல்ரேன் நல்லா கேட்டுக்கோ...
மண்ணோட மணமும்...
மனுஷனோட குணமும்...
மாறவே மாறாது...

ஆ... ஹா... ஹா...
அது ஆந்திராவா இருந்தாலும் சரி
அமெரிக்காவா இருந்தாலும் சரி..

ஆ... ஹா... ஹா...
கண்ணா... ஆந்திராகாரன் அறிவ வெச்சு வேலை செய்ரவன்...
நான் தமிழன்...
அறிஞர் அண்ணா சொன்ன பகுத்தறிவ வெச்சு வேலை செய்ரவன்...

ஆ... ஹா... ஹா...
கண்ணா... அறிவு பெருசா இல்ல
பகுத்தறிவு பெருசான்னு கூட்டி கழிச்சி பாரு...
கணக்கு கரக்டா வரும்... ஆ... ஹா... ஹா...

எளே யாருளே அது முழிக்கிறது... அறிவு மூணு எழுத்துலே... எளே பகுத்தறிவு அஞ்சுல்லே... பின்னே பெருசுதானே...

இந்தியனே... நீ கருப்பா இல்லை வெள்ளையா?

அமெரிக்காவில் ஒரு கருப்பின அதிபர் வந்தபின் எங்கள் அலுவலகத்தில் என் குழுவில் அதை பற்றி பட்டும் படாமல் பேச்சு நடந்தது. எங்கள் குழுவில் கருப்பு இனத்தவர் இல்லாததால் கொஞ்சம் வெள்ளை தூக்கலாக இருந்தது. அதை பார்த்த எனக்கு வழக்கமாக வரும் நக்கல் தூக்கலாக...

நான் கருப்பு பாதி வெள்ளை மீதி
இரண்டும் சேர்ந்த கலவை நான்
கருப்பை கொன்று கருப்பை கொன்று
வெள்ளை வளர பார்க்கிறதே...

ஏய்... நாங்கெல்லாம் பி-க்கு பி, டபிள்யூ-க்கு டபிள்யூ.
புரியல? பிளாக்கு-க்கு பிரவுனு, வொயிட்டு-க்கு வீட்ட்டு.

அதாண்டா கோதுமை...

ஏண்டா எருமை
இப்ப புரியாதடா
எங்க அருமை?

நான் தப்பையும் அடிப்போம்,
தவிலையும் அடிப்போம்,
ரெண்டும் கிழிஞ்சி போனாதச்சி போட்டு அடிப்போம்...

ஏ டண்டனக்கா..
ஏ டணக்குனக்கா...

(ஹி... ஹி... எல்லாம் எங்க ஊர் காரர் தாக்கம் தூக்கலாக ஆனதால் வந்த விளைவு. )