எங்கே இருக்கிறேன் நான்...

இன்று நான் ஒரு கணம் என்னையே வியந்து கொண்டபொழுது, என் மனதில் எழுந்த கேள்விதான்... எங்கே இருக்கிறேன் நான்?

தமிழகமோ இல்லை புலம் பெயர்ந்த அகமோ, வேலை வேலை... எல்லோருக்கும் வேலை என்று ஆளாய் பறந்துகொண்டிருக்கும் நாட்களில், நாடு எந்த நாடாய் இருந்தால் என்ன? நம் மண்ணும் நம் பழக்க வழக்கமும்தான் நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பழக்கம் என்பதை மிக அழகாக உணர்த்தினார் என் நண்பர்.

ஓர் மாலை நேர சந்திப்பிற்க்காக அழைந்திருந்தேன், வந்தார் முகத்தில் முத்தான சிரிப்புடனும் முக்கனிகளுடனும்... இல்லை நான்கு கனிகளுடன்... ஒரு சகோதரியின் வீட்டுக்கு சீர்வரிசை செய்யப்போகும் சகோதரனாய்.

அவர் கொண்டுவந்தது அப்படியே...


வீட்டிற்க்கு வரும் நண்பர்களை நா(ன்)ம் எப்போதும் வீட்டில் இருந்து “பை” சொல்லுவதில்லை. வாசல் வந்து வழியனுப்புவோம். எப்போதும் என் மகள் கேட்பாள் ஏனப்பா இங்கிருந்தே சொல்லக்கூடாதா என்று... இன்று அவளும் என்னோடு வாசல் வந்து “பை” சொன்னால் நண்பர்களுக்கு.

நன்றி நண்பரே.

யாரிடம் கேட்கிறாய் வரி....

இப்போது அமெரிக்காவில் வருமான வரி செலுத்தும் நேரம், அதையொட்டி வலையில் நான் படித்த ஆங்கில நகைச் சுவையை தமிழில் என் நடையில்...

வரி வசூலிக்கும் அதிகாரி ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பெருசு-கள் அரசாங்க உதவித்தொகையில் உல்லாசமாக இருப்பதை கண்டு, அவர்கள் ஓய்வு காலத்தில் ஈட்டும் வருமானம் பற்றியும், அவர்களிடம் மேலும் வரி வசூலிக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஒரு உல்லாச தாத்தாவிற்க்கு வரி வசூலிக்கும் அலுவலகத்திற்க்கு நேரில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். வரி வசூலிப்பு அலுவலக உரையாடலாக இந்த பதிவு.

உல்லாச தாத்தா (உ.தா) தன் வழக்கறிஞர் உடன் வரி தணிக்கையாளர் (வ.த) அலுவலகம் வருகின்றார். வழக்கறிங்ஞருடன் வந்த உ.தா-வை பார்த்த வ.த-வுக்கு வியப்பு ஒன்றும் இல்லை (ஏனெனில் அமெரிக்காவில் வலிய வந்து ஆஜர் ஆகிறவர்தான் வக்கீல், மாத்திரை சாப்பிட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டீர்களா? உடனடியாக என்னை அனுகுங்கள் அந்த மருந்து நிறுவனம் மீது வழக்குப் போட்டு உங்களுக்கு நிவாரணத்தொகை வாங்கி தருகிறேன் என்று விளம்பரப்படுத்தி நமக்கு உதவி செய்பவர்கள்).

வ.த: வாங்க, எங்கள் அழைப்பை ஏற்று ஒரு பொருப்பான குடிமகனாய் ஒத்துழைப்பு நல்கியதற்க்கு நன்றி. நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள், அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகை பெறுகின்றீர்கள், இருந்தாலும் கெடிலாக் கார், ஹவாய் கப்பல் பயணம் என்று அதீத செலவு செய்கின்றீர்கள், உங்கள் வருமானம் பற்றிய தகவல்களை நீங்கள் எங்களுக்கு (வருமான வரி துறைக்கு) தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

உ.தா: ஓ அதுவா, நான் ஒரு சிறந்த சூதாட்டக்காரன். அந்த வருமானங்களை நிரந்தர வருமானமாக கணக்கில் கொள்ள முடியாது. அதனால் அதை வருமானமாக வகைப்படுத்த இயலாது.

வ.த: அப்படியா? சற்று நம்ப கடினமாக உள்ளது...

உ.தா: என் வார்த்தையில் நம்பிக்கை இல்லை அதானே? நீங்கள் விரும்பினால் ஒரு பந்தயத்தை செயல்முறையில் காட்டினால் ஒத்துக்கொள்வீர்கள்தானே?

வ.த: ம், அது நன்றாக தெரிகிறது, செயல்படுத்திக் காட்டுங்கள். நான் பந்தயத்திற்கு உடன்படுகிறேன்.

உ.தா: நான் என் கண்களை என் பல்லால் கடித்துக் காட்டுகிறேன்... ஆயிரம் டாலர் பந்தயம் என்றார்.

வ.த: தாத்தா தானகத்தான் நடந்து வந்தார், கண் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து ஆகட்டும் என்றார்.

உ.தா. தான் அணிந்திருந்த குளிர் கண்ணாடியையும் கழட்டினார், கூடவே ஒற்றை பளிங்கு கண்ணையும் கழட்டினார். பளிங்கு கண்ணை வாயில் போட்டு கடித்தார்.

வ.த-வுக்கு சற்று வருத்தம், அவசரத்தில் கோட்டை விட்டோமே என்று தாடை தொங்கிற்று.

உ.தா: சரி, இன்னொரு கண்ணையும் கடிக்கிறேன்... ஆனால் பந்தயம் ஈராயிரம் டாலர் என்றார்.

வ.த: ஒரு கண்ணு நொல்லையா இருந்திருக்கும், அதுல நாம் ஏமாந்திட்டோம்... நிச்சயம் தாத்தா இதுல மாட்டிக்கப் போறாரு, சரி ரெண்டாயிரம் பந்தயம் என்றார்.

உ.தா: இப்போது பல்செட்டை கழட்டி அந்த நல்ல கண்ணை கடித்தார்.

வ.த-வுக்கு இப்போது கொஞ்சம் படபடப்பு கூடிட்று, மூன்றாயிரம் போனது கூட வருத்தமாய் இல்லை, தாத்தாவின் வழக்கறிங்ஞர் முன் இப்படி மூக்குடை பட்டுவிட்டோமே என்று உள்ளுக்குள் உதறல்.

உ.தா: கவலைப்படாதீர்கள், உங்கள் மூவாயிறத்தை ஆறாயிரமாக தருகிறேன், என் அடுத்த பந்தயத்திற்கு ஒத்துக்கொண்டால் என்றார்.

வ.த: சரி சொல்லுங்கள், நான் கேட்டு விட்டுத்தான் சொல்லுவேன் பந்தயத்திற்க்கு உடன்படுகிறேனா இல்லையா என்று (உஷாராயிட்டாரு).

உ.தா: நிச்சயமாக அது உங்கள் விருப்பம், நான் உங்கள் மேசையின் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்தில் உள்ள குப்பைக்கூடையில் மிகச் சரியாக மூச்சா அடிக்கிறேன், மேசையில் ஒரு சொட்டு பட்டாலும் நான் உங்களுக்கு ஆறாயிரம் தருகின்றேன்... நன்கு யோசித்து சொல்லுங்கள் தோற்றால் நீங்கள் மூவாயிரம் தரவேண்டாம்... வென்றால் ஆறாயிரம்... என்றார்.

வ.த: தாத்தா உள்ள நிலைமைக்கு மேசைக்கு இந்த பக்கத்தில் இருந்து அடித்தாலே தோற்றுவிடுவார், அதிலும் அந்த பக்கத்திலிருந்து, மேலும் மேசையில் ஒரு சொட்டுப் படாமால்...ம் தாத்தாவுக்கு என்ன ஆச்சு? வென்ற மூவாயிரமும் வேண்டாமாம், தோற்றுப் போனால் ஆறில் மூன்றை கழித்து மூன்றை கொடுத்துவிட்டுப் போயிருக்கலாம். மொத்ததில் நமக்கு இரட்டை வருமானம், கையிலிந்து மூவாயிரம் இழப்பு மிச்சம், ஆறாயிரம் வருமானம் என்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் மிக்க மகிழ்ச்சியோட பந்தயத்திற்க்கு ஒத்துகொள்வாதாக சொன்னார்.

உ.தா: தான் சொன்ன படியே செய்ய முயற்ச்சித்தார், முயற்சி தோல்வி... வ.த-வின் மேசையெல்லாம் உ.தா-வின் மூச்சா.

வ.த: வெற்றிக் களிப்பில் எழுத்து ஆட ஆரம்பித்து விட்டார். ஆடும்போதுதான் கவனித்தார்... உ.தா-வுடன் வந்த வழக்கறிங்ஞர் தன் தலையில் கைவத்து அமர்ந்திருந்ததை. அருகில் சென்று கேட்டார்... ஏன் என்னவாயிற்று என்று?

உ.தா.வ: உ.தா காலையில் அழைத்து சொன்னார், வேலையில்லா வெட்டி ஆப்பிசர் வருமானம் இல்லாத என்ன கூப்பிட்டு வரிகட்ட சொல்லுரார், நான் அவர் மேசையில் மூச்சா அடிச்சி அவர் மூக்க உடைக்கிறேன் என்றார்.

வ.த: பிறகு?

உ.தா.வ: நான் நீங்க கோபத்தில் அவர் மீது வழக்கு போடுவீர்கள் என்றேன். அதற்கு உ.தா இல்லை இல்லை அவர் மகிழ்ச்சியாக நடனம் ஆடுவார், இருபத்தி ஐந்தாயிரம் பந்தயம் கட்டுகிறேன் என்றார்... நானும் ஒத்துக்கொண்டேன்.

வ.த: ஆஹா... பெருசு உங்களுக்கு வெச்சுட்டா ஆப்பு?

உ.தா.வ: யோவ், எனக்கு மட்டுமா ஆப்பு, உனக்கும்தான்யா... ராத்திரி ஐஞ்சு லிட்டர் சரக்க போட்டுட்டு இன்னும் இங்க டெலிவரி பண்ணிகிட்டு இருக்கிறாரு பாரு, உன் மேசை, தரைக் கம்பளம், ஆப்பீசு எல்லாம் மாத்தானும் நீ.... எங்க சேர்ந்து சொல்லு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ஓல்ட் ஈஸ் கோல்ட், அவர்கள் அனுபவத்தால் கற்ற பாடங்கள் எல்லாம் புத்தகமாக தொகுக்கப்பட வில்லை... அல்லது வலையுலகில் பதிவாகப் பதியப்படவும் இல்லை. அனுபவசாலிகளிடம் மோதுவது தவிர்க்கப்பட வேண்டும் அல்லது மிகவும் கவனம் வேண்டும். இல்லையேல் பெருசு-கள் எல்லாம் ரஜினி பட பாடலான “என்கிட்ட மோதாதே...” பாட்ட பாடிகிட்டு ரவுசு பண்ணவார்கள்... பெருசு-கிட்ட காட்டாத ரவுசு...ன்னு பஞ்ச் டயலாக்கோட.