பொங்கலோ பொங்கல்

இன்று அந்த நாள் ஞாபகம்... முன் வாசலில் பரங்கி பூவுடன் தெருவடைத்து வண்ணக் கோலங்கள். பின் வாசலில் சாணத்தில் பாத்தி கட்டி மங்கள நீர் விட்டு அதில் மிதக்கும் வெள்ளைத் தும்பை பூ...

மஞ்சளுடன் வெள்ளை... மனது போகும் கொள்ளை.

உழவர்களை கொண்டாடி, பெரியோரிடம் ஆசி பெற்று, இன்பமாய் சுற்றித் திரிந்த அந்த இளமை காலம்...

பரங்கி

கோலத்தின் நடுவில் பரங்கி
நின்றேன் தெருவில் கிறங்கி
நினைத்தேன் மனதில் வருந்தி
மறந்தேன் இரவில் உறங்கி.

தும்பை

மாட்டுக் கொட்டிலில் தும்பை
பண்பாட்டை காட்டினால் அன்னை
பதிலுக்கு காட்டினோம் அன்பை

உழவர்

அன்று
உண்ண உணவு பயிரிட உழவர்
இன்று
எண்ண எலும்பு தெரிந்திட கிழவர்
நாளை
உன்னை என்னை மறந்திட இளையர்.

இன்று போல் என்றும் மங்களம் பொங்க
இனிய பொங்கலோ பொங்கல்.

4 comments:

நட்புடன் ஜமால் said...

மஞ்சளுடன் வெள்ளை... மனது போகும் கொள்ளை

சூப்பர் மாம்ஸ்

மற்றவை மாயவரத்தான் டைப் :P

அரசூரான் said...

மாயவரத்தோட கொஞ்சம் சிங்கப்பூர் நினைவுகளும்கூட ஜமால். தேக்காவில் மஞ்சளும், இஞ்சியும் கரும்பும்... அடடா... அந்த சுவடே இல்லை இங்கு.

என்ன வேட்டைக்காரனுக்கு பிறகு பதிவு வேட்டைய காணும்?

க.பாலாசி said...

கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. இன்னைக்குத்தான் செம்பையிலிருந்து வந்தேன். இனிவரும் பொங்கல்களுக்கும் வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

தலைவரே...உங்க மெயில் ஐடி. கிடைக்குமா? balasi82@gmail.com