எனக்கு சாதி பிடிக்கும், மதம் பிடிக்கும்

சத்தியமாய்
சாதிப் பிடிக்காது
ஆனால்
மதம் பிடிக்கும்.

மதம் பிடிக்கும்
சில சமயங்களில்
எனக்கு
சாதியைப் பிடிக்கும்

சண்டாளா
சாதி மதம் பிடிக்காதென்று
பதிவு எழுதி பேசியது?

பேசியது உண்மைதான்...
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
அதை மீண்டும் உணர்த்திச் சொல்லப் பதிவு

பதிவெழுதி பதிவெழுதி
பலவேலைகளை நான் கால தா-மதம் செய்தும்
அதை பொருட்-படுத்தாத
என் பெண்-சாதியை பிடிக்கும்
அதை பொருட்-படுத்தினாலும்
மதம் பிடிக்காத பெண்-சாதியை பிடிக்கும்

தா-மதம் தா-மதம் என்றாலும்
இன்னுமொரு இடுக்கை இடவில்லையா
என பதிவெழுத சம்-மதம் சொல்லும்
மதம் பிடித்த பெண்-சாதியை பிடிக்கும்.

6 comments:

சி. கருணாகரசு said...

கவியரசு கண்ணதாசனிடன் ... உங்களுக்கு எந்த மதம் பிடிக்கும் என்று கேட்டார்கள்... கவிஞ்ர் சொன்னது
“எனக்கு தாமதம் பிடிக்கும்”என்று.

உங்க கவிதைக்கு பாராட்டுக்கள்.

தேவன் மாயம் said...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!
நண்பர் தின வாழ்த்துகள்!

அம்பிகா said...

உங்கள் சாதி, மதம் இரண்டுமே நன்றாக உள்ளது.
கவிதை அருமை.

நட்புடன் ஜமால் said...

சாதி-மதம்

நல்லாத்தானிருக்கு மாம்ஸ்

அரசூரான் said...

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பர்களே.

மனசாட்சி said...

நன்றி...அருமையான கவிதை - எம் மதம் சம்மதம்