கொசுத் தொல்லை...

அமெரிக்கா வந்த ஐந்து ஆண்டுகளில் நான் (ஏன் இந்த கொசுக் கடிய ஒவ்வொரு தேசியும் அனுபவிச்சி இருப்பாங்க) அதிகம் கடி பட்டது இரண்டு கொசுக்களிடம். ஒன்று தேசிக் கொசு, மற்றொன்று விதேசிக் கொசு. இந்த ரெண்டு கொசுக்களை அடையாளம் காணுதல், அவற்றை கையாளுதல் மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். நகச்சுவைக்காக மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல.

தேசிக் கொசு:

இந்தக் கொசு தேசியை மட்டும்தான் கடிக்கும். இது மளிகை கடை, காய்கறி கடை மற்றும் வால்மார்ட் போன்ற தேசிகள் அதிகம் நடமாடும் இடங்களில் தென்படும். இது உங்களை பார்த்தவுடன் சிரிக்கும், நீங்கள் பதிலுக்கு சிரித்தவுடன் (சிரிக்கா விட்டாலும்) உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று குசலம் விசாரிக்கும். பிறகு பழகுவதற்க்கும், தொடர் நட்பிற்க்கும் என்று சொல்லி உங்கள் தொலைபேசி எண்ணை கேட்கும். தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு மீண்டும் சந்திக்கலாம் என்றும், வீட்டிலிருந்தபடியே பணம் பண்ணலாம் என்றும் கடிக்கும். இந்த சிறுகடி ஒரு நாள் பெருங்கடியாக மாறும். இது ரொம்ப சமர்த்தான கொசு கடைசி வரை ஏன் கடிக்கிறேன் எதுக்கு கடிக்கிறேன் என்று சொல்லாது... ஆனா கடிக்கும். இந்த கொசு உங்களை ஒரு வியாபார குழு சந்திப்பிற்க்கு அழைக்கும், உங்களுக்காக அது ஒரு இருக்கையை முன்பதிவு செய்திருப்பதாக சொல்ல... சிறுது நேரத்தில் ஒரு கொசுக் கூட்டம்... உங்கள் காதில் (கிழிய) ரத்தம் வர வர கடிக்கும். நீங்கள் கொஞ்சம் ஏமார்ந்தால் அன்றே அது உங்கள் மணி பர்சையும் கடிக்கும்.

இந்த கொசுக்களை நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். மேற்ச்சொன்ன இடங்களில் இந்தக் கொசு வெறும் வண்டியுடன் (எம்டி கார்ட்) சுற்றும்.
இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? அது மிகச் சுலபம். உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் வரும் மன மகிழ்வு தொலைபேசி எண்களை (உதாரணத்திற்கு, கொஸ்ட் எண்) நினைவு படுத்தி அதை அந்தக் கொசுவிடம் கொடுத்து விடுங்கள். பிறகு என்ன? உங்களுக்கு ஜாலி... கொசுவுக்கு டென்சன்.

விதேசிக் கொசு:

இந்தக் கொசு பெரும்பாலும் தொடர் குடியிருப்பில் உள்ள அனைவரையும் கடிக்கும். இது சனிக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் உங்கள் கதவை தட்டும். உங்கள் நாடு மற்றும் அமெரிக்கா பற்றிய சில நல்ல விசயங்களை கடித்துவிட்டு மெல்ல உங்களை சமயம் பற்றி கடிக்க ஆரம்பிக்கும். இந்த கொசு பரிசுத்த வேதகாமம், பழைய/புதிய ஏற்பாடுகளில் இருந்து சில நீதி/வசனம் என்று சொல்லியும், உங்களை வருகின்ற ஞாயிற்றுக் கிழமை கூட்டு பிரார்த்தனைக்கு வாங்க என அழைத்துக் கடிக்கும்.

இந்தக் கொசுவையும் நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். இந்தக் கொசு வீட்டிற்க்கே வந்து கதவை தட்டி கடிப்பதால், கையில் உள்ள விசயங்களை வைத்து முடிவு செய்து விடலாம்.

இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? இந்த விதேசிக் கொசு தேசிக் கொசுக்களைக் காட்டிலும் பல மடங்கு நல்ல கொசுக்கள். இதன் நோக்கம் நல்ல(?!) நோக்கம் என்பதாலும், கடிக்கும் போது நல்ல விசயங்களை சொல்லி கடிப்பதாலும் இந்தக் கடியை பொருத்துக் கொள்ளலாம். மேலும் இதை உங்கள் மன நிலைக்கும், பக்குவத்திற்க்கும் ஏற்ப்ப இதைக் கையாளலாம். உதாரணத்திற்கு, கார்ட் ப்ளஸ் அமெரிக்கா, பிறகு சந்திப்போம் என்று சொல்லி அனுப்பி விடலாம். இல்லை எனில் இந்தக் கொசு பரிசுத்த வேதகாமம் என்று ஆரம்பிக்கும் போது நீங்களும், பகவத்கீதை, சுலோஹம் 67, ஸ்ரீ பகவானுவுவாச்ச-ன்னு உங்க பராக்கிரமத்த (கடிதான்) காட்டலாம்.

10 comments:

sriram said...

சுதேசிக் கொசுவால் கடி பட்டவர்களில் நானும் ஒருவன், இந்தியாவிலேயே பல முறை கடி பட்ட அனுபவம் இருந்ததால், தயவு தாட்சண்யமின்றி It is my principle not to join any MLM, I have own and Personal reasons for it ன்னு சொல்லி அனுப்பிட்டேன். அப்படியும் மூணு மணிநேரம் மொக்கை போட்டுட்டுத்தான் போச்சு கொசு..

இதுவரை விதேசி கொசு என்னை கடிக்கவில்லை, பரலோகத்தில் இருக்கும் பரமபிதாதான் என்னை இதுவரை அந்தக் கொசுக்களிடமிருந்து காத்துக் கொண்டிருக்கிறார்.

முதல் முறை பார்த்தவுடன் பேசுவதும் நன்றாக பழகுவதும் என் குணம், இனிமேல் நான் எந்த ஒரு MLM இலும் உறுப்பினரில்லைன்னு ஒரு டிஸ்கி போட்டுட்டுத்தான் பேசணும் போலிருக்கு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

முகுந்த் அம்மா said...

தேசி கொசு, விதேசி கொசு கடி நாங்களும் பயங்கரமா வாங்கி இருக்கோம்.

அதுவும் இந்த விதேசி கொசு இருக்கு பாருங்க அது தொடர் குடியிருப்பில் மட்டும் இல்ல ஆபீஸ் லயும் என்னை கடிச்சி இருக்கு.

முகுந்த் அம்மா said...

இன்னொரு விசயமும் இங்கே சொல்லணும், ரொம்ப நல்ல நண்பர் ஒருத்தர் இந்த தேசி கொசு கடிச்சப்புறம் எங்களையும் கடி வாங்க செய்த பாசாங்கு, மொக்கை இருக்கே, அது சொல்லி மாளாது.

சூப்பர் போஸ்ட்.

Chitra said...

ha,ha,ha,ha..... hilarious!

நட்புடன் ஜமால் said...

மாம்ஸூ அடிச்சி ஆடுறீய ...

BJ said...

Very Good Sir. This is the First time I am browsing your blog..

அரசூரான் said...

வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி நண்பர்களே.

@ஸ்ரீ ராம் : நானும் அப்படிதாங்க இருந்தேன், பார்த்ததும் பழகுவதுமா. கடல் கடந்து கண்டம் விட்டு கண்டம் வந்து கிடக்கிறோம்-ன்னு. இவன் ரொம்ப நல்லவன்னு வெச்சிட்டாங்கப்பா ஆப்பு... அவ்வ்வ்வ்வ்

@முகுந்த் அம்மா: உண்மைதாங்க. என்ன ஒரு வில்லத்தனம். தான் பெற்ற கடி இவ்வையகம்னு நினைச்சிட்டாங்க போல.

@சித்ரா : சும்மா... சிரிக்கத்தான் நம்ம பதிவு.

@ஜமால் : என்ன எல்லாம் செட்டில் ஆயாச்சா? மே 28 ஊருக்கு வருகிறேன்... நேரில் சந்திப்போம்.

@பிஜே : முதல் சந்திப்பே "கடி'-யா இருக்கா?

அன்புடன் மலிக்கா said...

கொசுக்கடியா. அப்படின்னா..

Thekkikattan|தெகா said...

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா :) ...கடி வாங்கி வாங்கியே மரத்துப் போன தோலுடன் ...

பழமைபேசி said...

மாயவரம் கடின்னு எதும் இல்லையாங்க?? இஃகி... சும்மா ஒரு லொள்தான்...