இளவேனில் கால மஞ்சள் நீராட்டு

இளவேனில்...

ஊரெல்லாம் மஞ்சள்
மகரந்தத்தின் கொஞ்சல்
இது
இளவேனில்கால கெஞ்சல்
வரும் கோடைக்கான அஞ்சல்

மஞ்சள் நீராட்டு...

கை படாமல் கார் வாஷ் செய்து
கராஜில் நிற்காமல் காற்றாட நின்றவளை

அங்கமெல்லாம் மஞ்சள் பூசி சென்றவன் எவன்?
அவள் மாமனோ? அவன் பெயர் போலனோ?

ஓவ்வாமை...

காதலி
காதோடு ஆடுது கம்மல்
காரணி
உன்னால் வந்த தும்மல்.

5 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

க.பாலாசி said...

//காதலி
காதோடு ஆடுது கம்மல்
காரணி
உன்னால் வந்த தும்மல்.//

கம்மல் ரொம்ப பெரிசோ...

ம்ம்... அடுத்த மாசம் மாரியம்மன் கோவில் மஞ்சவௌயாட்டுங்க... வந்திடுங்க....

Chitra said...

முதல் முறையாக உங்கள் "கடைக்கு" வருகிறேன். மினர்வா buffet (Alpharetta, GA) சாப்பிட்ட மாதிரி நன்றாக இருந்தது.

அரசூரான் said...

வருகைக்கு நன்றி நண்பர்களே.

@பாலாசி - வந்துகிட்டே இருக்கோம்ல்ல. மஞ்சவெளையாட்டோட ஒரு பதிவர் சந்திப்புக்கும் ஏற்பாடு பண்ணிடுவோம்.

@சித்ரா - மினர்வா "கடைய" மூடி அது இப்ப சென்னை செட்டினாடா மாறிடுச்சி.

ஜில்தண்ணி said...

\\கை படாமல் கார் வாஷ் செய்து
கராஜில் நிற்காமல் காற்றாட நின்றவளை
அங்கமெல்லாம் மஞ்சள் பூசி சென்றவன் எவன்?
அவள் மாமனோ? அவன் பெயர் போலனோ?\\

அருமையான எழுத்துக்கள்
ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி