எந்திரன்... மந்திரன்... தந்திரன்

பல திறமைசாலிகள் ஒன்றிணைந்து விரைவில் நாம் வெள்ளித்திரையில் காணக் கிடைக்கப்போகும் ஒரு பெரிய விருந்து எந்திரன். இது தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று. மிகப் பெரிய வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொலவை காட்டும் கல், சராசரி படமாக இருந்தால் சினிமா என்ற நெடுந்தொலைவு பயணித்தில் சற்றே அமர்ந்து செல்ல ஒரு ஒய்வுக் கல்.

எந்திரன்... ரஜினி, அவர்தானே கதாநாயகன். ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ அதை தருவதில் ரஜினி என்றும் ஏமாற்றியது இல்லை. ஆக்‌ஷன், ஸ்டைல், சிரிப்பு, டயலாக் டெலிவரி... அது குசேலனோ, சிவாஜியோ இல்லை எந்திரனோ அவர் பகுதியை சிறப்பாக செய்திருப்பார்.

மந்திரன்... சங்கர், அவர்தானே இயக்குனர். தன் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முந்தைய படத்தினை விட அடுத்த ஒரு படி மேலே செல்ல என்ன செய்ய வேண்டும் என யோசிப்பவர். சிவாஜி இயக்குனர் சங்கரை வெல்வது எப்படி என சிந்தித்து நிச்சயமா எந்திரனில் பல புதிய மந்திரங்களை உச்சரித்து இருப்பார்.

தந்திரன்... கலாநிதிமாறன், அவர்தானே தயாரிப்பாளர். வியாபார தந்திரம் அறிந்த எந்திரன் & மந்திரன். காசை போட்டு காசை எடுக்கும் இயந்திரம் எந்திரன் என்பதை அறிந்து இயக்குனர் கேட்ட கோடிகளை கொட்டிக் கொடுத்த (கேடி) மந்திரன். இசைத் தகடு வெளியீட்டை வெளிநாட்டில் (மலேசியாவில்) வெளியிட்டு முதல் வருமானத்தை வெள்ளிகளில் (டாலர்களில்) வெள்ளாமை செய்ய ஆரம்பித்து விட்டார். இனி எந்திரன் எழுத்தது, ஆயிபோனது, பல்துலக்கியது என்று இரவு எந்திரன் தூங்கப்போனது வரை அனைத்தையும் சன் நெட்வொர்க்கில் நீங்கள் பார்த்து ர(இம்)சிக்கலாம். அதுதானே அவரது வியாபார தந்திரம்.

எந்திரனோ, மந்திரனோ இல்லை தந்திரனோ, ஒரு இந்திரனாக தமிழ் சினிமா ரசிகர்களை இரட்சித்து மகிழ்விக்க வேண்டும்.

7 comments:

நட்புடன் ஜமால் said...

மாம்ஸு செம திறன்

Chitra said...

Cool!!! Jai Ho!

Chitra said...

Thank you for sending the link to cook an egg with cell phone. Now, we should try to cook some biriyani with the heat radiated from the cell phone. :-)

பழமைபேசி said...

மாயவரம் வாடை ரெண்டு நாளா......

எந்திரன்
தந்திரன்
மந்திரன்
இந்திரன்
சந்திரன்
முந்திரன்....

க.பாலாசி said...

//இனி எந்திரன் எழுத்தது, ஆயிபோனது, பல்துலக்கியது என்று இரவு எந்திரன் தூங்கப்போனது வரை அனைத்தையும் சன் நெட்வொர்க்கில் நீங்கள் பார்த்து ர(இம்)சிக்கலாம்//

அதென்னமோ சரிதானுங்க... வந்த பெறகுதான் தெரியும்...

முகுந்த் அம்மா said...

எந்திரன் ஜோதியில நீங்களும் ஐக்கியமாயிடீங்க போல.

//இனி எந்திரன் எழுத்தது, ஆயிபோனது, பல்துலக்கியது என்று இரவு எந்திரன் தூங்கப்போனது வரை அனைத்தையும் சன் நெட்வொர்க்கில் நீங்கள் பார்த்து ர(இம்)சிக்கலாம்//

சன் நெட்நொர்க்கில கொடுக்கிற விளம்பரத்திலயே பாதி படம் பார்த்திடலாம். மீதி பார்க்க யாரு தியேட்டர் போவாங்க.

அரசூரான் said...

நன்றி ஜமால், சித்ரா, பழமை, பாலாசி & முகுந்த் அம்மா.

முகுந்த் அம்மா, என்னது விளம்பரத்திலயே படம் பார்த்திடலாமா? எல்லாம் பதிவுலக பாதிப்பு... பின்னூட்டத்திலேயே பதிவு போடுற மாதிரிதான?