கலியுகமா இல்லை பலியுகமா?

ஆட்டுரலில் குழவி நின்று கல் சுற்றியது
கலி காலமாம்

தொடர்வண்டி நீராவியில்லாமல் ஓடுகிறது
மின்சாரத்தின் உதவியாம்

தொடர்பில்லாமல் தொலைக்காட்சியும் தொலைபேசியும்
தகவல்தொடர்பின் புதுப் பரிணாமமாம்

கடல் நீரைக் குடி நீராக்கி குடிக்கப்போகிறோம்
சுழற்ச்சி மாற்றமாம்

ஆமாம், இவையெல்லாம்
கலியுகத்தின் மாற்றம் பலியுகத்தின் தோற்றம்.

மறந்து விட்டோம் பண்பாட்டை
இழந்து விட்டோம் செயல்பாட்டை

அறிவியல் ஆடுகிறது வேட்டை
ஓசோனில் போடுகிறது ஓட்டை

தெரிகிறதா அதுகாட்டும் நடைபாட்டை?
அடையப்போகிறோம் விரைவில் சுடுகாட்டை.

4 comments:

நட்புடன் ஜமால் said...

எதுகை மோனையில் பிச்சி உதறியாச்சி போல சமுதாயத்தையும்

Chitra said...

விஞ்ஞானம் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை, உதவி.
அதற்கு அடிமையாகி பணமே கதி என்று இருக்கும் போது, உபத்திரவம் இல்லாமல் எப்படி இருக்கும்?

அரசூரான் said...

ஜமால் & சித்ரா வருகைக்கு நன்றி.

ஜமால்... எதுகை மோனையா, சும்மா ஒரு அறிவியல் செய்தி படிச்சேன், ஒரு பதிவு போடலாமேன்னு தோணிச்சு, அவ்வளவுதான்.

சித்ரா, பணம் மட்டுமே அல்ல, இன்றைய சுகம் நாளைய சோகம்-ன்னு அறிந்தே சில தவறுகளை செய்கிறோம், அதுதான் வருத்தமா இருக்கு.

பழமைபேசி said...

மாயவரத்துக்காரங்க ஆரம்பிச்சிட்டாங்க....