வண்ணாந்துறை

ஒவ்வொரு நாட்டிலும் சைனா டவுன் இருப்பது போல் வண்ணாந்துறையும் இருக்கும் போல, சென்னையில் அது வண்ணாரப் பேட்டை, சிங்கப்பூரில் அது தோபி காட் (பிரிட்டிஷ் காலணிகளில் என்று நினைக்கிறேன்).

அன்று வண்ணாந்துறையில் அழுக்கு வெளுக்கப் பட்டு பலரும் பொலிவுடன் வளம்வர காரணமாயிருந்து உள்ளது. இன்று அந்த வண்ணாந்துறைய மையமாக வைத்து ஒரு சிறந்த தமிழ்ப் படம் வந்துள்ளது. இது தமிழ் சினிமாவில் உள்ள இன்றைய இயக்குனர்களின் மனதை வெளுக்குமா?

ஒரு படத்தின் கதாநாயகன் அதன் இயக்குனர் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது, ஹீரோ-தான் மாஸு என சொல்பவர்கள் என் பார்வையில் வெரும் லூஸு. வெரும் வெளிர் வெள்ளை வேட்டியில் ஒரு கதா நாயகனை இன்று நம் கண்ணில் காட்டியுள்ளது இப்படம்.

வடநாட்டு கோழியைப் போட்டு வறுத்தால் மசாலாவாக இருக்கும் என்று எண்ணி கதையை நம்பாமல் வெள்ளைச் சதையை நம்பி படம் பண்ணும் இயக்குனர்களின் நம்பிக்கையை வெளுக்க இதோ ஒரு தமிழ்ப் படம். அறைகுறை ஆடையில் (ஏமி ஜாக்ஸன்) – அள்ளித்தர இருந்தாலும் அவரை அழகியாக (ஏமி மில்கின்ஸனாக) காட்டியவர் இப்பட இயக்குனர்.

டெக்னாலஜி ஹாஸ் ஸோ இம்ப்ரூவ்ட் ஆனால் இயக்குனர் சைக்காலஜி ஹாஸ் ஸோ டேமேஜ்ட், கணணி வரைகலையை இப்ப உள்ள படத்துல பார்த்து கண்கள் அவிந்து போனதுதான் மிச்சம் என்று சொல்லும் அளவிற்கு கதாநாயகன் கைய தூக்குனா மின்னல் வெட்டுது, கால தூக்குனா பொறி பறக்குது, கதாநாயகி நடந்து வரும்போது கலர் கலரா உடை மாறுது என்ற மாயை கலர்களை வெளுத்து சிங்கார சென்னையை கருப்பு வெள்ளையில் அழகாக காட்டுவதற்கு கணணி வரைகலையை பயன் படுத்திய இயக்குனருக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

இப்படி பல இடங்களில் வெளுத்து வாங்கி,

தமிழ் சினிமாவில்
கதைக்கு இல்லை வெற்றிடம்
சதைக்கு இல்லை புகளிடம்
நல்ல இயக்குனரிடம்
மனம் இருந்தால் எடுக்கலாம்
மதராசப்பட்டினம் போல் வெற்றிப்படம்

மதராசப்பட்டினம் – இன்றைய தமிழ் சினிமா இயக்குனர்களின் மன அழுக்கை வெளுக்க வந்த வண்ணாந்துறை.

4 comments:

Chitra said...

வடநாட்டு கோழியைப் போட்டு வறுத்தால் மசாலாவாக இருக்கும் என்று எண்ணி கதையை நம்பாமல் வெள்ளைச் சதையை நம்பி படம் பண்ணும் இயக்குனர்களின் நம்பிக்கையை வெளுக்க இதோ ஒரு தமிழ்ப் படம்.

..... சரியான "காரமான" கருத்து. பாராட்டுக்கள்!

sweatha said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

முகுந்த் அம்மா said...

மதராசபட்டினம் படம் போஸ்டர் இந்தியாவில் பார்தேன், பெரிய விளம்பரம் எதுவும் இந்த படத்துக்கு இல்ல, அப்போவே யோசிச்சேன், நல்ல படமா இருக்கனும்னு, உங்க விமர்சனம் படிச்சப்புறம் தான் தெரியுது, உன்மையா நல்ல படம்னு, ஆனா ஓடுச்சான்னு தெரியலையே.

அரசூரான் said...

நன்றி சித்ரா & முகுந்த் அம்மா.