குடைச்சல்...

ஒருவன்தான் உணவுண்டேன்
சோற்றுடன் கறி ஒன்று
ஒழித்துப் போட்டேன்
பத்துப்பசை பாத்திரங்கள் ஒன்பது
கழுவிப் போட்டேன்
கையெல்லாம் வலி குடையுது

என்னவளை எண்ணினேன்
நித்தம் கறி இரண்டு
ஒழித்துப் போடப்போட
வற்றா பத்துப்பசை பாத்திரங்கள்
கைவலித்ததாய் செவிமடிக்கவில்லை
மனதெல்லாம் வலி குடையுது

7 comments:

பழமைபேசி said...

ஓகோ..... அம்மணிகிட்ட இதைக் காமிச்சு, எதோ சாதிக்கப் பாக்குறீங்க.... அது சரி, இது என்னாதிது??

//ஒருன்வதான் //

இஃகிஃகி

Chitra said...

நல்லா இருக்குதுங்க.... ஆனால், எழுத்து பிழை கொஞ்சம் குடையுதுங்க.... :-)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
. ....
நல்லா இருக்குதுங்க.... ஆனால், எழுத்து பிழை கொஞ்சம் குடையுதுங்க.... :-)
//
ரிப்பீட்டிக்கிறேன்...

சி. கருணாகரசு said...

கவிதை நல்லயிருக்கு பாராட்டுக்கள்.

நியோ said...

ப்ரியம் நிரம்பி வழிகிறது உங்கள் வரிகளில் !

நட்புடன் ஜமால் said...

மாம்ஸு இன்னும் 15 நாள் தானே

நல்ல வெளிப்பாடு

அரசூரான் said...

பழமை, சித்ரா, யோகேஷ், கருணாகரசு, நியோ & ஜமால்... உங்களின் வருகைக்கு நன்றி.

ஒருவன் பிழை திருத்தி விட்டேன், சுட்டியமைக்கு நன்றி.