இன்னா பேசுர நீ?

தமிழ்தான் பேசுரேன்னு சொன்னீங்கன்னா சந்தோசம்.

இன்னா தமிழு அது? தஞ்சாவூரா, மதுரையா, திருநெல்வேலியா, கோவையா இல்ல சிங்கார சென்னையா?

தமிழ அழகா எப்பவும் எங்க மண்வாசனையோடுதான் பேசுவேன்னு சொன்னீங்கன்னா ரொம்ப ரொம்ப சந்தோசம்.

அது உங்களுக்கும் உங்க உடல் நலத்திற்க்கும் நல்லது. மற்றவரைப் போல பேசுதல் தலைவலியில் ஆரம்பித்து நம் உயிரையே எடுக்கும் அபாயம் கொண்டதாம்.

இன்று தொலைகாட்சி பார்த்தபோது இதுபற்றிய தகவல் அறிந்தேன், அதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இது பேசும் தன்மை பாதிப்பு (மன நல பாதிப்பு மாதிரி) – ஸ்பீச் டிஸ்ஸாடர்/SPEECH DISORDER-ன்னு சொல்லி, அதை ஒரு உடல் நலக் குறைவு அல்லது நோய் என்று வகைப்படுத்துறாங்க... பேர் இன்னா நைனான்னு யாங்கைல கேட்க்காதீங்க... அவங்க அத “ஃபாரின் ஆக்ஸண்ட் சிண்ட்ரோம்”-ன்னு சொல்றாங்க.

நாங்க ஃபாரினே போகல எங்களுக்கு எப்படி ஃபாரின் ஆக்ஸண்ட் சிண்ட்ரோம் வரும்ன்னு கேட்க்க கூடாது. நம்ம ஊருல உள்ள முள்ளு நம்ம ஊருலயே நம்ம கால்ல குத்தினால் நமக்கு சீழ் பிடிக்கும், காரணம் முள்ளு (மரத் தூள்) நம்ம பாடிக்கு ஃபாரின் பாடி, அதான் ஒவ்வாமைன்னு சொல்லுவேமே அந்த அலர்ஜிதான்.

எலே என்னலே சொல்றே, தமிழ மாத்திபேசுனா தலவலியாம்லேன்னு லேசானா விசயமா நினைக்காதீங்களே... இத படிச்சி பாருங்களே...

விக்கி என்ன சொல்லுதுன்னா...

மேலதிகத் தகவலுக்குன்னா...

கண்ணு, ரோமாபுரியில் இருக்கும் போது ரோமானியனா இருன்னு சொல்லியிருக்காங்க, அத வுட்டுபோட்டு சிண்ட்ரோம் காந்திபுரம்ன்னு சொல்லிகிட்டு திரியிரிங்கன்னுதான கேட்கிறீங்க?

புரியிது... புரியிது. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த நம் இந்திய மக்கள், அதுவும் குறிப்பா நம் தமிழ் மக்கள் அமெரிக்கர் மாதிரியே ஆங்கிலம் பேசி அசத்துரதுல கெட்டிக்காரங்க. வாயில ‘ர’-வே வராம ‘ழ’-வாவே பேசுவாங்க... வென் ஐ டிழைவ் த காழ்-ன்னு பெருமையா பேசுவாங்க. பேசுங்க... நீங்க உங்கள் பணி சம்பந்தமா உங்கள் வாடிக்கையாளர்களிடம் பேசும்போது பேசுங்க. நம்மவர்களுடன் பேசும்போது நார்மல பேசலாமே?

இங்க ஒரு அம்மா சாமி வந்த பூச்சரியா பேசுது கிளிக்கி பாருங்க.

நாம் நம் மனத்தாலும், சொல்லாலும்/பேச்சாலும், செயலாலும் நாமாக இருக்கும்போது நாம் எந்தவகை சிண்ட்ரோமையும் வென்றோம் என்று சொல்ல முடியும்தானே?

8 comments:

க.பாலாசி said...

ஓ... நல்லவேளை அதனாலத்தான் நான் நம்மூரு பேச்சே பேசிகிட்டிருக்கேன்... இங்கிலீஸ் கூட கத்துக்கலன்னா பாத்துக்குங்களேன்..

நல்ல தகவல்... பகி(ழ்)ர்ந்தமைக்கு நன்றி...

அரசூரான் said...

தப்பு பாலாசி இங்கிலீஸ் கத்துக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கத்துகிட்டு இயல்பா பேசவேண்டும்... அவ்வளவுதான். வருகைக்கு நன்றி.

Thekkikattan|தெகா said...

நாம் நம் மனத்தாலும், சொல்லாலும்/பேச்சாலும், செயலாலும் நாமாக இருக்கும்போது நாம் எந்தவகை சிண்ட்ரோமையும் வென்றோம் என்று சொல்ல முடியும்தானே?//

:)) அது! அத்து! ஐ லவ் ’ழ...’

அரசூரான் said...

தெகா, தமிழுக்கு அழகே ‘ழ’தான், நீங்க நல்லா லவ் பண்ணுங்க.

மாயவரத்தான்.... said...

:)

NIZAMUDEEN said...

ஆராய்ச்சிக் கட்டுரை, அருமை!
இந்தக் கட்டுரை மன நலத்திற்கும்
பயன்தரவல்லது.

பழமைபேசி said...

பேசுறதுல, குறைபாட்டுக்கே குறைபாடு வந்துருமுங்க என்னைப் பார்த்து.... இஃகிஃகி....

அரசூரான் said...

@மாயவரத்தான், @நிஜாமுதீன் & @பழமை... உங்கள் வருகைக்கு நன்றி.