இவர்கள் சந்தித்தால்....

மரப் புலியும்... அதாங்க டைகர் உட்ஸ்-ம், நம்ம காவிப் பு(போ)லியும் சந்தித்தால் என்ன பேசிப்பாங்க?
மரப் புலி: நான் ஒரு விளையாட்டுப் பிள்ளை, என்னை வீணா வாம்புல மாட்டி விட்டுட்டாங்கையா... என் பெண்டாட்டி ஒரு பக்கம், பத்திரிக்கை காரர்கள் ஒரு பக்கம்ன்னு பின்னி எடுத்துட்டாங்கப்பா.

நித்தி: எங்க ஊருல பெண்கள் புலிய முரத்தால் அடித்ததாக வீர வரலாற்று செய்திகள் இருக்கு, ஆனா முகத்துல அடிச்சதா இல்லை. நீ வேஸ்ட்டப்பா. மூஞ்சில அடிவாங்கின சரி, காரை ஏன் கொண்டி மரத்துலயும் ஃபயர் ஹைட்ரண்ட் மேலயும் மோதின?

புலி: உண்மைதான் சாமி, எனக்கு உங்களவுக்கு திறமை இல்லை. உங்க கூட ஆசிரமத்துக்கு வந்து கொஞ்சம் பயிற்ச்சி எடுத்துக்கனும். நீங்க ஜாலிய படுத்து இருக்கீங்க, எல்லாத்தையும் அந்த புள்ளையே பண்ணுது.
நித்தி: (மனசுக்குள்... அட பாவிங்களா, இவன் நம்மூரு டி.வி.யும் பேப்பரும் படிக்க மாட்டான்னு நினைச்சி கொஞ்சம் பில்டப் பண்ணுலாம்ன்னு பார்த்தா இமேஜ டேமேஜ் பண்ணிட்டீங்களா?) புலி அதெல்லாம் கிராபிஃக்ஸ், நம்பாதீங்க.

புலி: சாமி, விடுங்க சாமி காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் இந்த விவகாரத்துல உங்களுக்கு திறமை பத்தாது சாமி, நான் இதுமாதிரி காரியத்துக்கெல்லாம் தனி சொகுசு படகு வெச்சிருக்கேன்... தயங்காம கேளுங்க கொடுத்து உதவுரேன்.

சிறிது நாட்களுக்கு பிறகு...
சாமி: புலி, என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிட்டீங்க?

புலி: சாமி, தெரியாம ஒன்பது பொண்ணுங்கன்னு ஒலறிட்டேன், ஒழுங்கா மத்ததையும் மறைக்காம சொல்லுன்னு உட்காரவெச்சி கேள்வி மேல கேள்வி கேக்கிறாங்க சாமி

சாமி: என்ன பாருங்க... அதெல்லாம் அலிஹேஸன், கான்ஸ்பைரஸி, கன்ஃபியூஸன், மிஸ்ரெப்ரஸண்டேச்ஸன், மேனிப்புலேஸன், பெனிப்ஃட் ஆஃப் டவுட்டுன்னு சொல்லிட்டு... எனக்கு கும்ப மேலா வேல இருக்குன்னு எஸ்கேப் ஆயி ஹிமாச்சல் போயி செட்டில் ஆகிட போறேன்.

புலி: என்னமோ சாமி நீங்க ஸன்... ஸன்-ன்னு சொல்றீங்க, எந்த சன்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல.

சாமி: உனக்கு ஒன்னும் புரியாது. இனிமேலாவது திருந்து, கேள்ஸ்ஸ விடு, கோல்ஃப் விளையாட்ட மட்டும் பாரு.

4 comments:

M.S.R. கோபிநாத் said...

என்ன கொடுமை இது. இது உங்களுக்கே ஓவராத் தெரியல.. கோலிவுட்டையும், ஹாலிவுட்டையும் இப்படி இனைச்சுடிங்களே..

அரசூரான் said...

வாங்க கோபி, சாமி எப்ப கோலிவுட்-ல சேர்ந்தாரு? புலி எப்ப ஹோலிவுட்-ல நடிச்சாரு.
டி.வி பார்த்து நெம்ப கெட்டு போயிட்டீங்க, நீங்க பார்த்தது எல்லாம் நடிப்பு இல்ல... அவங்க ரெண்டு பேரோட நிஜ வாழ்க்கை.

பழமைபேசி said...

ரைட்டு

The Boss said...

Anna, epadi ippadi ellam..... Mudiyalla...