சாமியார்களும் சந்திப்புகளும்

சாமியார்கள் அன்றும் இருந்தனர், இன்றும் இருக்கின்றனர், சந்திப்புகள் அன்றும் நடந்தது, இன்றும் நடக்கின்றது. ஆனால் இன்று அந்த சந்திப்புகள் சந்தி சிரிக்கின்றன... காரணம் சாமிகள் இல்லை இன்றைய ஆசாமிகள்.

அன்று அருள் வேண்டி சென்றனர், இன்று பொருள் வேண்டி செல்கின்றனர். சாமியோ, சாமியாரோ... அவர்கள் என்ன கருவூலத்தின் காரியதரிசிகளா... நீங்கள் வேண்டியவுடன் காசு (பொருள்) கொடுக்க?

அன்று அமைதி வேண்டி நடந்த சந்திப்புகள்... சாமிகளை பார்க்க சென்றேன் ஒரு விடிவுகாலம் பிறந்தது என்று சொல்லுவார்கள். அது சாமியார் செய்த மாயமோ மந்திரமோ இல்லை, அங்கு நடந்த சந்திப்பினால் பெற்றது. உதாரணத்திற்க்கு எல்லா காரணிகளும் சரிவர இருந்தும் ஒரு சரியான மேளாலர் இல்லாததால் மனம் நொந்த ஒரு நிறுவனத்தின் முதளாலி, தன் நேர்மையான செயல்பாட்டால் வேலையிழந்த ஒரு தொழிலாளி, சாமியாரின் தரிசனத்திற்க்கு காத்திருக்கும் வேளையில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்கின்றனர், இருவரின் தேவைகளும், மன எண்ணமும்/ஓட்டமும் ஒரே அலைவரிசையில் இருக்க இவர் அவருக்கு, அவர் இவருக்கு என்று உதவ இருவரது வாழ்விலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட அது சாமிகளின் சந்திப்பால் உண்டானது என்று தோன்றி, மீண்டும் அங்கு செல்ல அடுத்த சந்திப்பில் அங்கு வேறு சிலரை சந்திகின்றனர், அவர்களுடைய தேவை ஒரு மருத்துவ உதவியாக இருக்க, அதற்க்கு இவர்கள் உதவ, இவர்கள் செயத அந்த “அறம்” தொண்டு மரமாக (விரிட்சம்) வளர்ந்தது. சாமியார் கற்றதும் பெற்றது ஏதும் இல்லை, மாறாக சாமியாரை காணவந்தவர் கற்றது பெற்றதும் அவரவர் கண்ணும் காதும் திறந்திருந்தற்க்கு ஏற்ப்ப. சாமியாரின் தரிசனத்திற்க்கு காத்திருந்த காலமும், அங்கு வந்திருந்தவர்களின் பிரச்சனைகளை பார்த்த/கேட்ட பிறகு தன் பிரச்சனை ஒரு விசயமே இல்லை எனவும், அதை தானே எவ்வாறு சரிசெய்து கொள்ளலாம் என நினைக்கத்தோன்றும் “சுய தேடல்” அடையும் மனத் தெளிவுமே நீங்கள் அங்கு பெற்ற ”அரு-மருந்து”.

இன்று, காத்திருப்பது காணாமல் போய் எல்லாவற்றிர்க்கும் ஒரு பரபரப்புடன் இருப்பதால் சாமியாரை பார்க்க ஒரு ”கால கட்டம்” அதற்கு கப்பம் ”கட்டாய கட்டணம்”, சாமியார் மருந்தாய் அருளுவது ஒரு ”காய கல்பம்”... என அல்பம் சொல்பம்-ஆகி விட்டது.

சாமியை தேடுவதற்க்குமுன் உங்கள் மனச் சாவியை தேடுங்கள், திறந்த மனதோடு உங்கள் குடும்பத்தினருடன் பேசுங்கள், நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்கான காரணங்கள் தோரணங்களாக மாறும்.

3 comments:

பழமைபேசி said...

// நண்பர்களுடன் பேசுங்கள்.//

நண்பர்கிட்டப் பேசினதுக்கு, அட்லாண்டாவுக்கு சுகபோதானந்தா வர்றாரு; வந்து ஒரு எட்டுப் பார்த்துட்டு போயேன்னு சொல்லுதாரு....

குலவுசனப்பிரியன் said...

//அட்லாண்டாவுக்கு சுகபோதானந்தா வர்றாரு; // ஜக்கியும் எப்பப் பாரு அங்கனதான் இருக்காரு.

அரசூரான் said...

@ பழமை, சுகபோதானந்தாவ ஒரு எட்டு பார்க்க வரும்போது, ஒரு ஏழவோ இல்ல ஒன்பதாவோ என்னையும் வந்து பார்த்துட்டு போங்க.

அடலாண்டாவில் ஒரு பதிவர் சந்திப்பு போடுவோம். நண்பர் தெகா, கோபி இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

@ குலவுசனப்பிரியன், வருகைக்கு நன்றி. நீங்க சொன்ன ஜக்கி எல்லாம் நல்லவரு, இங்க ஒரு "பக்கி" கூட இருந்தது "கமாண்டர் செல்வம்" என்கிற ஆனமலை அண்ணாமலை. ஆக்சன் 2 செய்தியில் கிழிச்சி காய போட்டுவிட்ட்டார்கள்... ஆள் ஓடிபோயிட்டார்.