முந்தி முந்தி...

முந்தி முந்திச் சென்றேன்
முச்சந்தியில் முட்டி நின்றேன்
முதலில் முட்டியது நானில்லை என்று
முரண்டு பிடித்ததில் - பயன் ஏதுமில்லை.


அபராத புள்ளிகள் மூன்று
அபராத வெள்ளிகள் முன்னூறு
முச்சந்தி என்பதால்
மூன்றும் முன்னூறும் - முழுவதுமாய் எனக்கே.


முந்திச்செல் என்று ஒரு மூளை
ஊளையிட்டாலும், இப்போது
மூன்றும் முன்னூறும்தான் முந்திச் செல்கின்றன
முந்தாமல் நான் – முழுக்கட்டுப் பாட்டில்.

5 comments:

பழமைபேசி said...

அடடே.... நம்ம இராசாவுக்கே அபராதமா??

Seemachu said...

என்ன டிக்கெட் வாங்கினீங்களா? 300 டாலரா :(

கவிதை நல்லாருக்கு..

நட்புடன் ஜமால் said...

செம கட்டுப்பாடு மாம்ஸே ...

அரசூரான் said...

@ பழமை
@ சீமாச்சு
@ ஜமால்
வருகைக்கு நன்றி நண்பர்களே.

பழமை, இப்போ அபராதம் எல்லாம் இல்லீங்கோ. பழசை நினைச்சேன் பதிவ போட்டேன்.

சீமாச்சு அண்ணா, அபராதத்த உங்ககிட்ட கட்ட ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்கேன்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் மாம்ஸே ...