எனக்கு ஐ.ஜி-ய தெரியும்...

எனக்கு ஐ.ஜி-ய தெரியும்... அ-னா, ஆனா, இனா, ஈயானா... இப்படி எத்தனை போட்டாலும் அவருக்கு என்ன தெரியாது.

இந்த அக்டோபர் மாதத்தில் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் நிகழ்வுகள் வாயிலாக தமிழ் நாட்டின் சில சிறந்த மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது... அதற்க்காக கேட்ஸ் செயற்க்குழு உறுப்பினர்களுக்கு என் நன்றி.1. தமிழக சட்டசபையின் சபாநாயகர் (ஸ்பீக்கர்) திரு.ஆவுடையப்பன். அவருடைய வட அமெரிக்க பயணத்தின் நடுவில் எங்கள் ஊரில் நடைபெற்ற தமிழ் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சிறு உரையாற்றினார். மிக எளிமையான, பழகுவதற்க்கு இனிமையானவராக இருந்தார். கழக கண்மணிகள் இல்லாம இருக்கும்போது (சிங்கம் சிங்கிளா வந்தது) நம் தலைவர்களின் உண்மையான அன்பையும் பண்பையும் நாம் காணலாம் என நினைக்கிறேன்.


2. தமிழக தன்னார்வத் தொண்டர் திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் அட்சயா ட்ரஸ்ட்-க்கு உதவி. எங்களால்முடிந்த அளவிற்க்கு ஒர் நிதிதிரட்டு போட்டி நடத்தினோம். நீங்களும் உதவலாம் நிதி அளிக்காமலே... எப்படியா? சி.என்.என் நடத்தும் கதாநாயகர்கள் வாக்கெடுப்பில் கிருஷ்ணனுக்கு ஒரு ஓட்டு போட்டால் போதும்... போட்டுட்டீங்களா? நன்றி.


3. தமிழக (டான்சி-யின் நிர்வாக இயக்குனர்) அரசு இயந்திரத்தில் ஒரு அப்பழுக்கற்ற மனிதர் திரு. உமாசங்கர் (இ.ஆ.ப). அமெரிக்காவின் ஐந்தாவது தூண் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு குழு சந்திப்பு இது. திரு. உமாசங்கர் அவர்களை 18 வருடங்களுக்கு முன் மயிலாடுதுறையில் சப்-கலெக்டராக என் மாணவர்களுடன் சந்தித்தேன்... சில தினங்களுக்கு முன் அதே முனைப்பில் ஊழலை எதிர்த்து போராடும் ஒரு போராளியாக.

இணைப்புகளை தொட்டுப்பாருங்கள்... உங்கள் மன ஓட்டமும் அதுவாக இருந்தால் தொடர்ந்து பாருங்களேன்... அது நிதி உதவியாக இருந்தாலும் சரி... ஊழலுக்கு மணியடிக்கும் நிர்வாக உதவியாக இருந்தாலும் சரி... நன்றி... நன்றி.

7 comments:

பழமைபேசி said...

இதெல்லாம் நடக்குறதுக்கு முன்னாடியே, பக்கத்து ஊர்ல இருக்குறவங்களுக்கும் தாக்கல் சொல்லணும்....

அரசூரான் said...

உண்மைதான் பழமை, தாக்கல் செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன். எல்லாம் கடைசி நேரத்தில் கைகூடிய நிகழ்வுகலாக அமைந்து விட்டது... அதுவும் வார நாட்களில், உள்ளூரிலேயே பலருக்கும் தெரிவிக்க இயலாமல் போய்விட்டது, தமிழர்களின் இருப்பை பதிவுசெய்யும் நோக்கில் நடத்தப்பட்டு விட்டது.

நட்புடன் ஜமால் said...

ஒரு ஓட்டு போட்டுட்டேன் மாம்ஸ்

இப்ப அது மட்டும் தான் இயலும்

அரசூரான் said...

நன்றி ஜமால், அதுவே பேருதவி இப்போது. நண்பர்களிடம் சொல்லி வாக்களிகச் சொல்... முதலாவதாக வந்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும்... அதை வைத்து அவர் நிறைய பேருக்கு உதவலாம்.

கெக்கே பிக்குணி said...

செய்தி போட்டு உள்ளூர்காரங்க வருகிற மாதிரியும், வெளியூர்காரங்க புகையுற மாதிரியும்:-) ஆவன செய்யிறத விட்டுட்டு....

கன்னா பின்னாவென்று கண்டனத்தைப் பதிவிடுகிறேன்.

Kousalya said...

உங்கள் தளம் இன்று தான் பார்த்தேன்....நன்றாக எழுதுகிறீர்கள்..... .இந்த பதிவும் பிடித்திருக்கிறது.....தொடரட்டும் உங்கள் பணி...வாழ்த்துக்கள்....

அரசூரான் said...

கெ.பியோட “கன்னா பின்னாவென்று கண்டனத்தை” மறுமொழியின்றி ஏற்றுக்கொள்கிறேன்... :(

கௌசல்யா, உங்கள் வருகைக்கும் பாரட்டுதல்களுக்கும் நன்றி.