என்னை மன்னியுங்கள் அப்பா...

உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சாது
விவசாயத்தில் விழுந்து விழுந்து
உடலும் மனமும் காயம் ஆகும்முன்
உன் ஆடை சாயம் போகும்முன்
படி படி என்றாள் அம்மா.படித்தவுடன் வேலையை
பிடி பிடி என்றாள் பாட்டி
உள்ளூரிலே வேலை ரொம்ப
கடி(னம்) கடி(னம்) என்றாள் மனைவி
விவசாயத்தை விட்டேன்
விமானத்தை தொட்டேன்.கலந்துரையாடைலில் நண்பர்கள் சொன்னார்கள்
என் அப்பா டாக்டர்... நானும் டாக்டர்
என் அப்பா எஞ்ஜினியர்... நானும் எஞ்ஜினியர்
அப்பா... நான் என்ன சொல்ல?
மவுனமாய் இருந்து விட்டேன்
விவசாயத்தை மறந்து விட்டேன்
அப்பாவை மறைத்து விட்டேன்...

என்னை மன்னியுங்கள் அப்பா...

9 comments:

Chitra said...

விவசாயத்தை மறந்து விட்டேன்
அப்பாவை மறைத்து விட்டேன்...

என்னை மன்னியுங்கள் அப்பா...


...... விவசாயத் தொழிலுக்கு, மதிப்பு கொடுத்து பெருமை சேர்ப்பதே முதல் பாடம்.
:-)

Chitra said...

welcome back! அடிக்கடி எழுதுங்கள்.

KANA VARO said...

கவிதைகள் ஒவ்வொன்றும் நச்!

பழமைபேசி said...

நிறைய எழுதுங்கள்!

அரசூரான் said...

@சித்ரா, @வரோ & @பழமை
வருகைக்கு நன்றி.

@சித்ரா & @பழமை... முயற்ச்சி செய்கிறேன். (உபரி நேரங்கள் தமிழ்ப் பள்ளி மற்றும் சங்க வேலைகளில் சரியாகிவிடுகிறது)

கெக்கே பிக்குணி said...

அரசூரான், கவிதை நச்!

//படி படி என்றால் அம்மா//படி படி என்றாள் அம்மா
//கடி(னம்) கடி(னம்) என்றால் மனைவி// கடி(னம்) கடி(னம்) என்றாள் மனைவி

ஏர்ப்பின்னது உலகம். டாக்டர்கள், எஞ்சினியர்கள் மறக்கலாம், நீங்களுமா?

இன்னும் எழுதுங்கள்!

அரசூரான் said...

வருகைக்கு நன்றி கெ.பி.
(எழுத்துப் பிழையை சரி செய்து விட்டேன், மீண்டும் ஒரு மூன்று நன்றி).
எங்க மறக்கிறது? அதே நெனப்பாத்தேன் இருக்கு.

கனாக்காதலன் said...

உண்மை :(

Pavai said...

Excellent work, Raja. Keep it up!