சினிமாவுக்கு பாட்டு எழுதுவது எப்படி?

நான் கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்களின் பேட்டியை படித்தும் கேட்டும் இருக்கிறேன்... சமீபத்தில் யுக பாரதி-யின் பேட்டி கூட.

ஆர்வம், முயற்சி, கற்பனை இதோடு கொஞ்சம் அதிஷ்டம்... பிறகு என்ன நீங்களும் கவிஞர்தான்.

இருந்தாலும் சில அடிப்படை விசயங்கள் தெரிந்து கொண்டு ஒரு வேலை செய்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது பாருங்க... அதான் இந்த வகுப்பு.

படத்தின் இயக்குனர் பாடல் காட்சிக்கான சூழலை சொல்லுவார், அதை வைத்து ஒரு பல்லவி இரண்டு மூன்று சரணம் எழுத வேண்டும், மற்றதை இசையமைப்பாளர் பார்த்துக்கொள்வார். ஆக "பல்லவி"-யும் "சரணம்"-மும் தான் சினிமா பாடலுக்கான இலக்கணம். துள்ளல் பாடல்கள், அதாங்க "குத்து பாட்டு" இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது.

சரி, தியரி வகுப்பு முடிஞ்சிடுச்சி, அடுத்து பிராக்டிகள். நம்ம அத ஒரு உதாரணத்தோட பார்த்தோம்னா பட்டுன்னு புரிஞ்சிக்குவீங்க.

படம்: சிவாஜி
பாடல்: சஹானா சாரல் தூவுதோ

சூழல்: நாயகனும் நாயகியும் பாடுர டூயட் பாட்டு. நாயகன் நாயகிய தன் வீட்டு விருந்துக்கு அழைக்கிறார். தன் காதலை சொல்லுறார், தான் அவளுக்காகவும் தன் குழந்தைக்காவும் என்ன என்ன வாங்கி வச்சிருக்கேன்னு காண்பிக்கிறார். இது எல்லாத்தையும் பார்த்த நாயகிக்கு காதல் வருது, அப்ப இந்த பாட்டு வருது.

பல்லவி: (காதல் பாடல்களில் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பல்லவி-தான், மாறுபட்ட கருத்தை வலியுறுத்தும் போதுதான் ரெண்டு பல்லவி)

சஹானா சாரல் தூவுதோ...
சஹானா பூக்கள் பூத்ததோ?

சரணம்:1

ஆண்:
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா...
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ?
அது என்னுடன் தேனீர் கொண்டதோ?

பெண்:
கனவோ?, நிஜமோ?
காதல் மந்திரமோ?

ஆண்:
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

(பெண் - பல்லவி...கோரஸ்)

சரணம்:2

பெண்:
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு...
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியால்
புலன்களை திறந்துவிடு...

ஆண்:
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிறப்பாட்டுமா?
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

கோரஸ்:
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...

இப்ப பாட்ட கேட்டு பாருங்க... படம் அப்படியே நம் கண் முன்னாடி ஓடும். ஒரு நல்ல இயக்குனர் இத சீன் பை சீன் கண்ணுல ஓட்டுனாதான் பின்னாடி செல்லுலாய்ட்-ல ஓட்ட முடியும்.

http://www.youtube.com/watch?v=YKvjPXns3jw&feature=related

9 comments:

Unknown said...

அண்ணா நான் பாடல் வரிகள் எழுதுகிறேன் ஆனால் அதில் இன்னமும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்,,,
உங்கலுக்கு விருப்பம் எனில் அழையுங்கள்,,
whatsapp no-7826821301

Unknown said...

பயனுள்ள தகவல்

Unknown said...

Sir pallavi saranathukku example than sir sollinga pallavi saranam enral enna sir please sollunga sir 9629822844

harish said...

சிறந்த தேடலின் ஒரு முடிவு கிடைக்கும் போது. எல்லாரும் பயணிக்க முடியும். சிறப்பாக...

Unknown said...

ஐயா, நான் பாடல் எழுதும் முயற்சியில் முதல் படி அருகில் தவிக்கின்றேன், பயிற்சியின் பசியில் வாடுகின்றேன், தேர்ச்சியின் தேடலில் வரிகளின் வறுமையில் வாடுகிறேன்,பயிற்சியை பாடல் ஓசையால் நாடுகிறேன் அதில் நடுக்கம் இசையா துடிக்கிறது நான் என்ன மாதிரியான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் தங்களின் மேலான ஆலோசனை தேவை...

Unknown said...

ஐயா,
Six scale, Eight scale பாடல் எழுதும் முறை பற்றி விளக்கினால் பயனடைவேன் இயன்றால் உதவ வேண்டுகிறேன்.
ஆஞ்சி கலா.
பாடல் ஆர்வலர்.
ஜோலார் பேட்டை.

Mca Fareed said...

வாழ்த்துக்கள் நல்ல முயற்சி

Unknown said...

நான் பாடல்கள் எழுதுகிறேன் இன்னும் சிறப்பாக எழுத எண்ணம் தங்களின் பயிற்சி தேவை தங்களின் தொலைபேசி எண் தெரியவில்லை தயவுசெய்து தாங்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனது எண் 8144844150 வானவில்லை வண்ணம் தீட்டுகிறேன் வரிசை மாறினாலும் வண்ணங்கள் மாற கூடாது எனவே தங்கள் இடம் இயம்புகிறேன் இயன்றதை எனது விரல்களுக்கு கற்பித்து தாருங்கள் பாடலாசிரியர் அவர்களே

sivatamilnet said...

அருமையான விளக்கம். நன்றி