அறிவியல் முன்னேற்றம்...50/50

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல, ஒரு நிகழ்வுன்னா நல்லது கெட்டது இரண்டும் நடப்பது போல...(ரொம்ப பில்டப் பண்ணுரனோ?) அறிவியல் முன்னேற்றமும் "ஆக்கப்பாதை" "அழிவுப்பாதை"-னு 50/50-யா இருக்கு.

ஆக்கப்பாதை பற்றி நான் ஒன்னும் புதுசா சொல்ல தேவை இல்லை இங்கே. அழிவுப்பாதைய பற்றி கொஞ்சம் அலசலாம். அடடா இவன் ஏதோ குண்டு வைக்கப் போரத பத்தியோ இல்ல இனையதளங்களால் தடுமாறிப்போகும் தற்குறிகளை பற்றியோ சொல்லப் போரான்னு நினைக்காதீங்க... இது ஆக்கப்பாதையில் உள்ள அழிவுப்பாதை பற்றியது (அங்க பில்டப் பண்ணுனேன்... இங்க பினாத்துரேனோ?). சரி புரியர மாதிரி சொல்லுரேன்... குறை-யில் குறை-யை காணாமல், நிறை-யில் குறை-ய பத்தி பார்ப்போம்.

ஒரு சராசரி மனிதனை நினைவில் வைத்து சில விசயங்களை அலசுவோம்...

1. நினைவாற்றல் - குறைய காரணமாகிறது

கால்குலேட்டர கையாலுவதே ஒரு திறமை, அத வச்சு சைன்/காஸ் தீட்டா இல்ல ஒரு பெரிய எண்ணோட மடங்கு/மூலம் இதெல்லம் அதிவேகமா போட பயன் படுத்த ஆரம்பிச்சோம்... இப்ப 5-யும், 9-யும் கூட்ட கால்குலேட்டர் எங்கன்னு தேடுராங்க. சரி இத விடுங்க சிலபேர் கணக்குன்னாலே கடுப்பாய்டுவீங்க. இந்த டெலிஃபோன் சமாச்சாரத்த பார்ப்போம்... என்னமோ டிஜிடல் டயரியாம்... பர்சனல் ஆர்கனைசராம்... அப்போல்லாம் 5 இல்ல 15 நம்பர பட படன்னு சொல்லுவோம்... இப்ப? அய்யோ நம் நம்பர் நமக்கே தெரியாது... என்ன ஒரு சாமர்த்தியம் நமக்கு... நம்பர் கேட்கும் நண்பரிடம் சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாருங்க... " நீங்க ஒங்க நம்பர சொல்லுங்க... அப்படியே என் செல்லு ஏத்திகிட்டு... அப்படியே ஒங்களுக்கு ஒரு மிஸ்டு கால் விடுரேன்... நீங்க அத அப்படியே ஸ்டோர் பண்ணிக்கலாம்" (ஹும் அவரே இதுக்கு-தான உங்க நம்பர கேட்டாரு). நான் யாரையும் குத்தம் சொல்ல விரும்புல... அடிக்கடி பிளான் மாறுது இல்ல புரொவைடர மாத்துரோம்... இதையே அடுத்தவங்களும் செய்ய... இப்ப நிலமை? "யாரு சிம்முல யாரு"-ன்னு ஒரு நிகழ்ச்சியே நடத்துலாம் போல இருக்கு.

2. சோம்பேரிதனம் - அதிகரிக்க காரணமாகிறது

என்ன கொடுமையா இருக்கு... எதுக்கெடுத்தாலும் கால்கடுக்க நிக்க வேண்டியிருக்கு... ஈ.பி பில்லுக்கு, டெலிஃபோன் பில்லுக்கு, பஸ்/ரயில்/விமானம் பயண முன்பதிவு செய்ய... அப்பாடா... வந்தாச்சு டெலி பேமெண்ட், டெலி புக்கிங்க், ஆன்-லைன் பேமெண்ட், ஆன்-லைன் புக்கிங்க... உங்களது அனைத்து தேவைகளும் உங்கள விரல் நுனியில்... சுழற்றுங்கள் அல்லது சொடுக்குங்கள்(கிளிக்குனுமாம்) நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே... ஓ இதான் அந்த "கவுச் பொட்டடோ"-வா.

அட அத இன்னாமோ சொல்ராங்கப்பா... ஆங்க் "ஐடெண்ட்டி தெஃப்ட்", அதாம்பா நம்ம விசயங்கள நமக்கு தெரியாம அடுத்தவன் ஆட்டைய போடுரது. இது சின்ன விசயதுலேருந்து பெரிய விசயம் வரைக்கும் நடந்துகிட்டு இருக்கு. நம்ம பேசாத பில்லுக்கு நமக்கு பில்லு வருது, நம்ம வாங்காத பொருளுக்கு பற்று அட்டை-க்கார வங்க்கியிலுருந்து பணம் கட்ட சொல்வது, இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டு போகிறது... எங்க போயி முடிய போகுது?

"ஐடெண்ட்டி தெஃப்ட்" என்பது "ஐடியா தெஃப்ட்"-ஆக அல்லது "மனசு தெஃப்ட்"-ஆக... நீங்க செய்யல்லாம்னு மனசுல நினைக்கிறத உங்களுக்கு அருகில் உள்ள ஒருவர் அல்லது உங்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு உடைய ஒருவர் அதை செய்துவிட்டு இருப்பார்.

"கால் கடுக்க" நின்ன காலம் போய் "மனசு நடுங்க" வேண்டிய காலமா ஆயிடுச்சி.

சோம்பேரிகளான நாம் இனி அடிக்கடி உச்சரிக்க போகும் வார்த்தை - "நான் அவன் இல்லை".

No comments: