கொவூகி

கொவூகி குருமா...

பெயரை பார்த்து பயப்படாதீங்க... நாம கரோகி ஸாங்க் மாதிரி... கொஞ்சம் ரெடி மேட்... கொஞ்சம் ஃபிரஸ்... கொவூகி ரெடி.

தே.பொ:

1. வெள்ளை கொண்டை கடலை - 1 சிறிய கப் (ஊரிய பின் வேக வைத்தது)
2. உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு (தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக, கொ.க அளவுக்கு, வெட்டியது)
3. தக்காளி - 2 (சிறிய துண்டுகளாக வெட்டியது)
4. வெங்காயம் - 1 நடுத்தர அளவு (சிறிய துண்டுகளாக வெட்டியது)
5. இஞ்சி பூண்டு விழுது - 1/4 டே.ஸ்
6. ஆச்சி சிக்கன் மசாலா - 1 டே.ஸ்
7. கரம் மசாலா - சிறிதளவு9. பச்சை கொ.மல்லி - 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
8. எண்ணை - 5 டே.ஸ்
9. உப்பு தேவைக்கு ஏற்ப்ப

செய்முறை:

1. வாணலியில் எண்ணை சூடானவுடன் வெங்காயம் + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
3. தக்காளி + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
4. வதங்கிய மசாலா கலவையை ஸ்மாஸர் வைத்து நசுக்கி மசாலாவை விழுதாக மாற்றவும் (கையில் தெம்பு இல்லன்னா மிக்ஸில போட்டு அரைக்கலாம் - சுவை கொஞ்சம் குறையும்) நசுக்கினா அம்மா அம்மியில் அரைத்து செய்தது போல இருக்கும்
5. நறுக்கிய உ.கி சேர்த்து, வாணலியை மூடி ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் (சில உ.கி முன்ன பின்ன வேகலாம்)
6. கொ.க + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் கரம் மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு மேலும் ஒரு 5 நிமிடம் - மிதமான சூட்டில் - வேக வைக்கவும் (கொ.க முன்பே வேக வைத்தது, இந்த 5 நிமிடம் மசாலாவுடன் கலக்க)
7. பச்சை கொ.மல்லி சேர்த்தால் குருமா ரெடி.

இத நீங்க டிரை அல்லது கிரேவி எப்படி வேணுமோ அப்படி பண்ணிக்கலாம்... தலையெழுத்து நீங்க ஊத்துர தண்ணியில இருக்குஇத எதுகூட வேணும்னாலும் கூட்டணி வைச்சுக்கலாம்... பிரட், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா... எதோடு வேண்டுமானாலும்... ஏன்னா கொவூகி கூட்டணி அப்படி... கொ.கி + உ.கி + தக்காளி.

No comments: