மனை உச்சவரம்பு

நில உச்சவரம்பு சட்டம் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள்... 1963 இல்லை அந்த கால கட்டத்தில்... ஒருவர் எவ்வளவு நிலம் வைத்து இருக்கலாம் என நிர்ணயம் செய்தார்கள்... பினாமிகள் உருவான அல்லது உருவாக்கப்பட்ட காலம்... பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, வண்டியோட்டி என்று பல பேரிடம் பட்டா பங்கு போடபட்டது. எது எப்படியோ பெரிய நில சுவாந்தார்கள் மேலும் நிலம் வாங்கினால் நமக்கு சங்கு... உள்ளதை காப்பற்றி கொண்டால் போதும் என்ற நிலமை.

அது போல் தற்பொழுது ஒருவர் ஓன்றீரண்டு (வீட்டு)மனைதான் வைத்து இருக்க வேண்டும் என் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்... வீடு என்பது ஒரு நடுத்தர வர்கத்தின் கனவு, எந்த ஒரு சாதாரண மனிதனும் ஆசைப்படும் விசயம்... அதை முன்பெல்லாம் அழகாக சொல்வார்கள்... "குந்த ஒரு குச்சி, கொழுகுத்த ஒரு நிலம்" என்று. கிராமமோ நகரமோ... இப்போது 'முதலீடு' என்ற பெயரில் அந்த கனவு தகர்க்கப்பட்டு வருகிறது.

நான் சின்ன வயதிலிருந்தே பார்த்து கேட்டு இருக்கிறேன்... புதிதாக வீடு வாங்கி குடியேரும் குடும்பத்தினர் அடையும் மகிழ்ச்சியை. அந்த மகிழ்ச்சி வரும் காலங்களில் வெறும் கைகூடா கனவாக ஆகிவிடுமோ?

No comments: