மல்லு கட்டு

'ஜல்லி கட்டு'... நக்கலுக்காக அது ஆயிடுச்சி 'மல்லு கட்டு'.

(அறிவிப்பாளர்: இந்த வருட மல்லு கட்டு நிகழ்ச்சியை நமது 'பட்டி மன்ற பாவலர்' அய்யா...சாலமன் பாப்பைய்யா தொகுத்து வழங்குவார்)

அனைவருக்கும் வணக்கம். ஒரு திரு நாளு... பண்டிகை அப்படீன்னா கொண்டட்டம் இருக்கனும்யா... அப்பதானா மனசு குதூகலமா இருக்கும். உண்மைய சொல்லனும்னா... இங்க 'ஜல்லி கட்டா' / 'மல்லு கட்டா'-னு ஒரு பட்டி மன்றம் நடத்துலாம்யா... இல்லியா பின்ன... அங்க பாருங்க... ஒரு பக்கம் கொம்பு சீவி, பல பல-னு வண்ணம் பூசி... சும்ம ஜில்..ஜில்-னு முரண்டு புடிச்சி நிக்கிற காளைங்க... மறு பக்கம் அந்த ஜல்லி கட்டு காளைய 'மல்லி மொட்டு'-னு நினைச்சி அடக்க துடிக்கிர வாலிப காளைங்க... திறந்து விடுங்கய்யா...காளைங்கல மோதி பாத்திறட்டும்.

தோ...திறந்து விட்டச்சய்யா முதல் காளைய... ஆங்க்... ஆகாங்க்... அருமைய்யா... தலைய ஆட்டுது, தரைய பிராண்டுது... முட்டப் போவுதா இல்ல முனகப் போவுதான்னு பாப்போம்.

அடடா... அம்புட்டு பேரும் கிளம்பிட்டாங்கய்யா காளைய அடக்க... பள்ளிக்கூடத்துல ஒரு வாத்தியார் பல காளைங்கள அடக்குவார்... அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி... இங்க ஒரு காளைய பல காளைங்க துரத்துது. ஓ... ஓய்... சும்மா சொல்லப்பிடாதுய்யா காளை அது வேளைய ஆரம்பிச்சிடுச்சி... சும்மாவா... அலங்காநல்லூர்ல... நம்ம பசங்கள ரவுண்டு கட்டுது.

ஓரு பயபுள்ள ஆர்வ கோளாருல காள வால புடிக்குது... நம்ம காள ஒரு யு டேர்ன் அடிக்குது. வால புடிச்ச புள்ள இப்ப காளையோட கால்ல... அவனுக்கு இந்த 'மல்லு கட்டு' இனி 'மண்ட கட்டு' தான்.

இதோ வந்துட்டாரு ஒரு மதுரகார தம்பி துள்ளிகிட்டு... தலையில முண்டாசு கட்டு (ஏதாவது 'பாபா' கட்டா இருக்குமோ)... பார்வையில ஒரு தெணாவெட்டு... இருக்காத பின்ன... அது மதுர மண்ணோட பிறந்தது ஆச்சே... அவரு காளைய பாக்க... காளை அவுர நோக்க... காளைகிட்ட கண்ணாலயே சொல்லுறாரு... மதுரக்காரன் அடக்கிடுவோம்ல...

அதான் சொன்னோம்ல... மதுரக்காரன் யா... காள இப்ப கதருதுல்ல... இதுக்கு மேல கமெண்டரி எதுக்கு... கிளம்புங்கய்யா வீட்டுக்கு போவோம்.

No comments: