சமையல் விமர்சனம்

சினிமா விமர்சனம், கதை, பாட்டு இப்படி பார்த்துகிட்டு இருக்கோம். ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே...அதனால இப்ப "சமையல் விமர்சனம்". ஒரு புதிய முயற்சியா சமையல் குறிப்பு பத்தி பார்க்க போறோம்.

சமையல் நிகழ்ச்சினா உங்களுக்கே தெரியும், அவங்க சமைக்கிரத விட அவங்க பேசி சமாளிக்கிரதே பெரிய விசயமா இருக்கும். ஏன்னா உங்க கவனம் எல்லாம் அவங்க பேச்சில இருக்கனும், சமயல் (குறிப்பு)-ல இருக்க கூடாது, அதுக்குத்தான். இந்த "சமையல் விமர்சனம்" நிகழ்ச்சியும் அப்படிதான்...உண்மைய சொன்னா, நம்ம பாணியில சொன்னா இது ஒரு "நக்கல் சமையல்"

இன்று ஒரு குவிக் ரெசிப்பி, மைக்ரோவேவ் ஓவன்ல, அஞ்சு நிமிஷத்தில் அல்வா, அதுவும் உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு இல்லாத, சுகர் பேஸண்ட்லாம் கூட சாப்பிடலாம்...அத்திப்பழ அல்வா.

என்னடா அல்வா-வானு நினைக்காதீங்க, நிறைய பேருக்கு பிடிச்ச ஸ்வீட், குறிப்பிட்டு சொல்லனும்னா சிலபேருக்கு அல்வா சாப்பிட பிடிக்கும், பல பேருக்கு அல்வா குடுக்க பிடிக்கும். (உன்களுக்கு எப்படி?)

இதோ தேவையான பொருள்கள்:
1. அத்திப்பழம் - 100 கிராம், நீங்க உலர்ந்த அத்தி பழத்த எடுத்து சுமார் 1 மணி நேரத்துக்கு ஊர வச்சிக்கனும். (என்ன முரைக்கிறீங்க? 5 நிமிஷம்-னு சொல்லிட்டு 1 மணி நேரம்-னு சொல்லுரனேனு நினைக்கதீங்க, ஊர வைக்கிரத "பிரிப்பரேஸன் டைம்"-னு சொல்லனும்..ஹி..ஹி)
2. பால் பவுடர் - 100 கிராம். (குழந்தைகளுக்கு குடுக்கிறது இல்லீங்கோ)
3. ஜீனி (அதிகம் இனிப்பு தேவைபட்டால்)
4. முந்திரி பருப்பு - 10 கிராம் (பாதியாக பிரித்தது)
5. பாதாம் பருப்பு - 10 கிராம் (கடையில ஃபிளேக்ஸா கிடைக்குமே அது)

பார்த்தீங்களா நேரம் மட்டும் இல்லீங்க தேவையான பொருள் கூட 5 தான்.

ரெடியா...அல்வா கிண்டுவோமா?

ஊர வச்ச அத்தி பழத்த எடுத்து மிக்ஸியில போட்டு நல்ல விழுதா அரைச்சிடுங்க. அரைக்கும் போது ஊர வச்ச தண்ணீரயே விட்டு அரைச்சிக்கலாம். அரைச்ச அத்தி விழுத ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி (அகலமான வாய்-ன உடனே உங்க வாய்-னு நினைச்சிகாதீங்க...அது நீட்டு...ஐ மீன் வாய் நீளம்) அது கூட பால் பவுடர சேர்த்து நல்ல கலக்கி, நான் முன்னமே சொன்ன மாதிரி இனிப்பு அதிகம் தேவைபட்டால் ரெண்டு ஸ்பூன் ஜீனி சேத்துக்கலாம். இந்த கலவைய ஒரு 3 நிமிஷம் மீடியும் ஹீட்ல குக் பண்ணுங்க. ஏன்னா மில்க் சாலிட்ஸ் ரொம்ப சாஃப்ட், ஈஸியா அத்தி பழத்தோட மிக்ஸ் ஆகி நல்லா வெந்து கம கம-னு இருக்கும். 3 நிமிஷம் ஆகிடுச்சி, எடுத்துடலாம். வேறு ஒரு கப்புல மாத்தி அது மேல முந்திரி மற்றும் பாதாம் வச்சு இப்படி டெக்கரேட் பண்ணி பரிமாரலாம்.

ம்..ம்..வாசனை அருமையா இருக்கு (பிளாக்-ல படிகிற உங்களுக்கு தெரிய போவுதா என்னா?) வாரம் ஒரு முறை இத சாப்பிடலாம் வயிற்றுக்கு ரொம்ப நல்லது, மல சிக்கல் குணமாகும்.

என்ன நேயழ்கலே நீழ்ங்க அச்சிபழ அழ்வா செழ்ஞ்சி ஷாப்டு பாழுங்க...(சாழி...அழ்வா வாயில ஒட்டிகிட்டு அதான் வாய் கொழருது)

(பிஹைண்ட் த ஸ்கிரீன் - அன் எடிட்டெட் ஸாட்ஸ் நம்ம மக்களுக்காக)

பிரசெண்டர்: ஏன்ங்க 3 நிமிஷம் போதுமா?
ஒருவர்: போதது, 5 நிமிஷம்-னு சொல்லிட்டோம், 1 நிமிஷம் அரைக்க, 1 நிமிஷம் கலக்க, பாக்கி 3 நிமிஷம் குக் பண்ண.
இன்னொருவர்: அது சரி, நமக்கு டைம்தான் முக்கியம், டேஸ்ட் பத்தி கவல இல்ல.
பிரசெண்டர்:நான் இன்னைக்கு டேஸ்ட் பண்ணவே இல்ல, கம கமன்னு இருக்குன்னு சொல்லி சமாளிச்சிட்டேன். டேஸ்ட் பண்ணியிருந்தா அம்மாடி... நாக்கு நம நமன்னு போயிருக்கும் போல.

பின் குறிப்பு: உண்மையில் இது ஒரு நல்ல ரெசிப்பி, ரோஜா குல்கந்து போல - இது ஒரு நல்ல மலம் இலக்கி (லக்ஸாடிவ்).

No comments: