வலையுலக ஈழ தோழர்களுக்கு...

வலையுலக ஈழ தோழர்களுக்கு...

உங்களில் நிறைய பேர் தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் ஈழ பிரச்சனைக்கு உதவுபவர்கள் என எண்ணி உங்கள் எண்ண குமுறல்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள், தவறு ஒன்றும் இல்லை... அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் சக பதிவர்கள் படித்து அவர்களால் முடிந்த உதவி கரத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டுமே உண்மை.

தமிழக அரசியல்வாதிகளால் இங்கு உள்ள காவிரி, முல்லை பெரியாறு மற்றும் ஒக்கேனக்கல் போன்ற உள் மாநில / நாட்டு பிரச்சனைகளை(யே) தீர்க்க முடியாத அவலத்தில் இருக்கின்றனர் இவர்கள் எங்கே வெளி நாடான ஈழத்திற்க்கு உதவ போகின்றனர்?

உங்கள் தேர்தல் பகிஷ்கரிப்பு கோஷங்கள் அவர்களை ஒன்றும் பெரிதாக பாதிக்க போவதாக எனக்கு தெரியவில்லை. பதவிக்கு வந்தவர்களும் வரப்போகின்றவர்களும் "இறையாண்மை" என்ற ஒரு வார்த்தையில் ஈழ "இயலாமையை" முடித்து விடுவார்கள்.

ஈழத்திற்க்கு ஓரளவு உதவ முடியும் என்றால் அது நிச்சயம் புஷ் போன்ற அமெரிக்க அதிபர்களால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர்(கள்)தான் இல்லாததை இருக்கு என்று சொல்லி - உதாரணத்திற்க்கு ஈராக்கில் சதாமை ஒரு வழி பண்ணியவர் - காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்கள். அப்படி பட்டவர்கள் உண்மையிலேயே ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட உதவுவார்கள். எட்டு ஆண்டு கால புஷ் ஆட்சியில் ஏன் அவர் ஈழ பிரச்சனையை கண்டுகொள்ள வில்லை? பிரச்சனையின் தீவிரம் அவருக்கு சரியாக சென்று சேரவில்லையா? நான் பத்திரிக்கை/மீடியா-களில் படித்த விசயங்களில் பதில் கிடைக்க வில்லை. நீங்களும், மற்ற ஈழ அமைதி விரும்பிகளும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

யோசியுங்கள்... ஓபாமா ஓரளவுக்கு உதவக்கூடும் என்பது என் கணிப்பு. அமெரிக்க பொருளாதார மீட்ச்சிக்கு பின் அவர் உலக அமைதிக்கு தன்னால் இயன்ற உதவி செய்வதாக கூறியிருக்கிறார்.

6 comments:

நட்புடன் ஜமால் said...

கூறி --- இருக்கிறார்

ஆ.ஞானசேகரன் said...

ஏற்கபடவேண்டிய விடயம்

ஆ.ஞானசேகரன் said...

பலர் ஏற்க மறுக்கபடலாம். ஏனனில் இறையாண்மையின் இயலாமை

ஆ.ஞானசேகரன் said...

அமேரிக்க அதிபரால் முடியுமோ முடியாதொ தெரியவில்லை. கண்டிப்பாக தமிழக தலைவர்களால் ஒன்றுமே................ முடியாது.

தர்ஷன் said...

தங்கள் கருத்துக்களைப் படித்தேன்
நான் ஈழத்தவன் அல்லாத போதிலும் இலங்கையன்(மலையகத்தவன்)
ஆனாலும் ஈழப் பிரச்சினை தொடர்பில் மிகுந்த அனுதாபம் எனக்கு உண்டு.
எப்படி நம்புகிறீர்கள் தனக்கு ரொம்பவும் நட்பான பிராந்திய வல்லரசை மீறி அமெரிக்கா இப்பிரச்சினையில் நேரடியாக தலையிடும் என்று.
இந்தியரின் வெளியுறவுக் கொள்கைகள் இத்தனை வருட அனுபவத்தில் நாம் நன்கு புரிந்துதான் என்றாலும் நாம் ஒன்றும் மத்திய அரசோ தமிழக அரசோ உடனே தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தரும் என நம்பவில்லை.
இருந்தாலும் கடல் கடந்து பரவியுள்ள ஒட்டு மொத்த தமிழரிடையேயும் ஓர் இன உணர்வு பரவியுள்ளதே கவனித்தீரா.
எவ்வித தளமும் இல்லாது உலகம் பூராய் பரவியிருந்த யூதரிடையே இருந்த இவ்வுணர்வு பெற்றுத் தந்த வெற்றி தெரியும்தானே.
இவ்வாறிருக்கையில் எம் தொடர்ச்சியான கோரிக்கைகள் எமக்கு மிக நெருக்கமாய் உள்ள ஆறு கோடி பேரின் உணர்வலைகளை உசுப்பி விடும் என்பதும் அதன் விளைவுகள் உலகெங்கும் பரவுகையில் ஏற்படக் கூடிய விளைவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
உங்களால் உண்மையில் மாற்றத்தை உணர முடியவில்லையா
ஒவ்வோர் கட்சியினதும் கொள்கைப் பிரகடனத்தையும் பாருங்கள் ஈழத்தை தவிர்க்க முடியவில்லை இது ஆரம்பமே

அரசூரான் said...

நண்பர்கள் ஜமால், ஞானசேகர் மற்றும் தர்ஷன் வருகை மற்றும் கருத்துப் பதிவிற்க்கு நன்றி.

தர்ஷன்...இந்திய வெளியுறவுக் கொள்கையை பற்றி நீங்களே சொல்லி விட்டீர்கள், அதை வைத்துதான் என்னுடைய இந்த பதிவே. பிராந்திய வல்லரசு (என சொல்லிக் கொள்ளவே எனக்கு நா கூசுகிறது) -ன் எல்லை என்ன, பதவிக்கு வரும் கட்சிகளின், அதன் தலைவர்களின் செயல்பாடு என்ன என்பதை மிகச் சுருக்கமாக தெளிவு படுத்தவே அனைகளின் பிரச்சனை பற்றி குறிப்பிட்டேன், அதை தாண்டி கட்சத்தீவு, பாக்கிஸ்தான்/சீன எல்லை தகறாரு என்று நமது வல்லமை பற்றி பேசி மூக்குடை படவேண்டாம் என நினைக்கிறேன்.

நிச்சயமாக நம் தமிழ் இன உணர்வு உலகலவில் பெரும் அதிர்வை உண்டு பண்ணியிருக்கிறது, அதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. அந்த உணர்வை ஒன்று சேர்த்து பிராந்திய வல்லரசை தாண்டி உலக வல்லரசை தலையிட வைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.