வோட்டு... அதுக்கு முன்னாடி

வோட்டு... அதுக்கு முன்னாடி
வேட்பாளருக்கு வெக்கிராங்க வேட்டு.

தொண்டன்: என்ன தலைவரே இப்படி ஆயிப்போச்சி

வேட்பாளர்: என்னடா என்ன ஆயிப்போச்சி இப்ப?

தொண்டர்: ஜெயிக்கிறதுக்கு நிறைய எலெக்சன் டெக்னிக் வச்சிருக்கேன்னு சொன்னீங்க, இப்ப நிக்க சீட்டு கூட கிடைக்கலியே

வேட்பாளர்: டேய், அது அம்மாவோட கலெக்சன் டெக்னிக்டா, முதல்ல அறிவித்த வேட்பாளர் சரியில்லைன்னு என்னை அறிவிப்பாங்க பாரு.

---

தொண்டன்: தலைவா, எல்லாம் நாசமாகிப் போச்சு தலைவா

வேட்பாளர்: என்னடா நாசமா போச்சி, நான் இன்னும் ஜெயிக்கவே இல்லையேடா

தொண்டன்: அது இல்ல தலைவா, எதிர் கட்சி வேட்பாளருக்கு இணையா நீங்க தாக்கு பிடிக்க மாட்டீங்கன்னு வேறு வேட்பாளர அறிவிச்சிட்டாங்க தலைவா

வேட்பாளர்: விடுடா, ஏற்கனவே எதிர்கட்சி வேட்ப்பாளர் எல்லாத்துலயம் பாதி கமிசன் தரேன்னு சொல்லிட்டாரு

---

தொண்டன்: தலைவா என்ன அதுக்குள்ளே எல்லோருக்கும் இனிப்பு வழங்குறீங்க

வேட்பாளர்: எதிர்கட்சி வேட்பாளர மாத்திட்டங்களாம்ல, பிறகு என்ன நான் ஜெயிச்ச மாதிரிதான

தொண்டன்: புரியலயே தலைவா

வேட்பாளர்: விடுடா பழைய வேட்பாளர் புது வேட்பாளர தோற்க்கடிச்சி தொகுதியில் அவர் பவர காமிச்சிடுவார்.

---

தொண்டன்: தலைவா, நீங்க எங்கயோ போயிட்டீங்க தலைவா

வேட்பாளர்: என்னடா சொல்லுற, ஜெயிச்சா டெல்லிக்கு போவேன், தோத்தா அடுத்த எலெக்சனுக்கு எதிகட்ச்சிக்கு போயிடுவேன் நீ எத சொல்லுற?

தொண்டன்: அதில்ல தலைவா, நேத்தி மப்புல் இருந்தப்ப நீங்க அடிச்சீங்களே ஜோக்கு, தேர்தல் பிரச்சாரம் பண்ண வெள்ளை மாளிகையில் இருந்து ஓபாமா வாரான்னு - அத சொன்னேன்.

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

கலக்குங்க நண்பரே

நட்புடன் ஜமால் said...

\\அதில்ல தலைவா, நேத்தி மப்புல் இருந்தப்ப நீங்க அடிச்சீங்களே ஜோக்கு, தேர்தல் பிரச்சாரம் பண்ண வெள்ளை மாளிகையில் இருந்து ஓபாமா வாரான்னு - அத சொன்னேன்.\\

ஹா ஹா ஹா