அரசூரில்... அடக்க விலை

காஸ்ட் ப்ரைஸ் (Cost Price)...கணக்கு பண்ணனும்... கடுப்பாவ கூடாது.

எனக்கு ஒரு பொருளை வாங்கும்போது அட இது இவ்வளவு மிக அதிகமாக இருக்கேன்னு நினைக்க மாட்டேன்... அதுக்கு பதிலா இந்த பொருள் அந்த விலைக்கு தகுதியான பொருளான்னு பார்ப்பேன். இது ஏதோ இப்பதான் தோனிச்சான்னு கேட்க கூடாது... சின்ன பிள்ளையா இருக்கும்போதே பண்ண ஆரம்பிச்ச கணக்கு... எங்க வீட்டுல பால், மோர், தயிர், வெண்ணை மற்றும் கீரை, வெண்டிக்கா, முருங்கக்கா இதெல்லம் விற்பாங்க... இது அம்மா/பாட்டி டிவிஸன். நெல், மாங்கா, தேங்கா, மரம் மட்டை... இது தத்தா டிவிஸன்.

எங்கம்மா வித்த கமாடிட்டியில மினிமம் விலை 10 காசு... ஒரு வட்டா மோரு அதுல மூன்று கரண்டி தயிரு (நோட் டவுன் த ஃபார்முலா 1+3). இங்க அந்த வட்டாவோ இல்ல கரண்டியோ எந்த மெட்ற்றிக் ஸ்டேண்டர்டு-க்கும் உட்பட்டது கிடையாது. ஆனா பாலுக்கு அப்படி கிடையாது, கால் லிட்டர் அலவு குவலை இருக்கும். அம்மாவிடம் கேட்பேன்... நீ இல்லாட்டி நான் எப்படி விற்கனும்/குடுக்கனும்-னு? எனக்கு கவலை என்னன்னா எங்க நிறைய கொடுத்து குடும்ப சொத்து குறைஞ்சிட போவுதோன்னு. அம்மா சொல்லுன்வாங்க என்ன பெரிய விஷயம் 10 காசுக்கு 1+3, 50 காசுக்கு 5+15 (அப்லை த ஃபார்முலா)... அப்புரம் கொஞ்ச மோரோ இல்ல 2 கரண்டி தயிரோ கூட போட்டு கொடுக்க வேண்டியது தான். சரி சேல்ஸ தெரிஞ்சி கிட்டாச்சி... அடக்க விலை?

நான்... அம்மா ஏதோ மாடு விலை இவ்வளவு, மட்டுக்கு வைக்கோல், புண்ணாக்கு, தீவனம் இத்யாதி... இத்யாதி... எல்லாத்தையும் "கூட்டி(+)" மாடு கறக்கிற பாலுக்கு ஒரு விலைய போட்டு அதால "வகுத்தா(/)" வரும்பான்னு சொல்லுவாங்க என்று நினைசேன்... ஆனா அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? ஊருல என்ன விலை விக்குதோ நாமும் அந்த விலைக்கு விக்கிறோம்னு சொல்லிட்டாங்க. (மனசுக்குள் சொல்லிகிட்டேன் குடும்ப சொத்து குறைய நீதான் காரணமா?)

என மனசு அடங்க வில்லை, எப்படியாவது "அடக்க விலை"-யை கண்டு பிடித்து தீருவது என்று முடிவு செய்தேன். தாத்தாவிடம் சென்று கேட்டேன், தத்தா நம்ம சுருட்ட மாடு (ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு பேர் உண்டு) என்ன விலை (தாத்தாவுக்கு டவுட் வந்துடுச்சி... என்ன டவுட்டுனு பிறகு சொல்லுகிரேன்) அது வருசத்துக்கு எத்தனை கட்டு வைக்கோல் திங்கும்? எவ்வளவு புண்ணாக்கு வாங்குவோம்? எவ்வளவு பால் கறக்கும்... அப்ப உள்ள அறிவுக்கு ஆல் டேட்டா கலெக்ட் பண்ணியாச்சு... விவரம் இதோ.

செலவு:
மாட்டின் விலை...2000.00, வைக்கோல்...100.00, புண்ணாக்கு... 1000.00 ஆக மொத்தம் 3100.00

வரவு:
சுருட்ட காலைல 2லி, மாலைல 2லி மொத்தம் 4 லி கறக்கும். சரிக்கு சரி தண்ணி ஊத்தலாம்னு (அதாவது 1லி பாலுக்கு 1லி தண்ணி) அம்மா சொல்லுவாங்க (பாட்டி சொல்லுவாங்க 1-க்கு 2 ஊத்துன்னு, ஹும் எங்க அம்மாவுக்கு ஊருல நல்ல பேரு... மாமியார்கிட்ட கெட்ட பேரு), ஆக 8லி. சுருட்டையோட குழந்தைப்பேரு காலம் 4 மாசம்... நோ மில்கிங்க்...
8(மாதம்) x 30 (னாள்) x 8(லி) x 2.00... 3840.00

யுரேகா... அம்மா பாலுக்கு அடக்க விலைய கண்டு புடிச்சிட்டேன்... இருந்தாலும் தவிடு, புல்லு, மாடு மேய்க்க ஆளு இதுகெல்லாம் எனக்கு விலை போட தெரியலம்மா... பெருசா ஒண்ணும் லாபம் இல்லையேன்னு கவலை பட்டேன். அம்மா சொன்னாங்க... அதுக்குதாண்டா செல்லம் உன்னை எப்ப பார்த்தாலும் படி... படின்னு சொல்லுரேன்.

பி.கு: நான் இருந்த நிலைமைய பார்த்து அம்மா சொன்னாங்க... நமக்கு லாபம்தான்... நீ மாட்டோட விலைய மொத்தமா போட்டுருக்க, அப்புறம் சுருட்ட வருஷா வருஷம் கண்ணு குட்டி போடும் அது நம்ம முதலுக்கு கிடைக்கிற மறு முதலீடு. (ஆகா இதுதான் ரெக்கரிங்க் டெப்பாசிட்டா?)

1 comment:

Unknown said...

பகிர்வுக்கு நன்றிங்க. கதிர் இடுகையில் லிங்க் கிடைத்தது.

எங்க வீட்டு பால் காரர், அரை லட்டர் பால் முழுவதும் கொடுத்துவிட்டு, மறுபடியும் கொஞ்சம் கொசிறு பால் கொடுத்துவிட்டு செல்வார். அவரிடம் ஒரு நாள் காரணம் கேட்டதுக்கு, ஒன்று வாடிக்கையாளர்கள தக்க வைத்துக்கொல்வதுக்கு, இன்னொன்று அரசாங்க முத்திரை இல்லாத அளவுகோல் பாத்திரத்தில் கொடுப்பதாக சிலர் நினைப்பதால் அதற்கும் ஈடு கொடுத்தால் போலாகிவிடும் என்றார்.

சின்ன வயசில நானும் அல்ப புத்தியோட கொஞ்சம் கொசுறு ஊத்துவாரோனு வெயிட் பண்ணியிருக்கேன்.