களவும் கற்று மற...

திருட்டு... களவும் கற்று மற... என்று சொல்ல வேண்டுமானல் எளிதாக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை... என் அனுபவம் அப்படி... இன்று வரை மறக்க முடியாமல் நினைத்து கொண்டிருக்கிறேன்.

பின்ன மறக்குமா... என்ன சாதாரண திருட்டா? மத்திய அரசாங்கத்தோட சொத்தல்ல திருடினோம்... ஆமாம் கூட்டு கொள்ளை... என் இளம் வயது பள்ளி தோழனுடன். திருடிய பொருள் ரயில் வண்டியிலிருந்து பல்ப்.

விடுமுறை நாட்களில் மதிய வேளையில் (எங்கள் வீட்டிற்கு அருகில் தான் ரயில் நிலையம், சில கட் சர்வீஸ் ரயில் எங்கள் நிலையத்தில் நீண்ட நேரம் நிற்க்கும்) ரயிலில் ஒழிஞ்சான் பிடிச்சி மற்றும் ஆலமர விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவது வழக்கம். அப்படி விளையாடி கொண்டிருக்கும் போது எங்க குள்ள ஒழிந்து கொண்டிருந்த சயிண்டிஸ்ட் முழித்துக் கொண்டான். பாட்டரி மற்றும் சைக்கிள் டைனமோவில் இருந்து மின்சாரம் தயாரித்து அதை வைத்து பல்ப் எரிய விடுவதற்க்காக இந்த ரயிலின் பல்பை ஏன் உபயோகப்படுத்த கூடாது என்று பேசி... பல்பை சுடுவது என்ற முடிவுக்கு வந்தோம்.

எங்களை கேனையர்கள் என்று நினைக்காதீர்கள். செய்யபோவது திருட்டு, மாட்டினால் என்ன ஆவது என்று யோசித்தால்... சரி போலீஸ் ஸ்டேசன் போவோம்... அங்கு எல்லோரும் தெரிந்தவர்கள்... மாட்டினால் சமாளித்து கொள்ளலாம் என்று முடிவு செய்து ரயிலின் கழிவரையில் உள்ள பல்பை சுட்டு விட்டோம்... எங்கள் போராத நேரம்... (இததான் அவன் மூஞ்சியே திருட்டு பயல காட்டி குடுத்துடும் என்று சொல்லுவாங்க போல) காங்கி மேன் கூப்பிட்டார்... நாங்கள் திருதிருவென முழிக்க... அவருக்கு சந்தேகம் வலுக்க... பையில் பல்ப் முந்திரி கொட்டை போல் தெரிய... பையில் என்னடா... வெளியில் எடு என்று சொல்ல... மாட்டிக் கொண்டோம்.

அவரும் தெரிந்தவர்தான் திட்டி அனுப்பி விடுவார் என்று நினைத்த எங்களுக்கு பெரிய அதிர்ச்சி... ஸ்டேசன் மாஸ்டரிடம் கொண்டு விட்டு விட்டார்... இந்த பெரிய இடத்து பிள்ளைகள் பண்ணுகிற கூத்தை பாருங்கள் என்று. அன்று எங்களுக்கு தெரிந்தவர் இல்லை... இவர் புதியவர்... எங்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டார்... முடிவாக உங்களை மத்திய போலீஸில் (அடி ஆத்தி... மானில அரசு, மத்திய அரசு அப்படீன்னா என்ன என்று தெரிஞ்சிகிட்டோம்ல) ஒப்படைக்க போகிறேன் இல்லை அபராதம் ரூபாய் 20 கட்டு என்று சொல்லி விட்டார். அபராதம் கட்டுவது என்றால் ஒருவன் இங்கு (ஆபீஸ் அரஸ்ட்) இருக்க வேண்டும் ஒருவன் போய் பணம் எடுத்து வரலாம் என்றார். நண்பன் கை விரித்து விட்டன். அப்போது எனக்கு கிடைக்கும் புது ரூபாய் நோட்டுகளை என் ஸ்டாம்ப் கலெக்ஸனுடன் சேர்த்து வைத்திருப்பேன், அதிலிருந்து கொண்டுவந்து கொடுத்து சிறை மீண்டோம்.

இதுல கொடுமை என்னன்னா... இத கேள்வி பட்ட என் அண்ணன் சொன்னான்... டேய் எனக்கு 5 ரூபாய் கொடுத்திருந்தா உங்களுக்கு ரெண்டு பல்ப் கொண்டுவந்து குடுத்திருப்பேன். எனக்கு கொடுக்காம பணத்த பூட்டி பூட்டி வெச்ச பாரு... அதான் இப்படி மாட்டிகிட்ட-ன்னு சொல்லி நக்கல் அடிச்சான்.

1 comment:

Telefone VoIP said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Telefone VoIP, I hope you enjoy. The address is http://telefone-voip.blogspot.com. A hug.