கை காசு...1

கை செலவுக்கு காசு... பாக்கெட் மணி... அட எப்படி வேணும்னாலும் சொல்லலாம்... நாகரீகமா சொல்லனும்னா இளம் வயதில் சம்பாதிப்பது எப்படி? நான் ஒன்னும் இங்க வளரும் வாலிபர்களுக்கு ஏதோ யோசனை சொல்ல வில்லை... நான் அடிச்ச கூத்த உங்க கிட்ட சொல்ல போரேன் அவ்வளவுதான்.

எங்க வீட்டில் இந்த வெளி செலவுக்கு எல்லாம் காசு கொடுக்க மாட்டார்கள், அப்பா இருந்த வரை கையை நீட்டினால் காசு... குறைந்தது 2-லிருந்து 5 ரூபாய் வரை கிடைக்கும், அது பொற்காலம் அது என் 12 வயதோடு முடிந்து விட்டது. அந்த வயதில் கை செலவு என்பது பள்ளிக்கு செல்லும் போது ஏதாவது திண்பண்டம் வாங்குவதற்க்கே... அப்படி ஏதாவது வேண்டும் என்றால் அம்மா அதை வீட்டில் செய்து கொடுத்து விடுவார்கள்... ஹும் வெளியில் வாங்கி சாப்பிடுவது கெட்ட பழக்கமாம்.

சரி சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவு செய்தாகி விட்டது... என்ன வழிகல் இருக்கிறது? நண்பர்களிடம் விசாரித்து பட்டியலிட்டேன். அவை...

1. கரி பொருக்கி விற்பது (எங்க வீட்டிற்கு எதிரில், அருகிலேயே புகைவண்டி நிலையம்) ரயில் வந்து நிற்க்கும் போது ரயில் டிரைவர் எரிந்த சாம்பல் கரியை கீழே தள்ளுவார், அதில் எரியாத கரியும் வந்து விழும், அத கரியை சேகரித்து எடுத்து கொண்டுபோய் கொல்லர் பட்டரையில் கொடுத்தால் காசு தருவார்கள்... அது எல்லோரும் வந்து போகும் பாதை, கரி பொருக்கினேன் என்று வீட்டில் போய் யாராவது சொல்லி விட்டால்... ஊஹும்... இது சரிபட்டு வராது என்று முடிவு செய்து விட்டேன்.

2. மட்டை முடைவது (1 மட்டை முடைந்தால் 5 காசு என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டின் எதிரிலேயே, கூப்பிடும் தொலைவில் ஒரு வீட்டில் கூரைக்கு வேயும் தென்னங்க் கீற்று, தென்னை மட்டை வாங்கி அதை முடைந்து (பின்னி), விற்ப்பார்கள். அவர்கள் எங்கள் வீட்டிற்கு தெரிந்தவர்கள், நான் வந்து கேட்டது அல்லது மட்டை முடைய போவது வீட்டிற்கு சொல்ல கூடாது என்ற அன்பு கட்டளையுடன் அவர்களிடம் அப்பரண்டிஸாக சேர்ந்தேன்... ஒரு மூன்று நாளில் நான் மட்டை பின்ன கற்று கொண்டேன்... தலை கட்டு கட்டுவது தவிர.

ஆரம்பத்தில் கடினமாக இருந்தது, மட்டை நன்றாக மடிக்க வரவேண்டும் என்பதற்க்காக தண்ணீரில் ஊர வைத்து இருப்பார்கள்... அது சற்று துரு நாற்றம் அடித்தது... அதை எல்லாம் சமாளித்து ஒரு மணி நேரத்தில் 10 மட்டை (20 கீற்று) முடைய (பின்ன) தேர்ச்சி பெற்றேன்... விசயம் என் தாத்தாவிற்கு தெரிந்து விட்டது... அவர் என் முதுகில் பின்னி விட்டார்.

(ஒரு துடிப்பான் இளைஞன வளர விடாம என்ன அட்டகாசம் பாருங்க... ஆக அதுவும் போச்சு... ஒரு ஆண்டிற்கு பிறகு... கை காசு...2)

No comments: