கை காசு...2

3. தீப்பெட்டி சட்டம் அடுக்குவது (அப்போது எங்கள் தெருவில் புதிதாக ஒரு தீப்பெட்டி தொழிற்ச்சாலை, குடிசை தொழிலாம்... ஒரு வீட்டில் ஆரம்பித்து இருந்தார்கள்) எங்கள் வீட்டின் சுவற்றின் (பெரிய சுவர்) ஓரம் பெரிய சந்து, அதில் என் தாத்தா (இந்த வலை தளத்தின் கதாநாயகன்) மூன்று சிறிய (சார்பு)வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார், அந்த வீட்டில் குடியிருந்த ஒருவர் அந்த தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்ய சென்றபோது, முதலாளி ரெஃபரன்ஸ் கேட்க, அவர் எங்கள் வீட்டில் குடியிருப்பதாக சொல்ல... எங்கள் வீட்டிலிருந்து யாரவது வந்து சொன்னால் வேலை தருகிறேன் என்று சொல்லி, அவரே என் தாத்தாவை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வந்து விட்டார். அவர் வந்த போது நான் தீபெட்டி தாயாரிப்பதை பார்க்க வேண்டும் என்று கேட்டேன்.

தயாரிப்பை பார்க்க போன எனக்கு சில தகவல்கள் கிடைத்தது... சட்டம் அடுக்குவதை "அவுட் சோர்ஸ்" பண்ணலாம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லு என்றார்கள். சரி என்று சொன்ன நான், எங்கள் வீட்டில் வேலை செய்த மற்றும் குடியிருந்த சிலரிடம் சொன்னேன்... பிரதி உபகாரமாக் எனக்கும் ஒரு உதவி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு...

இங்கு நீங்கள் தீப்பெட்டி தாயாரிப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.வெறும் தீக்குச்சிகளை (இயந்திரத்தால் வெட்ட பட்டது) ஒரு சட்டத்தில் ( நூரு குச்சிகள் பதியுமாரு வரும்பு இட பட்டிருக்கும்) வைத்து, 40/50 சட்டங்களை ஒரு ஃப்ரேமில் கோர்த்து (இது 1 அச்சு) அதை அச்சின் ஒரு பக்கம் சமன் செய்ய (இப்போது மறு பக்கமும் சீராக, குச்சிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி, இருக்கும்) அதை கலந்து வைக்கப்பட்டிருக்கும் கந்தக கலவையில் ஒத்தி எடுப்பார்கள்... தீக்குச்சி ரெடி... பிறகு டப்பாகளில் அடைத்து, ஆயத்தீர்வை லேபிள் ஒட்டி அனுப்புவார்கள்.

நிபந்தனை படி அவர்கள் எனக்கும் சேர்த்து குச்சிகளும் அச்சுகளும் எடுத்து வர வேண்டும், அடுக்கிய அச்சுகளை கொடுத்து விட்டு எனக்கு காசு கொண்டு வந்து கொடுக்க வேண்டும்... எங்கள் வீட்டு மோட்டார் கொட்டகையில் உட்கார்ந்து தீக்குச்சிகளை சட்டத்தில் அடுக்குவேன்... நல்ல பொழுது போக்கு + வருமானம்.

இத்துடன் என் இளம் வயதில் சம்பாதிக்கும் ஆசை முடிந்து... தொழில் அதிபர் ஆவது எப்படின்னு யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

No comments: