பொன்னேரு...

ஏய் சின்னவனே, சாமி அலமாரியிலிருந்து பஞ்சாங்கத்த எடுத்துகிட்டு வாடா.

எந்த பஞ்சாங்கம் தாத்தா?

அந்த பாம்பு படம் போட்டிருக்குமே, கௌரி பஞ்சாங்கம்டா.

தாத்தா ஏதும் விசேஷம் வருதா நம்ம வீட்டுல?

ஆடி பொறந்துடுச்சில்ல, விதைவிட வேண்டாமா? பொன்னேரு கட்டுறதுக்கு நல்ல நாள் பாக்கனும்ல்ல அதுக்குடா.

தாத்தா... இன்னிக்கேவா பொன்னேரு கட்ட போரோம்?

இல்லடா... இன்னும் ரெண்டு நாள் கழிச்சி... புதன் கிழமை காலைல கட்டுவோம், நீ இப்ப பஞ்சாங்கத்த கொண்டுவந்து கொடுத்துட்டு... கொள்ளைல செல்லதுரை இருப்பான்... அவனை போயி மணவெளி பங்குல... சனி மூலைல காட்ட கழிக்க சொல்லு, வயல் பக்கம் கொத்தி போட்டுட்டு... அப்படியே வரப்ப செத்தி வெக்க சொல்லு... சாமிக்கு படையல் வைக்கினும்ல்ல அதுக்கு.

சரி தாத்தா.

[பொன்னேரு (பொன் + ஏர்)... வருடத்தில் ஒரு நாள் பொன்னேரு பூட்டும் நாள்... ஒரு சிறப்பு தினமாக இருக்கும்]

அன்று அவன் அம்மா அரிசியில் வெள்ளம், தேங்காய், எள்ளு எல்லாம் போட்டு அந்த பூட்டரிசி-யை தயார் செய்வாள், அது கூட அவல், வெள்ளம், பொட்டுக்கடலை கலவையும் இருக்கும். பிரப்பங் கூடையில் பூ, பழம், பூட்டரிசி போன்ற பூசை சாமான்களுடன் புதுப் பெண் போல் விதை நெல்லும் அதில் இருக்கும். தீபாவளிபோல் அதிகாலையில் குளித்து தயாராகவிடுவான் அவன்... தாத்தாவிற்க்கு முன் சனி மூலையில் சட்டான் பிள்ளையாய்.

மணல்வெளி என்பது ஒரு வயலின் பெயர், காவிப் படுகையில் இருமண் பாடு கொண்ட நிலம், பொன் போட்டால் பொன் விளையும் என்று அவன் தாத்தா சொல்லுவார். அதில்தான் வருடா வருடம் பொன்னேறு கட்டுவார். ஆடிப் பதினெட்டில் எப்படியும் காவிரி ஆற்றில் தண்ணி வந்துவிடும், அதற்க்கு இரு வாரம் முன்பாக பொன்னேறு கட்டி, மறு நாளே “மோட்டார் பம்ப்” குழாய் வழி நீர் பாய்ச்சி மணல்வெளி நிலத்தில் விதை தெளித்து... இரண்டு வாரத்தில் மற்ற நிலங்களுக்கு நாற்று தயாராகிவிடும். பொன்னேறு கட்டிய அன்று சட்டான் பிள்ளையாய் இருந்த அவன் நாற்றுடன் தானும் வளந்து, நாற்று பரிக்கும் போது தாத்தா சொல் கேட்கும் சமத்து பிள்ளையாய் அவன்.

வருடங்கள் உருண்டோடின...

அவன் பஞ்சாங்கம் பார்பதை தவிர்த்தான், காரணம் தாத்தா அவனை தவிக்கவிட்டு போனார் என்பதால் அல்ல, ஆடியில் காவேரியில் தண்ணீர் வருவது தவிர்த்து போனதால். பொன்னேரு மறந்து போனான், காரணம் அம்மா பூட்டரிசி செய்யாததால் அல்ல, வானம் பொய்த்து போனதால்.

இன்று அந்த
பொன்னேரு பூட்டிய விவசாயின் கண்ணில் கண்ணீரு,
பூட்டரிசி படைத்த வயல்வெளிக்கு இன்று வாய்க்கரிசி.

விவசாய நிலங்களில் பார் வீடு
வாய்க்கால் வரப்புகளில் தார் ரோடு
வித்திடுறான் இயற்கைக்கு சீர் கேடு
விழித்துக்கொள்... இல்லையேல்…
வாய்சோற்ற்க்கு ஏந்தனும் திரு வோடு

(காலிப் பெருங்காய டப்பா... ஆனால் அதன் மணம்... இன்றும் நறுமணமாய்)

3 comments:

பழமைபேசி said...

ஆமா...ஆமா....

எல்லு? எள்ளு!

ஏர் உழவன், பொன்னேர்??

க.பாலாசி said...

இன்று நம்ம ஊரின் நிலை... எங்க வீட்ல ஆற்காடு பஞ்சாங்கம்... இன்னும் எங்கப்பா விவசாயிகளுக்கு விதைநடும் நாள் பார்த்து சொல்லிகிட்டிருக்காரு. ஒண்ணுரெண்டுபேரு கேட்டிட்டுபோவாங்க...

பெருங்காயத்தின் வாசம் அறிந்தேன்....

அரசூரான் said...

நன்றி பழமை... ஏர் பதிவுல மறுசால் ஓட்டிட்டோம்ல. என்.ஹெச்.எம் விசைப்பலை ரெம்ப வேலை வெக்குதுங்க.

நன்றி பாலாசி. தண்ணீர் பிரச்சனை இல்லைன்னா மீண்டும் பஞ்சாங்கம் பார்க்கலாம்ங்க.