100-த்துல 25 பேர் ரொம்ப நல்லவங்க...

டாக்ஸ் ஆபீசர்: அமெரிக்காவில் எழுபத்தி ஐந்து சதவீதத்தினர் டாக்ஸ் பிஃராட் (பாஃல்ஸ் கிளைம்) பண்ணுகின்றனர்.

குசும்பு குப்புசாமி: சந்தோச படுங்க இருவத்தி ஐந்து சதவீதத்தினர் சரியா பண்ணுராங்கள்ல?

டா.ஆ: நீங்க வேற அந்த பாக்கி இருவத்தி ஐந்து சதவீதத்தினர் டாக்ஸ் கட்டுறதே இல்ல...

கு.கு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

பேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...

நம்ம ஊருல ஒருவர் உண்மை இல்லாத ஒரு விசயத்தை தேன் ஒழுக பேசும் போது சொல்லப்படும் வாசகம் இது... பேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...என்று.

இது இன்றைய ஸ்டாக் மார்க்கெட்டுக்கு மிகச் சரியாக பொருந்துகிறது பாருங்கள்.

நான் பத்து ரூபாய்க்கு வாங்குன ஸ்டாக் இன்று நூரு ரூபாய் போகுதாம்... எங்கடா பணத்த கண்ணுல காமிங்கன்னா... அதான் பேப்பர்ல இருக்குல்லன்னு சொன்னாங்க... இன்னிக்கு அது ஒரு ரூபாய்க்கு போகுதாம்.

அடேய் ஊகத்துல வணிகம் பண்ணி பல பேர சோகத்துல தள்ளிட்டீங்களே...

காம்ரேடும் கார்ப்பரேட்டும்...

அன்று...
சோவியத் ரஷ்யாவில் காம்ரேடுகள் காணாமல் போயினர்...
இன்று...
அமெரிக்காவில் கார்ப்பரேட்கள் காணாமல் போகின்றனர்...

காம்ரேடும் கார்ப்பரேட்டும் கைகோர்த்தால்?

நேற்று, இன்று நாளை...
என்றும்...
இந்தியாவில் கா-வும் கா-வும் கைகோர்த்து இருந்தும்...
நம் கனவு...
காணாமல் போயிற்று...
நம் கனவு...
கைகூடாமல் போயிற்று... ஏன்?

காம்ரேட் அரசியல்வாதிகளின்...
கார்ப்பரேட் அலுவலர்களின்...
கூட்டு கொள்ளை...

ஓ... இந்தியாவில் கா-வும் கா-வும் கைகோர்த்து...
கார்ப்பரேட் கரப்ஸன்

சாமீ... எனக்கொரு உம்ம தெரிஞ்சாவனும்...

(வீட்டில் தொலைபேசி கட்டணம் கட்டுக்கடங்காமல் போகவே... அவசர கூட்டம் கூடுகிறது)

கணவன்: நான் விடிய காலை ஆபீஸ் போனா இரவுதான் வீடு திரும்புறேன்... என் தேவைக்கு ஆபீஸ் போனத்தான் உபயோக்கிறேன்... யார் இவ்வளவு பேசுறது?

மனைவி: ஏங்க நானும் என் தோழிகளுடன் அலுவலக நேரத்திலேயெ பேசி முடிச்சிடுரேன்... அப்புறம் எப்படி?

பையன்: தோ பாருங்க, எனக்கு வேலை விசயமா போன் குடுத்து இருக்காங்க, நான் அதையே என் சொந்த உபயோகத்துக்கும் பயன் படுத்திக்கிறேன்... நான் அவன் இல்லை.

வேலைகாரி: என்ன இங்க கூட்டம் போட்டு சத்தம் போட்டுகிட்டு இருக்கிங்க? ஆளாலுக்கு அவங்க வேலை இடத்துல உள்ள போன தான உபயோக்கிறீங்க? என்னமோ அத பெருசா பேசிகிட்டு... போங்க போயி அவங்க அவங்க வேலைய பாருங்க... நீங்க இப்படி சத்தம் போட்டு பேசினா நான் எப்படி போன்-ல பேசுறது?

மெயில் இன் ரிபேட் இல்ல...

மெயில் இன் ரிபேட் இல்ல... இல்ல அது இப்ப பெயில் அவுட் ரிபேட்.

சமீப மாதங்களில் அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் விரும்பி சொல்லும் வாத்தை. முதலில் வேலை செய்பவர்கள் பை அவுட் பிறகு நிறுவனங்கள் பெயில் அவுட். காட் ப்ளஸ் அமெரிக்கா.

சரி நம்ம ஆராய்ச்சிய பெயில் அவுட் ரிபேட்டுல செய்யிரதுக்கு முன்னாடி மெயில் இன் ரிபேட்டுல செய்வோம்.

மெயில் இன் ரிபேட் (மிர்) பற்றி தெரியாதவர்களுக்கு - அமெரிக்காவில் சில வர்த்தக நிறுவனங்கள் பல வியாபார உத்திகளை கையால்வது உண்டு... அதில் ஒன்று மிர். சில சமயம் இது மெயில் இன் அபீட் ஆவது கூட உண்டு... அதாங்க ரிபேட் தருகின்றேன் என்று சொன்ன நிறுவனம் காணாமல் போய் விடும். சரி நம திருப்பி கொடுக்கறவங்கள பத்தி பார்ப்போம். ஒரு பொருளை 50 டாலர் விலை போட்டு, 30 டாலர் மிர் தருவார்கள். நாம் முதலில் பொருளை முழு விலை கொடுத்து வாங்க வேண்டும், பிறகு அந்த பொருளுக்கான மிர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கூட (போலிகளை தவிக்க) பொருள் வாங்கியதற்கான ரசீது மற்றும் சில அடையாள (யு.பி.சி) குறிப்புகளுடன் அந்த வர்த்தக நிருவனத்திற்க்கோ அல்லது அந்த பொருளை தயாரித்தவருக்கோ அனுப்ப வேண்டும். அனைத்து விபரங்களும் சரி பார்த்த பின் உங்களுக்கு மிர் காசோலை வந்து சேரும். இது ஒரு நல்ல வியாபர உத்தி - அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மிர் ஒரு 100 டாலர் அடக்க விலையில் 50 டாலர் மிர்-க்கு நடந்தால் சரி. விற்க்கும் போது $100-க்கு வரி போட்டு அதி ஒரு 7$ அல்லது $8 டாலரை சம்பாதிக்கலாம். நம்ம ஆளுங்க 50 டாலருக்கு மேல போனா அரண்டு அடிச்சி ஓடி போயிடுவாங்க... சரி, சாராசரியாக ஒரு 10 முதல் 30 டாலர் வரையிலான பொருட்கள் இப்படி விற்பதாக வைத்து கொள்வோம். இறுதியாக ஒரு வர்த்தக நிறுவனம் 10 டாலர் காசோலையை பொருள் வாங்கியவருக்கு திருப்பி தர வேண்டும்.

அந்த 10 டாலர் காசோலையை திருப்பி பெற+தர பொருள் வாங்கியவர் (ரசீது காப்பி எடுக்க, அஞ்சல் செய்ய) மற்றும் பொருள் விற்றவர் (இதை சரி பார்க்க, காசோலை அச்சடிக்க, அஞ்சல் செய்ய) செய்யும் செலவு ஒரு 10 டாலரை தொடும்.

குரங்கு அப்பம் பிறிச்ச கதையா, பொருள் வாங்குனவருக்கும் இல்லாம, வித்தவருக்கும் இல்லாம எவரோ அதை ஆட்டைய போறூறாங்க... சரி இதையும் விடுங்க... நடந்த வேலைக்கு கொடுக்கப் பட்ட கூலி அது.

நம்ம உச்ச் கட்டத்துக்கு வருவோம்... இந்த மிர் சில சமயம் 30 டாலருக்கு 30 டாலர் கிடைக்கும். இதில் வாங்குபவருக்கு நிட்சயம் பலன் உண்டு... விற்றவருக்கு? நிட்சயம் கடன் உண்டு... இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த மெயில் இன் ரிபேட் வட்டியும் முதலுமா பெயில் அவுட் ரிபேட்ல வந்து நிக்குது.

அப்பா... அமெரிக்கனுங்களா கொஞ்சம் மாத்தியோசிங்கப்பா... 10 டாலருக்கு கீழ அல்லது சரிக்கு சரி மிர் கொடுக்கும் போது அத அந்த கடையிலேயே அடி மாட்டு விலைக்கு (அதாம்ப்பா 1 டாலர்) வித்தாகூட உங்களுக்கு லாபம்ப்பா... அத விட்டுட்டு மிர்-ருதான்ன்னு இருந்தீங்க கடவுள் வாழ்த்துனா (காட் ப்ளஸ்) மட்டும் இல்ல நேரடியா வந்தா கூட உங்கள பெயில் அவுட்லேருந்து காப்பாத்த முடியாது

போட்டு தாக்கு...

அமெரிக்காவில் தொடர் சூராவளி, புயல், மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு...

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...) ஹலோ
அமெரிக்கா: யாரது?
இயற்கை: நான் சூராவளி குட்சாவ்
அமெரிக்கா: நீ மேற்கே லூசியானாவுக்கு போ

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...) ஹலோ
அமெரிக்கா: யாரது?
இயற்கை: நான் கடும் புயல் ஹன்னா
அமெரிக்கா: நீ கிழக்கே நார்த் கரோலினாவுக்கு போ

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...) ஹலோ
அமெரிக்கா: யாரது?
இயற்கை: நான் சீரும் புயல் ஐக்
அமெரிக்கா: நீ தெற்கே ஹூஸ்டனுக்கு போ

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...) ஹலோ
அமெரிக்கா: யாரது?
இயற்கை: நான் ஜோசஃபின்
அமெரிக்கா: நீ வடக்கே போ

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...)
அமெரிக்கா: நீங்கள் தாக்க நினைத்த அனைத்து மாஹானங்களும் தாக்கப்பட்டு விட்டன. பீஃமாவில் பஃண்ட் இல்லாத காரணத்தால் சில மாதம் கழித்து தொடர்பு கொள்ளவும்

புள்ளைய தூக்கி தண்ணில போடு...

இதனை இதனால் இவன் முடிப்பான்-என்றாய்ந்து
அதனை அவன்-கண் விடல்.

இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ, இன்றைய தேதிக்கு ஒரு ஆளுக்கு மிகச்சரியா இருக்கு - அவர் தான் மைக்கேல் மதன காம ராஜன்... சாரி மைக்கேல் பெல்ப்ஸ்.

6 அடி 4 அங்குலம் உயரம், கையை விரித்தால் 6 அடி 7 அங்குலம் (விங்க் ஸ்பேனாம்), டார்சோ - அட அதாங்க உடம்பின் நடு பகுதி அது இவர் காலோட பெருசாம், பாதத்தின் அளவு 14(அதுவும் யு.எஸ் அளவு, இந்தியா பாட்டா அளவுன்னா ஒரு 18 இருக்கும்ன்னு நினைக்கிரேன்)... போதும் எனக்கு இப்பவே கண்ண கட்டுது.

வள்ளுவர் சொன்னத பெல்ப்ஸ் அம்மா சரியா புரிஞ்சிகினு புள்ளைய தூக்கி தண்ணில போட்டுட்டாங்க... அது இப்ப தங்கமா அள்ளுது