எனக்கு பிடித்த பத்து பெண்கள்...

என்னை நண்பர் கோபி பிருந்தாவனத்திலிருந்து இந்த தொடர் பதிவிற்க்கு அழைத்திருந்தார். நன்றி கோபி... இனி கூப்பிட்டா நிபந்தனை இல்லாம கூப்பிடுங்க. இல்லையா நிபந்தனைய கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் என சொல்லுங்களேன். (சரி... சரி... ஏன் இவர கூப்பிட்டோம்ன்னு வருத்தப் படாதீங்க). கற்ப்புக்கரசி ஒருவரை சொல் என்றால் கண்ணகிக்குமுன் நமக்கு நினைவிற்க்கு வரவேண்டியவர்கள் நம் அன்னையும் பிறகு (திருமணமாகியிருந்தால்) நம் மனைவியுமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நிபந்தனை இல்லையெனில் கொஞ்சம் சோப்பு போட்டிருக்கலாம்...

1. குண்டு டீச்சர் : செம்பனார்கோவில் உதவி பெரும் நடு நிலைப்பள்ளியில் என் முதல் வகுப்பு ஆசிரியை, பெயர் ஜெயலெட்சுமி. நான் காலந்தவறாமையை கற்றுகொண்டது இவரிடம்தான் என்பேன். உட்கார்ந்த இடத்திலிருந்தே நெய்வேலி காட்டாமணி-யால் வகுப்பு எடுத்தவர். இவர் எனக்கு பிடித்தவர் மட்டும் அல்ல என் மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்தவர்... எனக்கு முதலில் பிடித்தவர்.

2. அவ்வையார் : திருவள்ளுவரின் இரு வரியில் நான் உலகை அறியும் முன் ஒரு வரியில் பல உண்ணதங்களை “ஆத்திச் சூடி”-யின் மூலம் அறிய செய்தவர். அறம் செய விரும்பு, ஆறுவது சினம்... அவரை மறக்குமா என் மனம்?

3. புஷ்ப்பவள்ளி டீச்சர் : மயிலாடுதுறை தி.ப.தி.அர. மேனிலைப் பள்ளியில் எனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவர். அவர்களை பிடிக்க இரண்டு காரணங்கள், 1. எப்போதும் புன்னகை, 2. மாணவர்களின் மனமறிந்து பாடம் சொல்லிக்கொடுத்த தன்மை. வெட்கப்படாமல் தந்தி ஆங்கிலம் பேசு என்று தட்டிக்கொடுத்தவர்... ஏறிங் த மாடி, அடிச்சிங் த பம்ப் என்று சொல்லு என சொல்லி... சிரிக்காமல் புன்னகைத்தவர். (டீச்சருக்கு தெரியாது, தந்திக்கு பிறகு இண்டர்னெட்டு, ஈமெயிலு-ன்னு வந்திருச்சு... ஆனா தம்பி இன்னும் தந்திதான் அடிச்சிகிட்டு இருக்காருன்னு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

4. மேரி-கியூரி : மரியா எனும் இயர்பெருடன் பிறந்து, மணமானபின் கணவர் பியரி-கியூரின் பெயரால் மேரி-கியூரி ஆகி அணு ஆராய்ச்சியில் நோபல் பரிசு பெற்றவர். கணவன் இறந்த பின் கைம்பெண்ணாக இருக்காமல் கியூரி அணுகதிர்வீச்சு சோதனை மையத்திற்க்கு தலைமை ஏற்றதோடு ரேடிய-கதிர்வீச்சை மனித சிகிச்சைக்கு தக்கவாறு பிரித்தெடுத்த பெருமைக்குரிய நோபல் மங்கை.

5. அன்னை தெரசா : அண்டைய தேசத்திலிருந்து கல்வி கற்றுக்கொடுக்க வந்தவர்தான், க(கொ)ல்கத்தா சாலைகளில் அவர் கண்ட காட்சி… அவரை கல்விப் பணியிலிருந்து களப்பணிக்கு அற்பணிக்க வைத்தது. நோபல் பரிசுக்கு இவரால் பெருமை... அவரைப் பிடிக்கா விட்டால் என் மனதில் ஏதோ சிறுமை.

6. ஸ்டெஃபி கிராஃப் : ஸ்டெஃபி... அழகில் குல்ஃபி, டென்னிஸ் உலகில் ஆட்டத்தில் பேட்டா ராஃப்... இருப்பினும் நான் இதுவரை வாங்கவில்லை அவரிடம் ஆட்டோகிராஃப்.

7. ஷான் ஜான்சன் : பார்க்கத்தான் ஆள் குட்டி, பல்டி அடிப்பதில் படு சுட்டி. ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் எனக்குப் பிடித்த குட்டி(ப் பிசாசு).

8. நடிகை காஞ்சனா : காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தவர். விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றி பின் நடிகையாகி தமிழ் சினிமாவை அழகு படுத்தியவர். (தற்போது அவர் பொருளாதாரத்தில் நலிவடைந்து மிக மோசமான நிலையில் இருப்பதாக எங்கோ படித்தேன்... வருத்தமாக இருந்த்து)

9. பாடகி அனுராதா ஸ்ரீராம் : அழகிய குரல்களால் என்னை கவர்ந்தவர். எவ்வளவோ பாடல்கள்... மல்லிகையே... மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் கூறு... என்று என்னைத் தேடி இருந்தாலும்... கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

10. கவிஞர் தாமரை : ஒரு கவிஞராய்தான் எனக்கு தெரிந்தவர், பிறகு பாடலாசிரியையாய்... வியாபார உலகில், வளர்ந்து வரும் கலைஞர் எவர் ஒருவரும் செய்ய துணியாத ஒன்றை, என் எண்ணமும் எழுத்தும் ஒன்றே என தன்னை ஈழத் தமிழர்களுக்கான போரட்டத்தின் போது வெளிப்படுத்தியது... தெரிந்தவரை பிடித்தவர் ஆக்கியது.

5 comments:

நட்புடன் ஜமால் said...

பு.ப டீச்சர் தான் எனக்கும் ஆங்கிலம் பயிற்றுவித்ததாக ஞாபகம்

10ஆம் வகுப்பு மட்டும் DBTR தான்.

நீங்கள் அமெரிக்கா வரை போயிருக்கீங்கன்னு தெரிஞ்சா சந்தோஷப்படுவாங்க

ஆயில்யன் said...

புஷ்பவல்லி டீச்சர்கிட்ட படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் அவுங்கதான் எங்களுக்கு தலைமை ஆசிரியர் :)

ஸ்டெஃபி - அழகில் குல்பி - ரிப்பிட்டேய்ய்ய்!

நடிகை காஞ்சனா -பொருளாதாரத்தில் நலிவடைந்து மிக மோசமான நிலையில் - நலமுடன் இருப்பதாகவும் தவறான தகவல் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்!

கவிஞர் தாமரை - எனக்கும் எழுத்துக்களால் ரொம்ப பிடித்த கவிஞர் !

M.S.R. கோபிநாத் said...

கலக்கல் ராஜா. நிபந்தனையோடு கொடுத்தால் தான் அது தொடர்பதிவு. வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

:))

அரசூரான் said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி நண்பர்களே.