டிக்கெட்... டிக்கெட்... சார் டிக்கெட்

நாம் மரணத்தை குறிப்பிடும் போது அவர் சிவலோகத்திற்க்கு அல்லது பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கிவிட்டார் என்று சொல்லுவோம், அந்த சொல் எந்த அளவிற்க்கு நம் நடைமுறை வாழ்விற்க்கு பொருந்தும்?

உதாரணத்திற்க்கு நாமும் நம் நண்பரும் ஒரு பேருந்தில் பயணம் செல்லுவதாக வைத்துக்கொள்வோம், நீங்கள் சராசரி சாரீரம் கொண்ட நபர், உங்கள் நண்பரோ இரட்டை நாடி, இருப்பினும் அவருக்காக நாம் இரண்டு டிக்கெட் எடுக்க வேண்டாம், எந்த ஒரு பயணத்திலும்... அது தொடர்வண்டியோ அல்லது விமான பயணமோ... எதுவாயினும் பயணச்சீட்டு உருவத்தை பொருத்து வழங்கப்படுவது அல்ல. (பிறகு?....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

அப்படி பயணிக்கும் போது நமக்கு மரணம் சம்பவிக்கிறது என வைத்துக்கொள்வோம்.... பிறகு என்ன நடக்கும்?

நடத்துனர் சொல்வார்... அதை கீழே இறக்கு என்று.

நம் நண்பர் சொல்லுவார்... சார் அவர் டிக்கெட் எடுத்திருக்கிறார் எதுக்கு பாதியில் இறங்க வேண்டும் என்று?

யோவ்... வேணும்னா லக்கேஜா மேல போட்டு கொண்டுவா, இங்க சீட்டுல உட்கார்ந்து வரமுடியாது... சொன்னாக்கேளு

சார்... இது என்ன அநியாயம்? டிக்கெட் எடுத்தவர் இதோ உட்கார்ந்து இருக்கிறார், அவர் பையில் அவர் வாங்கிய பயணச்சீட்டு இருக்கிறது, பிறகு ஏன் லக்கேஜுல போடனும்? டிக்கெட் இவருக்குதானே கொடுத்தீங்க?

யோவ்... டிக்கெட் வாங்கனப்ப இவருக்குள்ள இருந்த அவரு இப்ப இல்லைய்யா?

யாரு இப்ப இல்ல? இவருதான் டிக்கெட் வாங்கினாரு, இவருக்குள்ள அவரு இருந்தாரா? அவர நான் பார்க்கலையே... நீங்க பார்த்தீங்களா? அப்ப அவருகிட்ட கொடுத்த டிக்கெட் இவரு பையில எப்படி வந்தது?

அய்யா, உடல் என்பது பருப்பொருள்... உயிர் என்பது பரம்பொருள்... அந்த பரம-ஆத்மா பரமாத்தாவை பார்க்க பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கி இருக்கிறது. இந்த டிக்கெட் இனி செல்லாது... இனி புதுசா ஒரு லக்கேஜ் டிக்கெட் வாங்கு.

(பகவத்கீதை சொற்பொழிவில் நான் கேட்டது... இறப்பு என்பது உடலுக்கு... உயிருக்கு அல்ல... சற்றே நகைச்சுவையுடன் இங்கு. ஒருவரின் பிறப்பை வைத்தோ, உருவத்தை வைத்தோ மதிப்பது தவறு... எல்லா உயிரும்/டிக்கெட்டும் ஒன்றே)

4 comments:

தேவன் மாயம் said...

அய்யா, உடல் என்பது பருப்பொருள்... உயிர் என்பது பரம்பொருள்... அந்த பரம-ஆத்மா பரமாத்தாவை பார்க்க பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கி இருக்கிறது. இந்த டிக்கெட் இனி செல்லாது... இனி புதுசா ஒரு லக்கேஜ் டிக்கெட் வாங்கு.
///
செம தத்துவம்!

ஆர்வா said...

அழகான பதிவு..

M.S.R. கோபிநாத் said...

அரசூரான், உங்கள் மெயில் பார்த்தேன். ஆர்குட் மெயிலில் இருந்து வந்திருந்தது. ரிப்ளை அனுப்ப முடியவில்லை.. என்னுடைய தளத்திற்கு வருகை தந்ததிற்கு நன்றி. உங்கள் பதிவுகள் அருமை.

அரசூரான் said...

* தேவன்மாயம், * கவிதை காதலன், * தமிழ் சமையல் மற்றும் * கோபி... உங்கள் வருகைக்கும், பகிர்விற்க்கும் நன்றி.