கத்திரிக்காய்க்கு கால் முளைத்தால்...

கத்தீரிக்காய்... கத்தீரிக்காய்...
குண்டு கத்தீரிக்காய்...
கண்ணம் ரெண்டும் கிள்ளச் சொல்லும்
காதல் பேரிக்காய்...

இங்கிலாந்து போகும்போது
ஏரோபிளேன் ஏறும்போது
டிக்கெட் ரெண்டு வாங்கச் சொல்லி
நோட்டீஸ் விடும்...

என்று ஒரு நல்ல பாடல், இப்ப கிடைத்த தகவலைப் பார்த்தால், வரும் நாட்களில் அமெரிக்கா இந்தியாவிற்கு நோட்டீஸ் விடும் போல இருக்கு.

செய்திக்கு...

எல்லாம் ஒப்புக்கொள்ளப் பட்டால்... முதலில் விதை இலவசம்னு ஆரம்பித்து... போக போக... கால் முளைத்து அமெரிக்கா சென்ற கத்தரிக்காயை... பேட்டர்ன் ரைட்ஸ் கொடுத்து கூட்டிக்கொண்டு வரப்போகிறோம்.

புதிய கத்தரிக்காய்...சேதி

மரபணு மாற்றப்பெயர்...பி.டி
பயிரிட்டாக் கிடைக்காலாம்... கோடி
சாப்பிட்டால் குறையலாம்... நாடி

இனி வரும் காலத்தில்
நாட்டுக்கத்திரியை தேடனும்... ஓடி


கண்டிருக்கிறார்கள் புதிய... விதை
நிறைய இருக்குமாம்... சதை
நாமெல்லாம் நம்பனுமாம்... அதை

இனி வரும் காலத்தில்
இந்திய வழுதணங்காய் வரலாற்றுக்... கதை


வரும் காலத்தில்...
கத்தரிக்காய் ஒரு பணம்
சுமை கூலி மூன்று பணம்.

4 comments:

பழமைபேசி said...

வேதனையான கதையையும் சுலுவா, யதார்த்தமாப் பின்னுறீங்களே இராசா?

ஆ.ஞானசேகரன் said...

சரியான பகிர்வு.....

நாடோடி இலக்கியன் said...

அவசியமான பதிவுங்க.
நாட்டுக் காய்கள்,மாடுகள் இப்படி ஒவ்வொன்றாய் அழிந்து வருவது வேதனையான விஷயம்.

அரசூரான் said...

நன்றி... பழமை, ஞானசேகரன் & நாடோடி இலக்கியன்.

நான் ஒரு விவசாயிங்க பழமை/ நா.இ, விதையிலே விந்தை என்பார்கள் அது கடைசியில் விளை நிலத்தை பாழ் பண்ணிடும். பூச்சிக்கொள்ளி வயலில் பூச்சியை அழிக்கின்றதோ இல்லையோ...கொஞ்ச கொஞ்சமாக நம்மை அழிக்கும்.