ங்கொய்யா... த கேஸ்

ங்கொய்யா... த கேஸ்

என்னடா இரண்டு பதிவுக்கு முன்னாடி "அய்யா த பாஸ்"-ன்னு போட்டான் இப்ப ங்கொய்யா த கேஸ்-ன்னு போடரானேன்னு பார்க்குறீங்களா... உண்மைய சொன்னேன் (பாட்ஷா ரஜினி மாதிரி படிங்க).

பின்ன பதவிக்காகவும் சீட்டுக்காகவும் மாறி மாறி படுக்கிறவங்கள மன்னிக்கவும் படுத்துரவங்கள கேஸ்-ன்னு சொல்லாம வேறு என்ன சொல்லுரது?


மணி: மருத்துவர் ங்கொய்யா "ஜன நாயக அடிப்படையில்" ஓட்டெடுப்பு எடுக்க போரேன்னு என்ன இது 7, 8-ன்னு போர்ட் தூக்கி காமிக்கிறீங்க? தி.மு.க-வில் 7 கோடி தரேன் அ.தி.மு.க-வில எட்டு கோடி தரேன்னு சொன்னாங்களா?
ங்கொய்யா: நம்மள மாதிரி சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் ஜன-ங்கள நாயாக அடி-ப்போம்ன்னு சொன்னேன். 7, 8 கோடியா, ஏய் மணி நீ வர வர ரொம்ப கேடியா மாறிகிட்டு இருக்க.
காடு வெட்டி: ங்கொய்யா, மணி ஏன் என்ன மாதிரி மாறனும், அதான் கேடியா நான் இருக்கேன்ல்ல, எனக்கு எதுக்கு ஒரு போட்டிய உருவாக்குறீங்க?சரி சரி இப்பவாவது சொல்லுங்க, என்ன அது 7, 8 -ன்னு போர்ட்-ல?
ங்கொய்யா: அதுவா தி.மு.க கூட்டணி வச்சா குண்டாஸ்ல உனக்கு 7 வருஷம், அ.தி.மு.க வோட வெச்சா 8 வருஷம்... உனக்கு வசதி எப்படி?
காடு வெட்டி: மரத்த வெட்டி, மாட வெட்டி இப்ப கடு வெட்டிகிட்டயேவா, வன்னிய சங்க தலைவன் மென்னிய புடிச்சி பார்க்குறீங்களா?
மணி: யோவ் காடுவெட்டி, இந்த மரம் வெட்டிய நம்புனா நம்ம கதி அதோகதிதான், அவருக்கு 7-ஓ இல்ல 8-ஓ சரி, நமக்குதான் 7 1/2 (ஏழரை)...சும்மா கம்னு இரு.

3 comments:

நட்புடன் ஜமால் said...

கேஸ்-ஆ

cash-ஆ

Sanjai Gandhi said...

Padam jooperu :))

அரசூரான் said...

ஜமால்...

அரசியல்வாதிங்க எல்லாம் - கேஸ்
அளவுக்கதிகமா சேக்குராங்க - கேஷ்
ஓட்டுபோட்டவன ஆக்குராங்க - லூஸ்
விழித்துக்கொண்டால் நாம் - பாஸ்
இல்லாட்டி பிடிங்கிடுவானுவோ - பீஸ்