கத்தி போயி புத்தி வந்தது டும்... டும்... டு... டும்
பிளேடு போயி ஷார்ப்னர் வந்தது டும்... டும்... டு... டும்
ஒரு காரியத்த சிறப்பா செய்து முடிக்க கத்தியும் (சத்தம் போட்டு வேலை வாங்குதல்) உதவி இல்ல, கத்தியாலயும் (ஆயுதம் காட்டி மிரட்டியும்) உதவி இல்ல, உனது புத்தி உதவினால் தான் செய்து முடிக்க முடியும் எனபதை ஒரு சிறிய பழ மொழியில் "கத்திய தீட்டாத புத்திய தீட்டு"-ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.
நாம ரொம்பவே பெரியவங்க பேச்ச கெட்டு நடக்குரோம்ன்னு நினைக்கிறேன்... ஏன்னா இப்ப புத்திய தீட்டி தீட்டி... த டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட் -னு சொல்லுற மாதிரி ஆயிடுச்சி.
இந்த பென்சில் சீவுர விசயத்த பாருங்களேன்... நம்ம எல்லோருமே இந்த அனுபவத்த பெற்று இருப்போம்ன்னு நினைக்கிறேன்.
பென்சில் சீவ உதவியது...


(கீழ்கண்ட இரண்டையும் நான் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் பார்த்தது இல்லை, அமெரிக்கா வந்த பிறகு பார்த்தது)


4. மின்னியல் பென்சில் சீவி (எலக்ட்ரிகல் ஷார்ப்னர்) - இது இயந்திர பென்சில் சீவியை விட ஒரு படி மேலே. பென்சில அதற்குரிய துவாரத்தில் பொருத்தினால் போது அதுவே கூர்மை சரி பார்த்து சீவுவதை நிறுத்தி விடும்... பொருத்து - அழுத்து - எழுது.
த டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட் - உண்மைதான். அதனால் நாம் பெற்றவை எவை? இழந்தவை எவை?
பிளேடு உபயோகிக்கும் போது சிக்கனத்தையும், மறுப்பயன்பாட்டையும் (ரீசைக்கிள்), கவனத்தையும் கற்றுக் கொண்டோம். பென்சில் சீவி (கையால் / இயந்திர) உபயோகிக்கும் போது கைக்கு ஒரு பயிற்ச்சி (எக்ஸர்ஸைஸ்) மற்றும் துல்லியம் (பிரிசிஸன்) கற்றுக் கொண்டோம்.
கடைசியில்...அவசர உலகில், துரித உணவு உண்டு, பென்சில் சீவ கூட கையில் திராணி இல்லாமல், சோம்பேரிகளாக மாறி விட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது.
2 comments:
//பிளேடு உபயோகிக்கும் போது சிக்கனத்தையும், மறுப்பயன்பாட்டையும் (ரீசைக்கிள்), கவனத்தையும் கற்றுக் கொண்டோம். பென்சில் சீவி (கையால் / இயந்திர) உபயோகிக்கும் போது கைக்கு ஒரு பயிற்ச்சி (எக்ஸர்ஸைஸ்) மற்றும் துல்லியம் (பிரிசிஸன்) கற்றுக் கொண்டோம்.
கடைசியில்...அவசர உலகில், துரித உணவு உண்டு, பென்சில் சீவ கூட கையில் திராணி இல்லாமல், சோம்பேரிகளாக மாறி விட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது//
சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க! இது போன்று பல விசயங்களில் டெக்னாலஜி கொஞ்சம் ஓவராவே இம்ப்ரூவ் ஆனதால பாதிக்கப்பட்டது நாமதான்! திரும்ப பழைய வாழ்க்கை முறைக்கே திரும்ப தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் :)
திரும்ப பழைய வாழ்க்கை முறைக்கே திரும்ப தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் - முற்றிலும் உண்மை
Post a Comment