வர்ணாஸ்ரமா...

வர்ணாஸ்ரமா...

இந்த பதிவோட தலைப்பை படிப்பதற்க்கு முன் திருவள்ளுவரோட ஒரு திருக்குறள படிச்சிடரது நல்லது என்று நினக்கிறேன்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு - குறள்

வர்ணாஸ்ரமா / வர்ணாஸ்ரம் / வர்ணாஸ்ரம தர்மம் அப்படி இப்படி என முடிவாக வர்ணாஸ்ரமம் என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு சமஸ்கிருத வார்த்தையாக இருந்தாலும் இந்த வார்த்தைக்கு தமிழோடு அப்படி ஒரு அன்யோன்யம்/ஒற்றுமை இருக்கு.

அந்த வர்ணாஸ்ரமம் என்கிற வார்த்தையை தமிழில் கொஞ்சம் பிரிச்சி பார்ப்போமா...வர்ணாஸ்ரமம் = வர்ணம் + ஆ + சிரமம்... ஆமாங்க வர்ணத்த பற்றி பேச (ஆ)ரம்பித்தாலே சிரமம் தாங்க. ஆளாலுக்கு சண்டை போட்டுகிறாங்க.

இந்த வர்ணாஸ்ரமம் எல்லா இடத்திலேயும் ரொம்ப சிரமமாத்தான் இருந்திருக்கும் போல... அதனால யாராவது வர்ணத்த பத்தி பேசுனா நாம அவங்க கிட்ட ஒரு சரணத்த (கும்பிட) போட்டு மேலும் ஒரு கரணத்த (பல்டி) அடிச்சி ஓடி போயிடுவது நல்லது என நினைக்கிறேன்.

இந்த வர்ண சிரமம் உலகவில்தான் முதன்மையான சிரமத்தை - உண்மையான வர்ணத்தை வைத்து பிரித்து கருப்பினம் வெள்ளையினம் என்று இனப் பாகுபாடுக்கு வித்திட்டு இருக்கு எனலாம்.

நமக்கு எதுக்குங்க உலக பிரச்சனை, ஆ ஊ-ன்னா துப்பாகியால சுட்டுட்டுடுவாங்க. வாங்க நம்ம நாட்டுக்கு - இந்தியாவுக்கு வந்துடுவோம், எதுவா இருந்தாலும் நமக்குல்ல பேசி தீர்த்துக்கலாம் பாருங்க.

வர்ணாஸ்ரம்கிற வார்த்தைய உருவாக்கிய நம்ம நாட்டுல என்னத்த பேசன்னு நினைக்க கூடாது... எனக்கு தெரிஞ்சு நம்ம ஊருல நிறத்தை வைத்து பாகுபாடு பண்ணுவது மிக குறைவு, வேணும்னா... சிகப்பா உள்ளவங்க அவங்க நிறத்தை வெச்சி கொஞ்சம் பெருமை பட்டுக்குவாங்க அவ்வளவுதான். பிறகு எங்க இருந்து வந்தது இந்த வர்ணாஸ்ரம்? சமஸ்கிருதத்திலிருந்து வந்ததா? இல்லை சாஸ்திர சம்பிரதாயங்கள் என இடை புகுந்து... மேலும் குலம் கோத்திரம் என நம்மை ஆத்திரம் அடைய வைக்கவா? இல்லை, அது ஒருவர் செய்யும் தொழிலை வைத்து அவரை இனம் காண கையாளப்பட்ட ஒரு சொல். அதனால்தான் "செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நம் செல்வம்"-ன்னு சொல்லியிருக்காங்க.

யாரும் யாருடைய தொழிலையும் குறத்து பேசுவது தவறு, எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயத்திலும் அப்படி ஒரு குறிப்பிட தொழிலை தாழ்த்தி குறிப்பிட்டதாக தெரியவில்லை... அப்படி யாரேனும் பேசினால் அவர்கள் தர்குறிகள் அல்லது அறிவிலிகள்.

இதுல பாருங்க நம்மாளுங்க பண்ணுன கூத்த... என்னவோ சொல்லுவாங்க ஈர பேனாக்கி, பேன பெருமாளாக்கின்னு...வர்ணத்த நாலா... தலை, தோள், இடுப்பு மற்றும் கால்-ன்னு எங்கு யாருக்கு பலமோ அந்த பலத்த வெச்சி பிரிச்சத நம்மாளுங்க (உங்களுக்கே புரிஞ்சி இருக்கும், நான் அதை இங்க சொல்ல வேண்டாம்ன்னு நினைக்கிறேன்) உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதின்னு ஆக்கி... தீண்டாமை என்னும் பாவச்செயலை செய்திட்டாங்களோன்னு நினைக்கிறேன்.

யாருங்க சொன்னா தலைதான் உயர்ந்தது கால் தாழ்ந்ததுன்னு? ஒருவர் பெரியவர் நல்லவர் தீரிக்கதரிசி என்றால் என்ன செய்வீர்கள்? அவர் தலையை தொட்டு வணங்குவீர்களா இல்லை காலை தொட்டு வணங்குவீர்களா? நான் காலில் விழும் கலாச்சாரம் பற்றி சொல்ல வில்லை, தொழிலை மதிக்கும் கலாச்சாரம் பற்றி சொல்கிறேன். இதை பகவத் கீதையில் மிக அழகாக சொல்லியிருப்பதாய் என் குரு சொன்னார்.

நாம் தலையாய் இருக்க வேண்டுமா இல்லை காலாய் இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

வர்ணம் என்னும் பழமைபேசி அதர்க்காக சண்டை போட்டு நம் நேரத்தை வீணாக்குவது வெட்டி வேலை.

கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்து மதம்"-ன்னு சொல்லி இருக்கார்ன்னா அத்தோட முடிச்சிகனும், அப்ப மத்த மதத்துல அர்த்தம் இல்லையான்னு கேட்ககூடாது.

எது உயர்ந்து தாழ்ந்தது என முடிவு செய்வது நாம், அந்த முடிவில் நம் அறிவுக்கு எட்டிய வரையில் அதோடு கொஞ்சம் நம்ம விருப்பு வெருப்பு இருக்கும் இருக்க செய்யும்தானே? அப்படி இருக்கையில் அவர் அவர் அவர்களது வர்ணத்தை உயர்த்தி பேசுவது இயற்க்கையே.

என்னை எடுத்துக்கோங்க, நான் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் நண்பர்களுடன் பேசும் போது இந்தியாவை விட்டு கொடுக்க மாட்டேன், இந்தியாவில் இருக்கும்போது தமிழ் நாட்டை விட்டு கொடுக்க மாட்டேன். சென்னைல இருந்தா ஏய்... தமிழ் தரணியில் நெஞ்சை அல்லும் தஞ்சை-ன்னு சொல்லுவேன். அதே நண்பர் கூட்டம் தஞ்சாவூரா இருந்தா ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா-ன்னு பேசுவேன். என்ன ஊர பத்தி பேசுரனேன்னு பார்க்காதீங்க... அதுவும் நமக்கு ஒரு வர்ணம்தானே.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.

6 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஒரு திருக்குறள படிச்சிடரது நல்லது என்று நினக்கிறேன்.\\

யாருக்கு நல்லது

நட்புடன் ஜமால் said...

\\என்னை எடுத்துக்கோங்க, நான் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் நண்பர்களுடன் பேசும் போது இந்தியாவை விட்டு கொடுக்க மாட்டேன்\\

மிக நல்ல விடயம்.

அறிவே தெய்வம் said...

\\அது ஒருவர் செய்யும் தொழிலை வைத்து அவரை இனம் காண கையாளப்பட்ட ஒரு சொல். \\

சரியானதே, பின்னரே பிறப்பின்
அடிப்படையில் மாறிவிட்டது.

தொடர்ந்து எழுதுங்கள்,
வாழ்த்துக்கள்.

அரசூரான் said...

நன்றி ஜமால் / அறிவே தெய்வம்

இனம் / மதம் / ஜாதி / மொழி பாகுபாடு என்பது நம் விருப்பு வெருப்பு கலந்த ஒன்று. அதில் நல்லிணக்கம் காண்பது இனிது.

பொதுவாக சொல்ல வேண்டும் என நினைத்தேன்... அதான் உலகத்துல ஆரம்பித்து சொந்த ஊரில கொண்டுபோய் நிறுத்தினேன்.

ஆ.ஞானசேகரன் said...

//என்னை எடுத்துக்கோங்க, நான் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் நண்பர்களுடன் பேசும் போது இந்தியாவை விட்டு கொடுக்க மாட்டேன், இந்தியாவில் இருக்கும்போது தமிழ் நாட்டை விட்டு கொடுக்க மாட்டேன். சென்னைல இருந்தா ஏய்... தமிழ் தரணியில் நெஞ்சை அல்லும் தஞ்சை-ன்னு சொல்லுவேன். அதே நண்பர் கூட்டம் தஞ்சாவூரா இருந்தா ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா-ன்னு பேசுவேன். என்ன ஊர பத்தி பேசுரனேன்னு பார்க்காதீங்க... அதுவும் நமக்கு ஒரு வர்ணம்தானே.//

நல்லா கதக்குரிங்க அசூரான்...

ஆ.ஞானசேகரன் said...

//நாம் தலையாய் இருக்க வேண்டுமா இல்லை காலாய் இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்//

மெய்யாலுமே சரிங்கோ..