அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே

அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா... தோப்புக் கரணம் போடவா...

நான் பாட்டு பாட வரலீங்க, தோப்பு கரணம் சம்பந்தமா ஒரு சுவையான தகவல்... இப்ப இது கொசுரு தான். தொடு உணர்வு சம்பந்தமா பல ஆராய்ச்சி, காது ஏன் குத்துரோம் மூக்கு ஏன் குத்துரோம்... ஃபிஸியோ தெராபிஸ்ட் கைரோ பிரக்டிஸ், அக்கு பஞ்சர் அப்படி இப்படி..., சரி சரி பட்டியல நிறுத்திட்டு பட்டுன்னு மேட்டருக்கு வரேன்.

தோப்புக் கரணம் பற்றிய எனது முதல் பதிவ கொஞ்சம் போயி படிச்சிட்டு வாங்க, சிந்திக்கிர மேட்டருக்கு முன்னாடி சிரிப்பு மேட்டர்.

http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_8580.html

http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_1541.html

படிச்சிங்களா... அதுல என்னவோ குறையுதுள்ள? சிரிக்கிர மேட்டரா அது சிந்திக்கிர மேட்டர், அது என்னவென்று கண்டு புடிச்சிட்டேன்.

அந்த காலத்தில் படிப்பு வரவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக் கரணம் போட சொல்லி இருக்கிறார்கள். தோப்பு கரணம் போடுடா அப்ப-வாவது புத்தி வருதான்னு பார்ப்போம்னு சொல்லி... அதோட மகிமை தெரிஞ்சி.

இப்ப யாரவது வாத்தியார் (பின்ன... முன்ன மாதிரி யாரு ஆசிரியர் இல்ல அய்யான்னு கூப்பிடுறாங்க... யோவ் வாத்தி-ங்கிறான் இல்ல ங்கொய்யா-ங்கிறான்) தோப்புக் கரணம் போடுன்னா அது இப்ப பனிஷ்மெண்ட் ஆயிடுச்சி... தோப்புக் கரணம் போட்ட பையனுக்கு புத்தி வருதோ இல்லியோ, போட சொன்ன வாத்தியாருக்கு பையனோட அப்பா கிட்ட இருந்து ஆப்பு வரும்.

இந்த வலை இணைப்பை சொடுக்கி பாருங்க உண்மை தெரியும். என்னுடன் கீதை படிக்கும் குழுவில் உள்ள ஒரு நண்பர் அனுப்பி இருந்தார்... அவருக்கு நன்றி.

http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

என்னங்க பார்த்தீங்களா? படிச்சா போதாது... அப்படியே எழுந்து ஒரு 50 போடுங்க... 1,2,3

1 comment:

ஆயில்யன் said...

//அந்த காலத்தில் படிப்பு வரவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக் கரணம் போட சொல்லி இருக்கிறார்கள். தோப்பு கரணம் போடுடா அப்ப-வாவது புத்தி வருதான்னு பார்ப்போம்னு சொல்லி... அதோட மகிமை தெரிஞ்சி.///

உண்மைதான் நானெல்லாம் 5 லேர்ந்து 25 வரைக்கும் தோப்புக்கரணம் போட்டதுண்டு ஸ்கூல்ல :(