ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...

சத்யம் ராமலிங்க ராஜு (ரா.ரா)-வுடன் சிறையில் ஒரு பிரத்தியேக நேர்காணல்...

நிருபர்: வணக்கம் சார்.
ரா.ரா: வணக்கம் தம்பி.

நி: சார், சத்தியம் பற்றி சொல்லுங்களேன்.
ரா.ரா: நான் சொல்வதெல்லாம் சத்யம், சத்தியத்தை தவிர வேறு எதுவும் இல்லை.

நி: சார் நான் நீதிபதி இல்லை நிருபர், நீங்க தவறா புரிஞ்சிகிட்டீங்க.
ரா.ரா: நான் சரியாதான் தம்பி சொன்னேன். சத்யம் தான் என் நிறுவனம், மேடாஸ் பற்றி எதுவும் தெரியாதுன்னு சொன்னேன்.

நி: உங்க நிறுவனதில் நடந்த முறைகேடுகள பிரைஸ் வாட்டர் ஹவுஸ் போன்ற சிறந்த கணக்கீட்டார்களால் கண்டு பிடிக்க முடிய வில்லையே எப்படி?
ரா.ரா: சத்யம் நிறுவனம்தான் பி.வா.ஹ பயன்படுத்தும் மென்பொருளை செய்தது, எங்கள் நிருவனம் சம்பந்தமான கணக்கீடு செய்யும் போது சில வளைவு நெளிவுகளை உட்படுத்தியிருந்தோம். அது பிற்ரால் கண்டுபிடிக்க முடியாத ஒரு சிறிய முன் ஏற்பாடு.

நி: பொதுவா சிறைக்கு வந்தவங்க சத்திய சோதனை படிப்பாங்க, நீங்க புத்தரோட புத்தகங்களை படிக்கிறீங்களே?
ரா.ரா: சத்யத்துக்கு சோதனை பண்ணின நான் சத்திய சோதனை படிச்சா ஊரே சிரிக்கும், அதனால கொஞ்சம் நல்ல புத்தி வரட்டுமேன்னு புத்தரோட புத்தகங்களை படிக்கிறேன்.

நி: உங்கள் நேரத்திற்க்கு நன்றி சார்
ரா.ரா: நன்றி தம்பி, என்கிட்ட கொஞ்சம் சத்யம் ஷேர்ஸ்/பங்கு இருக்கு வாங்கிகிறீங்களா? ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...

நி: வேண்டாம் சார் இப்ப பங்கு வாங்கி எனக்கு நானே சங்கு ஊத விரும்பல.

No comments: