கவிதை எழுதும் நண்பா
தெரியுமா உனக்கு வெண்பா?
கேள்வி கேட்கும் நண்பா
எனக்கு பேசதெரியும் அன்பா!
இலக்கணத்தில்
நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா
அரசியலில்
நேரு நேரு மாமா, அமெரிக்க அதிபர் ஒபாமா
கவிதைக்கு அழகு - சீரும் தொடையும்
மதிய உணவுக்கு அழகு - மோரும் வடையும்
கவிதையை மெருகூட்ட - தலையும் யாப்பும்
சிகையை மெருகூட்ட - சோப்பும் சீப்பும்
கவிதை சிறக்க - எதுகையும் மோனையும்
புதுக்கவிதை சிறக்க - ரைமிங்கும் டைமிங்கும்
ஆஹா, புதுக்கவிதையில்
நீ ஓபாமா!
அய்யகோ,
கவிஞன் எனச் சொல்ல என்மனம் ஒப்புமா?
கவிதையில் இது வெறும் உப்புமா!!
3 comments:
மாம்ஸே இந்த கவிதையப்படிச்சிப்போட்டு, இதுக்கு முதல்ல ஒரு இடுக்கை இருந்திச்சே அதன் தலைப்பையும் படிச்சேன் ஒரே சிப்பு சிப்பா வருது ...
மதிய உணவுக்கு அழகு - மோரும் வடையும்
புதுக்கவிதை சிறக்க - ரைமிங்கும் டைமிங்கும்
superuuuuuuu
அருமயான படைப்பு
படித்து படித்து மகிழ்ந்தேன்
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment