தமிழ் இனி மெல்ல வாழும்...

தமிழ்
தமிழ் தமிழென்று தமிழ் அமிழ்தமாய்
தமிழ்மொழி நம் தாய்மொழி எனும் தாரக மந்திரமாய்
தமிழ் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் - இறந்த காலமாய்

இனி
இனிய மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதானது எங்கும் காணோம் என்று
இன்று இணையத்தில் தமிழ் வாழும் காலம் – நிகழ் காலமாய்

மெல்ல
தமிழ் இனி மெல்லச் சாகும்
எனச் சொன்னவர்களிடம் மெல்லச் சொல்லுங்கள்
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் – எதிர் காலமாய்

வாழும்
வாழ்வாங்கு வாழ்வது வள்ளுவரின் குறள் மட்டுமல்ல
வாழையடி வாழையாய் நாம் பேசும் தாய்மொழியும் தான் என்று
மெல்ல அல்ல உரக்கச் சொல்லுங்கள்

தமிழ் இனி மெல்ல வாழும் – காலம் காலமாய்.

குறிப்பு: இது நான் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விடுமுறை தின கவிதை அரங்கத்திற்க்காக எழுதியது. தமிழ் நாட்டில் தமிழ் இறந்த காலமாய் என குறிப்பிட்டது இன்றைய தமிழ் ஆர்வத்தையும், ஆங்கில மோகத்தையும் காலத்தால் குறிப்பிடவே அன்றி குறைத்து மதிப்பிட அல்ல.

2 comments:

நட்புடன் ஜமால் said...

ஆச்சி மாற்றத்தை தான் சொல்றியளோன்னு நினைச்சிப்போட்டேன் மாம்ஸே

ஆச்சி ஸ்ரீதர் said...

உங்க வலைதளத்தில் ஃபாளோயர்ஸ் ஆப்சனை காணுமே.