கேட்ஸ் பொங்கல் விழா 2011... தகவல்கள்

பொங்கல் விழா இனிதே நடந்தேறியது. நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும், தொலைபேசியில் வாழ்த்து சொன்ன அன்பர்களுக்கும் நன்றி... நன்றி... நன்றி.

500 பேர் அமரும் அரங்கம்... உட்கார இடமின்றி அரங்கத்தின் இருபுறமும் நின்றவாறு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் விருந்தினர்கள்.

காலை சின்னஞ்சிறு மொட்டுக்களின் ஆடல் பாடலுடன் தொடங்கிய விழா, சிறப்பு விருந்தினர், லில்பர்ன் மேயர் திருமதி டயானா ப்ரஸ்டன் அவர்களின் சீறிய உரையுடன் மதிய இடைவேளையை தொட்டது. அரங்கத்தில் ஒருபுறம் தாளம் மறுபுறம் கோலம், ஆம் வண்ணமயமான கோலப்போட்டியும் நடைபெற்றது.

கோலத்தைக் காண...இங்கே சொடுக்கவும்...

அரங்கம் நிறைந்து வழிந்தோடிய கூட்டம், நின்றுகொண்டே விருந்தினர்கள் பட்டிமன்றத்தை கேட்டு ரசித்தனர். பட்டி மன்றம் ராஜா, தனக்கே உரிய பாணியில் தமிழ் சங்கங்களின் சேவைகளையும் மற்றும் அதில் உறுப்பினராவதின் தேவைகளையும் வலியுறுத்தி பேசியதோடு, புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையில் நட்பின் அவசியத்தையும், உறவின் தாக்கத்தையும் ஒப்பிட்டு, வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது உறவே என தீர்ப்பு கூறி பட்டிமன்றத்தை நிறைவு செய்தார். (நான் தான் உறவு அணிக்கு தலமை பொறுப்பேற்றிருந்தேன்... அப்படி என்ன பேசினோம் என்றுதானே கேட்கிறீர்கள்... ஹா... ஹா... ஹா... உண்மையப் பேசினோம்)

விரைவில் பட்டிமன்ற காணொளியை இணைக்கிறேன்.

3 comments:

Chitra said...

நல்ல தொகுப்புங்க... ரங்கோலி போட்டி படங்கள் பார்த்தேன்... அருமை.....
விரைவில் காணொளியை இணைத்து விட்டு சொல்லுங்கள்.... உங்கள் பேச்சை கேட்க ஆவலாய் உள்ளோம். :-)

பழமைபேசி said...

நாங்க முந்திகிட்டம்ல? இஃகிஃகி!! பட்டிமண்டபக் காணொலியும் போட்டம்ல?!

http://maniyinpakkam.blogspot.com/2011/02/blog-post_10.html

அரசூரான் said...

நன்றி சித்ரா. காணொளிய இணைச்சாச்சு.

நன்றி பழமை. நீங்க யாரு? விட்டா நேரடி ஒளிபரப்பு பண்ணுரவராச்சே.

நான் லேட்டு ஆனா லேட்டஸ்ட்டு.